Friday, August 11, 2023

TEACHERS’ ROLE-2

 TEACHERS’ ROLE-2

ஆசிரியப்பணி -2

ஆசிரியர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில அடிப்படை உண்மைகள்.                          இதைச்சொன்னால் ஆமா வந்துட்டான் என்று சிலர் அங்கலாய்ப்பர் -வேறு யார் அடியேனது தொழில் இனம் சார்ந்த ஆசிரியர்கள் தான் .இன்றைய சமுதாயத்தின் பலனற்ற ஆனால் வலுவான ஆயுதம் பலரிடம் தயார் நிலையில் இருப்பது ஈகோ என்னும் அகம்பாவ நிலை.  யார் எதைச்சொல்ல முயன்றாலும் முகம்  சுளிப்பதும் , ஏளனப்பார்வை பார்ப்பதும் ஆழ்ந்து வேரூன்றி இருக்கிறது . அவ்வளவு ஏன் ? ஒரு சாதாரண அறிவுறுத்தலாக spelling எனும் சொல் அமைப்பை நன்றாக தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள் என்று வகுப்பில் சொன்னால் கூட உடனே SPELL CHECK பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நமக்கே ஆலோசனை சொல்லும் இளம் கன்றுகள். இது மெல்ல விரிந்து பரவி ஆசிரியர்களிடமும் புகுந்துவிட்டது என்பது துரதிர்ஷ்டம். ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்ற நிலையில் தான் பேசவேண்டியுள்ளது .

நான் சுட்டிக்காட்ட நினைப்பது

கல்வி என்பது தகவல் தொகுப்பு . எனவே நாம் படித்துவிட்டோம் , பட்டம் பெற்று விட்டோம் என்பது ஒரு நிலைதானே அன்றி அதுவே எல்லை அல்ல. மேலும் கல்விக்கு எல்லை இல்லை என்பதை அனைவரும் அறிவோம்.  இவ்வாறிருக்க தொடர்ந்து நமது அறிவின் வியாபகம் விரிவடையைத்தான் வேண்டும். இது ஆசிரியர்களுக்கு சாலப்பொருந்தும் . எனவே நமது பொறுமை மெல்ல மெல்ல வேரூன்றி கிளைக்க வேண்டும் . ஏனெனில் ஆசிரியப்பணி சிற்பியின் பணியைவிட நுணுக்கமானது .

நாம் செதுக்க நினைக்கும் ஒவ்வொரு சிற்பமும் தனித்தன்மை கொண்டது. ஆனால் சிற்பி எனும் ஆசிரியன் ஒரே பொது முயற்சியில் ஏககாலத்தில் எல்லா வடிவங்களையும் உருவாக்குபவர். GENERAL EFFORT FOR VARIED EFFECTS/ PRODUCTS என்பது வேறெந்த பணியிலும் கிடைக்காத மகோன்னதம் அது கொண்டே ஆசிரியப்பணி மகோன்னதமானது புனிதமானது என்றெல்லாம் நெடுங்காலமாகவே போற்றப்பட்டு வந்துள்ளது.

இவ்வரிய வாய்ப்பினை பெற்ற ஆசிரியன் அதை முறையாகப்பயன் படுத்தினால் தான் அவர் போற்றுதலுக்குரிய உறுப்பினர் ஆகிறார் சமுதாயத்தில்.      பெரும்பாலும் ஆசிரியன் தனக்கென ஏற்படுத்திக்கொள்ளும் பெருமை அவன் எவ்வளவு எளிதாக கற்பிக்கிறான்; அவனது போதனா முறையில் ஒரு வசீகரம் இருக்கிறது.   வேறெவரும் அவர்போல் இல்லை என்று மாணவர்கள் சிலாகிப்பதை நாம் நன்றாக அறிவோம் . அத்தகைய ஒரு மரியாதைக்குரிய பீடத்தை நாம் எட்ட வேண்டாமா ? அதுபோன்றதொரு அவா உள்மனதில் நிழலாடுகிறது எனில் கண்டிப்பாக உங்கள் பயணம் வெற்றிக்கொடி நோக்கித்தான் இருத்தல் வேண்டும் . வெற்றிக்கொடி இலக்கு எனில் வேறெதிலும் பார்வையை செலுத்த முகாந்திரமோ தேவையோ இல்லை. எனவே ஒவ்வொரு நாளும்  இன்று தான் இப்பணியில் நுழைகிறேன் என ஒரு இளைஞனாக தீவிர அபிமானம் கொண்டு செயலாற்றுங்கள் . உங்கள் வெற்றிக்கு நான் உத்திரவாதம் . அப்படி எனில் செய்யவேண்டியது என்ன ?

அதாவது நீவிர் எந்த நிலையில் [SCHOOL , UG , PG /UNIVERSITY ] பணிபுரிபவர் ஆயினும் மூன்று அடிப்படை தேவைகளை முற்றாக நிறைவேற்றுங்கள்.              1 நேரம்தவறாமை  2 வகுப்பறையில் பாடப்பகுதிகளை மாத்திரம் பேசுதல் 3 எந்த சார்புநிலையும் கொள்ளாதிருத்தல் [சொல், செயல் , விடைத்தாள் மதிப்பீடு -அனைத்திலும் ].     இதை நீங்கள் தெளிவாக கைக்கொண்டால் உங்கள் பற்றிய மாணவ சமுதாயத்தின் மதிப்பீடு , அங்கீகாரம் , மரியாதை அனைத்தும் மேல் நோக்கிப்பயணிக்கும் .இது ஏன் என்பதையும் விளக்க முயல்கிறேன்.

நாம் எத்துணை நபர்கள் ஒரு நிறுவனத்தில் பணி  புரிந்தாலும் , ஆசிரியர் தனித்துதான் வகுப்புகளை சந்திக்கமுடியும். எனவே மாணவர்களும்ஆசிரியர் ஒவ்வொருவர் குறித்தும் தனித்தனியே தான் சிந்தித்து அவ்வாசிரியரின் UTILITY என்னும் பலன்மிக்க செயல்பாடு குறித்து கண்டிப்பாக மதிப்பீடு செய்கின்றனர். .இது LKG நிலை குழந்தைகள் கூட மிகத்துல்லியமாக செய்வதை நம் வீடுகளில் பார்க்கிறோமே . அவ்வாறிருக்க ஆசிரியப்பணியில் மெத்தனம் , அசட்டை , அரட்டை இவை மிகக்குறைவாக இருக்குமாறு நிர்வகித்தால் , ஒரு செயல் வீரராக அறியப்படுவார் ஆசிரியர்.

அதான் எனக்குத்தெரியுமே என்ற நிலைப்பாடு ஆசிரியனுக்கு உகந்தது அல்ல. நன்கு தெரிந்தவற்றை , மென்மேலும் படிக்க படிக்க உங்கள் பார்வையும் புரிதலும் விரிவடைய , வெவ்வேறு நிலைகளில் ஒரு கருத்தை ஆழ்ந்து விவாதிக்கும் ஆற்றலும் ஆர்வமும் கொப்பளிக்கும் . அந்த நிலை நோக்கி நீங்கள் நகர நகர உங்கள் வகுப்பறை சொல்லாடல் , விளக்கம், விவாதத்திறன் அனைத்திலும் ஒரு ஜாம்பவான் என்று நீங்கள் பணிபுரியும் ஊரில் நிச்சயம் பேசப்படுவீர்கள்.  உங்கள் மாணவர் வெவ்வேறு உயர்களங்கள் எட்டினாலும் உங்களை இறைவன் நிலையில் ஆராதிப்பர். உங்கள் மாணவர்கள் தான் உங்கள் AMBASSADOR கள் . உலகெங்கணும் உங்கள் பெருமையைப்பறைசாற்றுவர் . இந்த நிலையில் ஒரு இயற்கையான சஞ்சலம் தோன்றுதல் இயல்பு . அது ஆசிரியரின் உள்  மனம் கொள்ளும் உவகை . அது நான் "அவரை" விட சிறப்பானவன் , "இவரை" விட எவ்வளவோ மேல் என்பதாக ஒப்பீடு செய்யும். இதிலிருந்து விடுபட நீங்கள் ஒரு கணம் சிந்தியுங்கள் . "அவரும் ", "இவரும்" தான் ஆசிரியப்பணிக்கு அளவுகோல்களா ? நான் எங்கள் தெருவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெற்றேன் என்பதில் என்ன பெருமை? அதற்க்கு இணையானது தான் 'அவர்' 'இவர்', நான் ஒப்பீடு.     பந்தயக்குதிரைகளுடன் போட்டியிடுதல் வேறு என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் எனவே உங்கள் bench mark நீங்கள் நிர்ணயித்து அவ்வப்போது இயன்ற அளவு உயர்த்திக்கொண்டே பயணியுங்கள் .எனவே மேம்படுத்துதல் என்னும் 'UPDATING' ஆசிரியப்பணியின் அடிநாதம் என்பதை நன்றாக பற்றிக்கொள்ளுங்கள்  --நாளை நமதே மட்டும் அல்ல எந்நாளும் நமதே என்று தெளிவும் பெருமையும் கொள்ளுமளவுக்கு விஸ்வரூபம் எடுக்க எந்த ஆசிரியரும் மனது வைத்தால் முடியும். வாழ்த்துகள்

தொடரும் அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...