SCIENCE – V A C C I N E
அறிவியல் - வாக்ஸின்
வாக்ஸின் [vaccine ] - சமீப காலத்தில் கொரோனா நோய் உலகை வாட்டும் போது அனைத்து மருத்துவ நிலையங்களிலும் , மருத்துவ விஞ்ஞான ஆய்வுக்கூடங்களிலும் , ஏன் அரசியல் கூடாரங்களிலும் கூட தெரிந்தோ தெரியாமலோ முணுமுணுக்கப்பட்ட சொல் 'வாக்ஸின் ' எனும் தடுப்பு மருந்து.
நீ என்ன பெரிய immunological protein formulator ஆ அல்லது Drug designer ஆ அல்லது Antigen -Antibody mapping expert ஆ என்று சிலர் அங்கலாய்ப்பது தெரிகிறது. உங்கள் கேள்வி நியாயமானது தான் .ஆனால் இதுவரை சொன்ன மற்றும் இனி சொல்ல இருக்கிற பெயர்களும் அவற்றின் உண்மையான பொருளும் புரிந்து வைத்திருக்கும் ஒரு எளிய ஆசிரியன் அதாவது உயிரியல் [BIOLOGY ]ஆசிரியன் -கல்லூரி ஆசிரியன். அப்படியே நான் ஏதாவது தவறு செய்தால் சுட்டிக்காட்ட /தட்டிக்கேட்டு திருத்தம் சொல்ல அருமை அன்பர் பேராசிரியர் டாக்டர் கே .வெங்கடராமன் [நல்லதொரு immunologist /Biochemist ] இருக்கவே இருக்கிறார் .அதுதான் எனது நம்பிக்கை.
பலரும் "வாக்ஸினை"' மருந்து என்பதாக நினைத்துக்கொண்டுள்ளனர். நிச்சயமாக மருந்தல்ல ஆனால் அதைவிட உயர்ந்தது. அதெப்படி? என்கிறீர்களா
மருந்து --நோய் வந்தபின் சரி செய்யும் பொருள் . அது வேதிப்பொருளாக [chemical ] இருக்கலாம், பல பொருட்கள் சேர்ந்த கலவையாக[MIXTURE ] ஆக இருக்கலாம். அல்லது வேறொரு உயிரினத்தின் தயாரிப்பான [பொருளான] [ANTIBIOTIC ] ஆக இருக்கலாம். ANTIBIOTIC வகையினவும் மருந்துகளே -அதாவது நோய் வந்தபின் அதை கட்டுப்படுத்தி , நம்மை நோயிலிருந்து மீட்பது. .இவை அனைத்தும் CURATIVE எனப்படும் நோய் தீர்ப்பன. இவை நோய் வந்த பின் தீர்ப்பன. ஆனால் வாக்ஸின் கள் PREVENTIVE எனப்படும் வருமுன் காப்பன.
எதற்கு வருமுன் காக்க வேண்டும், வந்த பின் மருந்து உட்கொண்டால் போதாதா? என்று கேட்கலாம். சில வகை தாக்குதல்களில் இருந்து பிழைப்பதே அரிது, பிழைத்தாலும், ஊனம், உடல் உறுப்புகள் சிதைவு நிரந்தர விகாரம் [கொரோனா அம்மை, போலியோ போன்ற ] கொடிய நோய் வகைகளிலிருந்து முன்கூட்டியே காத்துக்கொள்ளுதல் விவேகம் . ஆகவே தான் வீரியம் மிக்க நோய் தாக்குதல்களை எதிர்கொள்ள வாக்ஸின் எனும் தடுப்பு மருந்து தவிர்க்கக்கூடாத தற்காப்பு என்று அடிப்படை உயிரியல் தெரிவிக்கிறது.
அப்படியானால் மருந்து வேறு வாக்ஸின் வேறு என்பது புரிகிறது அல்லவா? எப்படி வேறு படுகின்றன எனில்
நோயின் பிடியிலிருந்து மீட்பது மருந்து , நோயையே வரவிடாமல் [நோய் செயல் பட முடியாமல் ] ஒழித்துக்கட்டுவது - வாக்ஸின் .அதாவது நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு பண்புகளை வலுவாக கட்டமைத்து நோய் தாக்கினாலும் நமது உடலே அதை எதிர்த்து வெற்றிகரமாக ஒழிக்கும் திறனை மேம்படுத்திக்கொடுப்பது தான் வாக்ஸின் புரியும் விந்தை . முறையான அளவில் வாக்ஸின் செலுத்திக்கொண்டால் , நோய் வந்து அதனால் துன்பப்பட வேண்டியதில்லை .
வாக்ஸின்
செலுத்திக்கொண்ட நபர்களுக்கு நோய் கிருமிகள் உடலில்
புகுந்தது கூட தெரியாது .அந்த
அளவுக்கு திறம்பட வேலை செய்யும்
ஆற்றல் வாக்ஸினேஷன் மூலம் கிடைக்கிறது. வாக்ஸின்
செலுத்துதல் வாக்ஸினேஷன்
எனப்படுகிறது. இவற்றின் செயல் பாடுகளைப்புரிந்துகொள்ள வேறு சில
அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
நாம் நம் வாழ்வில் பல நேரங்களில் ஒவ்வாமை எனும் ALLERGY ஏற்பட்டு பலத்த இன்னலை சந்திப்பதுண்டு. இந்த ஒவ்வாமை உருவாவதே இரு மாறுபட்ட ப்ரோடீன் [PROTEIN ] அமைப்புகளுக்கு இடையே நிகழும் யுத்தம் தான்.அதாவது நமது உடல் ப்ரொடீனும் , வெளியிலிருந்து உடலில் புகுந்த வேறொரு ப்ரொடீனும் உனக்காயிற்று -எனக்காயிற்று என்று மோதிக்கொள்வதன் விளைவாக அலர்ஜி தோன்றி , அரிப்பு, தடிப்புகள், தோலின் நிறம் சிவப்பு போன்ற பல்வேறு வழிகளில் அமைதியின்மையை ஏற்படுத்தும் .
நம் மக்களிடம் உள்ள இன்னொரு பற்றாக்குறை [அறிவியல் ரீதியில்] என்னவெனில் ப்ரோடீன் என்றால் அது ஒரு ஊட்டச்சத்து என்பதான ஒரு எண்ணம். சில வகை ப்ரோடீன்கள் உணவுச்சத்துதான். ஆனால் எல்லா ப்ரொட்டீன் களும் உணவு அல்ல. கிட்டத்தட்ட எல்லா தமிழர்களும் இந்தியர்கள் தான் ஆனால் எல்லா இந்தியர்களும் தமிழர்கள் அல்லர் என்பது போன்ற நிலை தான் இந்த ப்ரோடீன் விவகாரமும்.
எல்லா உயிர் இனங்களின் உடலும் ப்ரோடீன்களால் கட்டமைக்கப்பட்டவை தான். எனவே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று அரசியல்வாதிகள் அலறுவதைப்போல எங்கும் ப்ரோடீன் எதிலும் ப்ரோடீன் என்று BIOCHEMIST/IMMUNOLOGIST ம் அறிவான் ஆனால் பின்னவர் அறிவியல் ரீதியாக பேசுகிறார் -உணர்வியல் அடிப்படையில் அல்ல.
தொடரும் அன்பன் ராமன்
I know the basic of immunology only. But you have made me an immunologist.
ReplyDelete