Thursday, October 26, 2023

CINE DIRECTION/ DIRECTOR-13

 CINE DIRECTION/ DIRECTOR-13

திரை இயக்கம்/ இயக்குனர் -13

இட்லி அதிகமாகி தங்கிவிட்டால், அது உருமாறி உப்புமாவாக வடிவெடுப்பது தமிழக ரகசியம் என்பது போல சில பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்களின் ஊழியர்கள் சேர்ந்து கொண்டு புதிய நிறுவனங்களை உருவாக்கிய வரலாறும் உண்டு;அதற்காக அவை உப்புமா கம்பெனிகள் என்று ஒதுக்கிவிட முடியாது. மாறாக, உப்புமாவில் இருந்து இட்லி தயாரிக்கும் வித்தையும் யுக்தியும் அறிந்த, பெரும் ஆளுமைகொண்டவர்கள். எனவே, சில பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளோடு போட்டியிட்டு வெற்றிக்கனி பறிக்கும் திறன் பெற்றிருந்தனர். சில படங்கள் பட்டியலை தருகிறேன் அவற்றின் சில பெயர்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அது  ஏன் ? பொறுங்கள் விளக்குகிறேன்.

1956  குல தெய்வம், ரம்பையின் காதல் , ஆசை , அலிபாபாவும் 40 திருடர்களும் ,அமர தீபம் ரங்கூன் ராதா , தெனாலி ராமன் , மதுரை வீரன் , பெண்ணின் பெருமை , மாதர் குல மாணிக்கம் .  

1957 மாயாபஜார்,அம்பிகாபதி , மஹாதேவி , முதலாளி, யார் பையன் ,புதையல்

1958 உத்தமபுத்திரன், பதிபக்தி, சபாஷ்மீனா, தைபிறந்தால் வழி பிறக்கும், வஞ்சிக்கோட்டை வாலிபன்

1959 வீரபாண்டிய கட்டபொம்மன், கல்யாண பரிசு,சிவகங்கை சீமை ,ராஜாமலயசிம்மன்,    மரகதம், சகோதரி, ப்ரெசிடெண்ட் பஞ்சாட்சரம், பாகப்பிரிவினை தாய் மகளுக்கு கட்டிய தாலி , வண்ணக்கிளி என்று 45 படங்கள்    

1960 மீண்ட சொர்கம், மன்னாதி மன்னன், பார்த்திபன் கனவு, விடிவெள்ளி

1961 குமுதம், கப்பலோட்டிய தமிழன், மணப்பந்தல், பனித்திரை,பாவமன்னிப்பு, தேனிலவு, பாக்கியலட்சுமி,  புனர் ஜென்மம்

பிரத்தியேக கரும் எழுத்துக்களுக்கு உரிய படங்களில் சி வி ஸ்ரீதர் [ பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தான்] வசனகர்த்தாவாக தமிழ்த்துறையில் முத்திரை பதித்தவர். கருமை மற்றும்  சாய்வு எழுத்துக்களில் இருக்கும் படங்களை இயக்கியவர் அவரே. கிட்டத்தட்ட 20 வயதிலிருந்தே சினிமாவில் கால் பதித்தவர். அந்த ஊடகத்தை நன்கறிந்தவர். மெல்ல மெல்ல நீண்ட நெடிய வசனங்களிலிருந்து, தமிழ் சினிமாவை எளிய சிறிய யதார்த்த வசனங்களை க்கொண்டு வெற்றி அடையச்செய்தவர். இவை தவிர கேமரா வழியே கதையை நகர்த்தும் உத்தியை 1960 களில் பிரபலப்படுத்தியவர் அவரே.

மேலும் அநேக நடிகை நடிகையரை அறிமுகம் செய் ததுடன்,வெளிப்புறப்படப்பிடிப்பு என்பதை 1960களிலே யே நிகழ்த்தியவர். 1962 ம் ஆண்டின் 'நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் கல்யாணகுமார், முத்துராமன்,நாகேஷ் ,தேவிகா என்று பெரும் பிரபலம் அடையாத கலைஞர்களைக்கொண்டு 21 நாளில் ஒரே செட்டில் உருவானது . தேனிலவு படத்தின் பெரும் பகுதிகள் காஷ்மீரில் படப்பிடிப்பு. 1961 ம் ஆண்டில். ,முதன் முதலில் ஈஸ்ட்மன் வண்ணப்படம் படம் மற்றும் பிரதி எடுத்தது அனைத்துமே சென்னையில் என்ற பெருமைக்குரியது 1964ம் ஆண்டின் "காதலிக்க நேரமில்லை";அதில் 2 புதுமுகங்கள் , ரவிச்சந்திரன் மற்றும் காஞ்சனா .மீண்டும் 1965 ன் வெண்ணிற ஆடை படத்தில் , அநேகமாக அனைவருமே புதுமுகங்கள் , ஜெயலலிதா , ஸ்ரீகாந்த் ,  நிர்மலா, மூர்த்தி, ஆஷா , சேஷாத்திரி என புதுமுகப்பட்டாளம் . 1966 இல் நெஞ்சிருக்கும் வரை படத்தில் முக்கிய நடிகர்கள் ஒப்பனையின்றி நடித்தனர் 1967 ல் ஊட்டி வரை உறவு ஊட்டியில் படப்பிடிப்பு. 1969 ல் சிவந்தமண் ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு. என்று வெளிப்புறக்காட்சிக்கள் ஸ்ரீதர் படங்களில் ஹைலைட் .1980 களில் தான் தமிழ் சினிமா ஸ்டூடியோவை விட்டு  வெளியே வந்தது என்பதெல்லாம் போலியான கோரல்கள் [false claims]

 ஸ்ரீதரை ஏன் தனிமைப்படுத்தி பேசுகிறேன் என்பது பின்னர் விளங்கும் .

அன்பன் ராமன்

1 comment:

  1. பழைய படங்களை பார்த்தவர்கள்ஶ்ரீதரைத் தான் முன்னிலை ப்படுத்துவர்

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...