Sunday, September 17, 2023

CLIMATE

 CLIMATE

வானிலை

வானிலை  என்ற சொல் நம்மோடு அன்றாட வாழ்வின் அங்கமாக நிலவி வருகிறது . மழை, வெய்யில், பனி, காற்று புயல் நிலநடுக்கம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் சார்ந்தது என்பதையும் அறிவோம். .

ஆனால் வானிலை என்பது வானில் உள்ள மாறுபாடுகளைப்பற்றிய ஒன்று அல்ல ;மாறாக இது புவி என்னும் இவ்வுலக இயக்கத்தில் தோன்றுவது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வெய்யிலும் மழையும் வானின்     கொடை என்றெண்ணுகிறோம் அது சரியா அல்லது வேறெதுவும் அவற்றின் பின்னணியில் உள்ளதா என்பதை புரிந்துகொள்ள முயலுவோம் .

சுற்றுச்சூழல் அறிவியலில் [ENVIRONMENTAL SCIENCE ] ஒரு பொருள் பொதிந்த கோட்பாடு முன் வைக்கப்படுகிறது அது "THINK GLOBALLY and ACT LOCALLY " .அது உணர்த்தும் பொருள் உலகம் குறித்து சிந்தித்து உள்ளூரில் செயல் படுவீர் " என்பதே . உட்பொருள்-- நாம் செய்யும் எந்த செயலும் உலகளாவிய தாக்கத்தை விளைவிக்கும் ; இங்கே கழிவு நீரை வெளியேற்றினால் என்ன, அங்கே நச்சுப்புகையை அண்டார்டிகா வில் அவிழ்த்து விட்டால் என்ன என்று நமக்கு நாமே சமாதானம் செய்து கொள்வது , பின்னாளில் உலகளாவிய சுற்றுச்சூழல் பின்விளைவுகளை உருவாக்கிட நம்மை அறியாமல்  வித்திடுகிறோம் என்பது .

எனவே புவி வெப்பம் அடைதல் GLOBAL WARMING, EL  NINO , LA  NINO போன்ற கொடூர வானிலை மாறுபாடுகள் குறிப்பிட்ட பகுதிகளில் துவங்குதல் என்பது வேறெங்கோ கிளம்பிய தீவிர வானிலை மாறுபாடு என்பதை உலகளாவிய ஆய்வுகள் நிறுவியுள்ளன. உலகம் ஒரு நாடக மேடை அதில் மனிதர்கள் தான் கதாபாத்திரங்கள் என்ற ஷேக்ஸ்பியர் கூற்று, சுற்றுச்சூழல் சந்தித்துக்கொண்டிருக்கும் அநேக அவலங்களுக்கு மிக நேர்த்தியாகப்    பொருந்துகிறது.  புயல் வெள்ளம் பூகம்பம், வறட்சி நில நடுக்கம், தாங்கவொண்ணாக் குளிர்என்று பட்டியல் நீள்கிறது; இவ்வனைத்துக்கும் பெற்றோர் உலக மக்களே. இந்த அடிப்படை யதார்த்தத்தை கருத்தில் கொண்டால் வானிலை, அதன் மாற்றம், சீற்றம் குறித்த தெளிவு பிறக்கும்.  சற்று கடினமான பகுதிதான், இயன்ற அளவு க்கு எளிமையாக எழுதுகிறேன். நிதானமாக ப்படித்து உள்வாங்கிக்கொள்வீர் .

மூன்று முக்கிய தன்மைகளை மனதில் இருத்திக்கொண்டால் .எதிர்பாராத இன்னல்களில் இருந்து விலகி இருக்கலாம் அவை வருமாறு:

1 நமது செயல்களின்விளைவுகளுக்கான எதிர்வினை -உலகம் முழுவதிலும் வியாபிக்கும் திறன் கொண்டதாகும் . உதாரணம் - புவி வெப்பமயமாதல்

 2. நன்மையோ தீமையோ, எதையும் இயற்கை நம்மைக்கலந்து ஆலோசித்து வழங்குவதல்ல.

3 தோற்றுவிக்கப்பட்டுவிட்ட தீமைகளை எவ்வளவு முயன்றாலும் எளிதில் அகற்ற இயலாது; மாறாக இயற்கை பலமுறை நம்மை பலமாக தாக்கி நிலை குலையச்செய்யும் திறனும் வீரியமும் கொண்டது.

மேலே கூறப்பட்டுள்ள இம்மூன்றை தெளிவாகப்புரிந்து கொண்டால் வானிலையில் நிகழும் மாற்றங்களாகிய வெய்யில் , மழை, பனி ,  போன்ற இயற்கை நிகழ்வுகளை விளக்குவதும் , புரிந்து கொள்வதும் எளிதாகும்.

அடிப்படைக்கருத்து யாதெனில்

வானிலை நிகழ்வு இப்புவியில் நிகழும் மாறுபாடு.  எனவே, இந்த    பூமி , அதன் மீது படர்ந்துள்ள கடல்கள், பூமிப்பரப்பிற்கும் , எட்டத்தில் காணும் தொடுவானிற்கும் இடையில் பரவி உள்ள வளி மண்டலம் என்னும் காற்று பகுதிக்கும் இடையில் ஏற்படும் மாற்றங்களே வானிலை என்று விளக்கப்படுகிறது.

இவ்வகை மாற்றங்களை தோற்றுவிப்பது பூமி இயக்கம், கடல் , சூரியன் இவற்றின் இடையில் நடக்கும் இயக்கங்களின் விளைவே.

பூமியின் இயக்கம் அதன் சுழற்சியைக்குறிக்கிறது . பூமி தனது அச்சின் மீது [பம்பரம் போல ] சுழல்கிறது அது anti clockwise [counter clockwise] =கடிகார முள்ளின் இயக்கத்திற்கு எதிர்திசையில் பயணிக்கிறது இந்த விளக்கம் பூமியைவடதுருவத்தின் மேல் இருந்து   கீழ் நோக்கி ப்பார்த்தால் உணரப்படும் சுழற்சி வகை [anti clockwise ]என விளக்கப்டுகிறது .

அதனால் என்ன என்கிறீர்களா ?  பூமி உருண்டையின்  இடுப்புப்பகுதி போன்ற equator [பூமத்திய ரேகை ] இன்  மேலும் கீழும் [equatorial  zone ] ஒவ்வொரு நாளும் சூரியக்கதிர்களால் வெப்பமடைகிறது. அதிகரிக்கும் வெப்பம் பூமிப்பரப்பில் உள்ள காற்றை சூடேற்றி வெப்பமடையச்செயகிறது. இப்போது பூமியின் பரப்பில் இருக்கும் காற்று காற்றில் உள்ள நீர்தனை [ஆவி வடிவமாக] சுமந்து மேலெழும்பிச்செல்கிறது. இப்படி நீர் பொதிந்த காற்று, மேலே சென்று குளிர் பகுதிகளுக்கு சென்றதும் அடர்த்திபெற்று மேகம் ஆகிறது. . கீழே உலவி வந்த காற்று மேல்நோக்கிப்போய்விட , பூமியின் புறப்பரப்பில் காற்று குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது.இதுதான் புழுக்கம் என்னும்   வியர்வை பெருக்குக்கு காரணம்.

அனைத்துப்பகுதிகளிலும் வியாபிக்கும் காற்று பூமிக்கு மேல் இருந்து மேல்நோக்கி போய்விட காற்றின் அழுத்தம் பூமியில் குறைகிறது .அதனை சமன் செய்ய கடலின் பரப்பில் நிலவும் காற்று நிலப்பகுதி நோக்கி ப்பாய, இதுவே மாலை நேரக்கடற்காற்று [sea breeze] என்னும்  பெயரில் கடற்கரையில் வீசுவதை உணரலாம்.

தொடரும்

அன்பன் ராமன்

2 comments:

  1. Climate wise Madurai is the safest place.
    No volcano , no tornado , no effect of Elnino, La nino ,no heavy rain, no winter and what not.
    Venkataraman

    ReplyDelete

PATTU IYENGAR –THE LYRICIST-3

  PATTU IYENGAR –THE LYRICIST-3 பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார் -3 கீழே இறங்கி வந்த திருப்பதி , ஐயங்காரை பக்கத்து அறை   டேபி...