TEACHERS’ROLE-6
ஆசிரியப்பணி-6
ஆசிரியப்பணி நிறைவு பெறும்
களமே
வகுப்பறை.
ஆம்
அவரின்
பணி
இல்லத்திலேயே
தொடங்கிவிடுகிறது.
அரசு
அலுவலக
பணியாளரின்
கடமை
அலுவலகம்
வந்து
கோப்புகளை
ஆய்வு
செய்யும்
போது
தான்
துவங்கும்.
ஆசிரியன்
வகுப்பறையில்
வந்து
புத்தகத்தைப்படிக்க
இயலாது.
அவன்[ள்
] தன்னை
முன்கூட்டியே
தயார்
செய்த
பின்னரே
மாணவர்களை
சந்திக்க
இயலும்.
முறையான
செயல்பாடு
அறியாமல்
/முழுமையான
தகவல்
தொகுப்பு
வைத்துக்கொள்ளாமல்
வகுப்பில்
வந்து
பார்த்து
க்கொள்ளலாம்
என்றெண்ணினால்,
அந்த
ஆசிரியருக்கு
தனது
பணிகுறித்த
தெளிவான
சிந்தனையோ
அக்கறையோ
இல்லை
என்பது
வெட்ட
வெளிச்சம்.
எனவே பிற
பணியாளர்கள்,
ஆசிரியர்கள்
அவ்வப்போது
ஏராளமான
விடுமுறை
அனுபவிக்கிறார்கள்
என்று
நினைப்பவர்கள்
ஒரு
6 மாதம்
பள்ளியிலோ
கல்லூரியிலோ
பணியாற்றி
கற்பித்துப்பாருங்கள்,
மாணவர்களை
அடக்கி
அமரவைத்து
கவனம்
சிதறாமல்
கற்றுக்கொடுப்பது
யானையைப்பழக்குவதற்கு
நிகரானது
என்ற உவமை கூட சிறிது குறைவுதான்.
யானையை
சங்கிலியால்
பிணைத்து
கட்டிவிடலாம்.
தேவைப்பட்டால்
பிரம்புக்குச்சியால்
அடித்து
ஆதிக்கம்
செலுத்தலாம்.
எந்த
மாணவனையும்
பிணைக்கவோ
துன்புறுத்தவோ
அதிகாரமோ
முகாந்திரமோ
இல்லை.
இருப்பினும்
அனைவரின்
கவனத்தையும்
ஒரு
மையப்புள்ளியில்
நிறுத்தும்
கலை
நம்
வசப்பட
வேண்டும்.
. அதற்கான
செயல்
முறைகள்
நமது தொனி
மணிபோல்
கணீரென
ஒலிக்க
வேண்டும்.
ஆரம்பத்தில்
மெதுவாக
த்துவங்கி
படிப்படியாக ஸ் பீட் அதிகரிப்பது,
நம்மை
தொடரும்
மாணவர்க்கு
மிகுந்த
ஈர்ப்பினை
ஏற்படுத்தும்.
படிப்படியாக
நமது
பேசும்
வேகம்
அதிகரிக்க,
பெரிய
இடர்
இன்றித் தொடர மாணவர்க்கு
உதவி
செய்யும்.
இதற்கான வெற்றிகரமான கருவி, உச்சரிப்பு.
உச்சரிப்பில் தெளிவு, ந, ண, ன, மா, ர, ற ஒலி, ஒளி , ஒழி
மற்றும் ஆங்கிலச்சொற்கள் swashbuckling,flabbergasting போன்றவற்றை அனாயாசமாக உச்சரிக்கும்
ஆற்றலை சிறப்பாக வளர்த்துக்கொள்ள , மாணவர்கள் மனதில் எளிதில் இடம் பெறலாம். அவ்வாறு
செயல் படும் ஆசிரியர்களை மாணவர் ஏற்றுக்கொள்வதுடன், அவர் சொல்வதை கூர்ந்து கவனிக்கத்தலைப்படுவர்.
மாறுபட்ட முயற்சிகள்
இதுதான் கவன
ஈர்ப்பில்
அடிப்படை
உத்தி.
அவ்வப்போது
மாறுபட்ட
சொற்கள்,
சொற்றொடர்கள்
என
பல
தரப்பட்ட
அணுகுமுறைகளைப்பின்பற்றினால்,
கேட்பவர்க்கு
நாட்டம்
அதிகரிக்கும்.
ஒருவர்
பால்
தோன்றும்
நாட்டம்
தான்
அவரை
முழுமையாக
புரிந்துகொள்ளத்தூண்டும்.
தெளிவாகப்பேசாத
யாரும்
[ஆணோ
/பெண்ணோ]
ஆசிரியர்
என்ற
நன்மதிப்பை
ப்
பெற
இயலாது.
மேலும்
இது
என்னுடைய
வேலை
அல்ல
என்னும்
மனோ
பாவம்
வேரூன்றி
இப்போதெல்லாம்
ஆசிரியர்களின்
பன்முகத்தன்மை
வெளிப்படுவதே
இல்லை.
ஆசிரியர்
என்னும்
எவரும்
உயர்
நிலையிலாவது
ஆங்கில
சொற்கள்,
அவற்றின்
பொருள்,
பயன்பாடு
அனைத்தையும்
அறிந்திருப்பர்;
அதை
சொல்வதில்
என்ன
தயக்கம்?
சொல்வதை
தவிர்க்கின்றனர்.
கேட்டால்
அது
என்
வேலை
இல்லை
என்று
சொல்கின்றனர்.
தாகம்
எடுத்தவன்
அருகில்
நீரிருந்தால்கூட
பருகாமல்
என்
மனைவி
தான்
குடிநீர்
தரவேண்டும்
என்று
[என்
வேலை
இல்லை
என்று
சொல்லிக்கொண்டு]
தாகமும்
விக்கலும்
பீடிக்க
அமர்ந்திருப்பாரா?
இது
போல,
வட்டத்தின்
விட்டத்தை
நிர்ணயித்துக்கொண்டு
ஆசிரியன்
செயல்பட
முடியாது.
இவை அனைத்தையயும்
வீட்டிலேயே
ஒன்றிர்க்குப்பலமுறை
பேசிப்பார்க்க,
வகுப்பறையில்
பேசுவது
இயல்பாகவும்,
ஆணித்தரமாகவும்
வெளிப்படும்
. அதாவது
தன்னம்பிக்கை
மேம்படும்..
இந்த
நிலையில்,
நமது
பாடங்கள்
குறித்த
விரிவான
புரிதலும்,
மேலதிக
தகவல்
சேகரிப்பு
முயற்சிகளும்
ஆசிரியரை
முழுமை
நோக்கி
உயர்த்திப்பரிமளிக்க
வைக்க
எத்தனிக்கும்.
தொடர்ந்து
தகவல்
திரட்டும்
ஆர்வமும்,
பாடத்தின்
மீது ஆளுமையை விஸ்தரிக்கவும்
மனம்
இடம்
கொடுப்பதோடு
கற்பித்தல்
குறித்த
அணுகுமுறைகளை
செம்மைப்படுத்திக்கொள்ள
மென்
மேலும்
தூண்டும்.
இவ்வகை
ஆசிரியர்
"வானமே
எல்லை
எனும்
நிலை
கடந்து
வானமே
இல்லை
என
விஸ்வரூபம்
எடுக்க,
கூசாது
முயன்று
வெற்றியும்
பெறுவார்.
இந்த
முயற்சிகளை
உங்கள்
ஆசிரிய
அன்பர்கள்
விரும்பாமல்
"போய்
யா,
இருக்குற
வேலையையே
பார்க்க
முடியல,
இன்னும்
ஓயாம
படிச்சிகிட்டே
இருக்கணுமா?
படிச்சாப்புல
என்ன
50/- ரூபாய்
சம்பளம்
அதிகமா
தருவார்களா
?என்று
ஆர்வத்தை
குழி
தோண்டி
புதைப்பர்கள்.
சம்பளத்துக்கு
செய்யும்
எந்தப்பணியிலும்
மன
நிறைவும்,
தன்னிறைவும்
எட்டாக்கனிகளே
ஆகும்.
ஒன்றை நன்றாகப்புரிந்து
கொள்வோம்.
எந்த வெற்றியின்
சுவையும்
வெற்றியை
சுவைக்க
சுவைக்க
தான்
ஈடுபாடு
மற்றும்
தளராத
ஆர்வம்
இரண்டையும்
ஊக்குவித்து
ஆசிரியனின்
பங்களிப்பை
பல
மடங்கு
அதிகரிக்கச்செய்யும்.
எந்தப்பணியிலும்
அர்ப்பணிப்பும்
ஆளுமையும்
குறையத்
தொடங்கிவிட்டால்
அதன்
பின்னர்
தொய்வும்
சோர்வும்
நம்மை
அடிமைப்படுத்திவிடும்.
அவற்றிற்கு
இடம்
கொடாமல்
மேலும்
மேலும்
தகவல்களைத்தொகுத்து
ஆசிரியப் பணியாற்றும்
எவரும்
வெற்றி
அடைவதுடன்
நெடுங்காலத்திற்கு
சமுதாய
அங்கீகாரம்
பெற்று
பெருந்தகைகள்
ஆகலாம்.
எனவே,
உழைப்பையே
கைக்கொள்ளுதல்
உயர்வையே
கொடுக்கும்.
பலரும்
பின்பற்றும்
ரோல்
மாடல்
என்ற
மரியாதை
உங்களைப்பற்றிக்கொள்ளும். வாழ்த்துகள்
நன்றி அன்பன் ராமன்
I remember the days I attended CCBCourse in MKUorganized by DrJJ and Dr.RJ . Had I not attended that Biochemistry course I may not be able to understand the basic of Immunology.
ReplyDeleteTeachers require repeated orientation courses organised by experts in a university or a college.
Then only teachers will improve their subject knowledge.
Now the present university staff are not better than a college staff.
Updating their knowledge in the subject by referring to modern textbooks is not heard of now.
Venkataraman