Tuesday, August 1, 2023

EDUCATION

 EDUCATION

கல்வி

வர வர கல்வி என்பது அதிகப்படியான மதிப்பெண்களை பெறுவது என பெற்றோர் , மாணவர், பள்ளி நிர்வாகிகள் , ஆசிரியர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டு விட்டனர். அந்தோ பரிதாபம் , மார்க் என்னும் மதிப்பெண் வேறு , திறமை எனும் TALENT வேறு, விரைந்து செயல்படும் SMARTNESS என்பது வேறு என்பதை தமிழகம் உணரவே இல்லை. குறிப்பாக +2 திட்டம் அரங்கேறிய பின் மதிப்பெண் பற்றிய மதிப்பீடு தலைகீழாக மாறியுள்ளது. இந்த நிலை இப்போது 40 ஆண்டு கால முதிர்வு. அறிவின் அளவுகோல் மார்க் என்பது  ஒரு தவறான புரிதலே அன்றி வேறென்ன?

நீரழிவை விட பேரழிவு இந்த மார்க் மோகம்..   எதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற உணர்வே இல்லாமல் 100/100 என்று சினிமாப்பட தலைப்பு போல் பித்துப்பிடித்து அலைகின்றனர் இளம் வயதினர். 100/100 என்பது ஏதோ தரக்குறைவு என்பது போல 200/200 என்பது அனைவருக்கும் இலக்கு. என்ஜினியர், IT ஊழியர் , ஆடிட்டர் இவை மூன்றே தமிழகம் உச்சாடனம் செய்யும் பெயர்கள். டாக்டர் படிப்புக்கு செலவு அதிகம் என்று அதை விலக்கிட விளக்கம் தருவர் . ஏன் NEET தேர்வில் வென்று குறைந்த செலவில் மருத்துவக்கல்வி பெறலாமே என்றால் ஐயோ அதற்கு போட்டித்தேர்வு எழுத வேண்டுமாமே என்று குலை நடுங்கும் இளம் சிறார். ஏனெனில் அவர்தம் இலக்கு 200/200 தான். நியாயமாகப்பார்த்தால் 200/200 எந்த தேர்வையும் எதிர்கொள்ள வேண்டுமே. அது தானே முடியாது, நாங்க இந்தக்கேள்விக்கு இந்த பதில் என்பதில் சூரப்புலிகள். ஆனால் ஒன்று கேள்வியின் வாசகம் கூட புத்தகத்தில் இருக்கும் அதே கேள்விக்கு தான் விடை தெரியும் . Paraphrased questions look paradoxical to our students who unfailingly get baffled to  a point of  paranoia; a genuine shame is this score-centric eccentricity.

நீ என்னயெல்லாம் அறிந்தவன் போல் கேலி பேசுகிறாய் என்போர் , எனது கேள்விக்கு விடை தாருங்கள் .இது தான் என் இலக்கு என இரவு பகலாய் உழைத்து சேர்ந்த பொறியியல் கல்வியில் முதல் செமெஸ்டரில் 2, 3 பேப்பர்களில் தலை குப்புறக்கவிழ்வது ஏன்? இலக்கு வைத்து மதிப்பெண் குவித்தோர் , அடுத்த வகுப்புக்கு செல்ல தேவையான மதிப்பெண் பெற நாக்கு தள்ளுவது ஏன்.? இப்போது தெரிகிறதா , கேள்விக்கு  விடை எழுதுவது அல்ல உயர் கல்வி.  .விடை களாக எழுதப்படும் கருத்துக்கள் தீவிர ANALYSIS எனும் கருத்தாழம் மிக்க தீர்வுகளாக இல்லை எனில் ஒருவரும் உயர்கல்வியில் பரிமளிக்க இயலாது.உடனே 'கிராமப்புற ' என்ற பச்சாதாப குரல் கிளம்புவது வாடிக்கை தான் தமிழகத்தில் . கிராம மாணவர்களை எவரும் குறைத்து மதிப்பிடாதீர்கள் . ஆகச்சிறந்த விஞ்ஞானிகள் என்று அறியப்பட்டோர் , நோபல் பரிசு பெற்றோர் உள்ளிட்ட அநேகர் கிராமப்புறத்து மாணவர்களே -அதாவது உலக அளவில் கூட இதே நிலை தான்.. எந்த நகரமும் மூளையின் சிறப்புக்கு உதாரணமாய்த்திகழ்ந்ததில்லை. . சும்மா அரசியல் பம்மாத்துக்கு சொல்லிக்கொண்டிருக்கலாமே அன்றி அது உண்மை அல்ல.

அப்படி ஆனால் சொல்ல வருவது என்ன ?  கீழ் நிலையில் இருந்தே முறையான அணுகுமுறை பயிற்றுவிக்கப்பட்ட வேண்டும். அதாவது எவ்வாறு கற்க வேண்டும்? கேள்விக்கு இன்ன பதில் என்ற கரண்டி ஊட்டல் [SPOON  FEEDING ] ஒழிக்கப்பட வேண்டும் . ஒருவர் பாடப்பகுதியை தெளிவாக புரிந்து கொண்டு படித்திருந்தால் எளிதில் விடை அளிக்க முடியும். புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து 100/100 என்பது 100/100 தவறான அணுகு முறை என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். எனவே கல்வியை சீர்திருத்தக்கிளம்பும்  முன் , நமது கற்கும் முறைகள் செம்மைப்படுத்தப்படல் வேண்டும். அதில்லாமல் , கம்பீரமான கல்வியறிவு என்பது எட்டாக்கனியே.

இதற்கான வழிமுறை என்ன என்பதை வரும் நாட்களில் பேசுவோம் . நன்றி

தொடரும்                      அன்பன் ராமன் .

EDUCATION -2

1 comment:

  1. பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் நடைமுறை பயிற்சி (practical’s) என்பது காணாமல் போய்விட்டது.
    அப்படியே இருந்தாலும் எல்லா மாணவர்களும் 100/100 வாங்கிவிடுவது ஆச்சரியம்
    வெங கட்ராமன்

    ReplyDelete

DIRECTOR-- CHITRALAYA GOPU

  DIRECTOR-- CHITRALAYA GOPU இயக்குனர்: சித்ராலயா கோபு இயக்குனர் ஸ்ரீதரின் தோழன் 5 ம் வகுப்பு முதல் இறுதிவரை . இ யற்பெயர்--     ...