Friday, September 15, 2023

7 - TEACHERS’ ROLE AT HOME

 7 - TEACHERS’ ROLE AT HOME

7 -ஆசிரியப்பணி வீட்டில்  

கல்வி ஏதோ ஆசிரியரின் கடமை என்று நினைக்கும் காலம் இது. உண்மையில் அக்கறை செலுத்தவேண்டியோர் பயில்வோரும் \ பெற்றோரும் என்பதே நியாயமான உண்மை . ஏனெனில் பயின்றவருக்கே பலன் . எனவே நம் குழந்தை முறையாகக் கற்க வேண்டும் என்ற அவாவும் உந்துதலும் யாருக்கு இருக்க வேண்டும்? இருக்கிறதா? இல்லை என்றே சொல்லத்தோன்றுகிறது . ஏன்? PARENT -TEACHER MEET நிகழ்வுக்கு தகப்பனார் போவதே இல்லை .பெரும்பாலும் தாயார்கள் தான் வருகிறார்கள். நன்கு படித்து உயர் நிலைகளை எட்டிய தாய் மார்கள் 2% இருந்தாலே அதிகம். மேலும் வகுப்பு ஆசிரியரிடம் தெளிவாக விவாதித்து அறிந்து கொள்ள வேண்டிய விவரங்களை பல தாய் மார்கள் பேசவே தயங்குகின்றனர். தாய்மார்கள் தெரிந்துகொள்ள வேண்டியன

1. மாணவரின் வகுப்பறை நடத்தை [ கவனம், உரிய காலத்தில் வீட்டுப்பாடம் முடித்தல் , பள்ளி/வகுப்பு நண்பர்கள் யாவர் போன்ற தனி மனித ஒழுக்கம் சார்ந்த அடையாளங்கள் ]

2 அவ்வப்போது நடக்கும் தேர்வுகள் பற்றி தெரிவிக்க வேண்டுதல் , 3 தேர்வுக்குப்பின் ஒரு 10 நாட்கள் சென்ற பின் , ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய ஆசிரியரை சந்தித்து மாணவரின் செயல் பாடுகளில் [தேர்வில்] குறை இருப்பின் சரி செய்வது பற்றி அறிதல். .

4 அதே ஆசிரியர்களை அவ்வப்போது சந்தித்து விளக்கம் கேட்க, குறிப்பிட்ட மாணவரை ஆசிரியரே சிறப்பாக கண்காணித்து , குறைகளை க்களைவார் .

5 முக்கியமான தேவைகள் இருப்பின் அவற்றை உரிய காலத்தில் நிறைவேற்ற, பயில்வதும் எளிதாகும்.

இந்த நடை முறைகள் மாணவர்களிடையே ஏற்பட்டுவிடக்கூடிய "பொய் பேசும் அவலத்தை" தவிர்க்கும். பொய் பேசாத நற்பண்பு, பிற உயரிய செயல் முறைகளைப் பின்பற்ற தூண்டுதலாக அமையும். அவ்வகை பண்புகள் வளர வளர ,குழந்தைகள் பெற்றோர் அறிவுரையை ஏற்பர். இந்த சூழலில் கல்வி குறித்த புரிதலும் தேடுதலும் பெற்றோர்-மாணவரிடையே வலுப்பெறும். இப்போது குழந்தையை தன்னிறைவை நோக்கி பயணிக்க உதவுங்கள். அந்த நிலையில் மொழி அறிதல் குறித்த தீவிர பயிற்சி முறைகள் செயல் படுத்தப்பட வேண்டும். அப்பயணத்தில் டிக்ஷ்னரி [ஆங்கிலம் -ஆங்கிலம் -தமிழ்]  மொழி அறிவை மேம்படுத்த பெரிதும் உதவும் எனவே டிக்ஷ்னரி எவ்வாறு பயன்படுத்துவது என்ற வழி முறைகளை பயிற்றுவிக்க வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் டிக்ஷ்னரி தனியே உண்டு,. படிப்படியாக அவற்றையும் வாங்கி பயன் படுத்தினால் அச்சம் விலகும்,

 இதே போல அட்லஸ் எனும் புத்தகம் உலக நாடுகளின் அமைப்பையும், இருப்பிடங்களையும் புரிந்து கொள்ள உதவும், இவற்றை சரியாகப்புரிந்துகொள்ள , geography மற்றும் புவி இயல் படிப்பது எளிதாகும் 

இவ்வாறு பள்ளியில் அறிவுறுத்தாத நடை முறைகளை பின்பற்ற வேண்டுமா என்று தயங்காதீர்கள். பள்ளியில் பயிலும் பாடத்திட்டம், ஒரு அடிப்படைக்கல்வி, அதை மட்டுமே பயில வேண்டும் என்று நினைக்க வேண்டாம்; நடனம் பாடல், கராத்தே, இசைக்கருவிகள் கற்றுக்கொள்வதில்லையா ? அதே போல கல்விக்குத்தொடர்பான சில பயிற்சி முறைகளைப்பயில்வது , சுய சார்பு, மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும்..இந்த கால கட்டங்களில் நமது குறிக்கோளும் பார்வையும், இயல்பாகக்கற்பது எப்படி என்பதாகவே இருத்தல் நலம். ட்யூஷன் என்னும் வழிமுறையை தவிர்த்தல் நலம். மாறாக சிறிது நேர விளையாட்டு உடலையும் உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும்.

இப்போதெல்லாம் குழந்தைகள் விளையாடுவதைப்பார்க்கவே முடியவில்லை. ஆனால் junk food வகைகளையும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் வறுத்த/பொரித்த பண்டங்களை தின்று அனேகர் பெரும் வளர்ச்சிகண்டு 10, 12 வகுப்புகளிலேயே uniformed மாமாக்கள்/ மாமிகள் போல   உலவுகின்றனர்.         அவர்களை UNIFORMED என்பதை விட UN -INFORMED என்பது பொருத்தம் என தோன்றுகிறது. இது போன்ற உடல் வளர்ச்சிகள் HORMONE சமநிலைகளை க்குலைத்து,  மனம் பேதலித்தல் [கிட்டத்தட்ட பிஞ்சில் பழுத்தது போன்ற] தடு மாற்றங்களுக்குக்கூட இட்டுச்செல்லக்கூடும். பொதுவாக இவை DISTURBED PHYSIOLOGY யினால் உருவாகும் என்பது என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது. தவறெனில் திருத்திக்கொள்ள சித்தமாக இருக்கிறேன்.

இது போன்று,  வீட்டில் அமர்ந்து கற்க குழந்தைகள் தயக்கம் காட்டும்; தாய்/ தகப்பன் /சகோதரி என அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்து ஒருவர்க்கு ஒருவர் சிறிது  கவனம் செலுத்திப்பயிற்றுவிக்க  , முதலில் பெற்றோர் சில முக்கிய விவரங்களைக்கற்றுக்கொள்வர். அப்போது முன்னொரு சமயம் படித்தது என்று சொல்லி தட்டிக்கழிக்கும் மனோபாவம் குறைந்து, அவர்களுக்கும் பல தகவல்கள் புரிய வரும்.குழந்தை எதைக்கேட்டாலும் "வாத்தியாரிடம் கேள் " என்று அமைதிப்படுத்தும் அலட்சியம் மறையத்துவங்கும். இப்போது உங்கள் இல்லம், முன் இரவில் ஒரு கல்விக்கூடமென ஒளிரும். சீரியல் பார்க்கும் நேரத்தை சீரிய கல்விக்கு ஒதுக்கி பலவற்றை அறிந்து கொள்ள, உங்கள் குழந்தைகள் உங்களை நம்பிக்கைக்குரிய ஆசான்களாக ஏற்றுக்கொள்ள, எவ்வளவு உன்னத சூழல் உருவாகும்?  பெற்றோர் அருகில் இருந்து கற்று, கற்பிப்பதால், தயக்கமின்றி பயில ஒரு அமைதியான சூழல் ஏற்படும். இப்போது நீங்கள் குழந்தைகளுடன் செலவிடும் நேரம் .அதிகம் ஆனதால் பாசம், பிணைப்பு மேலும் விரைந்து கற்கும் பாங்கு மேம்படும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் . 10 ம் வகுப்புவரை குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விட்டு , ஐயோ +2 வந்து விட்டதே என்று கற்பிக்க நினைத்தால் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும். மேலும் கீழ் வகுப்பில் [1 ம் வகுப்பு முதல்] உங்கள் மேற்பார்வை துவங்கிவிட்டால் சேர்ந்து பயணித்தல் மூலம் கல்வி அழகாகக்    கை கூடும்.. அவ்வப்போது ஆசிரியர்களுடன் விவாதிப்பதை தொடர்ந்தால் நல்ல பலன் கிடைக்கும். இவ்வனைத்தும் "என் குழந்தைக்கு" என்றெண்ணி செயல் படுங்கள், வெற்றி நிச்சயம் பெற்றோர்களே , வாழ்த்துகள் .

அன்பன் ராமன் . 

2 comments:

  1. Dictionary and Atlas are very essential for a student ,but the present generation feels that an Android phone is enough to replace the above
    Venkataraman

    ReplyDelete
  2. But, Android phones drive to Gynoid temptations

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...