Thursday, September 7, 2023

CINE DIRECTION/ DIRECTOR-6

 CINE DIRECTION/ DIRECTOR-6

திரை  இயக்கம் / இயக்குனர்-6

பொதுவாக படப்பிடிப்பில் பயன்படும் செயல் முறைகளைப்புரிந்து கொண்ட நாம், இன்னும் சில கருவிகளின் தேவை மற்றும் பிரயோகம் பற்றி விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை, க்ரேன் மற்றும் டிராலி .டிராலி சமதளத்தில் கமெரா ஜெர்க் என்னும் குலுங்கல் இல்லாமல் முன்னும் பின்னும் நகர உதவும் உபகரணம். அதாவது காமெரா இயங்கிக்கொண்டிருக்கும் போதே இந்த முன் பின் இயக்கம் செயல்படுத்தப்படும். இதனால் காட்சி அப்படியே உள்ளே இழுப்பதாகவோ, வெளியே மெல்ல விலகுவதாகவோ படம் பிடிப்பிக்கப்படும். படிப்படியாக குறிப்பிட்ட கதாபாத்திரம் முக்கியத்துவம் அடைவதையும், முகபாவங்களை தெளிவாகக்  காட்டவும், டிராலி பயன்படும். ; மேலும் குறிப்பிட்ட லென்ஸ் மூலம் க்ளோஸ் -அப் உருவம் பதிவிடப்படும். இதை காமெரா தலைமையும், நம்பர் 1 ம் இரண்டாம் நபர் அறியாமல், லென்ஸ் மாற்றும் வேலைகளை நொடிப்பொழுதில் செய்துவிடும்.. எப்போது என்ன ஷாட், என்ன லென்ஸ் எல்லாம் முன்னரே இயக்குனருடன் விவாதித்து முடிவு எட்டப்பட்டிருக்கும் .

1961   க்கு முன் தமிழ் சினிமா ஸ்டூடியோக்களில் டிராலி  வசதி கிடையாது . அப்போது,   இயங்கும் காமெராவை மெல்ல அசங்காமல் சுமந்து கொண்டே செல்வர். பலர் அந்த கடினமான வேலையை திறம்பட செய்வார்கள். பின்னர் டிராலி           [2 தண்டவாளங்கள் மீது ஒரு 10 அடி நீளம் முன் பின் நகரும் பிளாட்பார்ம் , மெல்ல வழுக்கும் அமைப்பு], 1 அல்லது இருவர் முன்/பின் தள்ளுவர். அதே பிளாட்பாரம் மீது ஒளிப்பதிவாளர் அமர்ந்து லென்ஸ் வழியே பார்த்தபடியே செயல் படுவார். டிராலி இயக்கங்கள் கை அசைவால் உணர்த்தப்படும்.

பின்னாளில் zoom வகை லென்ஸ்கள் டிராலிக்கான தேவையை அநேகமாக நீக்கி விட்டன என்றே சொல்லலாம். ஆம் zoom  லென்ஸ்களில்  பல range திறன் கொண்டவை இருப்பதால் , தேவையான zoom லென்ஸை மாட்டி/மாற்றி போகஸ் மாறாமல் காட்சியை பெரிதாக விரிக்கவோ, சிறிதாக சுருக்கவோ இயலும் . அவை ஒன் டச் [one touch ] zoom வகையான வை. ஒரு விரலால் நகர்த்தினாலே மெல்ல முன்னோ/ பின்னோ அசைவின்றி நகரும். இந்த வசதிகளை மாத்திரம் தெரிந்து கொண்டு சினிமாட்டோகிராபி மிக எளிது என்று சிலர் பேசுவது எனக்கு எரிச்சலை த்தருகிறது. சரியான இயக்குனர்கள் இந்த நுணுக்கங்களை தலைமை மற்றும் நம்பர் 1 உடன் தெள்ளத்தெளிவாகப்பேசி அனைத்து லென்ஸ் வகைகளும் பட ப்பிடிப்பில் இருக்குமாறு பார்த்துக்கொள்வர். தேவைப்பட்டால் இயக்குனரே கூட டிராலியில் அமர்ந்து frame அமைப்பை சரி தானா என உறுதி செய்து கொள்வார்.

இவ்வளவையும் முறையாக திட்டமிடாமல் படப்பிடிப்பு துவங்கினால், நேர விரயம், பண விரயம் மன அழுத்தம் போன்ற திக்குமுக்காடல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். எனவே தேர்ந்த தொழில் நுட்பக்கலைஞர்களை முறையாக அணுகி, பயன் படுத்திக்கொண்டதிறமையான இயக்குநர்களால் 20-25 நாட்களுக்குள் அனைத்து வேலைகளையும் முடித்து வெகு விரைவில் படத்தை திரையிட முடிந்தது.பெரும் தொகைகளை க்கடன் வாங்கி படம் தயாரிப்பவர்கள், விரைந்து செயல்படாமல் இழுத்தடித்தால் பெருத்த நஷ்டமும் அவமானமும், மீளாத்துயரும், தலைமுறையைச்சூழ்ந்து கொள்ளும்.

சரி படச்சுருளை கழுவிப்பிரதிகள் எடுக்க ப்ராசெஸ் லேப் பொறியாளர்களுக்கு சில முக்கிய குறியீடுகள் உணர்த்தப்பட்டால், பிலிம் தன்மையை முழுவதும்பயன்படுத்தி,  வெற்றிகரமாக படத்தின் காட்சிகள் பளிச்சென திரையில் தோன்ற, [சரியான அடர்த்தியில் காட்சிகள் வெளிப்பட] சில துல்லியமான பிராசசிங் அணுகுமுறைகளை மேற்கொள்ள முடியும். அதற்கான குறியீடுகளை ஒளிப்பதிவாளர் தான் தெரிவிக்க இயலும். அவர் தரவேண்டிய குறியீடுகள் film brand , ASA ,emulsion batch no. ஜெனரல் லைட்டிங் மற்றும் தேவையான காமா இவையே.

அது என்ன காமா [GAMMA]?

காமா என்பது படம் பிடிக்கும் போது காட்சியில் இருந்த ஒரிஜினல் ஒளியின் அளவிற்கும், பில்மில் பதிவாகும் ஒளியின் அடர்த்திக்கும் உள்ள RATIO என்னும் விகிதம். ஒரு நாளும் 1 : 1 என்ற நிலையை ப்ரம்மனாலும் எட்ட முடியாது .ஏனெனில் பில்மின் ஒளி ஈர்ப்பு த்தன்மை  , பிலிம் வயது, பிலிம் STORE செய்யப்பட விதம் லென்ஸ்கள் கடத்தும் ஒளியின்  அளவு போன்ற காரணிகளால் 1 என்ற அளவுக்கு கீழாகத்தான் GAMMA இருக்க முடியும் எந்த குறையும் இல்லாத நிலையில் காமா 1: 0.8 என்ற உச்சத்தை அடைவதே கடினம்.

அந்த நாளைய ஒளிப்பதிவு அசுரன் அ .வின்சென்ட், பிராசஸ் பொறியாளர்களுக்கு தேவையான முக்கிய குறியீடுகளைக்கொடுத்து GAMMA 1:0.68 [அதாவது காமா 0.68] வருமாறு பார்த்துக்கொண்டு ஒளிப்பதிவின் தரம் குன்றாமல் பார்த்துக்கொள்வாராம். உழைப்பின் அருமை உழைத்தவனுக்குத்தானே தெரியும்.

வளரும்                  அன்பன் ராமன்

2 comments:

  1. படப்பிடிப்பின்போதே வசனங்கள் பேசப்படுமா இல்லை தனியாக டப்பிங் செய்வார்களா?
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. Originally the two were simultaneous and in the actor's voice. Now it is dubbed by someone's voice, We no longer recognize voices like those of Kannaamba, Sivaji Ganesan, MGR, SAROJA DEVI, SAVITHRI, AND THE LIKE.

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...