Tuesday, October 24, 2023

OPPORTUNITIES – PSYCHOLOGY

 OPPORTUNITIES – PSYCHOLOGY

வாய்ப்புகள்

உளவியல் /மனவியல்

பெரும் அளவில் பல்வேறு துறைகளில் கால் பாதிக்கும் இந்த துறை குறித்து, இந்தியாவில், குறிப்பாக தென் இந்தியாவில் பொதுமக்களின் கவனத்திற்கே வரவில்லையோ என்று யோசிக்க வைக்கிறது. மேலும் இது மனம்சார்ந்த கல்வி என்பதால் இதனை முற்றிலும் ஒரு கலைப்பிரிவு [ARTS BRANCH ]என்று ஒதுக்க முடியாது; சொல்லப்போனால் இதுவும் ஒரு அறிவியல் சார்ந்த பிரிவே [SCIENCE -RELATED] என்று திடமாக நம்பலாம்.. இதில் சிந்தனை அலைகள் தோன்றுவது அவற்றுடைய போக்கை நிர்ணயித்து முறைப்படுத்தும் காரணிகள், உடல், உள்ளம், நினைவாற்றல், வளர் சூழல் என்று பலவித குறுக்கீடுகளை முறையாக பகுத்தாய்ந்து ஒரு நம்பகமான தீர்வை கட்டமைக்கும் ஒரு சவால் நிறைந்த கல்வி எனில் மிகை அன்று.

உடல் நோய் பாதிப்பு உள்ளவர்கள், இயன்ற அளவுக்கு பணிகளை மேற்கொள்ளலாம். ஆனால் மனநோய் ஏற்பட்டால், திடகாத்திர உடல் இருப்பினும் சிந்திக்கும் ஆற்றல் நிலை குலைந்த ஒருவரை நம்பி, எந்த பொறுப்பையும் ஒப்படைக்க முடியுமா? எனவே உரிய காலத்தில் மனநோய் பீடிப்பில் இருந்து மீட்டெடுக்க, உளவியல் கல்வியில் உயர் பயிற்சி/ பட்டம் பெற்றோர் தரும் அறிவுரை ஒரு மாமருந்து. அவர்களும் ஒருவகையில் மருத்துவர்களே.

ஏனைய கல்வி திட்டங்கள் போல் இந்த துறையிலும் பட்டமேற்படிப்பு [POST GRADUATION] மிகுந்த கல்வி வலிமையையும் , வாய்ப்புகளையும் தரும். இந்த உளவியல் கல்வி [PSYCHOLOGY] உள்ளடக்கிக்கொள்ளும் பிரிவுகள் அநேகம், அவை பல வயதினருக்கும், பல பிரத்யேக நிலைகளுக்குமான பயிற்சிதிட்டங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.      

எனது சிற்றறிவுக்கு எட்டிய அளவில் பார்த்தாலே உளவியல்,பிற பல துறைகளுக்கு தனது பங்களிப்பை தரவல்லது என்பது புலனாகிறது .

இந்த துறையின் பிரிவுகளைப்பார்த்தால,நான் விளக்கமுற்படுவது தெளிவாகும். உளவியலில் இரு முக்கிய பிரிவுகள் உள்ளன . அவை பிறழ் நிலை மனவியல் [ABNORMAL PSYCHOLOGY ] மற்றும் செயல்பாட்டு உளவியல் [BEHAVIOURAL PSYCHOLOGY ]  இவற்றில் பின்னது அன்றாட நடைமுறையில் நடைபெறும் பல செயல்பாடுகளின் அடிப்படையில் அமைவது.

பயோ சைக்காலஜி [BIO PSYCHOLOGY ] இது மனித மூளையில் மனிதனுக்கு வேறு வேறு நிலைகளில் தோன்றும் மாற்றம் பற்றிய கல்வி. அந்த அடிப்படையில் தேவையான ஆலோசனை வழங்கும் பணிகளுக்கு உதவும்.

COGNITIVE PSYCHOLOGY

இது ஒரு ஆழ்ந்த நுண் முறை, ஒரு நபரின் அறிவு சார்ந்த .புரிதல், மொழி ஆளுமை, குழப்பங்களுக்கு தீர்வு காணும் திறன் இவற்றைக்கொண்டு மனநோய்க்கான தீர்வுகாணும் ஒரு துல்லியமான அணுகுமுறைக்கல்வி

HEALTH PSYCHOLOGY [=MEDICAL PSYCHOLOGY]

இது ஒரு நுண் கல்வி முறை. மனித மனகுறைபாடுகளுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கு இயல்பான உள்ளார்ந்த தொடர்புகள் குறித்து அறிந்துகொண்டு, ஆலோசனை வழங்கும்திட்டம் பற்றிய கல்வி.க.இது ஒருவரின் மனநிலைக்கும் , உடல் ஆரோக்கியத்திற்கும்  இருக்கும் உள்ளார்ந்த கூட்டியக்கம் பற்றி தெரிந்து கொள்ளவும் , மனோதத்துவ ரீதியில் சிகிச்சை அளிக்கவும் உதவுகிறது.. இதனின்று மாறுபட்ட மற்றுமோர் பிரிவு க்ளினிக்கல் சைக்காலஜி எனப்படுகிறது

CLINICAL PSYCHOLOGY

இது மனம் சார்ந்த குழப்பங்களுக்கும், அவ்வகை மனிதர்களின் செயல்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு தன்னை ப்புரிந்து கொண்டு, அவற்றைக்களை தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுதல் பற்றிய சிறப்புக்கல்வி முறை.

FORENSIC PSYCHOLOGY

சைக்காலஜி துறையின் நுண்ணிய கண்டுப்பபு களின் உதவியால் , குற்றவியல் நிகழ்வுகளில் , சட்ட வல்லுனருக்கு, குற்றவாளியின் தரவுகள் [எவிடென்ஸ் ON MENTAL ATTITUDE ] அடிப்படையில் உரிய உதவிகளை செய்ய உதவும் கல்வி முறை  இவை நீங்கலாக வகுத்த ஒவ்வொரு நிலைக்கும் உதவக்கூடிய மனோதத்துவ கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்த சிறப்பு [SPECIALIZATION ] கல்வி முறைகள் சைக்காலஜியின் உயர் கல்விப்பிரிவுகளாக போதிக்கப்படுகின்றன. இவை சில முக்கிய பல்கலைக்கழகங்களிலும், பெயர் பெற்ற மருத்துவ பல்கலைக்கழங்களிலும் பயிற்றுவிக்கப்படுகின்றன. மருத்துவ பல்கலைக்கழங்களில் பயில்வோர் நேரடியாக செய்முறை பயிற்சிகளை சிகிச்சை பெரும் நோயாளிகளுடன் பேசி பழகி செயல் அனுபவம் [PRACTICAL EXPERIENCE]அடைய முடியும் . இவை தவிர,முதியோர், குழந்தைகள், தொழில் சார்ந்த பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளுக்கு பலவகையான பிரிவுகளில் போதிக்கிறர்கள்.

இந்தக்கல்விகளை பெற்றவர்கள் பல ஹை டெக் மருத்துவமனைகளில், அரசு காவல் துறையில், கோர்ட் போன்ற சட்ட துறைகளில், சிறைச்சாலைகளில் விசிட்டிங் ஆலோசகராக கௌரவமான பதவிகளில் அமர முடியும். சொந்தமாகவும் PSYCHOLOGICAL தேவைகளுக்கு அறிவுரை தருபவர்களாக மரியாதைக்குரிய பணிகளைப்பெறலாம்.

அன்பன் ராமன்

1 comment:

  1. Good that at least Stella Maris is vibrant to be alive to the situation. .

    ReplyDelete

THE STENOGRAPHER

  THE STENOGRAPHER Another category of youth, looking for jobs in government offices –either provincial or national were stenographers. Th...