Friday, September 22, 2023

Laying the foundation for education

Laying the foundation for education

கல்விக்கான அடித்தளம் அமைத்தல்

கல்வி துவக்கம் 31/2 வயதில் எனினும் , அதற்கான மன நிலையை சிறு வயது முதலே இனிமையாக மனதில் பதிக்கத்துவங்குவது நல்ல பயன் தரும் . குழந்தைபுத்தகங்களில் உள்ள படக்கதைகளை அருகில் அமர்ந்து சொல்லித்தாருங்கள்.  மாதம் 2 புத்தகங்களை வாங்க, இது தெரியும் என்று விலகி ஓடும் குழந்தை மனத்தை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். எந்த மொழி ஆயினும், நாமும் படித்து குழந்தைக்கும் உணர்த்த குழந்தைகளுக்கு மொழிகள் குறித்த  அச்சம் விலகும் /அகலும். சிறிய சொற்கள் உள்ள பதிப்புகளை .பயன்படுத்த, ஆர்வம் மேலிடும். தெரியாத எதையும் தெரிந்தது போல் தவறாக பயிற்றுவிக்காதீர்கள். தவறுகளை ஆழ்நனதில் இருந்து அகற்றுவது எளிதல்ல. 

குழந்தைகளுக்கு அபார நினைவாற்றல் உண்டு, எனவே அது எதற்கு, இது வேண்டாம் என்று ஒதுக்காதீர்கள் கூடியவரை, அனைத்தையும் வாய்ச்சொல்லினால் கற்பித்தால், எளிதாக புரிந்து கொண்டு திருப்பிச்சொல்லும்.சொல்லவில்லை என்றால் துன்புறுத்தல் மிரட்டல், தண்டனைகள் வேண்டாம். பிறிதொரு நாள் தானே முன்வந்து புரிந்துகொள்ளும் அது வரை வேறு  பகுதி /புத்தகத்தை உபயோகிக்க ஊக்கம் தந்து , புத்தகத்தை விரும்பும் நிலைக்கு படிப்படியாக நகர்த்துங்கள். புத்தகம் தான் கல்வியின் திறவுகோல். இதை உணராது நோட்ஸ் நோட்ஸ் என்று அலைந்த இந்நாள் இளைஞர்கள் எழுதவும் பேசவும் தடுமாறுவதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு புத்தகத்தொடர்பு வலுப்பட்டபின் எழுதகற்றுக்கொடுங்கள்; நல்ல பெரிய சிலேட்டு பலகையில் பெரிய எழுத்துகளில் எழுதப்பழக்குங்கள். , ஆரம்பத்தில் எழுத்துகளை அனாயாசமாக தலைகீழாக [அதாவது கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல] எழுதுவார்கள். கோபம் கொள்ளவோ , அச்சுறுத்தவோ வேண்டாம்.அவற்றை செய்தால் குழந்தை எழுதுவதையே நிறுத்திவிடும்   அட சூப்பரா எழுதி இருக்கிறாயே ஆனால் இப்படி எழுது என்று திருத்தம் சொல்லுங்கள். அப்போதும் எழுத வராமல் போகலாம். பரவாயில்லை;போகப்போக சரியாகும் . அதற்குக்காரணம் "EYE -MIND -HAND CO -ORDINATION எனும் கண் -மன -கை ஒருங்கிணைப்பு நிலைப்பட சிலருக்கு 6 வயது வரை கூட ஆகலாம். எனவே பொறுமை தேவை . இறுதியில் பொறுமை பெருமை தரும். எழுத எழுத கை எழுத்து சீரராகும்   அதற்குள் பட்டார் பட்டார் என்று தாக்குதல் தொடுக்காதீர்கள்; காப்பி நோட் உபயோகித்து எழுத சொல்லித்தாருங்கள்.

அதாவது ஒவ்வொரு எழுத்தையும் எங்கே தொடங்கி எப்படி தொடரவேண்டும் என்று பயிற்சி கொடுங்கள். இதற்கு பயந்து கொண்டு ட்யூஷன் வைக்கிறேன் என்று கிளம்பாதீர்கள் இவை நீங்கலாக வேறு சில நடை முறை கட்டுப்பாடுகள் மிக மிக அவசியம்

அவை உணவு, விளையாட்டு, உறக்கம்  சார்ந்தவை 

இன்னமும் பள்ளிக்கு போகாத குழந்தை எனினும் பள்ளிக்கு தயார் செய்யும் வழிமுறைகளை முன்னரே துவங்கி விடுங்கள். காலையில் குளித்துவிட்டு 15 நிமிடம் புத்தகம் படித்தல் அல்லது எழுதுதல்; பின்னர் இறைவனை வணங்குதல் காலை உணவு ; பின்னர் புத்தகங்கள், சித்திரம் வரைதல் சுமார் 1 -1 1/2 மணி நேரம் . சுமார் 11 மணி அளவில் ஜூஸ் / பிஸ்கட், சிறிது நேரம் வீட்டினுள் 3 சக்கர சைக்கிள் இயக்குதல் 12-12.30 மதிய உணவு . அதன் பின் ரைம்ஸ் ஒரு 3 பாடல்கள். பின்னர் ஓய்வு [ உறக்கம்]  மதியம் 2 முதல் 3 மணி வரை எழுத்துப்பயிற்சி . அதன் பின்னர் காரம் [carrom] விளையாட்டு , 4.30-5.30 மைதானத்தில் ஓடி ஆடி விளையாடி  6.00 மணிக்குள் வீடு திரும்பி , மாலை இறைவணக்கம் . பின்னர் 1/2 மணி போல புத்தகம் படித்தல் 7.30 மணிக்கு இரவு உணவு 9.00 -5.30 வரை உறக்கம் என்று மெல்ல நடை முறைப்படுத்திவிட்டால் பள்ளி செல்ல தயங்காது குழந்தை. ஏனெனில் புத்தகம், எழுத்து படிப்பு அனைத்தும் நன்கு அறிமுகம் ; எனவே பள்ளியில் பயில்வது மிக எளிதாகும். பிற குழந்தைகள் பயந்து கொண்டிருக்க வீட்டிலேயே அடிப்படை கல்வி பெற்ற குழந்தை வகுப்பில் சிறப்பாக செயல் பட்டு class leader என்று தேர்வாகி, leadership பண்புகளை அறிந்து முன்னேறும். இப்படித்தான் படிப்பில் நாட்டம் கொண்டு வர முடியும்.  உணவு நேரங்களை உங்கள் வசதிக்கேற்ப அமைக்கலாம் ; னால் படிக்கும் அட்டவணையை பின்பற்றி கற்றலை ஒரு அன்றாடப்பணியாக்குங்கள் . அன்பு பாராட்டி முயற்சிக்கு வெகுமதி தாருங்கள்.

ஆனால் கேட்டதையெல்லாம் வாங்கித்தராதீர்கள். கல்விக்குத்தேவையானவற்றை வாங்கித்தரலாம். கையில் காசு கொடுக்காதீர்கள்.குழந்தையின் நட்பு வட்டத்தை கவனியுங்கள் தேவையான அறிவுரை வழங்குங்கள், அரவணைத்து வளருங்கள் பயில்வது எளிதாகும் , ஆர்வமும் அதிகரிக்கும் . நேரத்தை சரியாக செலவிடலாம்

வெற்றி நிச்சயம்.   வாழ்த்துகள்

அன்பன்  ராமன்  

1 comment:

  1. நல்லதோர் அறிவுரை வழங்கியதர்க்கு நன்றி
    வெங்கட்ராமன்

    ReplyDelete

OLD MOVIE SONGS -9

  OLD  MOVIE SONGS -9 PIANO FOR IMPACT +SINGING STYLES -2 பியானோ ஒரு இசைக்கருவியா / போர்க்கருவியா ? இதென்ன கேள்வி என்கிறீர்களா ? ...