Thursday, September 21, 2023

CINE DIRECTION/ DIRECTOR -8

 CINE DIRECTION/ DIRECTOR -8

திரை இயக்கம்/ இயக்குனர்-8

இது வரை பல பகுதிகளை நாம் பேசிவிட்டோம்; ஆயினும் இன்னும் பேசப்பட வேண்டியன உள்ளன. அவற்றில் சில:  ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் / சாகச கலைஞர்கள்  செட் properties , movie  services , ஆர்டிஸ்ட்ஸ்' மேனேஜர் /சப்ளை மற்றும் பொதுஜனத்தொடர்பு என்னும் விளம்பரப்பிரிவு. .இவை அனைத்தும் உரிய நேரத்தில் உரிய இடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் ப்ரொடக்ஷன் மேனேஜர் [ நிர்வாகி].

ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்

ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் குழுவில் இரு வகை கலைஞர்கள் உண்டு . அவர்களின் முதன்மைப்பணி சண்டைக்காட்சிகளை வடிவமைப்பது , முக்கிய நடிகர்களு க்கு உடம்பில் அடிபடாமல் பாய்ந்து தாக்குவது , மூக்கில் படாமல் மூக்கில் குத்துவது , அந்தர் பல்டி என்னும்  ஆகாயத்தில் தாவி 2, 3 முறை வானிலே சுழன்று கீழே குதிப்பது , குதிரை சவாரி , குதிரையோடு சறுக்கிசாய்வது,, மோட்டார் சைக்கிளில் 50 அடி நீள தீப்பிழம்பை தாண்டிக்கடப்பது, ஓடும் ரயிலின் மேற்கூரையில் இருந்து குதித்து தப்புவது போன்ற சாகசம் செய்வது ஒரு வகை . இரண்டாம் வகை "நகல்" பிரிவினர். இவர்கள் காலத்திற்கேற்ற முன்னணி நடிகர்கள் போலவே உயரம் பரிமாணம் கொண்டவர்கள், ஆனால் உண்மையிலே சாகசம் புரியும் தீரர்கள் .அதாவது நடிகர் 7 வது மாடியில் இருந்து குதிப்பதாக காட்சி. ஏழாம் மாடியில் இருந்து குதிப்பது என்னவோ நகல் வீரர் .குதித்தபின் கீழே   இருந்து எழுவது 'முன்னணி ஹீரோ". 3 அடி உயரம் குதித்து  கடக்க நடுங்கும் ஹீரோ 7 வது மாடியிலிருந்து குதிப்பது வரிக்கோடிட்ட 'T' ஷர்ட் அணிந்து தான் அப்போது தான்'T' ஷர்ட் அணிந்துமற்றொருவர் டூப் போடுவது  எளிதாகும் . இதை வயிற்றுப்பாட்டுக்காக செய்து 3 மாதம் ஆஸ்பத்திரியில் வாழ நேரும் துயரங்களும் உண்டு.

PROPERTIES

அரங்கப்பொருட்கள் [PROPERTIES] இன்னது தான் என்றில்லை , மேஜை நாற்காலி , கிச்சன் பொருட்கள் தரை விரிப்புகள், பழைய கால கடிகாரம் , புலி சிங்கம் வேட்டையாடி கொணர்ந்த காட்டு மிருகங்கள், ராஜா   ராணி உடைகள் , போர் உடைகள் கருவிகள் , சமகாலத்திய பொருட்கள் ஒன்று விடாமல் சப்ளை செய்யும் நிறுவனங்களின் தொண்டு மகத்தானது, இறைவன் உடைகள் கிரீடம் பனிமலை போன்ற ஸ்க்ரீன் என அனைத்தையும் வாடகைக்கு எடுத்து தான் படப்பிடிப்பு நடக்கும்  .அரங்கப்பொருட்கள் படத்தின் உயிர்நாடி,

MOVIE SERVICES

இது படப்பிடிசிக்கு வேண்டிய உபகரணங்கள், குடைகள் நாற்காலி, ட்ரெஸ்ஸிங் டேபிள் , ஸ்டான்ட் , REFLECTOR என அனைத்தையும் எடுத்துச்செல்லும் ஏஜென்சி . இவர்கள் வெளியூர் படப்பிடிப்புகளுக்கும் இதே பணிகளை செய்வர்.சில கம்பெனி ஊழியர்களும் உடமைகளை கவனமாக கொண்டு போய் சேர்க்க அந்த வாகனத்திலேயே பயணிப்பர் . ஒரு படப்பிடிப்பு குழுவில் 10-12 டிரைவர்கள் தேவைப்படுவர்

ARTIST MANAGER

ஆர்ட்டிஸ்ட் மேனேஜர்

திடீரென்று 30 -40 துணை நடிகர்கள் தேவை என்ற சூழல் தோன்றும் . யோவ் , குழாயடி சண்டை காட்சி எடுக்கணும் 35-55வயசு  ரேஞ்சில் பெண் ஆர்ட்டிஸ்ட் களை  கூட்டிக்கிட்டு வாய்யா என்று ப்ரொடக்ஷன் மேனேஜர் ஆர்ட்டிஸ்ட் மேனஜரிடம் சொல்ல, ஒரு போன் கால்; அடுத்த 20 நிமிடத்தில் ஒருவேன் நிறைய பெண்கள் வந்து இறங்கி உடனே நடிக்க இறங்கிவிடுவார்கள்.  பளீரென்று புடவையை முழங்கால் வரை தூக்கி செருகிக்கொண்டு "எவ டி அவ , எங்கிட்ட மாணா ம் , அடி  உட்டேன்னா மூக்கு வெத்தல பாக்கு போட்டுக்கும் " என்றபடியே யேய் என்று பாய்ந்து ஒருத்தியை துவம்சம் செய்வார்கள்.. யாருக்கும் காயம் படாது. சீன் முடிந்தது, டிபன் தாங்க என்று கம்பீரமாக கேட்டு , தின்று விட்டு கூலியை வாங்கிக்கொண்டு அடுத்த கம்பெனியில் கோயில் விழாவில் இதே கிழவிகள் குத்தாட்டம்  போடப்போய்விடுவார்கள் 

இன்னொரு அன்றாட நிகழ்வு, மார்க்கெட் டில் காட்சி அது கூட ஸ்டூடியோவில் தான் . மார்க்கெட்டில் ஹீரோ -ஹீரோயின் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நிற்க 10-15 பேர் இட -வலமாக போக அடுத்து வேறொரு 10-15  பேர் வல இடமாக போவதைக்காணலாம். 99% படங்களில் மாறி மாறி நடக்கிறார்கள் அன்றி ஒரே சமயத்தில் இரு திசையிலும் ஆட்கள் நடப்பது இல்லை. இது ஒரு வடிகட்டிய சினிமாத்தனம்   இதற்கும் திடீர் ஆர்டிஸ்ட்கள் தேவைப்படுவர்.   

PUBLIC RELATIONS

பொது ஜனத்தொடர்பு

படத்தின் வெற்றிக்கு இதுவே முக்கிய அடித்தளம் . அவ்வப்போது படம் குறித்த செய்திகள்,  துணிக்குகள் இவற்றை ஊடகங்கள் வாயிலாக பரப்பி ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்துவார்கள். அது ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தைஏற்படுத்தி, தீபாவளி முன் இரவில் க் யூ வில் நின்று கங்காஸ்நானம் /கௌரிஸ்நானம் எதுவும் இல்லாமல் முதல் காட்சி படம் பார்க்கும் பரட்டையர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். பொதுஜனத்தொடர்பு கிளப்பும் ஆர்வம் இப்போது குறைந்து விட்டது. ஏனெனில் மாஸ் ஹீரோக்கள் இல்லை , படங்களில் அடிதடியும் வெற்றிலை பாக்கு மென்றுகொண்டு கெட்டவார்த்தை பேசுவதும் , நம்ம ஊர் மார்க்கெட்டில் .செலவின்றி பார்க்கலாமே என்ற நிலை வேரூன்றி வருகிறது .

 

தொடரும்   ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...