Wednesday, August 9, 2023

CINE MUSIC- II

 CINE MUSIC- II

திரை இசை -II

திரை இசைஅமைப்பாளனின் பணி  முட்கிரீடம் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆம், ஏனெனில் ,மிகவும் உச்சத்தில் இருக்கும் தருணங்களில் போதும் போதும் என்று விலகி ஓடும் அளவிற்கு வாய்ப்புகள் குவிந்த வண்ண,ம் இருக்கும் ; வரும் பொருளை உதாசீனம் செய்ய ஒரு பற்றற்ற நிலை வேண்டும். வரும் வாய்ப்பை ஏற்றுக்கொள்வர், திரை மறைவில் உதவியாளர்கள் இசை அமைத்துக்கொடுப்பார்கள். இக்காலத்தில் இது சாத்தியம் .

பொற்கால நேரங்களில் இசை பலர் முன்னிலையில் உருவம் பெற்றது. அதுவும் தயாரிப்புக்கம்பெனியின் வளாகத்தில் முக்கிய நபர்கள் கூடி விவாதித்து பாடல் உருவாக்கப்பட்ட காலம் அப்போது. ஆனால் ஒரு CD யைக்கொடுத்து இதில் உங்கள் படத்தின் 4 பாடல்களுக்கு மொத்தம் 8 ட்யூன்கள் இருக்கின்றன , எது வேண்டும் என்று தேர்வு செய்யுங்கள் என்று  இசையமைப்பாளர் எளிதாக சொல்லிவிடுகிறார் இன்று . பொற்கால தமிழ்ப்பட நாட்களில் பாடல்கள் பற்றிய வாதங்கள் பூர்வாங்க அமைப்பு இவை சினிமா கம்பெனிகளில் நடை பெறும். முன்பு பாடல் அங்குலம் அங்குலமாக உருவாக்கம் பெரும் ;கம்பெனியின் முக்கியஸ்தர் + இயக்குனர், கவிஞர், இசை அமைப்பாளர் , இசைக்குழுவின் முன்னோடிகள் ,  என ஒரு பட்டாளமே விவாதித்து பாடல் இறுதி வடிவம் பெரும் . அது அப்போதைய நடை முறை : பலர் முன்னிலையில் இயக்குனர் கதையில் எங்கெங்கே பாடல்கள் வேண்டும் என்று கோரிக்கை வைப்பார். உடனே விவாதம் தொடங்கும் 3 ம் பாடலை வேறு இடத்தில் வைத்தால் இன்னும் சுவை கூடும் என்பார் கவிஞர். குழப்பமடைந்த இயக்குனர் சரி, ஏன் இசையமைப்பாளர் பேசமாட்டேங்கறார் என்று கொளுத்திப்போடுவார். உடனே இசை அமைப்பாளர் " இதோ பாருங்க , நீங்க எங்க பாட்டு வேணும் னு முடிவு பண்ணிக்கிட்டு வந்தா நான் என் வேலைய பாக்கபோறேன். இதுல நான் என்ன சொல்றதுக்கு இருக்கு ? என்று அமைதி காப்பார். இப்படி 10 நிமிட கருத்துப்பரிமாற்றத்தின் பின் பாடல்களின் இடம் நிர்ணயிக்கப்படும்.

சரி பாட்டு ரெடி பண்ணலாமா என்று பேச்சு தொடரும் . சரி பாட்டுக்கு ட்யூனா , ட்யூனுக்கு பாட்டா? என்பார் கவிஞர். . இயக்குனர் உடனே இசை அமைப்பாளரை பிடித்துக்கொள்வார் -சொல்லுங்கண்ணே /சொல்லுங்க சார். இசை அமைப்பாளர் கேட்பார் -டூயட்டா? PATHOS சாங்கா , எமோஷனா னு சொன்னா என்ன செய்யலாம்னு சொல்லமுடியும் என்பார்.

முதல் பாட்டு டூயட் -இயக்குனர்.   ஆர்ட்டிஸ்ட் யாரு ? கவிஞர் . யாரா இருந்தா என்ன? -தயாரிப்பாளர்.      அப்பிடி இல்லேங்க MGR க்கு ஒருமாதிரி , சிவாஜி சாருக்கு ஒரு மாதிரி னு சில நடை முறை இருக்கு அது சரியா இருந்தா தான் டிஸ்ட்ரிபியூட்டர்கள் , நான் நீ னு போட்டி போட்டுக்கிட்டு படம் நல்ல விலை போகும் என்பார் கவிஞர்.

ஆர்ட்டிஸ்ட் பெயர் தெரிந்ததும் என்ன ?  ட்யூனுக்கு தானே என்பார் கவிஞர். ஆம் என்பர் . சரி ட்யூனை ச்சொல்லுங்க என்பார் இசை அமைப்பாளரிடம் . .

  தா லலா லாலலா லலா நீ நனா என்று  ராகத்துடன் பாட , கவிஞர் சொற்களை அடுக்குவார் பின் வருமாறு  வா கலா  நீ நிலா நானுந்தன் நிழல் அன்றோ , இப்படியே சந்தத்துக்கு சொற்கள் வந்து விழ 6 நிமிடத்தில் பாடல் தயார். . தயாரிப்பாளர் ஒரே புளகாங்கிதம் அடைந்து தானே காதல் வயப்பட்டவன் போல துள்ளிக்குதிப்பார்.

இப்போது பாடலின் சொற்களும் மெட்டும் தயார் . அப்போது இசை அமைப்பாளர் பாடல்கள் ஒவ்வொன்றின் பட்ஜெட் என்ன என்று அறிந்து கொண்டு இசைக்குழுவின் அளவை நிர்ணயம் செய்வார். கொழுத்த பட்ஜெட் எனில் ஆர்கெஸ்ட்ரா பட்டையைக்கிளப்பும் , இல்லையெனி ல் நிதான அளவில் இருக்கும் இனி பாடல் தொடர்பான வேலைகள்  ஸ்டூடியோக்களில் நிறை வேற்றப்படும் . பாடலின் அடிப்படை அம்சங்கள் கம்பெனியில் உருவாக்கம் பெற்று , பிற பணிகள் ஸ்டுடியோவில் பல நிலை பயிற்சிகளுக்குப்பின் இறுதி வடிவம் பெற்று இசைத்தட்டுகளுக்கான ‘மாஸ்டர்' வடிவில் பதிவேற்றம் செய்யப்படும்.

அவை யாவை ?

பாடலின் ட்யூனை எந்த அளவுக்கு மெருகேற்ற முடியுமோ அந்த நிலைக்கு ட்யூன் மிக நளினமாக வடிவமைக்கப்பெறும் . இதில் ஒரு முக்கிய அம்சம் யாதெனில் பாடகர் / பாடகிக்கு ஏற்ற அளவில் ஸ்தாயி நிர்ணயித்து பாடுவோர்க்கு மாத்திரம்   4, 5 முறை பயிற்சி கொடுக்கப்படும் . பாடும் கலைஞர்களுக்கு இசை அமைப்பாளர் நேரடியாக ஏற்ற இறக்கங்களுடன் பாடிக்காட்டுவார் .ஒரு சில குழுக்களில் இசை அமைப்பாளரின் முதல் - உதவியாளர் பாடிப்பாடி பயிற்சி கொடுப்பார்.  இன் னொரு இடத்தில் / குழுவில் இசைக்கருவி களுக்கு பயிற்சி தரப்படும் prelude [முன்னிசை], interlude [இடை இசை] , post-lude [பின்னிசை] அனைத்தையும் பயிற்றுவிப்பர்  இதிலும் இருவகைகள் உண்டு. இசை அமைப்பாளர் ஒவ்வொரு இசைக்கருவிக்கும் தனித்தனியே நொட்டேஷன் எனும் இசைக்குறியீடுகளாக , எங்கெங்கு என்ன கால அளவிற்கு இசைக்க வேண்டும் என்று நிர்ணயித்துக்கொடுப்பார் . அல்லது இசை அமைப்பாளர் ஹார்மோனியத்தில் வாசிக்க வாசிக்க உதவியாளர்கள் குறியீடுகளை எழுதி ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் 'நோட்ஸ்' என்று தருவார்கள் அனைத்தும் பயிற்சி பெற்றபின் , மீண்டும் அனைவருமாக   [பாடகர்கள் +   இசைக்கலைஞர்கள் ] 3 ,4 முறை பாடி நல்ல பயிற்சிக்குப்பின் ஒலிப்பதிவுக்கு செல்வர்.

இறுதி பதிவுக்கு "TAKE" என்பர் . சிறிதும் பிழை இன்றி அனைவரும் செயல் பட வேண்டும். பிழை நேர்ந்தால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே பாட வேண்டும், சில பாடல்கள் ஒரே TAKE இல் முடிந்து அனைவரும் மகிழ்வர்,இல்லையேல் மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டே இருக்க வேண்டும் . இத்துணை இன்னல்களை கடந்து தான்  பாடல்கள் உருவாயின அந்த நாட்களில் .     மேலும் பேசுவோம்

தொடரும் அன்பன் ராமன்

 

 


1 comment:

  1. இசை அமைப்பாளர்எல்லோருக்கும் ஜால்ரா போட வேண்டும்்
    ஆனால் அந்த ஜால்ரா ஓசை இசை அமைப்பி்ல் எங்குமே கேட்காது
    வெங்கட்ராமன்

    ReplyDelete

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...