Wednesday, August 2, 2023

CINE MUSIC

 CINE MUSIC

திரை இசை

எந்தக்கலைக்கும் இலக்கணமும் மரபு களும் பின்னிப்பிணைந்து ஒரு பாரம்பரியம் தோன்றுகிறது. இசைக்கும் அத்தகைய ஒரு மரபு உண்டு  ஸ்ருதியும் லயமும் முறையாக பயணிக்கும்   போது ஏற்படும் இயல்பான தொரு ஆக்கம், இசை என்று பெயர் பெறுகிறது. ஸ்ருதியின் மீது சரியான சொற்கள் அமர்ந்து பயணித்தால் கேட்பவருக்கு ஒரு ஈர்ப்பும் லயிப்பும் சேர்ந்து விளைவது தான் "நாட்டம்" எனும் ஈடுபாடு. .சாஸ்திரிய இசை அல்லது கர்நாடக சங்கீதம் எனும் இசையின் மேன்மைகளை உணர அடிப்படை ஸ்வர ஞானம் ஆதாரத் தேவை எனில் மிகை அன்று.

ஆக ஏதோ ஒரு இலக்கண மரபில் கட்டமைக்கப்படுவது தான் இசை . அது திரை இசைக்கும் பொருந்தும். ஆயினும் மரபு வழி [கர்நாடக] இசையும் , திரை இசையும் , வெவ்வேறு வழிமுறைகளை பின்பற்றி ரசிகரின் அன்பைப்பெறுகின்றன.

கர்நாடக இசைப் பாடகர் / பாடகி முன்னரே வகுக்கப்பட்டுள்ள பாதையில் [ஸ்வரக்கோர்வைகள்] பயணித்தால் குறிப்பிட்ட அந்த பாடகருக்கு.  அதீத ஞானம் அல்லது அசுர சாதகம் என்று சர்வஜன அங்கீகாரம் பெருகும். -. ஆயினும் இந்த predetermined பயணப்பாதையில் ஒருவர் தன்னை ஐக்கிய படுத்திக்கொள்ள சில கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வகை பயிற்சியில் ஈடுபடுவோர் ஏதோ ஒரு அடி ஒற்றி [பாணி அல்லது ஸ்டைல் /ஸ்கூல் வகை ] என்றே அடையாளப்படுத்தப்படுவர். எனினும் குரல் வளம், விஸ்தார  ராக ஞானம் போன்ற தனித்துவங்களால் கர்நாடக இசைக்கலைஞர்கள் கோலோச்சுவதை நாம் அறிவோம். சுருங்கச்சொல்வதாயின் ஒருவர் தான் கற்ற கர்நாடக இசை நுணுக்கங்களை பிசகாது, வழுவாது ஊசிமுனை அளவுள்ள சாலையில் வெகு நேர்த்தியாக பயணித்தாலும் அக்கலைஞர் செய்வதென்னவோ repeat performance என்பது தானே உண்மை. அவ்வப்போது ஏதோ நகாசுகள் செய்து தனது மேதா விலாசத்தை வெளிப்படுத்தலாம். அது ஒரு அசுரசாதகத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்பது யதார்த்தம் எனினும் பாராட்டுக்குரியது.

சரி திரை இசைக்கு வருவோம் ; அய்ய என்று ஏதோ படக்கூடாத ஒன்று காலில் பட்டு விட்டதைப்போல வெறுப்போ அருவருப்போ கொள்ள வேண்டாம். தயவு செய்து திரை இசை ஆக்கங்களை அவற்றின் கள மற்றும் கால யதார்த்தங்களோடு பொருத்திப்பார்த்து புரிந்து கொள்ள முயற்சித்தால் , திரை இசையிலும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள் ஏராளமாய் விரவிக்கிடக்கின்றன என்பது விளங்கும். இந்த சூழலை நன்கு உள்வாங்கிக்கொள்ள தற்கால பாடல்கள் அதிகம் உதவாது என்பதை நன்கறிவேன். மேலும், திரை இசை என்ற நாமகரணம் தோன்றியது கூட அது predetermined track அல்லது methodology என்னும் செயல் திட்டத்திலிருந்து விலகியதால் தான்.

ஆரம்பகாலப்படங்கள் பக்தி, புராண, சரித்திர களங்களின் பிரதிபலிப்பாக வே தயாரிக்கப்பட்டவை அவை பெரும்பாலும் குறிப்பிட்ட உணர்வுகள் [வீரம் , தியாகம், போர்க்குணம், அன்பு நாட்டுப்பற்று போன்ற மனித] emotion வெளிப்படுத்தும் பாடல்களை கொண்டவை. ஒவ்வொரு உணர்வுக்கும் உரிய ராகத்தில் பாடல் புனைந்து முறையாகப்பாடி விட்டால் போதும் என்ற நிலை. எனவே ஆரம்பகாலப்படங்கள் பலவற்றிலும் கர்நாடக இசையின்  தாக்கம் வலுவாக இருந்தது .அவ்விசை ஞானம் படைத்தோர் திரையில் தோன்றி புகழும் பொருளும் பெற்றனர். அவ்வமயம் திரைக்களம் பொருளீட்ட ஒரு இடம் என ஆனதால் பலர் திரைத்தயாரிப்பு, நடிப்பு, பாடல் புனைதல் இசை அமைத்தல், ஒப்பனையாளார் , சண்டைக்காட்சி அமைப்பாளர் , கோமாளி போல் சிரிப்பூட்டும் நடிகை /நடிகர் என பட்டியல் நீண்டது. இவ்வளவு உற்சாகமான களம் இளம் அழகிகளையும் , சரியான அழகன் களையும் களப்படுத்த பெரும் ஆயத்தங்களை செய்து பின்னாளில் TINSEL WORLD என்ற நாமகரணம் பெற்று விட்டது.இவ்வளவு விறுவிறுப்பு /சுறுசுறுப்பு நிறைந்த படத்தயாரிப்பில் சமூகப்படங்கள் வெளி வரத் துவங்கியதும் இசை வேறு வகை அவதாரம் காட்ட , அப்படி உருவானதே திரை இசை.

திரைப்பாடலின் கடுமையான தேவைகள் : [அதாவது பொற்கால தமிழ் திரை பாடல்கள்]

3 1/2 நிமிடம் -கால அளவு , பெரிய பாடல் சுமார் 7 நிமிடம் [இசைத்தட்டில் 2 புறமும்]

பல்லவி, 3 சரணம் , முன் இசை [PRELUDE ] இடை இசை [INTERLUDE] சில வற்றில் பின்னிசை [POST LUDE ]

இவை பாடலுக்கு ப்பாடல் வேறு படவும் மாறுபடவும் , வித்தியாசமான இசைக்கருவிகளின் சுகமான ஒருங்கிணைப்பு எனும் HARMONY மற்றும் ரம்யமான பயணம் எனும் MELODY , இவ்வனைத்திற்கும் மேலாக SYNCH எனப்படும், ஒத்தியக்கம் [குரல் /கருவிகள் இயல்பாக பொருந்துதல்] இவை அனைத்தையும் ஒரு பாடலின் அம்சங்களாக வடிவமைக்கும் திறன் இசை அமைப்பாளனுக்குத் தேவை. மேலும் பல விதமான களங்களுக்கும்  பொருத்தமான இசை க்கூறுகள் அனாயாசமாக அமைத்துத்தரும் திறன் பெற்றவன் தான் பொற்கால தமிழ் பாடல்கள் காலத்தில் உலா வர முடிந்தது. இத்துணை FORMIDABLE தேவைகளையும் மனதில் இருத்திக்கொள்ளுங்கள் -அப்போது புலப்படும் திரை இசை எவ்வளவு இன்னல்கள் தரும் முட்க்ரீடம் என்பது.

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...