CINE DIRECTION/ DIRECTOR- 2
திரை இயக்கம் / திரை இயக்குனர் -2
இது குறித்து நன்றாகப்புரிந்து
கொள்ள பின்னோக்கி போகவேண்டியிருக்கும் . ஆம் ஆரம்ப கால தமிழ்ப்பட இயக்குனர்கள் இந்தியர்
அல்லாதோர் . அன்றைய தயாரிப்பாளர்களுக்கு திரை என்பது நமக்கு புதிய ஊடகம் .அதற்கு மேக்-அப்
, ஒளிப்பதிவு , ஒலிப்பதிவு போன்ற தொழில் நுட்ப அறிவு 'அவர்களிடம்' இருக்கிறது என்று
நம்பினர் .அது பெருமளவுக்கு உண்மையும் கூட . எனவே மேல்நாட்டவர் / மேல்நாட்டில்
தொழில் பயின்றவர் இவர்களே இயக்குனர் ஆகலாம் என்றொரு நிலை இருந்தது. மெர்ரி லேண்ட் சுப்பிரமணியம் [நடனக்கலைஞர் பத்மா சுப்பிரமணியம் அவர்களின் தந்தை
] , ஆரம்பகால இந்தியர் இத்துறையில். .பின்னாளில்
ஏ வி மெய்யப்பச்செட்டியார் , எஸ் எஸ் வாசன் ஆகியோர் இத்துறையில் கால் பதித்தனர்.
எதுவாயினும் திரையில் காட்சிகளை
அழகாகப்படர விடத்தெரிந்தவர்கள் இயக்குனர் நிலைக்கு வந்தனர். சிலர் நீண்டகால அனுபவத்தின்
பலத்தில் இயக்குனர் ஆனார்கள் [ பீம்சிங் ,பந்துலு,
தாதாமிராஸி, க்ரிஷ்ணன்-பஞ்சு, பிரகாஷ்ராவ் போன்றவர்கள் ]. .என்ன இருந்தாலும் இயக்குனர்களின்
தேவையும் முக்கியத்துவமும் அதிகரித்ததென்னவோ, சரித்திர, புராண கதைகள் திரையில் இருந்து
மறையத்தொடங்கி சமூக கதைகள் படமாக வரத்தொடங்கிய பின்னரே என்று அனைவரும் அறிவோம். இதற்கு
இடைப்பட்ட தொரு காலம் வசனகாலம் -ஆம் உணர்ச்சிபொங்க செந்தமிழில் 8 பக்க வசனங்களை பிழையின்றி
கோபாவேசத்துடன் ஏற்ற இறக்க ஒலி வேறுபாடுகளுடன் பேச அனுபவம் கொண்ட நாடக கலைஞர்கள் திரைப்படத்தை
தங்களின் களமாக்கி இடம் பிடித்தனர் . ஒரு கட்டத்தில் வசன ஆதிக்கம் அதிகமாகி காட்டுக்கூச்சல்
நிலைக்கு போனதும் இயற்கை மரணம் வசன ஆதிக்கத்தை கொன்று ஒழித்தது. இந்தநிலையில் தான்
அளவான வசனமும் , நளினமான காட்சிப்படுத்துதலும் [presentation] படத்தின் வெற்றிக்கு
பெரிதும் துணை புரிய, கற்பனைத்திறன் கொண்ட
இளைஞர்கள் இயக்குனர் ஆயினர். சில கதாசிரியர்கள் [கதை வசன கர்த்தாக்கள்]] பரிட்சார்த்தமுறையில்
இயக்குனர் ஆக்கப்பட்டு வெற்றிகரமாக வலம் வந்தனர்.
இப்போது இந்த இயக்குனர்களுக்கு
'புதிதாக' ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்தது .எனவே இரண்டு முக்கிய திருப்பங்களை
தமிழ்த்திரை ஏற்றுக்கொண்டது .அதாவது , எடுத்ததெற்கெல்லாம் பாடல் என்ற இடத்தில் இருந்து
விலகி , சில முக்கிய உணர்வுப்பூர்வ காட்சிகளுக்கு பாடல் வலுவேற்றும் என்ற புதிய சூழல்
ஏற்பட்டது. அதனால் மிகப்பொருத்தமான பாடல் வரிகளை யாத்துத்தரும் கவிஞர்கள் வரவேற்பு
பெற்றனர் .
இப்போது கவிஞரும் இயக்குனரும்
ஒருவரின் திறமைக்கு மற்றவர் ஈடு கொடுக்கும் நிலை உருவானது காட்சி அமைப்பில் அதீத கவனம்
செலுத்தி படம் பதிவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இயக்குனர்களின் எண்ணங்களை காட்சியில்
காவியமாக வெளிப்படுத்த வல்ல ஒளிப்பதிவாளர்கள் கண்டெடுக்கப்பட்டனர். .இப்போது விவாத
மேடை பல இணைகளை க்கொண்ட களமாயிற்று .1 கதாசிரியர் -இயக்குனர் , 2 திரைக்கதை-இயக்கம் , 3 இயக்குனர் -கவிஞர்
-இசை அமைப்பாளர், 4 இயக்குனர்-ஒளிப்பதிவாளர் என்று பல கட்டங்களிலும் இயக்குனர் மையப்புள்ளி
ஆகி மாபெரும் திறமைகள் இருந்தால் இயக்குனர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள முடியும்
சூழல் ஏற்பட்டது. இவ்வனைத்துக்களங்களிலும் சுறுசுறுப்பும் துல்லியமும் மிக்க இயக்குனர்களை தோற்றுவிக்க காரணியானது தமிழ்த்திரை என்பது அப்பட்டமான உண்மை. அதே கால கட்டத்தில்
மலையாள த்திரை சோக காவியங்களை கருப்பு வெள்ளையில் உருவாக்க , தெலுங்குத்திரை பொருந்தாத
ஜோடிகளுடன் மாயா ஜாலம் , பேய் பிசாசு என்று
பயணிக்க கன்னடம் ராஜ ராணி காதல் கதை என்று இருந்தன. அப்போதே தமிழ்த்துறையில் இயக்குனர்
என்பவர் அஷ்டாவதானி என்று ஊரறிய உலா வந்த உண்மை. இவ்வகை இயக்குனர்களின் பங்களிப்பு
காமெடிக்கு உரமிட்டது. ஆம் தமிழ்த்திரையில் கோணங்கி சேஷ்டைகள் இல்லாத அறிவுபூர்வமான
நகைச்சுவை காட்சிகள் அமைப்பு மற்றும் நறுக்
வசனங்களால் மிக நேர்த்தியாக இடம் பெற்றன.
அவ்வப்போது திகில் மற்றும் தந்திர
காட்சிகள் கொண்ட படங்களும் வெளிவர த்துவங்கி ஒளி ப் பதிவில் முத்திரை பதித்த தென்னிந்திய
ஒளிப்பதிவாளர்கள் அநேகர்.பின்னாளில் இத்துறையில் இடம் பெட்ரா பெண் மணிகள் பி ஆர் விஜயலக்ஷ்மி
மற்றும் சுஹாசினி ; இவ்வாறு தென்னகத்தில் தரமான ஒளி ப்பதிவாளர்களும், தொழில் முறை
processing தியேட்டர் களும் கணிசமாக வளர்வதற்கு இயக்குனர்களின் விசேஷ முயற்சியில் விளைந்த
படங்களும் பெரும் பங்கு வகித்தன.
தொடரும்
அன்பன் ராமன்
இயக்குனர் ஏ.பி. நாகராஜனை மறக்க முடியுமா? புராணக்கதைகளுக்கு படம் எடுத்தவர் அவர்தான்
ReplyDelete