Monday, September 18, 2023

PARAMESWARAN and PATHMANAABUN

 PARAMESWARAN and PATHMANAABUN

பரமேஸ்வரன் அண்ட் பத்மநாபன்

இது என்ன ரொம்ப தெரிந்த பெயர்களாயிற்றே என்கிறீர்களா? பெயர்கள் தான் தெரியும். இரண்டும் கல்லுளி மங்கன்கள்.  அவர்களின் பூர்வோத்திரம் கதை நகர நகர புரியும், புரியாவிட்டாலும் புலப்படும் அல்லது நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்ற சுய விமரிசனம் தோன்றக்கூடும் ஏனெனில் ஒருவருக்கு ஒருவர் இளைத்தவரோ சளைத்தவரோ  அல்ல. இருவரும் புதிய நட்பில் பேசுகின்றனர் ஆயினும் உன்னை ஒரு கை பார்க்கிறேன் என்ற மனநிலை இருவர் வார்த்தைகளில் தெரித்துச்சிதறும். . எதுவானாலும் நமக்கோ விலையில்லா பொழுதுபோக்கு. ஆம் இப்போதெல்லாம் இலவசம் என்று சொல்லக்கூடாது அதற்கு கௌரவ நாமகரணம் தான் "விலையில்லா". இந்த விலையில்லாபொழுது போக்கிற்கே காரணம் வேலையில்லா முதியோர் தான் 

அன்று விநாயக சதுர்த்தி. வாசலில் திடீரென்று PATHMA NAA BUN   PATHMA NAA BUN என்ற குரல். யாரூ என்றார் பத்மநாபன். நான் தன் பரமேஸ்வரனாக்கம் என்று குரல் வந்தது. எட்டிப்பார்த்தால் பக்கத்து வீட்டு பரமேஸ்வரன், குட்டை சரீரம்,  பலத்த சாரீரம் , அடர்ந்த புருவம், ஒட்டிய வயிறு, , வெள்ளை வெளேர் ஜரிகை , ஒருகையில் வெண்பட்டு போர்த்திய தட்டு.   

வாங்கோ  என்றார் பத்மநாபன் .  நுழைந்து ஊஞ்சலில் தட்டை வைத்துவிட்டு அன்றைய TIMES  OF INDIA பேப்பரை எடுத்துக்கொண்டு ஒரு சேரில் அமர்ந்தார் பரமேஸ்வரன். பத்மநாபன் கடுப்பில் இருக்கிறார் வேறொன்றுமில்லை மாமி [பத்மனாபி] கோயிலுக்குப்போய்விட்டாள். இன்னிக்கு சனிக்கிழமை கோயில் முடிச்சுட்டு தான் காபி; அப்படி அவசரமா வேணும் னா  நீங்களே காபி போட்டு சாப்பிட்டுட்டு டிகாக்ஷ ன் வெச்சு வைங்கோ என்று கறாராக சொல்லிவிட்டு 7.00 மணிக்கே வெளியே போனாள் . பத்துவு க்கு காதில் புகை வராதது தான் பாக்கி, சும்மா தகித்துக்கொண்டு இருக்கிறார்.

மாமி -- "அடுக்குளைலியா "? என்றார் பரமேஸ்வரன் ஆத்திரத்தில் கண்ணாடிக்கும் புருவத்திற்கும் இடையே முறைத்தார் பத்மநாபன்.ஐயோ நம்மால் இப்படி பார்க்க முடியாதே புருவம் மறைக்குமே என்று யோசித்தபடியே

மீண்டும் " மாமி -- "அடுக்குளைலியா "? என்றார் பரமேஸ்வரன்.

 இடம் வலமாக இல்லை என்பதாக தலை அசைத்தார். பத்மநாபன்.

மாமியோடு பேர் என்னவாக்கம்?  ராஜம்?  என்றார் பரமேஸ்வரன். 

இடம் வலமாக தலை அசைத்தார். பத்மநாபன்.

கௌரி?  மீண்டும் இடம் வல அசைப்பு

காமாக்ஷி ? இப்போதும் இடவல அசைப்பு

மீனாக்ஷி திரும்பவும் இட வல அசைப்பு

விசாலாக்ஷி ? எந்த அசைவும் இல்லை

ஓய் நீர் மௌன விரதமா, வாயே தெறந்துட்டில்லை? அப்படினா மாமியோடு பேர் கற்பகம்?

ஒரிக்கால் காந்திமதியோ? இப்போதும் இட வலம்

ஒரு க்ளூ தன்னால் ஈஸியாயிட்டு பிடிக்காம் என்றார் பரமேஷ். பொறுக்க முடியாமல் இப்போது பத்மநாபன் க்ளூ -' ஜம்'

பட்சே 'ராஜம்" இல்லை சொல்லிட்டீரே -பரமேஷ்

பங்கஜம்? இட வலம்

சங்கோஜம்? சுட்டெரிக்கும் பார்வை பார்த்தார் பத்மநாபன்

அம்புஜம் ? இட வலம்       ஆனா அதுல பாதி -என்றார் பத்மநாபன்

அம்பாளா?        NO என்றார் பத்மநாபன்

ஐயோ இது என்ன வேதன -எனிக்கு ஒன்னும் மனசிலாயிட்டில்லை என்று பரமேஷ் புலம்ப பத்மநாபன் சொன்னார் "புஜம்"

"பின்ன அம்புஜம் இல்லை சொன்னேளே"? -பரமேஸ்வரன்

"ஹேமாம்புஜம்" என்றார் பத்மநாபன்

நல்ல பேர் ஹேமாம்புஜம் என்று சிலாகித்து வாயெல்லாம் பல்லாக பரமேஸ்வரன் "ஹேமாம்புஜம் ஹேமாம்புஜம்' என்று ஸ்மரணிக்க, குதிரைபோல வீட்டில் நுழைந்தாள் சாக் ஷா த் ஹேமாம்புஜம் பத்மநாபன் .

ஹேமாம்புஜத்தை கண்ட பரமேஸ்வரன் கை கூப்பி "நெ மஸ் காரம் " என்றார் .பதிலுக்கு ஹேமாம்புஜம் நமஸ்காரம் என்று ஒரு வினாடி நின்று விட்டு உள்ளே சென்றாள் .

சரி நான் வரேன், பாத்திரம் பின்ன கொடுங்கோ, நீங்கள் பட்ஷணம் அதிலபோட்டு தாங்கோ என்றார் பரமேஸ்வரன்.

எங்களுக்கு விநாயக சதுர்த்தி எல்லாம் வழக்கம் இல்லை அதுனால இப்ப வே பாத்திரம் திருப்பித்தறேன் என்று ஹேமாம்புஜம் பாத்திரத்தை சுத்தம் செய்து 4 சாக்கலேட் போட்டு கொடுத்தாள்

ஒன்னற மணிக்கூர் வெய்ஸ்ட் [WASTE] என்று புலம்பிக்கொண்டே வீடுதிரும்பினார் பரமேஸ்வரன்.

இங்கே என்ன வேத்து மனுஷாளோட ஹேமாம்புஜம் ஹேமாம்புஜம் னு பஜனை பாடிண்டு? ஒருமணி நேரமா இதே தானா?  அவாத்து மாமி பேர் என்னவாம்? நான் கேட்டுக்கல்ல. என்றார் பத்மநாபன்.

 நன்னாவா இருக்கு. சித்த நாழி கோயிலுக்கு போய்ட்டு வரத்துக்குள்ள ஒரே நாமாவளி பஜனை. அதுனால இன்னிக்கு காபி கிடையாது, நேர 11.00 மணிக்கு சாப்பாடு தான் என்றாள் ஹேமாம்புஜம் கறாராக   

மனதிற்குள் குமைந்தார் பத்மநாபன் "இந்த சனியன் பேரை சொல்லப்போக காப்பில மண்.

பக்கத்து வீட்டில் ஈஸ்வரி மாமி-இத பாருங்கோ பூஜை கழிஞ்சாச்சு இனிமே காபியெல்லாம் ப்டாது, சாயந்திரம் தான் என்று அடித்து சொல்லிவிட்டாள்.

அவன் பட்ஷணமும் தரமாட்டான் காபியும் போச்சு என்று பத்மநாபனை எண்ணி குமுறினார் பரமேஸ்வரன்.

நன்றி அன்பன் ராமன்

2 comments:

  1. Based on the spelling for Pathma na “Bun “ he should be an owner of a bakery.Parameswaran belongs to Palakkad தன்னே?
    Venkataraman

    ReplyDelete
  2. அதே அதே நிங்கள் க்கு அறியாத்ததுண்டோ ? பட்ஷே ஈ pathmanaabun , ஆ பாலக்காட்டு பரமேஸ்வரண்டே pronunciation கொண்டு எழுதிட்டுள்ளு அத்தரயே

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...