Friday, September 8, 2023

SCIENCE -7

 SCIENCE -7

அறிவியல்வாக்ஸின் -7

கரிக்கோ மற்றும் வீஸ்மன் உணர்ந்த பேருண்மை -எப்படி செலுத்தினாலும் மனித உடலில் "வெளி m-RNA" அடையாளம் காணப்பட்டு சிதைக்கப்படுகிறது. எனவே "வெளி m-RNA" ஒரு சரியான கவசம் பூண்டு மனித உடலில் உள்ளே செலுத்தப்பட்டால் நாம் விரும்பும் வகை ப்ரோடீன்களை ஆன்டிஜென் செயல்களுக்கு வடிவமைத்துவிட முடியும் என்று ஒரு நம்பிக்கை பிறந்தது. இவை நடந்த கால கட்டம் 1997 அதாவது கொரோனா வைரஸ் பெருமளவில் உணரப்படுவதற்கு சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர். இப்படி ஒரு இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் வேறொரு ஆராய்ச்சி முகாம் ஒரு முக்கிய கண்டுபிடிப்பை வெளியிட்டது [வருடம் 1999] அதாவது சென்ற நூற்றாண்டின் இறுதி ஆண்டில்.

அவ்வாண்டில் [1999] புற்று நோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த Pieter Cullis மற்றும் அவரது குழுவினரும் , மிகவும் மென் மூலக்கூறுகளாகிய "m-RNA" போன்ற அமைப்புகளை மெல்லிய [nano particle] கொழுப்புப்பூச்சு உறை      [tiny lipid encasement] மூலம் சிதைவுறாமல் காப்பாற்றி செயல் பட வைக்க முடியும் என்று ஒரு புதிய அணுகுமுறையை அறிவித்தனர். இந்த கண்டுபிடிப்பின் நாயகன்Ian Mac Lachlan என்ற BIOCHEMIST.. இது நிகழ்ந்தது 2005 ம் ஆண்டு வாக்கில் என்று அறிவித்துள்ளனர்.

இத்துணை முன்னேற்றங்களுக்குப்பிறகும், 2010 ம் ஆண்டில் கூட m-RNA வாக்ஸின் குறித்து அமெரிக்கர்கள்- அரசினர் /விஞ்ஞானிகள் /மருந்து தயாரிப்பு துறையில் பலகோடிகளைக்கொட்டி ஆய்வு செய்யும் நிறுவனங்கள் உட்பட எவரும் ஆர்வம் கொள்ள வில்லை. முயற்சியில் ஈடுபட்ட சில பெரும் நிறுவனங்கள் [Major Pharmaceutical companies], முயன்று தோல்வியுற்று துவண்டன . ஏனெனில் உயிரித்தொழில் நுட்பம் மிக நுணுக்கமானது இதன் உருவாக்க நிலைகள் [formative stages] டெக்னாலஜியை விட டெக்கனிக் என்னும் செயல் நுணுக்கம் மிகுந்தது. அந்த அடிப்படை TEMPLATE அமைப்பை துல்லியமாக அமைத்திட மிகச்சிறந்த கை  நுணுக்கம் [DEXTEROUS HANDS] முக்கியத்துவம் வாய்ந்தது . இந்த அடிப்படை அமைப்பை துல்லியமாக வடிவமைத்திட கதலின் கரிக்கோ போன்ற நீண்ட செயல் அனுபவம் கொண்ட கைகள் தேவை. இந்தப்புள்ளியில் முறையான அனுபவமில்லாத பணபலம் நிராயுதபாணியாக அம்மணப்படும் .

விஞ்ஞானிகளின்நான் அப்போதே சொன்னேனே என்ற வகை பரிகாசங்கள் மீண்டும் அரங்கேறி தொய்வும் தளர்ச்சியும் m-RNA வாக்ஸின் ஆய்வில் மண் அள்ளிப்போட்டு. முடக்கின . அதே சமயம் அமெரிக்க பாதுகாப்பு மிலிட்டரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் m-RNA வாக்ஸின் தொழில் நுட்பம் பெரும் நம்பிக்கை தருவது என கருத்து தெரிவித்து மேலும் தொற்றுநோய் .ஆராய்ச்சிகளுக்கு நிதியை வாரி வழங்கியது.  இவ்வாறாக  US Based Moderna  and Germany--based Cure Vac and Bio N Tech நிறுவனங்கள் ஆராய்ச்சி நிதியை பெற்று மீண்டும் களமிறங்க 2014 இல் Bio N Tech நிறுவனம் கேன்சர் ஆராய்ச்சி யில் m-RNA  வாக்ஸின் தயாரிப்பில் கதலின் கரிக்கோ வை உயர் பதவி வழங்கி தங்கள் நிறுவனத்தில் இணைத்துக்கொண்டது  கொரோனா பாதிப்பு பரவி வந்த நிலையில் 2020 ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸின் genome என்னும் ஜீன் வரிசை தெளிவாக அறிவிக்கப்பட்ட நிலையில்  கரிக்கோ குழுவினர் ஆணித்தரமான செயல் திட்டங்களுடன் வாக்ஸின் தயாரிப்பிற்கான m-RNA வடிவமைப்பில் இறங்கினர் . இந்த m-RNA அமைப்பு சரியான வாக்ஸினை உருவாக்கிட உதவி,  பல களப்பரிசோதனைகளுக்குப்பின்னர் வெளி உலக பயன்பாட்டுக்கு வருமுன் கதலின் கரிக்கோ வே தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போது உணர்ச்சிபொங்க கண்ணீர் சிந்தியதாக கட்டுரைகளில் காணப்படுகிறது.

ஒரு சில மாற்றங்களை m-RNA" BASE களில்ஒன்றான U  வின் வடிவமைப்பில்  செய்து + கொழுப்பு மென் பூச்சு உதவியுடன் கொரோனா வாக்ஸின்  வடிமைக்கப்பட்டது . Pfizer Moderna, Bio N Tech vaacine  இரண்டும்     m-RNA வாக்ஸின் தொழில் நுட்பத்தில் உருவானவை.

m-RNA vaccineகளில் nucleo basr மாற்றி யமைக்கப்பட்டதனால் Modified RNA வாக்ஸின் என்றழைக்கப்படுகிறது மாற்றியமைக்கப்பட்ட பகுதி  nucleobase N1-methylpseudouridine (m1Ψ). இது வாக்ஸினின் திறனை மேம்படுத்துவதுடன்,    m-RNA சிதைக்கப்படாமல் செயல் படுவதாக கரிக்கோ வீஸ்மன் ஆய்வில் அறியப்பட்டது

வாக்ஸின் அமைப்பு

m -RNA

கொரோனா வைரஸின் புற ப்ரோடீன்களின் அமைப்பிற்கான தகவல் கொண்ட m-RNA போன்றே வடிவமைக்கப்பட்ட ஆனால் மாற்றியமைக்கப்பட்ட U அமைப்புடன் உருவாக்கப்பட்ட m -RNA,மெல்லிய கொழுப்பு உரையால் சூழப்பட்டு வாக்ஸின் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன்டிஜென் செலுத்தாமல் அதற்கு உரிய தகவலை சுமந்து செல்கிறது மாற்றி அமைக்கப்பட்ட m -RNA

Lipids கொழுப்புப்படிமங்கள் மென் உரை போல் m -RNAவைச் சூழ்ந்து அமைக்கப்பட்டுள்ளன

Salts                                                                                                                                      சோடியம் க்ளோரைட் உள்ளிட்ட 4 வகை உப்புகள் இந்த வாக்ஸினில் உள்ளன.

SUGAR             சுக்ரோஸ் இவ்வாக்ஸினில் cryopreservative ஆக பயன்படுகிறது

No preservatives

இந்த வாக்ஸினில்          எவ்வித          preservative களும் [செயல் நிலை காக்கும் வேதிப்பொருட்கள்]               இல்லை என்று   Pfizer    நிறுவனம் அறிவித்துள்ளது .

இவ்வளவு போராட்டங்களுக்குப்பிறகு  m -RNA வாக்ஸின்  வெற்றி ஈட்டிய பின் கதலின் கரிக்கோ அவர்களுக்கு, உயிரியல் ஆய்வில் புதிய பாதை வகுத்த  Breakthrough வகை ஆய்விற்கான Princess of Asturias Award,என்ற பரிசும் , உயிரித்தொழில் நுட்பத்தில் [Excellence in Biotechnology] ஆகச்சிறந்த தரத்திற்கான Vilcek Prize என்ற பரிசும் வழங்கப்பட்டன.                        

                   நேரம் காலம் என்பது இது தான் போலும்                               

 வாக்ஸின் பற்றிய இத்தொடர் முற்றுப்பெறுகிறது. எவருக்கேனும் ஏதேனும் கேள்வி [கள் ] இருப்பின் WA [வாட்ஸ் ஆப் ] வழியே கேட்கலாம் .

தெரிந்தால் விளக்கம் தருகிறேன் இல்லையேல்  தெரிந்து கொண்டு  சொல்ல

முயல்கிறேன்..            

 நன்றி அன்பன்  ராமன்

 

2 comments:

  1. வாக்கின் பற்றி விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...