SCIENCE – V A C C I N E -2
அறிவியல்
– வாக்ஸின் -2
சென்ற பதிவில் ப்ரோடீன் -ப்ரோடீன் மோதலினால் விளைவதே ஒவ்வாமை [allergy] என விளக்க முற்பட்டிருந்தேன் . நோய்களை வெல்ல நோய் தோற்றுவிக்கும் கிருமிகளை அழிக்க வேண்டும் அதாவது அத்தகைய கிருமிகளை செயல் பட அனுமதிக்காமல் இடையூறுகளை விளைவிக்க வேண்டும். எதுவாயினும் நாம் பயன்படுத்தும் மருந்தோ/ மாத்திரையோ குறிப்பாக கிருமிக்கு எதிர்வினை ஆற்றவும் நமக்கு தீங்கு ஏற்படுத்தா வண்ணம் செயல் படவும் வேண்டும் . இதை புரிந்து கொள்ள வேண்டுமா யின் நமது உடல் உறுப்புகளின் செயல் களும் , கிருமியின் செயல்களும் வெவ்வேறு வகைப்பட்டது எனில் எளிதில் கிருமியின் செயல்களை முடக்கும் முறையை பயன் படுத்திக்கொள்ளலாம் . இந்த கோட்பாட்டினை ப்ரோடீன் -ப்ரோடீன் போராட்ட த்திற்கு பொருத்திப்பார்க்க வேண்டுமெனில் 'நமது' ப்ரோடீன் மற்றும் 'அந்நிய' ப்ரோடீன் எது எது என இனம் காணப்படவேண்டும்
இயற்கையில் இந்த 'தனது' [SELF] Vs 'அந்நிய' [Non -Self ] என உள்ளூர பகுத்துணரும் திறனைஅனைத்து உயிரினங்களும் பெற்றுள்ளன. . இதை சாதகமாக்கிக்கொண்டு அறிவியல் பூர்வமாக வாக்ஸின் எனும் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய முடியும்.
வாக்ஸின் என்பதாக நமது உடலினுள் சில ப்ரோடீன் களை செலுத்தினால் , அவற்றை எதிர்த்து நமது ப்ரோடீன்கள் போராடும். அவ்வாறு செலுத்தும் ப்ரோடீன்கள் , நமக்கு ஊறு விளைவிக்கும் கிருமியின் ப்ரோடீன்களைப்போலவே வடிவமைத்துவிட்டால் , எஞ்சியவற்றை நமக்கு எதிர்ப்பு திறன் வழங்கும் தற்காப்பு படை என்னும் IMMUNE SYSTEM கவனித்துக்கொள்ளும் . அதாவது கிருமிப்ரோடீன்களை இனம் கண்டு வெகு விரைவாக அழிக்கும் .
முன் பின் கண்டிராத வகை வைரஸ் போன்ற நுண் கிருமிகளை நமது IMMUNE SYSTEM தாக்கும் முன் வைரஸ் விரைந்து பரவி நம்மை முற்றிலும் சாய்த்துவிடும். இது போன்ற ஒரு பேரழிவு தான் SARS[Severe Acute Respiratory Syndrome / MERS [Middle East Respiratory Syndrome ] என துவங்கி பின்னாளில் CoronaVirus Disease -2019 = CoVid 19 என்றுவிரிவடைந்து, உலகை ஆட்டிப்படைத்து மனித உயிர்களை வேட்டை ஆடி கொன்று குவித்தது..
வேண்டாத கிருமி யின் உடலின் ப்ரோடீன் /உடல் பகுதிகள் ஆன்டிஜென் [ANTIGEN] எனப்படுகிறது. ஒவ்வொரு ஆன்டிஜென் [ANTIGEN ] துகளையும் மடக்க /முடக்க மிகச்சரியான உருவ அமைப்பு கொண்ட தாக்கும் கருவி போன்ற ஆன்டிபாடி [ANTIBODY] உருவாக்கப்பட்டு ஆன்டிஜென்-ஆன்டிபாடி [ANTIGEN -ANTIBODY] போர் துவங்கும் . தேவையான அளவு ஆன்டிபாடி [ANTIBODY] உருவாக்கப்படும் முன் [ANTIGEN] விரைவாக செயல் புரிந்து எதிராளியை நோயின் பிடிக்குள் கொண்டு வந்து விடும். எனவே நோயின் வீரியத்தை குறைக்க மருந்துகள் உட்கொள்கிறோம் . கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கு குறிப்பாக வைரஸ் தாக்கம் போன்றவைகளுக்கு தாமதின்றி எதிர்வினை ஆற்ற-- வாக்ஸின் உதவி மிக அவசியம்.
எனவே கிருமியின் உடல் பகுதிகளின் template அடிப்படையில் ப்ரோடீன் துகள்களை உருவாக்குவதன் மூலம் வாக்ஸின் என்ற தடுப்பு,மருந்தினை உருவாக்கலாம் . அது ஊசிமூலம் செலுத்தப்படும் போது நேரடியாக நமது ரத்தத்தில் கலப்பதால் antigen தன்மை மாறாமல் நம் உடலில் சுற்றத்துவங்கி நமது IMMUNE SYSTEM தூண்டப்பட்டு மள மள வென்று பொருத்தமான போர்க்கருவிகளாக ANTIBODY களை உருவாக்கும் . இதனால் ANTIGEN கள் சிறைபிடிக்கப்பட்டு அழிக்கப்படும் . இதன் இயக்கத்தில்நமது உடல் வெப்பம் அதிகரித்து ஜுரம் அல்லது காய்ச்சல் தோன்றுகிறது. எனவே தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டபின் காய்ச்சல் வருவது நல்ல அறிகுறி என்கிறோம்.
வாக்ஸின் உருவாக்கும் போது அதீத கவனம் தேவை . நாம் தயாரிக்கும் ப்ரோடீன், கிருமியின் உடல் ப்ரோடீன் போன்றே இருக்க வேண்டும் ஆனால் நோய் கிருமிபோல செயல் படக்கூடாது [நோயை விலைக்கு வாங்கிய கதையாகி விட க்கூடாது ] எனவே கிருமியின் ப்ரோடீன்களில் நோய் உருவாக்கும் எந்த மூலக்கூறும் [MOLECULE] நமது மருந்தில் வந்து விடக்கூடாது. பெரும்பாலும் கிருமியின் DNA [அல்லது RNA ] நமது உடலில் நுழைந்தால் நம்மால் போராடி வெல்ல முடியாது. எனவே கிருமியின் அடையாளங்களை நமது IMMUNE சிஸ்டம் புரிந்துகொள்ள த்தேவையான புற அமைப்புகளை [OUTER SHELL] கொண்டு வாக்ஸின் தயார் செய்து உடலில் செலுத்திவிட்டால் நமது IMMUNE SYSTEM நோய் உருவாக்கும் கிருமி இன ப்ரோடீன் இவை இவை என இனம் கண்டு எதிர்வினை ஆற்றும் ANTIBODY களுக்கான பொருத்தமான அமைப்பில் வடிவமைக்க தயார் படுத்திக்கொள்ளும். பின்னர் அந்த வகை நோய் நம்மை தாக்கினால் உண்மையான கிருமி களை விரைவாக இனம் கண்டு ஒழித்துக்கட்டிவிடும்.
இதனை
இவ்வாறு புரிந்து கொள்ளலாம் . நமது வாக்ஸின் சுமந்து
செல்லும் புறஅமைப்பு ப்ரோடீன்கள் [அதாவது ANTIGEN கள்
] மோப்ப நாய்க்கு மோப்பம் பிடிக்க ஏதுவாக
இருக்கும் தடயங்கள் போன்றவை . நமது IMMUNE SYSTEM மோப்ப
நாய் போல மோப்பம் பிடித்து
வைத்துக்கொண்டு நினைவில் நிறுத்தி தயார் நிலையில் இருக்கும்
[VACCINATED PERSON is
biochemically equipped to fight disease source AND WIN ] கிருமி வந்தால்ANTIBODY களின்
படையை உபயோகித்து பாய்ந்து
தாக்கி அழித்து ஒழிக்கும். இதற்கென்றே 'பிரத்யேக நினைவாற்றல்' கொண்ட B lymphocytes / memory cells என்ற அமைப்புகள் நீண்ட நாட்களுக்கு உலா
வந்து காவலர் போல் செயல் பட்டுக்கொண்டே இருக்கும். இவ்வாறு
ஒரு சிறப்பான வாக்ஸினை உருவாக்க எவ்வளவு மண்டையை பிய்த்துக்கொள்ள வேண்டியிருக்கும்?
சற்று யோசியுங்கள்.
மேல்
விவரங்களை பின்னர் தெளிவாக விளக்க
முயற்சிக்கிறேன் .
தொடரும் அன்பன் ராமன்
Though B cells are involved in antibody production , T cells which are exposed to antigen ( sensitised T cells) are also taking part in immunological reactions.
ReplyDeleteHence we deal with immunological reactions in two heads
B cell mediated and
T cell mediated
Antibody can also act as antigen
In artificial passive immunity
Venkataraman
ஏதோ புரிவது போல் இருக்கிறது. நன்றி.
ReplyDelete