Monday, September 4, 2023

6 NOT KNOWING THE PERSON

 6  NOT KNOWING THE PERSON

6 ஆள் தெரியாமல் ..

இது என்ன ஆள் தெரியாமல்" என்கிறீர்களா? கஸ்தூரிரெங்கனு ம்,    கௌரி யும் தான் எப்போதுமே கதைக்கருவாக இருக்கவேண்டுமா ? அதன் விளைவே இந்த "ஆள் தெரியாமல்" என்னும் ஒற்றை சம்பவம். . அது ஒரு புதிதாக வளர்ந்துவரும் காலனி .அடுத்தடுத்த 2 வீடுகள் , இரண்டிலும் 62-65 வயதினர் குடும்பத்தலைவர்கள் வீடு கட்டி வசிக்கின்றனர் . வருடம் 2010 இருவரும் புது அறிமுகங்கள் என்பதே கதையின் அடித்தளம் .ஒருவர் வெளிநாட்டில் வேலை பார்த்து நல்ல செழிப்புடன் /சேமிப்புடன் இருக்க அடுத்தவர் , மாதம் ஒவ்வொன்றுக்கும் ஓய்வூதியத்தை நம்பி வாழ்பவர். வெயில் காலத்தில் மின் தட்டுப்பாடு, பொசுக் பொசுக் என்று current போய்விடும் , குறித்த நேரமோ அவகாசமோ சொல்லமுடியாமல் இரவெல்லாம் தொல்லை .

இதனால் வசதி மிக்கவர் மின் தட்டுப்பாட்டை சமாளிக்க இன்வெர்டர் என்னும் கருவியை பொருத்தி அனைத்து இடங்களிலும் விளக்கு விசிறி எல்லாம் இயங்கட்டும் என்று ஏற்பாடு செய்துகொண்டார். மற்றவர் இந்த அமைப்புகள் அவசியமா, அந்த பாட்டரிக்கே தேவையான மின்சாரம் கிடைக்குமா என்றெல்லாம் யோசித்து பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டார்.

வசதிக்காரர் செல்வந்தர் , மற்றவர் சொல்வேந்தர் என்று பெயர் வைத்துக்கொண்டால் யார் என்ன சொன்னார்கள் என்பது எளிதில் விளங்கும்.

ஒரு நாள் மாலை 7.30 மணி current பொசுக், எங்கும் இருள் , வசதி வீட்டில் ஒளிவெள்ளம். செல்வந்தர் வெளியே இருளில் நின்று கொண்டு தனது  வீட்டில் ஒளிரும் ஒளியை ரசித்து , அடுத்தவீட்டை பார்க்க அது இருள் வெள்ளத்தில்.. உடனே குதூகலமாக அடுத்த வீட்டில் எட்டிப்பார்த்து செல்வந்தர் : "என்னசார் கரண்ட் போச்சா?" என்று உள்ளூற மகிழ்ச்சி ததும்ப கேட்கிறார்.

சொல்வேந்தர் : ஆமா சார்

 செல்வந்தர்: இன்வெர்டர் போட்டுற  வேண்டியது தானே 

சொல்வேந்தர் அதுக்கு 15, 16000/- ஆகுமே

 செல்வந்தர்: ஆமா , ஆனா current இருக்குமே  

சொல்வேந்தர்: எவ்வளவு நேரம் இருக்கும்?  செல்வந்தர்: 7 hours

சொல்வேந்தர் முணுமுணு க்கிறார் [ஆமா 70 வது மணி நேரம் ஓடுதாக்கும் சும்மா 7 மணி நேரம்னு அடிச்சு விட்டு ஏமாத்திட்டு ஓடிட்டான் இந்த ஆளு நம்ம கிட்ட அளக்கிறான் ]   சொல்வேந்தர்: 7 மணி நேரமெல்லாம் ஓடாது சார் .

செல்வந்தர்: என்ன அப்பிடி சொல்லிட்டீங்க box மேலயே 8 hrs நான்-ஸ்டாப் னு எழுதிருக்கு, நான் பாத்துட்டு தான் வாங்கியிருக்கேன். 

சொல்வேந்தர்: நீங்க என்னத்த பாத்து வாங்கியிருந்தாலும் 7 மணி நேரம் கிறதெல்லாம் வெறும் டூப் ;

செல்வந்தர்: ஏன் சார் வாய் வெக்கிறீங்க சொல்வேந்தர்:நான் வாயும் வெக்கல வயிறும் வெக்கல உள்ளதைத்தான் சொல்றேன் என்றார்.

கடுப்புடன் வீடு திரும்பினார் செல்வந்தர். வீட்டிற்குள் போய் மனைவியிடம் வயித்தெரிச்சல் பேசறார் நம்ப பக்கத்து வீட்டுக்காரரு என்றார். அந்த பெண் : நீங்க ஏன் போய் கரண்ட் போச்சா னு துக்கம் விசாரிச்சீங்க அவர் உங்கள வெறுப்பு ஏத்துறார் .

மணி 8.10 வாங்க சாப்பிடுவோம் என்று சொல்வேந்தர் வீட்டினர் இரவு உணவை முடித்தனர்.

செல்வந்தர் மனைவி வாங்க சாப்பிடுவோம் என்றார் . 9 மணிக்கு சாப்பிடுவோம் என்றார் செல்வந்தர்.. மணி 9.02 செல்வந்தர் வீட்டில் கரெண்ட் பொசுக் . ஆம் இன்வெர்டர் சேமிப்பு முடிந்து விட்டது ; இப்போது சொல்வேந்தர் ஜன்னல் வழியே உரத்த குரலில் உங்களுக்கும் போச்சுல்ல கரண்ட் போச்சுல்ல.. நான் சொன்னேன்ல 7 மணி நேரம்லாம் ஒடாது னு -நீங்க 8 மணி நேரம் னு பாத்துதான் வாங்குனேன் னு சவால் விட்டுக்கிட்டு இருந்தீங்களே, இப்ப ஒண்ணரை மணி நேரத்துக்கே படுக்கையை போட்டிருச்சில்ல

அதுல  வேற பெருமை அடிச்சுக்கிட்டீ ங்களே ஆஹா இங்கே பார் ஒளி வெள்ளம்னு , ஒரு ஒன்னரை மணி நேரத்துக்கு 15 ஆயிரமா? எங்கயாவது கள்ள நோட்டு அடிச்சாத்தான் முடியும்.

செல்வந்தர் :என்னங்க கள்ள நோட்டு அது இது னு தேவை இல்லாம பேசறீங்க .

சொல்வேந்தர் : சார் நான் உங்கள சொல்லல என் நிலைமைக்கு இப்பிடி இன்வெர்டர் போடணும்னா  எங்கயாவது கள்ள நோட்டு அடிச்சா தான் முடியும் னு சொல்றேன்.

கொஞ்ச நேரத்துல கரெண்ட் வந்துருமில்ல என்றார் செல்வந்தர் : சொல்வேந்தர் : அதுக்கு எதுக்கு இன்வெர்டர் ?  15 ஆயிரத்தை அளுதுக்கிட்டு. மீண்டும்  செல்வந்தர்:கொஞ்ச நேரத்துல கரெண்ட் வந்துருமில்ல.

சொல்வேந்தர்: அப்பிடியே current வந்தாலும் , இன்வெர்டர் வராதுல்ல . செல்வந்தர்: ஏன் வராது ? சொல்வேந்தர்: 1 மணி நேரம் ஓடுனா இன்வெர்டர் 2 மணி நேரத்துக்கு சார்ஜ் ஏத்துனா தான் மீண்டும் முழு சப்ளை கொடுக்கும்.

செல்வந்தர்: அப்பொ என்ன சொல்ல வரீங்க?

சொல்வேந்தர் : 7 மணி நேரம் ஓடுனா அடுத்த 14 மணி நேரத்துக்கு விடாம சார்ஜ் ஏத்துனா மீண்டும் 7 மணி நேர த்துக்கு கரெண்ட் கொடுக்கும் . இங்க 14 மணி நேரம் தொடர்ந்து கரெண்ட் வர்ரதில்லையே அத வெச்சுக்கிட்டு என்ன செய்ய முடியும் னு புரியல.

செல்வந்தர் : பின்ன அவன் 7 மணி நேரம் உறுதியா சொன்னானே.

சொல்வேந்தர் : இப்ப கேட்டா என்ன சொல்லுவான் தெரியுமா ? 1 லைட், 1 fan =8 hrs , 2 பேன் =7 hrs , 4 லைட் =7 hrs 3 fan =5 hrs .எல்லா light , fan =1 முதல் 1 1/2 மணி நேரம் சப்ளை. .நீங்க இதெல்லாம் box போடமாட்டாங்க அதை புரிஞ்சுகிட்டு நம்ப பொருள் வாங்கினா நல்லதுன்னு சொல்றேன் .

செல்வந்தர் மனதிற்குள் ஐயோ ஆள் தெரியாம பேசி இப்ப நம்மள இப்பிடி உலுக்குறானே என்று வருந்தினார்.

நன்றி   அன்பன் ராமன்

1 comment:

  1. அடுத்தவீட்டுக்காரன் கஷ்டப்பட்டால் பக்கத்து வீட்டுக்காரனுக்கு சந்தோஷம்
    வெங்கட்ராமன்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...