Wednesday, September 13, 2023

CINE MUSIC-7 STRATEGIES-3

 CINE MUSIC-7   STRATEGIES-3

திரை இசை -7       உத்திகள் -3

திரைப்படப்பாடல்களை அரங்கேற்றுவது பெரிதல்ல, அவை கேட்பவர் உடன் பயணிக்குமாறு நளினமாக வடிவமைக்கப்பட வேண்டும். அதைத்தான் structuring / decoration / embellishing என்று பலவாறாக பேசப்படுகிறது. சொல்லப்போனால் இவை ஒவ்வொன்றுமே பாடல் அலங்கரிப்பில் பங்கு கொள்ளும் சிறப்பு அம்சங்கள். எனவே, ஒரே பாடலில் இவை அனைத்துமே இடம் பெறக்கூடும். உட்கார்ந்து யோசித்தால் இசை அமைப்பாளர் என்பவர் அதீத கற்பனை ஊற்றுபெருக்கெடுக்கும் உள்ளம் மற்றும் மின்னலெனப்பளிச்சிடும் விசேஷ அம்சங்களை கட்டமைப்பதில் விரைந்து செயல் படும் அசகாய சூரன் என்பதே உண்மை.

இசை அமைப்பாளர்கள் தங்களுக்கு என்று ஒரு முத்திரை வைத்திருப்பார்கள். அந்த முத்திரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் பரிமளிக்கும் வண்ணம் செய்து தங்களை பலரும் பார்த்து வியக்கும் படி கற்பனையை கட்டவிழ்த்தபடியே பயணிப்பர். இவ்விடத்தில் ஒன்று தெளிவுபடுத்தப்படல் வேண்டும். ஆம், இசை அமைப்பாளர்களை ஒப்பீடு செய்தல் என்ற comparison தவிர்ப்பது நலம் ; ஏனெனில் திறமைகளை சரியாக சீர் தூக்கி பார்க்க அளவுகோல்கள் இல்லை. மேலும் QUALITATIVE அம்சங்கள் எனும் பண்புகள் தனிமனித விருப்புவெறுப்புகளுடனேயே பயணிப்பதை. நன்கு உணர முடியும். அதே போல குவான்டிடேட்டிவ் [QUANTITATIVE] அம்சங்கள் எனும் துல்லியமான அளவீடுகள்கொண்டு கலைகளை மதிப்பிட இயலாது . இதில் இசை, கவிதை, நடிப்பாற்றல் , சித்திரம் வரைதல் , உணவின் சுவை, மணம் , வண்ணங்களின் நேர்த்தியான வசீகரம்  போன்ற மனம் சார்ந்த பண்புகள் அடங்கும். இவற்றின் ஈர்ப்பு YES or NO என்ற இரண்டு பிரிவுகளில் அடங்கும் .எனவே மதிப்பீடுகள் இசையை நிர்ணயிக்கும் அளவுகோல்கள் அல்ல. ஒருவர் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதை வேண்டுமானால் விளக்கலாம்

பாடல் அலங்கரித்தல் [embellishment]

இன்றைய எனது தேர்வு கிளாப்  [clap] என்னும் கைகளினால் எழுப்பப்படும் ஒலி திரைப்பாடல்களை எவ்வளவு கம்பீரமாக தூக்கி உயர்த்துகிறது என்பதை உணர்த்தும் ஒரு முயற்சி.

இந்த ஒரு கற்பனைத்திறனை மெல்லிசை மன்னர் எம் எஸ் வி பல பாடல்களில் வெகு நேர்த்தியாக ஊடாட விட்டு ஒரு வித பிரமிப்பை தோற்றுவித்திருக்கிறார். சரி இது என்ன பெரிய வித்தை என்கிறீர்களா? நிச்சயம் வித்தை தான், ஏனெனில் சிறு பிழைகூட பாடலை அலங்கோலப்படுத்திவிடும். எத்துணை கைகள் சீராக இயங்குகின்றன என்று கூர்ந்து கவனித்தால், இசை என்பது ஒரு மதிமயக்கும்  கற்பனாத்திறன் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒன்று.

ஒவ்வொரு பாடலுக்கும் உகந்த வகையில் clap நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்

 

பாடல்களில் ஆங்காங்கே இடம் பெரும் விறுவிறுப்பான கை  தட்டும் பாடல் வரிசையில்

1 கல்லூரி ராணிகாள் உல்லாசத்தேனிகாள் [பாக்கிய லட்சுமி -1961 ]

சுறுசுறுப்பு விறு விருப்பு , கேலி , கிண்டல் அனைத்தும் பின்னிப்பிணைந்த பாடல் . 1960 களிலேயே எவ்வளவு வகையான இசைக்கருவிகளின் முழக்கம் , ஒலி  ஒருங்கிணைப்பு , தொய்வில்லாத பாடல் எல் ராகவன், பி .சுசிலா குழுவினர் [ஆடியோ இணைப்பு  https://www.youtube.com/watch?v=kINdGWUZGpk kalloori raanigal ]

2 மிகவும் பிரபலமான வாராய் என் தோழி வாராயோ 1961 பாசமலர் பாடல் எல் ஆர் ஈஸ்வரி குரலில். இது ஒரு பாடல் புரட்சி . ஒரே பாடலில் வசனம், மங்கள வாத்தியம், கல்யாண மந்திர உச்சாடன ஒலி , தோழிகள் சிரிப்பு, பிரமிக்க வைக்கும் clap ; பாடலின் முக்கிய சரணங்கள் கிளாப் உத்தியினால் பயணிப்பது அந்நாளைய மஹோன்னதம் . பாடலை ரசியுங்கள்

[இணைப்பு www.youtube.com/watch?v=R6LRZGesFH8 vaarai en thozhi]

7.2 நிமிடங்களில் துவங்கும் கிளாப் கிட்டத்தட்ட விடாமல் தொடர்கிறது. மற்றுமோர் சிறப்பு அனைத்து வகை ஒலிகளும் மிக இயல்பாக சேர்வது சாதாரண நிகழ்வல்ல.       இந்தப்பாடல் பதிவின் பொது பலருக்கும் உயிர் போய் உயிர் வந்தது என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். .எத்துணை குழு க்கள்

1]பாடுவோர், 2] மங்கள வாத்தியம், 3] மந்திர உச்சாடனம், 4] ஹி  ஹி   ஹி  ஹி  என்று உரிய இடத்தில் சிரிக்கும் நபர்கள், 5]கைகளால் லயம் பிசகாமல் ஒலி எழுப்புவோர் -யாராவது தவறு செய்து விட மீண்டும் முதலில் இருந்து பாட வேண்டும் . அப்படி சுமார் 45 முறை திரும்ப திரும்ப பாடவேண்டி வந்ததாக ஒரு தகவல்,  இல்லை இல்லை பாடல் 52 take வரை போயிற்று என்று இன்னொரு தகவல். எவ்வளவு கம்பீரமான உழைப்பு !

பாடல் நெடுகிலும் பலத்த ஆனால் சீரான கிளாப் [clap ]

2 தங்கச்சி சின்னப்பொண்ணு தலை என்ன சாயுது [கறுப்புப்பணம் 1963- சீர்காழி கோவிந்தராஜன், எல் ஆர் ஈஸ்வரி குழுவினர் . அண்ணன் -தங்கை  உறவில் ஒரு கிண்டல் பாடல் அதுவும் தோழிகள் புடை சூழ மிக நளினமான கிண்டல், சொல்லில் காவிய நயம் , இசையில் துள்ளும் ரீங்காரம் , தோழிகளின் கிளாப் பல பகுதிகளில் பாடலை முறுக்கேற்றும் அதீத கற்பனை -இப்பாடலின் மணி மகுடம் .இசைக்கருவிகளின் அருவி நிகர்த்த ஒலிக்கலவை கேட்டு தான் ரசிக்க இயலும் . ரசியுங்கள் இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=z3v2xrnl0TY  thangachi Chinna ponnu

எவ்வளவு நீண்ட நெடிய அயராத கிளாப் , ஈடுகொடுத்துப்பீடு நடை போடும் தபலாவின் வேகம் சுவை குன்றாத ஹனுமந்தப்பாவின் தபலா வாசிப்பையும் ரசியுங்கள்.

பாடல் துவக்கம் மற்றும் இறுதியில்சரணம் துவங்கு முன் வரும் கிளாப் .

சந்தனம் குங்குமம் கொண்ட தாமரைப்பூ [ரகசிய போலீஸ் -115 .பி. சுசிலா குழுவினர் ] ஒரு பிறந்த நாள் விழாவில் இடம் பெரும் பாடல் . மாறுபட்ட துவக்கமாக துல்லியமான தாளமென ஒலிக்கும் கிளாப் .எளிய     

 ஆனால் சிறப்பான துவக்கம் . இதோ இணைப்பு

https://www.youtube.com/watch?v=ZkAcwlPYxVQ sandhanam kungumam

பாடலின் ஒரு இடத்தில் நுழையும் கிளாப்

பூமியில் இருப்பதும் வனத்தில் பறப்பதும் [ சாந்தி நிலையம் 1969 -டி  எம் சௌந்தர்ராஜன்  குழுவினர்]

இது ஒரு பிக்னிக் பாடல், பலூனில் உயர பறக்கும் கட்சி குதூகலமான பாடல். பாடலின் முதல் சரணம் முடிந்ததும் , அற்புதமாக தபலா வாசிப்புடன் ஜோடி சேரும் கிளாப் , மேலும் தாள நடையுடன் விரைந்து அடுத்த சரணத்தில் சங்கிமிக்கும் நயம் . கேட்க மிக ரம்யமாக ஒலிப்பதை அனுபவியுங்கள்.

பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=O4i6WiaTEuQ boomiyil iruppadhum

இவ்வாறாக எத்துணையோ தாள நடைகளுக்கு இணையான கிளாப் அமைப்புகள் மெல்லிசை மன்னர் எம் எஸ் வியின் இசையில் பல உண்டு.                                                      ஒரு சிறிய மாதிரியை மட்டும் இப்பதிவில் கொடுத்துள்ளேன்.

பிற உத்திகள் பின்னர் .

அன்பன் ராமன்

 

 

 

2 comments:

  1. எம் எஸ் வி யின் கைதட்டல் பாடல்களின் உன்னதம் பற்றிய தங்கள் எழுத்து அபாரம். என்னை அவர் தன் பக்கம் ஈர்க்கப் பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம் கைதட்டல் பாடல்கள். பதிவுக்கு நன்றி

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...