Monday, August 7, 2023

Mosquito Subbiah

 2  Mosquito Subbiah

2  கொசு சுப்பைய்யா

இது என்னடா தலைவேதனை,இப்படி கொல்கிறானே நம்மை என்கிறீர்களா? என்ன செய்வது -ஒவ்வொரு நாளும் ஏதாவது BLOG போஸ்டிங் செய்ய வேண்டுமல்லவா? அதனால் வசமாக சிக்கிக்கொண்டீர்கள் .படியுங்கள் படியுங்கள் எல்லோருக்கும் பொழுது போகும் .

சுப்பைய்யா  ஒரு உயர் பதவியில் கொழிக்கும் அரசாங்க அதிகாரி. வேறென்ன மூன்றெழுத்து சமாச்சாரம் தான். ஏதாவது ஏடாகூடமாக கற்பனைக்குதிரையை அவிழ்த்து விடாதீர்கள். நான் சொல்வது "ஊழல்" எனும் மூன்றெழுத்து சமாச்சாரம் . எல்லா ஊழல் பேர்வழிகளையும்  போல சுப்பைய்யா பறந்து விரிந்த தொடர்புகள், ஊழல் ஆசாமிகளின் நிழல் உலக தொடர்புகள் அரசியல் ஆசீர்வாதங்கள் எதற்கும்  பஞ்சமில்லாத பஞ்சமாபாதகன் எனில் மிகை அல்ல. சுகாதாரத்துறையில் மாநில அளவு உயர் அதிகாரி. ஆனால் எவனும் இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு அஞ்சுவதோ அடிபணிவதோ கிடையாது. மாறாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ;லஞ்ச ஒழிப்பு உயர் அதிகாரிகளுக்கு முறையான விவரங்களுடன் புகார் அனுப்புவர். எனினும் தனது அரசியல் தொடர்புகளின் ஆதரவினால் அனைத்து புகார்களையும் ஒன்றுமில்லாமல் செய்து விடுவார் ஊ பெ சு.  எந்த ஊழல் ஆசாமிக்கும் அமையும் அலுவலக பணியாளர்கள் நேர்மை தவறாமல் வாழ நினைப்பவர்கள். அவர்களில் ஊடுருவி இருக்கும் புல்லுருவிகள் ஊ .பெ .சு வின் கரங்கள் . [ஊ பெ சு =ஊழல் பெருச்சாளி சுப்பைய்யா ] பொது வெளியில் ஊ பெ  சு பெரும்பாலும் கொசு சுப்பைய்யா என்றே அழைக்கப்படுபவர். அது ஏன் ?

மேலிடம் ஊ பெ சு மீது புதிய புகார் வந்துள்ளதை தெரிவிக்கும் . உடனே வெகுண்டு எழுவான்.

எவனோ தகவல் கொடுத்திருக்கிறான் என்று தெரிந்ததும் எரிமலை என வெடிப்பான் ஊ பெ சு. அவனை விட்டேனா பார் , என் பலம் என்ன தெரியுமா , எனது ஒரு விரலால் அவனைகொசு போல்  நசுக்கி கொன்று விடுவேன் என்று ஒரு வாரம் கொந்தளிப்பான் அவன் கொந்தளிக்கும்போது லீவு கேட்டால் கொடுத்துவிடுவான் ஊ பெ சு ஏனெனில் ஆபிஸில்  கிசு கிசு பரப்பும் கூட்டத்தில் ஒருவனாவது குறையட்டுமே என்ற ஒரு சுயநலம் தான்  ஒவ்வொரு முறையும் கொசு போல் நசுக்கி,. கொசு போல் நசுக்கி,. என்று சொல்லிச்  சொல்லியே ஊ பெ சு வுக்கு கொசு சுப்பைய்யா என்று பெயர் வைத்துவிட்டனர் பிற நல்ல ஊழியர்கள். அவர்களில் ஒரு நல்ல பண்பாளர் ஜெகதீசன் 'அவர் ஊ பெ சுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர் அப்பழுக்கற்றவர் .அதனால் ஊ பெ சுவுக்கு ஜெகதீசனைக்கண்டால் எரியும் அவனையும் கொசுபோல் நசுக்கிவிடுவேன் என்று கருவிக்கொண்டே இருப்பார் ஊ பெ சு.

ஜெகதீசன் வீட்டு கன்றுக்குட்டியைக்கூட ஊ பெ சு வால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஜெகதீசனுக்கு  நன்கு தெரியும். பிற ஊழியர்கள் விவாதத்தில் ஊ பெ சு பெயர் அடிபட்டால் ஜெகதீசன் ஊ பெ  சு வை போடா கொசு என்பார். சில மாநகராட்சிகளுக்கு நேரடி முகாமிட்டு கொசு ஒழிப்பு திட்டப்பணிகளை மேற்பார்வையிட்டு வரும்படி அரசு தாக்கீது வந்தது. ஊ பெ சு பார்த்தான் ஜெகதீசன் மதுரை கோவை போய் பார்வையிட்டு வரவும் தனக்கு ஊட்டியும் கொடைக்கானலும் மேற்பார்வை ஸ்தலங்களாக உத்திரவு பிறப்பித்துவிட்டான். அவனுடைய குதர்க்க எண்ணம் ஊட்டி கொடைக்கானலில் கொசு அதிகம் இருக்காது 4, 5 நாட்கள் சுகபோகமாக போய் வரலாம்; இந்த ஜெகதீசன் மதுரை , கோவை ஊர்களில் கொசுக்கடி பட்டு வரட்டும் என்று குரூர நோக்கில் செயல் பட்டான்.

ஜெகதீசன் அழகாக கோவையில் சகோதரியின் வீட்டில் சகல வசதிகளுடன் தங்கி பணிகளை குறைவின்றி நிறை வேற்றி , மதுரை சொக்கிகுளத்தில் தன வகுப்புத்தோழன் Dr .சுந்தரபாண்டியன் வீட்டில் பலத்த உபசாரம் மற்றும் விருந்தோம்பலில் திக்குமுக்காடி பணிகளை செவ்வனே முடித்து சென்னை திரும்பி தனது தகவல் தொகுப்பை மேலிடத்துக்கு அனுப்பி பாராட்டும் பெற்றார். கொசு சுப்பையா வோ பார்த்தது பாதி ஹேஷ்யம் மீதி கலந்து தனது ஏனோ தானோ ரிப்போர்ட்டை அனுப்பி வைக்க அரசின் சுகாதாரத்துறை செயலர்     IAS அதிகாரி ஊ பெ சு வை நேரில் கும்பகோணம் மாநாட்டில் வந்து பார்க்குமாறு மின்னஞ்சலில் அறிவுறுத்த ஊ பெ சு நேரில் சென்று சமாளித்துவிடலாம் என்று கும்பகோணம் சென்று அப்படியே கும்பேஸ்வரனை தரிசிக்கலாம் என்று மனக்கணக்கு போட, போன இடத்தில் கும்பேஸ்வரனுக்கு பதில் சனீஸ்வரன் ஊ பெ சு வை பிடித்துக்கொண்டான். அது பின்னர் தான் தெரிந்தது ஊ பெ சு வுக்கு Culex qunquifasciatus வகை கொசு யானைக்கால் நோயை வலது காலில் வழங்கி இருக்கிறது என்று. .அவன் கொசு ,இவன் கொசு என்று கேலி பேசிய ஊ பெ சு இப்போது கொசுவிடம் சிக்கிக்கொண்டான் .கெடுவான் கேடு நினைப்பான் என்பது ஆன்றோர் வாக்கன்றோ. ?

நன்றி   அன்பன் ராமன்

1 comment:

  1. அந்தோ பரிதாபம்
    Culicine mosquito சுப்பையாவை பதம்பார்த்தது
    வெங்கட்ராமன்

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...