Wednesday, September 6, 2023

CINE MUSIC-6 –STRATEGIES-2

 CINE MUSIC-6  –STRATEGIES-2

திரைஇசை -6  உத்திகள் -2  

உத்திகள் பலவாறாக அறியப்பட் டும் அறிமுகப்பட்டும் இருந்த நிலையில் ஒரு மாறுபட்ட உத்தியாக சில குரல் ஒலிகள் ஊடாட விடப்பட்டு, உணர்ச்சிப்ரவாகம் கட்டவிழ்த்து விடப்பட்டு கேட்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துவது அல்லது துயரில் ஆழ்த்துவது. இரன்டையுமே தமிழ்த்திரைப்பாடல்கள் 1960 களில் அரங்கேற்றி ஒரு புத்துணர்ச்சியை வெளிப்படுத்தின.   பாடலில் இல்லாத ஒலி யில் [சொல்லில்] நாயகியோ  / நாயகனோ/ இருவருமோ  அவ்வப்போது பாட பாடல் ஒரு மாறுபட்ட பரிமாணத்தை வெளியிட்டது. இந்த நுணுக்கத்தை சிறப்பாக அரங்கேற்றியவர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, பின்னாளில் எம் எஸ் விஸ்வநாதன். அதை பொருத்தமான இடத்தில் செய்ததனால் பாடலின் வீச்சும் தாக்கமும் பன்மடங்கு அதிகரித்தது .

சொல்லில்லா சுவை கூட்டுதல்

1961 ம் ஆண்டின் வரவான 'பாக்கிய லட்சுமி ' படத்தில் மொத்தம் 11 பாடல்கள். அவற்றில் பல வெற்றி வாகை சூடி வி-ரா எனும் இரட்டையரின் இசை சாம்ராஜ்யத்தை மேலும் விரிவு படுத்த உதவியது. மெ . ம   முத்திரைகளாக விளைந்த பாடல்களில் ஒன்றான காதலெனும் வடிவம் கண்டேன் பாடல் ஏற்படுத்திய திரை விந்தையை ப்பார்ப்போம்                  குரல் [P. SUSEELA]

இதோ இந்தப் பாடலை படியுங்கள் .                                                                                                    உங்கள் மனதில் என்ன உணர்வு தோன்றுகிறது?  சொல்லாடலின் சிறப்பு பொதிந்து கிடைப்பதென்னவோ உண்மை தான்.                     

காதலென்னும் வடிவம் கண்டேன்
கற்பனையில் இன்பம் கொண்டேன்
மாலையிடும் நாளை எண்ணி
மயங்குகிறேன் ஆசை கன்னி

                                                            [2]
ஓஹோ
..ஆஅஆஅ..ஆஅ..ஆஅ.. [RED]

துள்ளாமல் துள்ளும் உள்ளம்
மின்னாமல் மின்னும் கன்னம் [2]
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டு விடும் கொடியைப் போலே
தொட்டவுடன் மேனி எல்லாம்
துவண்டு விடும் கொடியைப் போலே
                                                   [பல்லவி ]                    

ஓஹோ
..ஆஅஆஅ..ஆஅ..ஆஅ..[ RED]

நாளெல்லாம் திருநாளாகும்,

நடையெல்லாம் நாட்டியமாகும்
                                                     [2]
தென்றலெனும் தேரின் மேலே

சென்றிடுவோம் ஆசையாலே

                      [2]                 

           [பல்லவி]

பாடல் துவங்கு முன் இசையின் ஒலி அலைகள் ஒரு மாறுபட்ட களத்தில் சஞ்சரிப்பதாக தோன்றுகிறது

ஆனால் இந்த கவிதையை படித்த போது உணரமுடியாத சில உணர்வுகளை மெல்லிசை மன்னரின் கருத்தாழம் மிக்க கற்பனை பாடலுக்குள் புதைத்து வைத்துள்ள விந்தையை எண்ணி எண்ணி வியப்ப தைத் தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை. ஆங்காங்கே சிவப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்கள், கவிஞரின் கற்பனையில் உதித்தவை அல்ல என்றே எனக்குத்  தோன்றுகிறது. அதைக்குறிப்பிடவே இந்த வண்ண அமைப்பை பயன் படுத்தி உள்ளேன். ஏனெனில் இவை மெல்லிசை மன்னர் பாடலுக்குள் படரவிட்ட ஓசை நயம் மட்டுமல்ல, பெண்ணின் மனதில் கிளர்த்தெழுந்த உல்லாசம் என்றே உணர முடிகிறது. பொருத்தமான இடங்களில் இடை இசை நிறைவானதும் இந்த நளின ஆலாபனை பாடலை மேலும் வளப்படுத்தி உள்ளதை நன்கு உணரலாம்..       

என்னதான் கவிஞர் பாடலை ஆக்கி இருந்தாலும், மன்னர் அதே பாடலை உணர்ச்சிகரமாக மாற்றும் போது ரசிகனின் மனத்தில் முன்னர் இல்லாத குதூகலம் கொப்பளிப்பதைக்காணலாம். பாடல் துவங்கு முன் இசையின் ஒலி  அலைகள் ஒரு மாறுபட்ட களத்தில் சஞ்சரிப்பதாக தோன்றுகிறதை கவனிக்கலாம். மன்னர் என்னதான் செய்துள்ளார் என்று தேடினால், ஒரு இளம் பெண்ணின் [அதுவும் காதல் வயப்பட்ட நிலையில்] மனதில் கிளர்ந்தெழும் உணர்வுகளை எவ்வளவு ரம்மியமாக குதூகல இசை வடிவாய் பரிமளிக்க வைத்துள்ளார். கவிஞர் தந்தது பாதி, மன்னர் தந்தது மீதி என்பதே சாலப்பொருத்தம். இந்தப்பாடலை நான் சிலாகிக்க வலுவான காரணம் உண்டு. என்னவெனில் இயல்பான சொற்களில் கவி புனையப்பட்டிருப்பினும், சொல்லில் இல்லாத நளினம், பாடப்படும்  முறையில் மேலோங்கி நிற்கிறது என்பதே. இதில் மன்னர் தனது கை வரிசையை எங்கெல்லாம் நிறுவி உள்ளார் எனில் சில குறிப்பிட்ட சொற்கள் பாடப்பட்டவுடன், இசைக்கருவிகளின்  குறிப்பாக குழலின் குழைவு பாடலை வான் வெளியில் தவழச்செய்வது போன்ற உணர்வு ரசிகனைப் பற்றிக் கொள்வதை கவனியுங்கள். 'துள்ளாமல் துள்ளும் உள்ளம்' 'மின்னாமல் மின்னும் கன்னம் ' என்ற சொற்கோவை பாடப்பட்டதும், எவ்வளவு எளிதாக குழலின் ஆதிக்கம் தொடங்கி நம்மை பரவசப்படுத்துகிறது. மேலும், சொல்லை மீறிய சுவையாக பெண்ணின் குதூகலம் வெளிப்படும் வண்ணம் மன்னர் வடிவமைத்த இடை இசையின் நளினம் அடங்கும் பொழுது, ஓ ஓ ஓ ஓ ஓ மற்றும் அ அ ஆ ஆ என்று ஆலாபனை செய்தபடிபெண் ஆடி மகிழ்வது உண்மையிலேயே குதூகலத்தின் அடையாளமாகவே பரிமளிக்கிறது .மீண்டும் அதே போல ‘நாளெல்லாம் திருநாளாகும், நடையெல்லாம் நாட்டியமாகும் என்று கவிதை வரி பாடப்பட்டவுடன் இசைக்கருவிகளின் ஒலி சங்கமத்தில்  பாடல் ஆடல், இளமை, ரசனை அனைத்தும் ஐக்கியப்படும் தன்மையை விவரிக்க இயலாது. பாடலை கேட்டு ரசிக்கத்தான் இயலும்.

https://www.youtube.com/watch?v=5A9sX_rStpA 

சொல்லில்லா சுவை கூட்டுதல் போலவே வேறு பல உத்திகள் இசை அமைப்பாளரின் கற்பனையால் வலுவாக நிறுவப்பட்டு பாடல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.  

பிறிதொரு பாடலுடன் பின்னர் சந்திப்போம்.   அன்பன் ராமன் 

              

1 comment:

  1. மெல்லிசை மன்னர் இது போன்ற குரல் ஒலிகளைப் பல பாடல்களில் பயன்படுத்தி இருக்கிறார். ஹம்மிங்கில்தான் எத்தனை வகைகள், வடிவங்கள். எளிமையான அ ஆ முதல் அஹ்ஹஹா போன்ற பல. ஒவ்வொன்றையும் ஒருவகை பாவத்துடன் பயன்படுத்தி இருப்பது அவரது சிறப்பு. யாருக்கு மாப்பிள்ளை யாரோ வில் வரும் அஹஹஹா.வில் தொனிக்கும் குறும்பு ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு பாடலில் வருமக அஹா ஒஹோ வில் தளும்பும் ஆனந்தம் இது போல் ஒவ்வொரு குரல் ஒலிக்குள்ளும் அவர் புதைத்து வைத்திருக்கும் உணர்வுகள் அற்புதம். தங்கள் பதிவுக்கு நன்றி புரொஃபஸர்!.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...