Tuesday, September 19, 2023

EDUCATION – 8

 EDUCATION – 8

கல்வி-8

கல்வி பயில அடிப்படை தேவைகள் என மூன்று அடையாளாப்படுத்தப்படலாம், அவை: 1 ஒரு சீரான அணுகுமுறை  2. பயிலும் வேளையில் கவனம் ஒருமுகப்படுத்தப்படுதல் 3 சொல்லித்தரும் நபருடன் பணிவாக இருந்து கற்றல் [அதாவது குறுக்கிடாமல் கேட்டுக்கொண்டு, பின்னர் விளக்கம் கேட்டுப்பெறுதல் ] இவை ஒவ்வொன்றை யும் அவற்றின் உள்ளார்ந்த விளக்கத்தையும் பார்ப்போம் .

1 ஒரு சீரான அணுகுமுறை

சீரான அணுகுமுறை என்பதில் இரண்டு அங்கங்கள்; முதலாவது வீட்டில் காலை நேரத்தில் தனது வகுப்புக்குரிய புத்தகங்களை[ [நோட்ஸ் /கெய்டு அல்ல] காலை முன்பகுதியில் படிக்கும் முறையை கைக்கொள்ள , புரிதல் மேம்படும் . சிறு வயதில் 6- 7 am என்று துவங்கி போகப்போக துவங்கும் நேரம் இன்னும் முன்னதாக்க, நேரம் அதிகம் கிடைக்கும் . மேலும் அமைதியான அதிகாலை நேரம் மூளை மிகவும் தெளிவும் சுறுசுறுப்பும் கொண்டு இயங்கும் . இவன் தூங்க விடமாட்டான் போலிருக்கிறதே என்று சஞ்சலம் வேண்டாம். தேவையற்ற டீவி சீரியல் பேட்டி இதை தவிர்த்து விட்டால் ஏராளமான நேரமும் சுதந்திரமும் நம் வசமே. .ட்யூஷன் வகுப்பு மாணவப்பருவத்தின் உடல் வளர்ச்சிக்கான விளையாட்டு நேரத்தை அபகரிப்பதை நாம் சரியாக உணரத்தவறிவிட்டோம். நீங்கள் புரிந்துகொண்டு படிக்கும் உத்திகளை நன்றாக மேற்கொண்டால் ட்யூஷன் நேரம், பொருட்செலவு இரண்டும் .தவிர்க்கப்பட்டு , விளையாட்டு , பிற குழந்தைகளுடன் பழகும் வாய்ப்பு இவை நமக்கு கிட்டும்.   இவ்வாறு விளையாட்டு, உடடற்பயிற்சி, தெய்வ வழிபாடு போன்ற வற்றில் ஈடுபட்டால், கல்வி தோற்றுவிக்கும் அழுத்தம் [பிரஷர்] வெகுவாக க் குறைந்து,   பாடக்கருத்துகளையும் அறிந்து கொள்ள நாட்டம் தோன்றும். காலப்போக்கில் படிக்காமல் இருப்பது தவறு [குற்றம்] என மனம் வருத்தமுறும். இவைதான் எவரையும் கல்விநோக்கி த்திருப்பும் திறனும் முயற்சியும் தோன்ற வைப்பன.  . இவை தோன்ற வேண்டுமாயின் "ஒருமுகப்படுத்துதல்" என்ற செயல் முறை எளிதாகும்

ஒருமுகப்படுத்துதல்

எந்த செயலிலும் வெற்றியும் களிப்பும்  வேண்டுமாயின் ஒருமுகப்படுத்துதல் ஒரு திறமையான உந்து சக்தி என்று உணர்வீர். ஒரு செயலைச்செய்யும் பொழுதில் நமது மனம் அந்த முயற்சியில் மட்டுமே பங்கேற்க வேண்டும். அங்கே, இங்கே பார்ப்பது, விரல் நகத்தைக்கிள்ளுவது, பிறர் பேச்சை கவனிப்பது போன்ற பிற கவனச்சிதறலை தவிர்க்க, மனம் செயலில் ஒருமுகப்படும். இதைத்தான் "STAYING FOCUSSED" என்ற இலக்குவிலகாத ஆழ் கவனம் என்னும் ஒருமுகப்படுத்துதல்என்றழைப்பர். இதை உருவாக்கிக்கொள்ள மிக முக்கியமான பண்பு "புரிந்து படித்தல்"   .மீண்டும் மீண்டும் "புரிந்து படித்தலின் " மேலான பலன்களை ஒதுக்கி உதாசீனம் செய்துவிட்டு முன்னேற நினைப்பவர்கள் அரைக்கிணறு தாண்டுபவர்கள் என்பதை மனதில் இருத்திக்கொள்வீர். புரிந்து படித்தல் என்பது ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருளையும் முறையாகத்தொடர்புபடுத்தி "உண்மைப்பொருள்" உணர்தலே ஆகும்  இது எதுவும் தன்னார்வமும் சுய முயற்சியும் இல்லாமல் அடைவது எளிதன்று. இவற்றை சிறுவயது முதலே கற்றுக்கொண்டுவிட்டால் கல்வியின் உயர் நிலைகளில் பல மகோன்னத செய்ய திறமைகள் நம்மோடு ஐக்கியப்படும். இவர்கள் தான் பெரும் போற்றுதலுக்கும் அங்கீகாரத்திற்கும் உரியவர்கள்.  நிச்சயம்  முன்னேற்றமும் பர்ராட்டும் இவர்களைத்தேடி வரும் .                                                                                                                                                                                

     பணிவாக இருந்து கற்றல்

பயிலும் நிலையில் இருப்போர் பணிவுடன் கற்றல் அவர்களுக்கு பல வழிமுறைகளை அமைதியாக உணர்த்தும். பணிவின்றி அவ்வப்போது குறுக்கிட்டு கேள்வி கேட்பது, எதிராளியை நீங்கள் நம்பவில்லை என்ற தோற்றத்தை  ஏற்படுத்தும். அந்த நிலையில் நீங்கள் செய்யும் எதுவும் பிறர்க்கு[ஆசிரியருக்கு] நம்பிக்கை தராது . அதனால் நீங்கள் பணிவு காட்ட,  அவர் பரிவு காட்டுவார் . எனவே பணிவு தான் ஒருவரை பிறர்க்கு  உணர்த்தும்  , பணிந்தவரை உயர்த்தும்.  நிலையில் வீண் வாதங்களும் எதிர்வினை ஆற்றுதலும், கல்விக்கு இடையூறாக அமைந்து முன்னேற்றத்தில் தடைகளை தோற்றுவிக்கும். பாட விளக்கங்கள் தரும் ஆசிரியர்கள் மனம்வந்து எளிதும் இனிமையும் இணைந்து உதவிட, கற்றலும் நினைவுகூர்தலும் இயல்பாக வசப்படும் . இளம் வயத்தில் இருக்கும் குறும்பு, குதர்க்கம் இவற்றை குறைத்துக்கொண்டால் கற்றல் எளிதாவதுடன் இனிதாகும் , இவற்றை நினைவில் இருத்தி முன்னேற்றம் காண்பீர் .

அன்பன் ராமன்

2 comments:

  1. பொதுவாக மாணவரகள் ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்துவர். நாலு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் ஆசிரியர்களை கேலி செய்யவேண்டும் என்ற எண்ணமும் வகுப்பில் கவனக்குறைவும் ஏற்படும்.
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. இதில் மாணவிகள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர். மேலும் இப்போதெல்லாம் மாணவ /மாணவியர் மாற்றுப்பாலின ஆசிரியர் மீது வக்கிரப்பார்வை வைப்பது இருபொருள் உரையாடலில் ஈடுபடுவது ஆசிரிய-மாணவ செயல்பாடுகளில் அதிகரித்து வருவது வேதனை தருகிறது

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...