Monday, August 21, 2023

4 ANOTHER TALENT-2

 4 ANOTHER TALENT-2

4 மற்றுமோர் திறமையாளன்-2

இரண்டு மாத்திரை தன் வேலையைக்காட்ட குடிக்க முடியாமல் துவண்டான் tricycle கோபாலு மேல் சிகிச்சைக்காக அந்த மையத்தில் சேர்த்துவிட்டனர். படிப்படியாக தேறி வருகிறான் கோபாலு .அது பள்ளி விடுமுறைக்காலம் ..ஏதுவானால் என்ன வயிற்றுக்கு விடுமுறை கிடையாதே.  .அதற்கும் ஒரு திட்டமிட்டான் வெங்கடேசன், மளிகைக்கடை மாணிக்கத்தின் உதவியால். இது கோடை விடுமுறை கோயில், ரயில் நிலையம் எங்கும் சுற்றுலா வாசிகள் கவா கவா என்று அலைகிறார்கள். ஓட்டல்கள் RTPCR செய்பவர்கள் [CoVid பரிசோதனை] போல ரத்தத்தை உறிஞ்சுகின்றன .இதை முறையாக பயன் படுத்தி முன்னேறலாம் என்று மாணிக்கம் சொன்னான். விரிவா சொல்லுங்கண்ணே என்றான் வெங்கடேசன். உங்கம்மா நல்லா வடை சுடுவாங்கல்ல? –மாணிக்கம், மீண்டும் மாணிக்கம் -ஆமாம் சூப்பரா சுடுவாங்க.” ஒரு நாள் எங்கவீட்டுல நீராட்டுக்கு 150-200 வடை சுட்டுக்கொடுத்தாங்க . எங்க சொந்த பந்தமெல்லாம் மாணிக்கம் எப்ப திரும்பியும் வடை போட்டுத்தருவனு கேட்டுக்கிட்டே இருக்காங்க., அத்தினி வடையும் ஒரே சைஸ் ஒரே டேஸ்டு ;அதை விட அந்த மணம் ஸ்டார் ஓட்டல் வடையில கூட இருக்காது.   டெய்லி காலை 9 மணிக்கு உளுந்து, உப்பு, மிளகாய், வெங்காயம் ,  இஞ்சி , மல்லி கறிவேப்பிலை எல்லாம் + எண்ணெய் 1 லிட்டர் எடுத்துக்க மத்தியானம் 3 மணிக்கு ரயில் வரும் போய் வித்துப்பாரு நல்லா பறக்கும் . நல்ல லாபம் வரும் வித்துட்டு அடுத்தநாள் எனக்கு பணம் குடுத்துட்டு புதுசா சரக்கு வாங்கிக்க. டெய்லி புது சரக்குல போடுங்க:  உங்கம்மா சுடற  வடைக்கு சும்மா காக்கா மாதிரி தொரத்திக்கிட்டு வருவாங்க

மாணிக்கம் பார்முலா அற்புதமாக வேலை செய்தது. உண்மையிலே வெங்கடேசனின் தாய் பருப்புவடை தயாரிப்பில் கை தேர்ந்தவர். ஸ்டே ஷனில் வடைத்தூக்கை  மூடியை திறந்ததும் , ஸ்டேஷன் மாஸ்டர் தம்பி என்று பாய்ந்து அரை டஜன் வடையை அள்ளிக்கொண்டு மொச் மொச் என்று தின்றுவிட்டு  போகும் போது காசு வாங்கிக்க என்றார்..வண்டி நின்றதும் வடையின் வாசனையில் மயங்கி 10 வடை 15 வடை என்று 80 வடைகளை விற்றுவிட்டான் [400/-ரூபாய் வசூல் ,ஸ்டேஷன்  மாஸ்டர் 30/- ரூபாய் தந்தார். . மீதம் இருந்த 15 வடைகளை போகும் வழியில் பஸ்             ஸ்டாண்டில் விற்றான் 430+75= 505. மாணிக்கத்திற்கு 236/- 505-236=269 /- ஒருநாளைய வரவு. [269/- குடிகார தகப்பன் கையை எதிர் நோக்க வேண்டாமே] , கோடை விடுமுறையில் சுமார் 1800/- ரூபாய் சேர்த்துவிட்டான்  வெங்கடேசன்.  மாணிக்கமும் சொல் தவறாமல் நடந்து கொண்டான்  

இதற்கிடையில் இலவச வீடு திட்டத்தை அறிந்து கொண்டு வெங்கடேசன் நேரே கலெக்டரிடம் போய் ”ஏதோ கடையில் நுழைந்து வடை வாங்குபவன் போல”  எங்களுக்கு ஒரு வீடு தாங்க என்று     நேரடியாகவே   கேட்டான்.

கலெக்டர் பண்டாரி -வட இந்தியர் ,தமிழ் சரியாக தெரியாது , எனவே PA கௌசல்யா அவர்களை வரச்சொல்லி இந்த சிறுவனின் தேவை என்ன என்று கேட்கச்சொன்னார்..விவரத்தை தெரிந்துகொண்டதும் நீ, உன் தாய் , தங்கை மூவரின் ஆதார் காப்பிகளுடன் விண்ணப்பித்தால் நான் ரெகமெண்ட் செயகிறேன் இன்னும் 4 நாளுக்குள் விண்ணப்பியுங்கள் நான் உதவி செய்கிறேன் என்றார் . அதே போல் செய்தனர் . சிறுவனின் வெளிப்படை பேச்சு --"வீடு தாங்க" என்ற கோரிக்கை கலெக்டர் மனதை அசைத்துவிட்டது. நேர்மையான கோரிக்கை என்று உணர்ந்தனர் அதிகாரிகள். அடுத்த 80 நாட்களில் ஒரு அழகிய அளவான வீடு இவர்கள் மூவர் பெயரிலும் பதிவு செய்து கொடுத்தனர். கௌசல்யா,  கலெக்டர் இருவரையும் தனித்தனியே காலில் விழுந்து வணங்கி நன்றி தெரிவித்தனர் வெங்கடேசன் வீட்டார். கையில் இருந்த வித்தை வடை செய்வது ; வித்தை செய்த விந்தை வெளி மனிதர்களிடம் பேசுவதற்கு உதவிட, வீடு எனும் தேவைக்கு கோரிக்கை வைக்க உதவியது.  நேர்மைக்கு உதவிட மக்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.

அன்பன் ராமன்

1 comment:

  1. வடை விற்று வீடு வாங்கும் காலம் எப்போ வருமோ!
    வெங்கட்ராமன்

    ReplyDelete

CINNAMON

  CINNAMON A widely known condiment of pan continental acceptance and adoration is cinnamon.   Its mild aroma must be the reason for its w...