Tuesday, September 5, 2023

EDUCATION-6

 EDUCATION-6

கல்வி-6

புரியவில்லை என்று புத்தகத்தை மூடிவிட தெரிந்துகொண்ட நாம், புரிந்துகொள்ள என்ன வழி என்று ஏன் யோசிப்பதில்லை? ஊர் உலகமே ட்யூஷன் வகுப்புக்கு போகிறது என்று ஒரு கோர முடிவுக்குள் பயணிக்கிறோம். ட்யூஷன் ஒரு கல்பதரு - பணம் கொழிக்கும் முறை அநேக ஆசிரியர்களுக்கு; வெகு சில ஆசிரியர்கள் ட்யூஷன் வகுப்பினால் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை தருகிறார்கள் ஆனால் அவர்களை மாநில அளவில் கூட   விரல் விட்டு எண்ணிவிடலாம் .

ஹோட்டலுக்கு போகுமுன் இது நல்ல ஹோட்டலா? சினிமாவுக்கு போகுமுன் இது நல்ல படமா என்பது போன்ற கேள்விகளை ட்யூஷன் ஆசிரியர் குறித்து கேட்பதில்லை. மாறாக கந்தன் ,சுந்தர், டேவிட் , சுமதி படிக்கிறார்கள் என்பதே நமது அளவுகோலாக இருக்கிறது . இறுதியில் நல்லவேளை பாஸ் ஆகிவிட்டான் என்று பேருவகை கொள்ளும் பெற்றோரே, ட்யூஷனுக்கே போகாதவர்களும் பாஸ் ; இந்த அழகில் ட்யூஷன் போனதால் பாஸ் என்றால் கேவலமாகத்தோன்றவில்லையா?.

1960 களி ல் ட்யூஷன் படிக்கிறேன் என்று வெளியில் சொல்ல கூசுவார்கள். நோட் / புத்தகத்தை பனியனுக்குள் திணித்துக்கொண்டு சுவர் ஓரமாக மங்கிய ஒளியில் பயந்து பயந்து ட்யூஷன் போவார்கள் . அப்போது ட்யூஷன் சமுதாயக்கேவலம். அன்றைய, ட்யூஷன் தேவை பெரும்பாலும் 70%கணக்கு, 15% ஆங்கிலம் கற்க என்ற அளவில் தான் இருந்தது. அந்த 15% மாணவர்களும் இன்றைய மதிப்பீட்டில் ஆங்கிலத்தில் 60% மார்க் பெரும் அளவுக்கு ஆங்கிலம் அறிந்தவர்கள் தான் ஆனால் அந்த வல்லமைக்கு அன்றைய மதிப்பீடு 25-30 % என்ற அளவில் இருந்தது என்ற உண்மையை அறியாது இன்றைய தலை முறை.

எனவே இயன்ற அளவு ட்யூஷனைத்தவிர்த்தல் நலம் . ஏனெனில் பல பாடங்களுக்கும் ட்யூஷன் பயிலும் எவரும் தன்னம்பிக்கை இன்றி குலை நடுங்கிக்கொண்டிருப்பதை என்போன்ற பேராசிரியனால் உணர முடியாதா என்ன? உள்ளதைச்சொன்னால் கோபம் பற்றி எரிகிறது எனவே தான் பிழை அகற்றும் உத்தியை அறியாமல் வீண் கோபமும் அகந்தையும் கண்ணை மறைக்க மேலும் மேலும் தீமையை வளர்த்துக்கொண்டே போகிறோம்.

புரிதலுக்கான முயற்சிகள்

ஆசிரியர் சொல்வதை நன்கு கவனியுங்கள். எந்த தெளிதலுக்கும் ஆசிரியன் ஒரு வழிகாட்டி. அவர் சொல்வதை செவி மடுத்தால் சொல்-பொருள் தொடர்புகள் விளங்கும். பொருள்விளங்காத எந்த தகவலும் மனதில் தங்காது. எனவே சொல் தான் ஆரம்பப்புள்ளி  சொல் மற்றும்  சொல்லை ப்புரிந்துகொள்ள ஆர்வம் கொள்ளுங்கள் எந்த சொல்லும் வசப்படும் . சொல் வசப்பட வேடுமெனில் பொருள் புரிய வேண்டும் .அதற்கு முதல் துணை ஆசிரியர்.

ஆசிரியர் எவ்வளவு திறன் குன்றியவராயினும் நிச்சயம் கருத்தை விளக்குவார். அப்போது கவனிக்காமல் விட்டுவிட்டு பின்னர் 'புரியவில்லை" என்பது உங்களுக்கு அணுகுமுறை புரியவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. . இந்த கட்டத்தில் பயில்வோரின் உற்ற நண்பன் டிக்ஷ்னரி என்னும் அகராதி. அனைத்து துறைககளு க்கும் தனித்தனியே பிரத்யேக DICTIONARY கள் உள. காலப்போக்கில் அவற்றை வாங்கிவைத்துக்கொண்டால் பாடங்களில் மொழியினால் தோன்றும் இடர்ப்பாடுகளை முறையாக க்கடந்து தெளிவான புரிதலை வளர்த்துக்கொள்ளலாம். டிக்ஷனரி உபயோகிக்க பழகிக்கொண்டுவிட்டால், பிறர் உதவி இன்றி அறிதல் எளிதாகும் மேலும் சரியான பொருளும், சொல்வழக்குகளும் பயன்பாடுகளும் மிகச்சரியாக கற்றுக்கொள்ள முடியும். சில நேரங்களில் தனி மனிதர்கள் தவறான பொருளை கற்பித்துவிடும் தீங்கு நிகழாமல் தவிர்க்க இயலும்..   தன்னம்பிக்கை வெகுவாக வளரும். கற்றவனின் பலம் தன்னம்பிக்கையே அது ஆன்ம பலம் போன்றது;ஏனெனில் எந்தத்தகவலையும் சரியாகப்புரிந்து கொண்டு செயல்பட தன்னிறைவு, தன்னம்பிக்கை இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு முகங்கள் போல இணைத்தே உருவாக்கும் திறனில் கல்விக்கு நிகர் கல்வியே என்பதே உண்மை. வேறு எந்த பலமும் ஏதோ ஒரு காரணத்தால் சிதைவுறலாம்/ மதிப்பிழக்கலாம், கற்ற கல்வி உங்களின் ஆழ்மனச்சொத்து அதன் பூரண உரிமையாளர் நீங்களே, பிறர் யாசித்துப்பெறலாம் ஆனால் ஒருபோதும் அபகரிக்க இயலாது.எனவே புரிந்து கொண்டே படிப்பது என்ற தீவிர நிலைப்பாட்டை கற்கும் குழந்தைகளுக்கு ஆழமாக உணர்த்திவிட்டால் கல்வி ஒரு விளையாட்டு போல் ஊக்கமும் ஆக்கமும் தரும்.

மேலும் வளரும்

அன்பன் ராமன்

 

7

2 comments:

  1. There are two types of tuition
    One for getting pass mark by the weak students
    Another to update knowledge aiming to join IIT
    Another type to get more marks in the internal -
    There are teachers who favours their tuition students by giving full marks in the theory and practical
    K.Venkataraman

    ReplyDelete
  2. So, Dr. K V ,The system is in shambles with no honest effort or concern to "learn" .

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...