Thursday, August 3, 2023

CINE DIRECTION/ DIRECTOR

 CINE DIRECTION/ DIRECTOR

திரை இயக்கம் / திரை இயக்குனர்

பல துறைகளின் செயல்களையும் நிர்வகிக்க தனித்தனி நிர்வாகிகள் இருப்பதைப்போல திரைப்படங்களின் உருவாக்கத்தை நிர்வகிப்பவர் =இயக்குனர் ;அவரின் பணி இயக்கம் என்று வழங்குகிறது . இயக்குனர்கள் 2, 3 வகைகளுள் அடங்குவர் ,1 தயாரித்து இயக்குபவர்,  2 கதைக்கும் வசனத்திற்கும் இயக்கத்திற்கும் பங்களிப்பவர் , 3 வேறெந்த பணியோ பொறுப்போ ஏற்காமல் படத்தை இயக்கம் பொறுப்பை நிறைவேற்றுபவர்..இவை பொதுவானவை. 4 சில ஒளிப்பதிவாளர்கள் , இயக்குனர்கள் ஆகவும் செயல் படுவர். இயக்குனர் திரைப்பட ஆக்கத்தின் தொழில் நுட்பந்தனை முற்றாக அறிந்தவர் எனலாம்.

இவ்வாறு வெவ்வேறு களங்களில் இருந்து இயக்குனர் பணிக்கு வந்தவர்களிடம் ஒரு சிறிய இடையூறு மேலோங்கி நிற்கும் .இயக்குனர் ஆகி விட்ட வசனகர்த்தாக்கள் நீண்ட நெடிய வசனம் எழுதி பழைய குணம் மாறாமல் படம் பார்க்கும் ரசிகனை சோதிப்பார்கள். சில விதி விலக்குகள் உண்டு. .அதே போல ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஆனாலும் ஒளிப்பதிவின் மேம்பாடு தொடரும் அது பரவாயில்லை , காட்சிகள் ரம்மியமாக இருக்கும். இவை யாரை அடையாளப்படுத்துகின்றன என வாசகர்கள் அறிவர்.

திரை இயக்கம் நுணுக்கமாக காட்சிகளை அமைத்து குறைந்த நேரத்தில் நிறைந்த தாக்கம் ஏற்படுத்துவது. இதே போல நாடகத்துறையில் இருந்து திரைக்கு வந்தவர்களால் காட்சிகளில் நாடகத்தனம் தெரியாமல் படம் இயக்க படாத பாடு பட்டிருப்பதை படத்திலேயே உணரலாம்.. ஆக திரைப்பட இயக்கம் என்பது சுவை குன்றாமல் கதையை நகர்த்துதல் , சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை செம்மையாக நிறுவுதல் மற்றும் தேவை அற்ற காட்சி வசனம் இவற்றை ஈவு இரக்கமின்றி புறக்கணித்தல் எனும் ஒருசர்வாதிகாரத்தனம் நிறைந்த செயல் எனில் மிகை அன்று. 

சுவை குன்றாது படம் நகர திறமையான இயக்குனர்கள் ஒளிப்பதிவாரிடம் காட்சியின் தேவைகளை விளக்குவர் .ஒரு காட்சியின் தேவை என்பது , பின்னர் வர இருக்கும் காட்சிக்கு நெருடலோ இடையூறோ ஏற்படுத்தாத வாறு  காட்சிப்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.. காட்சிகளின் தொடர்ச்சிக்கு பங்கம் விளைவிக்காத யதார்த்தம் தென்பட வேண்டும். உதாரணம் சுவர் கடிகாரம் , காலெண்டர் [ஏதோ ஒரு காலெண்டர் அல்ல -அதே காலெண்டர் ]  அலமாரியில் புத்தகங்கள்  , FLOWER VASE , தாத்தாவின் கைத்தடி இத்யாதி திடீரென்று தோன்றுவதோ மறைவதோ continuity monitor என்னும் ஊழியர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்பதை வெளிச்சம் போட்டு அசிங்கப்படுத்திவிடும். CONTINUITY அம்சங்களை தவறாது குறித்துவைத்து அதை விடாப்பிடியாக நிறைவேற்றுபவர் படத்தின் முதுகெலும்பு போன்றவர். அவர் குடுமியையும் தன் பிடியில் வைக்கத்தெரிந்தவன் தான் சரியான இயக்குனர் ஆக முடியும். இவை மட்டுமா ? இயக்குனருக்கு பல்வேறு கடமைகள் பொறுப்புகள் நிர்ப்பந்தங்கள் , சுமைகள் அனைத்தும் உண்டு.

டைரக்டரே தயாரிப்பாளர் எனில் பாதி கவலை விட்டது , ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் அனுமதியும் நிதியும் கிடைக்குமா என்று துவள வேண்டியதில்லை . மேலும் நடிக நடிகையர், ஒளிப்பதிவாளர் , இசை அமைப்பாளர் அனைவரையும் தானே தேர்ந்தெடுத்துவிடலாம். ஆனால் தோல்விக்கு பிறர் மீது பழி போட முடியாது. தயாரிப்பாளர் வேறொருவரெனில்    டைரக்டருக்கு சுதந்திரம் குறைவுதான். ஆனால் நீங்கள் கொடு த்த நிதியில் இதற்கு மேல் முடியாது எனலாம். வேலைப்பளுவைக்குறைக்க ப்ரொடக்ஷன் மேனேஜர் என்றொருவர் சுமைதாங்கியாக பணிபுரிவார்.   ஸ்டுடியோவில் இடம் பிடிப்பது,கலைஞர்களை அழைத்து வருவது, அணிகலன்கள் ஆடைகள் வாகன ஏற்பாடு எல்லாம் ப்ரொடக்ஷன் மேனேஜர் தலையில் தான்  

ஆனால் அவர்கள் பலே ஆசாமிகள் , எதையும் சமாளிப்பார்கள் கிட்டத்தட்ட "தில்லானா மோகனாம்பாள்" வைத்தி போன்றவர்கள் . எதற்கும் அசாராதவர்கள் ஆனால் டைரக்டர் முன் பெட்டிப்பாம்பென சுருண்டு கிடப்பார்கள் , இவர்களுக்கும் மேய்ப்பன் டைரக்டரே .

இது வரை சொன்னதை பலரும் அறிந்திருக்கக்கூடும் . மேலும் சில விசேஷ தகவல்கள் .

இசை அமைப்பாளருடனும் கவிஞருடனும் படம் வேலைகள் துவங்கும் முன்பே ஆழமாக விவாதித்து அனைத்துப்பாடல்களையும் முடித்து விட்டு தான் படப்பிடிக்கு செல்வர். எனவே ஒரு டைரக்டருக்கு முழு படமும் அத்துப்படி என்பது முதல் தேவை. பின்னர் நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரிடம் காட்சிக்கு என்ன தேவை என்பதை விலா வாரியாக விவரித்து அவர்களிடம் தான் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை துல்லியமாக விளக்கி படம் சிறப்பாக அமைய சீராக திட்டமிடுவார். அதன் பின்னர் வெளியூர் படப்பிடிப்பு எனில் ப்ரொடக்ஷன் மேனேஜர் அந்த ஊர்களில் உணவு உறைவிட ஏற்பாடு எல்லாம் முன்கூட்டியே செய்யும் படி பணிப்பார். இதெல்லாம் ஒருபுறம் நடக்க திரைக்கதை என்பதை ஆழ்ந்து திட்டமிடுவார் உரிய நபர்களுடன் . அப்போது தான் காட்சி எண் தீர்மானிக்கப்பட்டு "CLAP " அடித்து படம் பதிவிட முடியும்.

clap data  என்பது scene number , ஷாட் number தகவல் ஒரு பலகையில் எழுதி வைத்து உரிய காட்சிக்கு முன் அதை காமிரா வில் பதிவு  செய்த பின்னரே நடிப்பு துவங்கும் . இந்த CLAP ஷாட் தகவலைப்பார்த்து எடிட்டர் முறையான வரிசையில் படத்தை தொகுப்பார். இந்த விவரம் இல்லை எனில் படம் 'கந்தர்வ லோகத்தில் " எடுத்திருந்தாலும் தொகுப்பு குறைபாடுகளால் கந்தர்வகோலம் ஆகி விடும் .

கோடம்பாக்கத்தில் CLAP கந்த சாமிகள் எம கிங்கரர்கள் மிகச்சரியாக இதை சிறப்பாகச்செய்வார்கள்.இதன் பின்னர் அரங்கில் விளையாட்டு LIGHT BOY களின் கையில் அவர்கள் குடுமி ஒளிப்பதிவாரின் கையில் . இப்படி பல குடுமிகளை உலுக்கித்தான் படம் எடுக்க முடியும். இறுதியில் படத்தின்  குடுமி ரசிகனின்கையில்.இந்தக்குடுமி விளையாட்டின் தலைவனே டைரக்டர் என்பவர் தான். மேலும் விவரங்களை வரும் நாட்களில் பார்ப்போம் . நன்றி

தொடரும் அன்பன் ராமன்

1 comment:

  1. மைக்கேல் மதனகாமராஜன் படம் போல உள்ள கதையை டைரக்ட் செய்வதுதான் கஷ்டம்
    கால் ஷீட் கொடுத்து ஷூட்டிங் வராமல் இருக்கும் நடிகர்களோடு படும்அவஸ்த்தை வேறு
    வெங்கட்ராமன்

    ReplyDelete

DIRECTOR-- CHITRALAYA GOPU

  DIRECTOR-- CHITRALAYA GOPU இயக்குனர்: சித்ராலயா கோபு இயக்குனர் ஸ்ரீதரின் தோழன் 5 ம் வகுப்பு முதல் இறுதிவரை . இ யற்பெயர்--     ...