SCIENCE -6
அறிவியல் – வாக்ஸின் -6
இது வரை வாக்ஸின் தயாரிப்பில் நிலவி வந்த /நிலவி வரும் பழைய முறைகளைப்பார்த்து
வந்தோம். அவற்றில் துல்லியம் என்னும் precision குறைவு என்பதாக ஒரு விமரிசனம் சில காலமாகவே ஒலித்து வருகிறது. . அதிலும் இந்தியா
எதையாவது செய்யமுற்பட்டால் உடனே உலக அரங்கில் நையாண்டியும் பூடக விமரிசனங்களும் ஒலிக்க
உடனே உள்ளூர் கோடாங்கிகள் தங்கள் பங்குக்கு உளறித்தள்ளி பிற நாட்டவருக்கு ஒத்துஊதுவது
வாடிக்கை. இத்துணைவிமரிசனங்களையும், கோணங்கிகளையும் ஒருசேரத்தூக்கி எரிந்து முன்னேற்றம்
கண்ட இந்திய விஞ்ஞானிகள் கோயிலில் வைத்து கும்பிடப்பட வேண்டிய பெருந்தகைகள்.
கொரோனா கோரதாண்டவம் ஆடிய நெருக்கடியான கட்டத்தில் பெரும் ஒளிக்கற்றையாக மிளிர்ந்தது
தான் mRNA வாக்ஸின் -குறிப்பாக Pfizer, Moderna, Bio N Tech, நிறுவனங்களின் ஓங்கி ஒலித்த குரல்கள். ஏதோ மாபெரும் விஞ்ஞான முன்னேற்றத்திற்கு
வித்திட்டவர்களைப்போல் பெரும் முழக்கங்களை வெளிப்படுத்தி இந்தியாவில் கால் பதிக்க பகீரத
பிரயத்தனம் செய்ய, இந்திய அரசினரின் கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்க விரும்பாதவர்களுக்கு
இந்தியாவில் அனுமதி இல்லை என்று முகத்தில் அறைந்து சொன்னது இந்திய மருத்துவ ஆலோசனைக்குழு.
. இந்த அரசியல் இங்கு தேவையா எனில் -கண்டிப்பாகத்தேவை. ஏனெனில் உலகெங்கணும் இந்திய
வாக்ஸின்கள் எத்துணை கோடி மக்களுக்கு தன்னலமின்றி வழங்கிய இலவச சேவையை ஒருநாளும், Pfizer, Moderna,
Bio N Tech நிறுவனங்கள்
செய்யாது. மேலும், m
RNA வாக்ஸின் டெக்னாலஜி யை இரவு பகல் உழைத்து பூரணத்துவ நிலைக்கு
உயர்த்தியவர் இருவர். 1 ஹங்கேரிய Biochemist பெண்மணி –Katalin
Kariko மற்றும் 2 Weissman அவர்களும்
தான்... அந்தப்பெண்மணி இவ்வாராய்ச்சியில் தன் வாழ்வின் பெரும் பகுதியை [20-22 ஆண்டுகள்]
அர்ப்பணித்தவர்.
நல்லவர்களைத்தான் துரதிர்ஷ்டம் துரத்தும் என்பது கதலின் கரிக்கோ வின் வாழ்வில்
கிஞ்சித்தும் பிசகாமல் நடந்தது. 1985 முதல் அமெரிக்காவில் பென்சில்வானியா பல்கலையில்
ஆராய்ச்சியில் Biochemistry
துறையில் Ph.D பெற்ற நிலையிலேயே
m-RNA இழைகளை சரியாக இனம்கண்டு, தேவையானபடி வடிவமைத்தால், மிகச்சிறப்பான துல்லியம்
மற்றும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு வாக்ஸின் களை விரைவாக உற்பத்தி செய்துவிட முடியும்
என்று கட்டுரைகள் வாயிலாக உலகறியச்செய்தவர் கதலின் கரிக்கோ. ஆஹ்! என்று கோபம் கொண்டு
பொங்கி எழுந்தனர் மூத்த விஞ்ஞானிகள். அதெல்லாம் செயல் படாது என்று எதிர்வினை புரிந்தனர்.
அவருக்கு [கதலின் கரிக்கோ]. பதவி உயர்வுகள்
மறுக்கப்பட்டன. இவரது ஆராய்ச்சிகள் பயனற்றவை என்று கூறி ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு
முற்றாக மறுக்கப்பட்டதுடன் அவர் பதவி இறக்கப்பட்டார் DEMOTED FROM LEADERSHIP]. .ஆனாலும் கரிக்கோ மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்தும்-m-RNA ஒரு புரட்சிகரமான ஆயுதமாகும் என்று திடமாக நம்பினார்.
அவர் நம்பினார் ஆனால் உலகம் அவரை நம்பவில்லை. இவ்வாறு 22 ஆண்டுப்போராட்டத்தில்
தளர்ந்து போன நிலையில்
Weissman எனும் விஞ்ஞானி
இதே நிலைப்பாடு கொண்டு சில கருத்துகளை ஆராய்ச்சி கட்டுரையாக வெளியிட மீண்டும் சூடு
பிடித்தது கதலின் கரிக்கோ வின் m-RNA
வாக்ஸின் முயற்சி.
ஆரம்பத்தில் கதலின் கரிக்கோ வாக்ஸின் குறித்து தீவிர சிந்தனை கொண்டிருக்கவில்லை.
எனினும் m-RNA வைக்கொண்டு எந்த ப்ரோடீன் அமைப்பையும் செய்துவிடலாம் என்ற உண்மை அவரது சிந்தனையில்
m- RNA-BASED VACCINE என்ற ஆசையை
வேரூன்றச்செய்தது . எதிர்ப்பாளர்கள் தெரிவித்த மறுப்பு யாதெனில் - m- RNA வெளியில் இருந்து வந்து உடலினுள் ப்ரோடீன் தயாரிக்க எந்த செல்லும் அனுமதிக்காது
மாறாக வெளி m- RNA - சிதைக்கப்படும் எனவே வாக்ஸின் தயாரிப்பு கனவே ஆகும் என்று m- RNA -வாக்ஸின் கருத்தை தலைதூக்க விடாமல் தடுத்துக்கொண்டே இருந்தனர்.
கதலின் கரிக்கோ -வீஸ்மன் இணைந்து ஒரு m- RNA அமைப்பை [ஒரு நோய் எதிர்ப்பு
உத்தியாக] உருவாக்கி எலிகளின் உடலில் செலுத்தி m- RNA வாக்ஸின் சிறப்பாக இயங்குவதை
நிரூபித்து கட்டுரை வெளியிட்டு மீண்டும் கவனத்தை ஈர்த்தனர். மீண்டும் அதிர்ஷ்டம் காலைவார,
இந்த வகை m- RNA வாக்ஸின் மனிதரில் பலனற்றுப்போய் சோர்வைத்தந்தது. இந்த தோல்வி ஏன் என்று நுணுக்கமாக
துருவி ஆராய்ந்ததில் ஒரு உண்மை புலப்பட்டது . மேலும் வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment