CINE DIRECTION/ DIRECTOR-7
திரை இயக்கம்/ இயக்குனர்-7
படத்தின் நெகட்டிவ் பிலிம் சுத்தம் செய்யப்பட்டு வந்த
பின் மீண்டும் இயக்குனர் வேலையில் இறங்குவார். .ஆனால் இப்போது இயக்குனர் ஒரு உதவியாளர்
போல அருகில் இருக்க படத்தின் தலைமை எடிட்டர் [EDITOR] தேர்ந்த சர்ஜன் போல கையில்
க்ளவ் [GLOVE] அணிந்து கத்தரிக்கோலுடன்,எடிட்டிங்
டெஸ்க் [EDITING
DESK] மீது இருக்கும் மூவியோலா [MOVIYOLA] என்ற கருவியுடன் அமர்ந்திருப்பார்.
அருகில் படத்தின் டைரக்டர் மெளனமாக இருக்க, நெகட்டிவ் பிலிம் சுருள்களில் ஒன்றை எடுத்து
ஒரு பெட்டிக்குள் இருக்கும் சுழலும் அமைப்பில் பொருத்தி பிலிமை மெல்ல உருவி மூவியோலா
வழியே செலுத்தி சிறிது பெரிய உருவாக லென்ஸ் வழியே பார்த்து கிளாப் ஷாட் நம்பர் பார்த்து
சீன் நம்பர் சொல்லிவிட்டு ஆரம்பிக்கலாமா என்பார் எடிட்டர்.
ஊம் என்பார் இயக்குனர் -வேறு என்ன சொல்லமுடியும்? . பிலிம்
வேகமாக இழுக்கப்பட்டு , குறையுள்ள பிரேம் கண்டதும் நிறுத்திவிட்டு ,இயக்குனரிடம் காட்டி
ஒப்புதல் பெற்று , எடிட்டரின் கத்திரி வேலை செய்து , பிழையான பகுதியை தயவு தாட்சண்யம்
இன்றி வெட்டித்தள்ளிவிட்டு கவனமாக நல்லபகுதியை பாதுகாத்து வைத்துவிட்டு , அதன் தொடர்ச்சியை
மூவியாலாவில் மீண்டும் பார்த்து "சரிதானே?"
என இயக்குனரிடம் கேட்டு வெட்டப்பட்ட இடத்தில் அதன் தொடர்ச்சியை [அதாவது நெகட்டிவின்
அடுத்த இடத்தை ] ஒருமெல்லிய இழையாக பிலிம் பைண்டர் கொண்டு ஒட்டி லேசாக காற்றை அதன் மீது பாய்ச்சி 10 வினாடிகளுக்குள்
இரண்டும் இணைந்து விடும். சில நேரங்களில் சில காட்சிகளை வேறு இடத்தில் வைத்தால் படம்
விறுவிறுப்பு பெரும் என்று எடிட்டர் கருத்து சொல்வார். சில டைரக்டர் களே எடிட்டிங் அனுபவம் உள்ளவர்கள்
[பீம்சிங் ] எப்படி ஆயினும் எடிட்டிங் செய்து முடித்த பின் ஒரு சில மாஸ்டர் காப்பிகள்
[positive பிரிண்ட்] தயார் செய்து கொண்டு இசை அமைப்பாளருக்கு வலை வீசி பிடிப்பார்கள்.
இப்போது வருவது தான் படத்திற்கு உயிரூட்டும் பின்னணி இசை அல்லது ரீ ரெக்கார்டிங் என்னும்
இசை சேர்ப்பு வேலை. அதை இசை அமைப்பாளர் முன்னின்று செய்து தருவார் . அது ஒரு கடினமான
வேலை .எப்படி எனில் இசை இல்லாமல் பூரண அமைதி அல்லது வயிற்றைக்கிழித்துக்கொண்டு அலறுவது
போல் திகில் ஒலி என்று மிரட்டி படம் பார்ப்பது ஒரு இனிமையான சங்கடம் ஆக்கி தருபவர்
இசைக்குழுவினர் /இசை அமைப்பாளர்.. இசை அமைப்பாளர்கள் தங்களின் முழு இசைக்குழுவினரையும்
[orchestra ] RR தியேட்டருக்கு வரவழைத்து பின்னணி இசையை ஒரு சிறு ஒத்திகைக்குப்பின்
அங்கேயே கருவிகளை வாசித்து ஒலியை பின்னணி இசையாக மாஸ்டர் காப்பி இல் பதிவிடுவார்கள்.
அப்போதும் இயக்குனர் அருகில் இருந்து என்ன EFFECT தேவை என்று சொல்லிக்கொண்டே
இருப்பார். . இந்த இசையும் வசனமும் பிலிமில் ஓரத்தில் கோடுகளாக பதியும். ப்ரொஜெக்டர்
வழியே படம் பயணிக்கும் போது இந்த ஒளி இழைகள் ஸ்பீக்கரில் ஓலி அலைகளாக வெளிப்பட்டு,
வசனம் பாடல், பிற ஒலிகளாக தியேட்டரில் முழங்கும். இத்துணை கட்டங்களிலும் இயக்குனரின்
நேரடி பங்களிப்பு உண்டு. எனவே திரைப்பட இயக்குனர் ஒரு தலைவன் பீடத்தில் இருப்பவர்.
அந்தப்பணி கடினமான ஒன்று தான்.
இவை அந்த பிலிம் கால நடை முறைகள். இப்போதைய வழிமுறைகள்
எனக்கு தெரியவில்லை
வாய்ப்புக்கு நன்றி
அன்பன் ராமன்
Appreciate your knowledge in cine field . Even a person in that field can not describe these events to our satisfaction.
ReplyDeleteVenkataraman