Tuesday, September 12, 2023

EDUCATION -7

 EDUCATION -7

கல்வி -7

கல்வியின் பயனைப்பெற முதலில் கல்வியைப்பெற வேண்டும். கல்வி என்பது தேர்வில் வெற்றி பெறுதல் அல்ல. தேர்வும் மதிப்பெண்களும் உண்மையில் அறிவை மேம்படுத்துவன அல்ல. மாறாக ஏதோ சாதித்துவிட்டதைப்போன்ற ஒரு மாயை ஏற்படுத்தி அறிவை மங்க வைக்கின்றன.

ஒரு கேள்வி மாணவருக்கும் பெற்றோர்களுக்கும்.  

நாட்டில் இது வரை எவரும் +2 அல்லது டிகிரி பயின்றதில்லையா? இந்த நிலை எட்டியவுடன் செய்தி தாள்களும் ஊடகங்களும் போட்டி போட்டு விளம்பரம் தேடித்தருகின்றன. இது ஒரு வித போதையையும், சிலருக்கு மமதையையும் உருவாக்குகிறது. இதே மாணவர்கள் உயர்கல்வியில் முதலாம் ஆண்டில் 4 பேப்பர்களில் fail.  . +2 வில் 1200க்கு 1196 வாங்கியவன், கல்லூரி நிலையில் முதல் செமெஸ்டரில் 38% வாங்குவதற்கு திணறுவது ஏன்? இந்த கேள்விக்கான விடையில் தான் கல்வியின் மாட்சிமை இருக்கிறது. ஆம் தேர்வில் பாஸ் ஆனவர் அனைவரும் கல்வி பயின்று விட்டதாக எண்ணுவது பேதைமை.. உள்வாங்கி கற்றல் என்பதே கல்வி; மேலோட்ட மனப்பாடம் தேர்வு  எழுத பயன் படும் ஆனால் உண்மையான கல்வியைத்தராது. 

உள்வாங்கிக்கற்றல் என்பது யாது? 

பயின்ற எதனையும் முழுப்பொருள் உணர்ந்து நினைவுபடுத்திட்டுக்கொள்ள, உள்வாங்கும் திறன் அதிகரிக்கும் மேலும் பலவற்றை ப்புரிந்து கொள்ள ஒரு தூண்டு கோலாக அமையும்.

உள்வாங்குதல் என்பது புரிந்து கொள்வதில் துவங்குகிறது . ஒன்றைப் புரிந்து கொள்ள அடிப்படை-- சொற்களை ப்புரிந்து கொண்டு அவற்றின் ஒட்டுமொத்த கருத்தையும் சரியாக அறிந்து கொண்டால் எளிதில் மறக்காது. அவ்வாறு இரண்டு மூன்று முறை மென் மேலும் படிக்க அதன் பிற தொடர்புகள் மெல்ல பிடிபட த்துவங்கும். இப்படி ஒன்றோடுஒன்று தொடர்புள்ள கருத்துக்களை தொடர்ச்சியாக நினைவு கொள்வது தான் உண்மையான நினைவாற்றல். அதாவது memory  based  on comprehension அல்லது புரிதலின் அடிப்படையில் ஏற்படும் நினைவாற்றல். எனவே, நினைவாற்றல் என்பது சொற்கள் சார்ந்தது மட்டும் அல்ல பொருள் சார்ந்த கருத்தாழமென்றும் உணர்தல் மிகவும் அவசியம். நினைவாற்றல் முதலில் நிலைப்பட வேண்டும், பின்னர் மேம்பட வேண்டும் . எடுத்த எடுப்பில் அனைத்தையும் முற்றாக புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். சிறிது சிறிதாக புரிதலை வளப்படுத்த, நாளடைவில் படித்ததும் புரியத்துவங்கும். 

புரிந்துகொள்ளாமல் படித்தல் முழுதும் கைவிடப்படவேண்டும்

புரியாமல் படிப்பது கவனச்சிதறலையும், பாடங்களின் மீது வெறுப்பையும் வளர்த்துவிட்டு                 கல்வியை விரோதியாக்கி வேடிக்கை பார்க்கும். அந்த நிலையில் தான் மனப்பாடம் செய்துவிட்டால் போயிற்று என்று எண்ண வைக்கும். "ஆம், மனப்பாடம் செய்து விட்டால் -"போயிற்று" ஆம் எல்லாமே போயிற்று என்று புரிந்து கொள்வீர

மனப்பாடம் செய்துவிட்டால் போயிற்று என்பது புரிந்து கொள்ளும் வேகம், ஆர்வம், நாட்டம, பொருள் உணர்தல், சிறப்பான சொல்லாடல் அமைப்புகளை கவனித்தல், பின்பற்றுதல் மற்றும் தன்  முயற்சியால்  கருத்துகளை கோர்வையாக வழங்குதல் என்ற அனைத்தையும் தொலைத்து [அது தான் போயிற்று ]  நிர்மூலமாக்கி , பொருள் உணராமல் கிளிப்பிள்ளை போல வாசகங்களை சொல்லித்திரியும்        நிலைக்கு ஆட்படுத்திவிடும்.    அந்த வகை பயிற்சியில் 1200க்கு 1196 வாங்கி விட்டு பேருவகை கொண்டு உயர்கல்வியில் சேர்த்து மீதமுள்ள 4 மார்க் மட்டுமே வாங்கும் நிலைக்கு வீழ்வதை காணலாம்.                                          

மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது புரிதலை மேம்படுத்துவது வளப்பட வேண்டும். புரிதல் தான் உயரம் எட்டுதலுக்கு உதவும் . 1200க்கு 1196 செவிக்கு விருந்தையும் மனதிற்கு மயக்கத்தையும் தரும். ஒரு முன்பதிவு விண்ணப்பம்/ வங்கியில் செலுத்திப்பணம் பெரும் படிவம்   அல்லது மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிக்க வேண்டிய தகவல் குறித்த படிவங்களை முறையாக நிரப்ப திக்கி தடுமாறும்  கல்லூரி மாணவர்கள் உணர்த்தும் பெரும் எச்சரிக்கை -"புரிந்து கொள்ளாமல் படித்து, அன்றாட வாழ்வின் எளிய தேவைக்கு ரயில்வே /பேங்க் கவுண்டர்    அருகில் இங்கு என்ன சார் எழுதணும் என்பதையும் அடித்து அடித்து எழுதி 5, 6 விண்ணப்பங்களை வீணடித்து அங்கேயே வைத்துவிட்டு செல்லும்கூட்டம் ஏராளம்      1200க்கு 1196  வென்றுவிட்ட ஆனால்  புரிதல் இல்லாத மனங்கள் எதை சாதிக்க இயலும்? எதையும் சரியாகவோ முறையாகவோ புரிந்து கொள்ளாமலே பேருவகையில் மிதக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு விரைவாக நேர் வழிக்கு திரும்பினால் தன்னிறைவும் தன்னம்பிக்கையும் கை கூடும்.

தொடரும்   அன்பன் ராமன்.                                                                                                                                                                                         

3 comments:

  1. I remember very well the statement made by a Professor Mathematics in the MKU by name Dr. Jagannathan ardent disciple of Dr.Venkataraman , then head of Maths dept. MKU. He said that memorise first and understand later.
    We too memorise many Tamil verses without understanding but later know the meaning.
    Venkataraman

    ReplyDelete
  2. Author's view is true.
    (Infamous)" Neet Anitha" is example.

    ReplyDelete
  3. Memorising and then learning the meaning was a foolproof method followed in gurukul education. Swami Omkarananda used to say that children at the age of five were made to recite the whole text. Later as they mature they were taught the meaning of the slokas and expected to remember the meaning too. But in today's system they have syllabus to complete each year. If a child memorises without understanding the subject he may somehow survive but will never be successful in life.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...