Monday, July 31, 2023

WHEEL HAS TURNED

 WHEEL HAS TURNED

சுழன்ற சக்கரம்

The wheel has turned a full circle என்று கால மாற்றத்தை மென்மையாக உணர்த்துவர் .இப்போது கோவிந்து  என்னும் கோவிந்தனின் வாழ்வில் அது நிகழ்ந்துள்ளது.. அது ஒரு சனிக்கிழமை காலை மணி. 10.45, அன்று விடுமுறை நாள் . கோவிந்துவின் தகப்பனார் ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று கட்டிலில் அமர்ந்தார். கோவிந்து வெராந்தாவில் இருந்து வெளியே கிளம்ப தயாரானான்.. அவன் தாய் பரமேஸ்வரி ", டே கோவிந்து யாராவது டாக்டரை கூட்டிக்கிட்டு வாடா அப்பாவுக்கு நெஞ்சு வலி சீக்கிரம் வாடா' என்று அழுதுகொண்டே அலற கோவிந்து அம்பெனப்பாய்ந்தான் இரண்டாம் தெருவுக்குள்.. அவனுக்கு பரிச்சயமான வீடு Dr .Subashchandran , MD [Cardiology ] என்ற போர்டை பலமுறை பார்த்துள்ளான் .2 நிமிட த்தில் அவர் வீட்டின் போர்டிகோவில் கோவிந்து . "சார் சார் என்றான் நடுங்கிய குரலில் . வெராந்தாவில் நின்றிருந்த டாக்டர் என்னப்பா என்றார் முனகிக்கொண்டே. .அவரது வலது கால் கணுக்கால் பகுதியில் படி இறங்கும் போது சுளுக்கி க்கொண்டு ஒரே வலி . அவர் பல்லைக்கடித்துக்கொண்டு நடக்க முடியாமல் சொல்லவும் முடியாமல் நடக்கவும் இயலாமல் நொந்து இருந்தார். சீக்கிரம் வாங்க சார் அப்பாவுக்கு நெஞ்சு வலி என்று ஓ என்று அழுதான் -பாவம் 7 ம் வகுப்பு படிப்பவன் ஏதாவது அசம்பாவிதம் நடந்திடுமோ என்று கணேசமூர்த்தி சாரை மனதில் நினைத்தபடியே பிள்ளையாரை மனதால் வணங்கினான்..

டாக்டர் "தம்பி எனக்கு கால் ல சுளுக்கு விழுந்திருக்கு , கார் ஸ்கூட்டர் எதுவும் ஓட்ட முடியாது , நடக்கக்கூட முடியல வேறு யாரையாவது கூப்பிட்டுக்க என்றார். மன்னிக்கணும் சார் உங்க பெயரையும் வீட்டையும் என் மனதிலிருந்து நீக்க முடியாம நேர இங்க தான் வந்திருக்கேன். கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க, நான் சைக்கிள் எடுத்துட்டு வரேன், பின் சீட்ல உக்காருங்க நான் பத்திரமா கொண்டுபோய்ட்டு கூட்டிக்கிட்டு வந்து நீங்க சொல்ற எடத்துல விட்டுடறேன் என்று அழுதான். சரி சீக்கிரம் வா என்றார் கார்டியாலஜிஸ்ட் . 1 நிமிடத்தில் வாடகை சைக்கிளுடன் கோவிந்து வந்து டாக்டர் பையை எடுத்துக்கொண்டு பின்சீட்டில் டாக்டரை உட்கார வைத்து மின்னல் வேகத்தில் அற்புத பாலன்ஸிங் மற்றும் வெகு நேர்த்தியாக இடை வெளிகளில் புகுந்து நேரே வீட்டின் பின் பகுதிக்கு டாக்டருடன் சைக்கிளை ஒட்டி சென்றான், பின் கதவை தபதப என்று தட்டினான். பின் அறை கட்டிலில் அப்பா முனகிக்கொண்டிருந்தார் . டாக்டர் ஸ்டெதஸ்கோப் வைத்து பார்த்ததும் நிலைமையை புரிந்து கொண்டு ஒரூ இன்ஜெக்ஷனை செலுத்திக்கொண்டே பையன் “என்ன கோல்டன் மொமெண்ட் டைம் க்குள்ள கொண்ட வந்து சேர்த்துட்டான். சைக்கிளைக்கூட ambulance மாதிரி ஓட்டமுடியும் னு இன்னக்கி தான் இந்த பையன் கிட்ட கத்துக்கிட்டேன். இன்னும் ஒரு 2 நிமிடம் போயிருந்தா நிலைமை ரொம்ப விபரீதமா போயிருக்கும். இந்தப்பையன் உங்களை காப்பாத்துன தன்வந்திரினு நெனச்சுக்குங்க.. ரொம்ப மரியாதைப்பட்ட பையன்”. என்றார் டாக்டர் . பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மா டாக்டருக்கு பணம் கொடுங்க என்றான் கோவிந்து . அம்மா எவ்வளவு டாக்டர் என்றார். வெறும் 500/- ரூபாய் இன்ஜெக்ஷன் விலை தாங்க போதும் . இந்த பையனுக்கு பெற்றோர் கிட்ட போய்  பணம் கேட்க என் மனசு இடம் கொடுக்கல. 2 நாள் முழு ரெஸ்ட் ல இருக்கட்டும் பெரியவர். மூன்றா வது நாள் நானே வந்து என்ன செய்யணும் னு பாத்து சொல்றேன் தைரியமா இருங்க –

எதுனால அட்டாக் ஆரம்பிச்சதுனு கண்டுபிடுச்சுட்டா எல்லாம் குணப்படுத்திடலாம். நம்பிக்கையோட இருங்க என்று நொண்டியபடியே கிளம்ப கோவிந்து மீண்டும் டாக்டரை சைக்கிளில் இருத்தி எங்க சார் போவணும் என்றான். காந்தி ரோட்டுல என் க்ளினிக் இருக்கு அதாவது சரஸ்வதி தியேட்டர் ல இருந்து 4 வது பில் டிங் என்றார் .இப்போது மிக நிதானமாக சைக்கிளை செலுத்தினான் .சொன்ன இடத்தில் மிக கவனமாக டாக்டரை இறக்கிவிட்டு கண்ணீர் மல்க டாக்டருக்கு நன்றி செலுத்தினான். தம்பி அழாத அப்பா குணமாயிடுவாரு , கவலைப்படாதே ,3 நாள் ல வந்து பாக்கறேன் என்றார் . நான் சைக்கிள் கொண்டாறேன் சார் கோவிச்சு க்காம பெரியமனசு பண்ணுங்க என்று கை கூப்பினான். இப்போது கோவிந்து வின் சைக்கிளை வேண்டாமென்று சொல்ல டாக்டருக்கே மனம் வரவில்லை அவ்வளவு நேர்த்தியான சைக்கிளிங் திறமை. பரஞ்சோதியின்  தயாரிப்பு அல்லவா, இவன். எப்படி சோடை போவான்?  

மீண்டும் சைக்கிள் , டாக்டர் கோவிந்து 3 ம் நாளில் அடிப்படை சோதனைகள் செய்து விட்டு ஒன்றுமில்லை இனிமேல் ஓடி சென்று பஸ் ரயில் பிடிப்பது வேண்டாம் .சைக்கிள் ல கொண்டு போய் விட சொன்னா  பையன் செஞ்சுருவானே. சூப்பர் பாய் .சைக்கி ளை இவ்வளவு அழகா யாராலும் ஓட்ட முடியாது , வேகமோ , பாலன்சிங்கோ எல்லாம் அவன் சொன்னபடி ஆடுது . வீட்டுல சைக்கி ளை நல்லா பயன்படுத்தி கத்துக்கிட்டான் னு நினைக்கறேன் என்றார் டாக்டர் . இங்க வீட்டிலே சைக்கிள் இல்லை என்றனர் பெற்றோர். ஆச்சரியத்துடன் பார்த்த டாக்டரிடம் கோவிந்து சொன்னான் "ஸ்கூல் AHM சார் உத்தரவில் PT மாஸ்டர் ஒரு மாசம் ட்ரெயினிங் குடுத்து எனக்கு சைக்கிள் ல எல்லா வித்தையும் பண்ற அளவுக்கு கத்துக்குடுத்தாங்க".

கோவிந்து வின் பெற்றோர் பேந்த பேந்த விழித்தனர்.

சரி அவங்க ஏன் உனக்கு கத்துக்குடுத்தாங்க? என்றார் டாக்டர். நானா FRIEND சைக்கிள் ல ஓட்டும்போது AHM சாரை  இடிச்சு கீழ தள்ளிட்டேன். ஆனா சார் பெரிய மனசு பண்ணி இந்த வயசுல தான் கத்துக்கணும் னு 2 வருஷம் முன்னால பயிற்சி கொடுத்து நான் 2 தடவை ஜில்லா மெடல் முதல் பரிசு  வாங்கியிருக்கேன் என்று 2 மெடல்களை காட்டினான். டாக்டர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். கோவிந்துவின் அப்பா வெட்கி தலை குனிந்து அன்றொருநாள் "படிச்சுக்கிழிச்சாச்சு "போடா போய் உருப்படற வழியைப்பாரு" என்று உறுமியதை நினைவுகூர்ந்தார். உறுப்படுவது என்றால் என்ன எனும் கேள்வி எழத்தானே செய்கிறது ?

 

நன்றி                      அன்பன் ராமன்

 

 

 

No comments:

Post a Comment

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...