Tuesday, August 8, 2023

EDUCATION -2

 EDUCATION -2

கல்வி -2

கல்வியின் தரம் தாழ்ந்ததற்கு நீண்ட வரலாறு உண்டு. 1970 களுக்கு பிறகு மெல்ல மெல்ல அரசாங்கத்தின் பிடி கல்வி நிலையங்கள் மீது இறுக தொடங்கியது. . அரசியல் வாதிகள் கல்விநிலையங்களை விலைக்கு வாங்குவது அல்லது கல்வி நிலைய நிர்வாகத்தினரை மிரட்டி உற்றார் உறவினரை பணி அமர்த்துவது , திரை மறைவில் மாணவர் போராட்டங்களைத்தூண்டிவிடுவது , என்று கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு 3, 4 மாமாங்கத்திற்கு மேலேயே ஆகி விட்டது/ வேறெதுவும் தோன்றவில்லை எனில் மொழிப் போராட்டங்களை முன்னின்று நிர்வகிக்கும் நபர்களை இளைஞரணி என்று அடையாளப்படுத்தி சட்டத்தின் செயலை நீர்த்துப்போக செய்வது என்று பல்வேறு அவதாரங்களை அரங்கேற்றி கல்வி நிலையங்களின் கட்டுக்கோப்பான செயல்பாடுகள் சின்னாபின்னமாக சிதைக்கப்பட்டு.1970- 1980 ஒரு சஞ்சலகாலம் ஆனது. ஆதன் விளைவு யாதெனில் ,மிகவும் கட்டுப்பாடான கல்வி நிலையங்கள் தங்களின் மகோன்னத உயரத்தில் இருந்து  பாதாளத்தில் வீழ்ந்தன. இன்று எந்த ஒரு கல்வி நிறுவனமும் அரசியல் குறுக்கீடு இன்றி இயங்குவதில்லை. கல்விநிலையங்கள் பணம் செழிக்கும் விருட்சங்கள் என்று உணர்ந்த அரசியல் வாதி , கல்வி நிலையத்தை வாங்கியோ, கைப்பற்றியோ , தனது உற்றார் உறவினரை பணியமர்த்தி , கல்வி நிலையங்களின் பெருமை மங்கலாயிற்று.

இவ்வுலகில் எளிதான செயல் தந்தை ஆவதுதான். ஆம் பள்ளிக்கல்வியை க்கூட நிறைவு செய்யாத அரசியல் வாதிகள் , கல்விநிலையங்களை வளைத்துப்போட்டு கல்வித்தந்தை ஆயினர். இல்லறத்தந்தை நிலைக்கு கல்வி ஒரு அளவுகோல் . கல்விக்கேற்ப மண  வாழ்வு அமையும் .ஆனால் கல்வி    அறிவு இல்லையெனினும் கல்வித்தந்தை ஆகலாம். ஆக கல்வித்தந்தைகள் அனைவரும் கற்றவர் இலர் 1979 இல் +2 கல்வி முறை பள்ளிக்கல்வியில்  இணைக்கப்பெற்று ஒரு யுகப்புரட்சி நிகழ்ந்தது . அதுவரை 10 ம் வகுப்புக்கு பயிற்று வித்த ஆசிரியர்கள் , ஒரு சிறு பயிற்சிக்குப்பின் இப்போது +2 போதகர்கள் ஆயினர். செய்முறை பயிற்சியும் தீவிர கற்பித்தலும் சுணக்கம் கண்டன. கற்பித்தலின் பற்றாக்குறையை ஈடு கட்ட மதிப்பெண்களை மண்வெட்டியால் அள்ளி  வீசி 200/200 கலாச்சாரம் வேர் பிடித்தது. 200/200 தாரக மந்திரம் என உச்சாடனம் செய்யப்பட்டு என்ஜினீரிங்கே உலகம் என்று இளையோர் படை எடுக்க கல்வித்தந்தைகள் விழித்துக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு சட்ட மன்ற உறுப்பினருக்கு ஒரு எஞ்சினீரிங் கல்லூரி என்ற அளவில் பட்டி தொட்டி எங்கும் எஞ்சினீரிங் கல்லூரிகள் முளைத்து போதிய மாணவர்கள் இல்லாத நிலை இன்று.ஆனாலும் நாங்கள் எஞ்சினீரிங் படிப்பதை விட மாட்டோம் என்று அலையும் பெற்றோர்/ மாணவர்.

 மதிப்பெண்களுக்கு மதிப்பு தருவோர் கற்பிக்க /கற்க தேவையான அணுகுமுறைகளை உணரத்தவறினர். .

கற்பிக்க இயலாமை கற்க இயலாமையை பரவலாக்கி விட்டது. எனவே,  IIT  பிலானி என்று மனப்பால் குடிக்கும்  மாணவர்கள் , மனப்பாடம் எனும் 'கடம்' பயின்ற வித்வான்கள் ஆயினர். அதாவது SUPR STRUCTURE WITHOUT FOUNDATION என்று விஸ்வரூப வளர்ச்சிக்கு முயன்றனர். இப்போது ஆற்றாமையினால் அல்லல் படுவதை விட உயிரை மாய்த்துக்கொள்ளுதல் எளிய வழிமுறை என்று செயல் படத்துவங்கும் நிலை பரவலாக காணப்படுகிறது. .கல்வித்தந்தைகளுக்கு ஆசை  அதிகமாகி   கல்வித்தாத்தா ஆகிட பொறியியல்/ மருத்துவ கல்லூரிகளுக்கு அதிபதிகள் ஆகி வருகின்றனர். இதிலிருந்து நம்மை மீட்டெடுக்க மாணவர் முறையான அணுகுமுறைகளை அறிந்து பின் பற்றுதல் அவசியம்

உண்மையிலே யே மிகுந்த ஆளுமை பெற்றிட விழைவோர் கற்கும் பருவத்தில் பொருள் உணர்ந்து படித்து கருத்துக்களை புரிந்துகொள்ள வேண்டும். எந்த மொழியிலும் பிழை இன்றி எழுத மற்றும் தெளிவான உச்சரிப்புடன் படிக்க காலப்போக்கில் மொழி நம் வயப்படும். மனப்பாடம் செய்து ஒப்பித்தல் எள்ளளவும் பலன் தராது . வாழ்நாள் எல்லாம் முயன்றாலும் அடித்தளம் இல்லாத மனப்பாடம் , நீந்திக்கரை சேர முயற்சிக்கும் மண்குதிரையைவிட மோசமான மணல் குதிரை என்று அடித்துச்சொல்லலாம் . மொழிதான் கருத்தை சுமக்கும் வாகனம் ; எனவே வலுவான வாகனம் இன்றி தொலை தூரப்பயணம் சாத்தியமே இல்லை . அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று பிறமொழிகளைப்புறக்கணிப்பது கிணற்றுத்தவளை நிலையில் நம்மை அமிழ்த்திவிடும். ஆதலால் பறந்து விரிந்த உலகில் நமது எல்லைகள் விரிவடைய மொழிகளை ஆர்வமுடன் கற்றுக்கொள்ளுங்கள் .இதற்கு அடுத்தநிலை முறையான பயிலும் முறைகள் யாவை எனப்பார்ப்போம்.

தொடரும் அன்பன் ராமன் 

 

2 comments:

  1. 1960க்குப்கபிறகே ல்வியின்தறம் குறைந்துவிட்டது. முதற் காரணமே அரசாங்கத்தின் தலையீடுதான்.
    சம்பளம் கொடுப்பவன் சவுக்கடி கொடுக்காமலிரிப்பானா
    வேங்கட்ராமன்

    ReplyDelete

LET US PERCEIVE THE SONG -6

  LET US PERCEIVE THE SONG   -6 பாடலை உணர்வோம்   -6 அன்புடையீர் திரைப்பட பாடல்கள் குறித்து " பாடலை உணர்வோம் " என்ற ...