Monday, September 11, 2023

COLOUR PANDI

 COLOUR PANDI

கலர் பாண்டி

கதைக்களம் -வண்ணபில்ம் ப்ராசஸ் / பிரிண்ட் செய்யும் லபோரட்டரி . வருடம் 1985 .பாண்டியின் அன்றைய வயது 10. சுறுசுறுப்பும் குறும்பும் நிறைந்தவன். அந்த லேபில் [lab] அவன் எடு பிடி. எது சொன்னாலும் செய்பவன். ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் திறம் கொண்டவன். அவனுடைய ஏழ்மை நிலையைக்கண்டு அவனுக்கு வேலை கொடுத்து தன்னுடன் வைத்திருந்தார் முதலாளி ராஜவேல்.  கஸ்டமர் வந்ததும் வாங்க சார் காபி யா டீயா என்ன வாங்கணும் என்பான். அவனுக்கு தெரியும் யாரும் அதெல்லாம் வாங்கமாட்டார்கள் என்று. பின்ன ஏம்பா கேக்கற என்று நான் ஒரு நாள் வினவ அவன் சுற்று முற்றும் பார்த்து "காதருகில் வந்து சார் இவங்க காசையே எடுக்க மாட்டாங்க , நம்ம tea வாங்கிகிட்டு வந்தா ஏக்கமா பாப்பாங்க , அப்புறம் டீ  குடுக்காம எப்பிடி சார் என்று என்னை திணறடித்தான். சரி நீ ஏன் அவங்க முகத்தைப்பார்க்கிற? என்றேன்.             சார் முகத்தைப்பாத்தா தான் நல்லவரா இல்லையா னு தெரியும்;அப்புறம் பாக்காம எப்பிடி? என்று மடக்கினான்.சரி என்ன ப்பத்தி என்ன சொல்ற என்றேன்.. நீங்க எங்க காசுல டீ குடிக்கமாட்டிங்க நல்லவரு; ஆனா முதலாளி உங்கள பயப்படுவாரு என்றான் பாண்டி.  எதுக்கு?  என்றேன்.

அவரு நெறைய படிச்சு பிலிம் விஷயம் பூரா புட்டு புட்டு வெப்பாருனு முதலாளி சொன்னாரு. ஒழுங்கா இல்லேன்னா கோவப்படுவீங்களாம் முதலாளி சொன்னாரு.. நா எப்ப கோவப்பட்டேன்?.

உங்க முகத்தைப்பாத்தாலே சிவந்து போய் அடி விட்டுருவீங்க போல இருக்கும் . மாசி வீதி கடைல ஒருநாள் பிலிம் கழுவுனவன் யாரு னு நீங்க கத்தவும் முதலாளி ஓடி வந்தார் என்ன சார் என்ன சார் னு பதறிக்கிட்டு யாவுகம் இருக்கா? என்றான் பாண்டி.

பாருங்க ப்ளீச்செல்லாம் ஒட்டிக்கிட்டு, னு காட்டுனீங்க . முதலாளி அரண்டு போய் இதை எப்படி சார் போக்கு றது னு    கேட்டார் .நீங்க 21/2 % அஸீட்டிக் ஆசிட்  கொண்டுவரச்சொல்லி 5 நிமிஷம் ஊற வெச்சு எடுத்து 7 ரவுண்டு நல்ல தண்ணி கழுவ வெச்சீங்க   .நெகடிவு சும்மா ஜிலு ஜிலு னு வந்திருச்சுல்ல ;நாங்க எல்லாருமே உங்கள வேற விதமா பாத்தோம்/ அந்த பிலிம் கழுவுன து ஜோதி அக்கா . அப்பவே நான் "அக்கா சரியில்ல ஒழுங்கா கழுவுங்க திப்பி திப்பி யா ஒட்டிக்கிட்டுருக்கு னு சொன்னேன் டேய் போடா நீ னு என்னை விரட்டி அடிச்சாங்க.

சரி இந்தக்கதை எல்லாம் எதுக்கு இப்போ? 

பாண்டி எதையும்  கூர்மையாக கவனிப்பவன். பாண்டியின் வேலை 'சொல்வதை செய்வது தான்' .ஆனால் ஒவ்வொன்றையும் ஆழ்ந்து கவனிப்பவன். ஒருமுறை இரவு பகலாக கல்யாண போட்டோக்கள் பிரிண்ட் செய்து உலர்த்திவைத்திருந்தது. பாண்டி என்னை அழைத்து சார் இந்த போட்டோ சரியில்லை என்று ஒரு படத்தைக்காட்ட "நான் எனக்கு ஒன்ணும் தெரியலியே என்றேன். எல்லாரும் நல்லாருக்கு னு தான் சொல்றாங்க, ஆனா படம் சரியில்லை என்று புலம்பினான். அந்த வழியே வேறுபகுதிக்குப்போய் க்கொண்டிருந்த முதலாளியிடம்  "அண்ணே , இந்தப்படம் சரியில்ல "என்று பல்லவியை ஆரம்பித்தான்."கோபம் கொண்ட ராஜவேல், "ஸ் போடா " என்று மிரட்ட சிறிது சென்று விட்டு மீண்டும் வந்து ஜோதி அக்கா இந்தப்படம் சரியில்ல என்று மீண்டும் புலம்ப, ஜோதி "டேய் நீ என்ன பெரிய டெக்னீசியன் மாதிரி உளறிக்கிட்டுருக்க அடி வாங்கப்போற என்றாள். பாண்டி "அக்கா இந்தப்படம் சரியில்ல, பாத்தாலே தெரியுது, இதை சொல்ல டெக்னீசியன் வரணுமாக்கும் என்று மீண்டும் இந்தப்படம் சரியில்ல, என்றான்.

ராஜவேலு கோபாவேசமாக 'என்னடா சரியில்ல, காலைலேருந்து இதையே சொல்லிக்கிட்டு ஒரு வேலையும் பாக்க விடமாட்டேங்கற 'என்று அந்த போட்டோவை கையில் எடுத்து , என்னடா சரியில்ல? என்றார். இதே மாரிதி இன்னொரு போட்டோவை எடுங்கண்ணே என்றான், முதலாளி இன்னொரு போட்டோவை அந்த கூட்டத்தில் இருந்து வெளியில் எடுத்தார். இரண்டையும் அருகருகில் டேபிள் மீது வைத்தார்.

ஆம் பாண்டி சொன்னதுதான் சரி. குறை சொன்னபடத்தில் ஆணின் இடப்புறம் மணப்பெண், மற்ற அனைத்திலும் ஆணின் வலப்புறத்தில் மணப்பெண்! மீண்டும் பாண்டி"பாருங்க பொண்ணு இடம் மாறி இருக்குது –சரியில்ல. ராஜ வேலு சொன்னார் "இந்த சுள்ளான் பயங்கரமான ஆள் சார், இத்தனை பேர் ஒன்னும் சொல்லாம இருக்க இவன் சொல்றான் பாருங்க; அன்றொரு நாள் டார்க் ரூம்ல நெகட்டிவ் மாட்டிக்கிருந்தப்ப காபி கொண்டு வந்த பாண்டி " அண்ணே நெகட்டிவ் தலைகீழா இருக்குது, சரியா மாத்துங்க என்றான் " நிஜம் தான் அவசரத்துல நெகட்டிவ் மேலபாத்துக்கிட்டுஇருக்குது.           அப்பிடியே பிரிண்ட் ஆயிருந்தா 6 படம் வேஸ்ட் ஆயிருக்கும். அவனுக்கு தெரியுது ஆனா என்ன தப்புனு சொல்ல, வார்த்தை தெரியாது, சரியில்ல சரியில்லன்னுக்கிட்டே தொந்தரவு பண்ணுவான், பொய், திருட்டு, வம்பு தும்பு கிடையாது ;அந்த ஜோதியை இருங்கக்கா முதலாளிகிட்ட மாட்டிவிடறேன் னு அடிக்கடி மிரட்டுவான். அந்த ஜோதியும் கவனக்குறைவா ஏதாவது செய்யும்.

ஜோதி என்ன வேலை செஞ்சாலும் அக்கா சரியா வரிசைப்படி செய்ங்க ஊரார் வீட்டு போட்டோவை கெடுத்துறாதீங்க என்று எச்சரிப்பான். ஒரு போட்டோவில் கலர் சரியில்லை என்றால் உடனே அலறுவான் கலர் சரியில்ல, வேற போடுங்க னு பூனைக்குட்டி மாதிரி சுத்திசுத்தி வருவான். [எனவே தான் அவன் கலர் பாண்டி]

.எந்தக்குறையையும் பொறுத்துக்கொள்ள அவனால் முடியாது ஆனால் பார்த்த உடன் குறை இருந்தால் கண்டுபிடித்து விடுவான்.  இது பல ஆண்டுகள் முன். இப்போது அந்தத்தொழிலே நசித்துவிட்டது., முதலாளியும் மறைந்தார், சொத்துகள் பிரிவினை ஆயிற்று, இப்போது லேப் இல்லை

அந்தப்பாண்டி எங்கே? கடந்த 18ஆண்டுகளில் பாண்டி என் கண்ணில் படவே இல்லை. இறைவன் படைத்த எண்ணற்ற அதிசயங்களில் பாண்டிக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு.   

நன்றி

அன்பன் ராமன்

2 comments:

  1. இது கதையல்ல நிஜம்
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. "மாரியப்பு" வின் நினைவு வருகிறது.

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...