Sunday, August 20, 2023

SCIENCE – V A C C I N E -4

 SCIENCE – V A C C I N E -4

அறிவியல்வாக்ஸின் -4

வாக்ஸின்களின் அடிப்படை த்தேவைகள் :

எந்த வாக்ஸின் ஆயினும் குறிப்பிட்ட கால வரை வரையிலும் அது செயல்திறன் கொண்டு [உயிரோட்டமாக] இருத்தல் வேண்டும் . இதை shelf life என்று குறிப்பிடுவர். அதைக்கடந்தால் EXPIRY DATE துவங்கும்..இருப்பினும் உயிரோட்டம் மிக்க SHELF LIFE காலத்திலும் கூட வாக்ஸின் அதற்கென்று அறிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குளிர் நிலையில் வைக்கப்பட வேண்டும். இல்லையேல் செயலிழப்பு + மோசமான பக்கவிளைவுகளை வாக்ஸின் தோற்றுவிக்கக்கூடும். இது போன்ற செயல் தேவைகளை [FUNCTIONAL  REQUIREMENTS]  கருத்தில் கொண்டு , ஒவ்வொரு வாக்ஸினும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்படுகிறது.

வாக்ஸின்களில் உள்ள முக்கிய பொருட்கள்

1 ஆன்டிஜென் [ANTIGEN ]  மிக முக்கிய பொருள் இது தான். அதன் திறன் குன்றாமல் காக்கப்பட்டு தேவையான கால வரையறை முடியும் வரையில் செயல் பட வேண்டும் .

2  SURFACTANTS எனும் புறச்செயலிகள் . வாக்ஸினில்  உள்ள பொருட்கள் ஒன்றுடன் ஒன்று எதிர்வினை புரியாமல் [ avoid interaction between components in the vaccine ] தடுக்கும் வேலையை செய்வன .

3 PRESERVATIVES [ செயல் நிலை காக்கும் வேதிப்பொருட்கள் [கெமிக்கல்ஸ்] ] பெரும்பாலும் இவை ஆல்கஹால் வகையின . வாக்ஸினின் செயல்பாடு குன்றாமல் காப்பவை [2-phenoxy ethanol ]. ஆனால் ஒருவருக்கு மட்டும் பயன்படும் ஒற்றை டோஸ் குப்பிகளில் [vials ] preservative சேர்ப்பதில்லை.

4  நிலைப்படுத்திகள் [stabilizers ] அதாவது வாக்ஸினில் உள்ள பொருட்கள் சிதையாமல்/ அழியாமல் நிலைப்படுத்துவன. இவை பல வேறுபட்ட sugars /அமினோஅமிலங்கள் / விசேஷ ப்ரோடீன்கள் 

5 பிற உதிரிகள் [Residuals]  மிக நுண் அளவுகளில் ப்ரோடீன், ஈஸ்ட் அல்லது அன்டிபயா ட்டிக்ஸ் மிகமிக நுண் [ppm / ppb  எனும்] அளவில்

6  இணைப்புகள் [adjuvant ] இவை பெரும்பாலும் உப்பு வகையினை -அலுமினியம் பாஸ்பேட் /சல்பேட் /ஹைட்ராக்சைடு  அல்லது அலுமினியம் /பொட்டாசியம்  சல்பே ட், இவற்றில் ஏதேனும் சேர்ப்பர் . இந்த இணைப்புகள் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக் கும்  immune system செயல்களை தூண்டிவிடும் .

7 நீர்க்க செய்ய diluent : வாக்ஸின்  எந்த அடர்த்தியில் உடலில் செலுத்த வேண்டுமோ அந்த அடர்த்திநிலைக்கு கொண்டு வர மிக சுத்தமான distilled water , diluent ஆக உபயோகிக்கப்படுகிறது .

இவ்வாறு துல்லியமாக கலந்து உருவாக்கப்படும் பல் பொருள் கலவையே வாக்ஸின் என்னும் வடிவம் பெறுகிறது.

 

ANTIBODY எனும் தற்காப்பு ப்ரோடீன்கள் குறிப்பிட்ட ஆன்டிஜென் களை அழித்தொழிக்க வல்லன .எனவே வாக்ஸின் கள் அந்தந்த நோய் களை எதிர்க்கும் ; ஆகவே பல வித வாக்ஸின்கள் மனித வாழ்விற்கு அவசியம்.

வாக்ஸின்  உருவாக்கத்தில்,   செயலிழக்கச்செய்யப்பட்ட [ATTENUATED ]அல்லது சிதைக்கப்பட்ட வைரஸ் பாகங்கள் பயன் படுத்தப்படுகின்றன . இவை VIRAL PLATFORM டெக்னாலஜி என்றழைக்கப்படுகின்றன .அடினோ வைரஸ் என்னும் ஒருவகை வைரஸ்கள் 1953 முதலே வாக்ஸின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அடினோ வைரஸ் இனத்தவை மனிதரில் சுவாச நோய் , இருமல் போன்ற இடர்ப்பாடுகளை தோற்றுவிப்பன .

அவை மனிதர்களின் வாழ்வில் நோய்களை விளைவிப்பதால் பலவகை மனிதர்கள் இந்த அடினோ வைரஸ் வகைகளை உடல் ரீதியாக எதிர்கொண்டுள்ளதால் இவை வைரல் PLATFORM கருவிகளாகப்பயன் படுகின்றன.

மேலும் வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...