Tuesday, October 24, 2023

CINE MUSIC-12 STRATEGIES-9


CINE MUSIC-12 STRATEGIES-9

திரை இசை--12     உத்திகள் -9

மீண்டும் சென்ற வரம் போல வே அமைந்த வேறு சில பாடல் அமைப்புகளைக்காணலாம் . பாடல்கள் சில எப்படி லாட்ஜிரடி முழக்கமாகத்துவங்கி பீடு நடை போடுகின்றன -பார்ப்போம்

1 யாரோ ஆடத்தெரிந்தவர் யாரோ [குமரிப்பெண் -1966 ] கண்ணதாசன் -விஸ்வநாதன்-  எல் ஆர் ஈஸ்வரி 

கண ங் கண ங் ஒலியுடன் ட்ரம்மில் துவங்கி பயணிக்கும் நடனப்பாடல். மேற்கத்திய வகை நடனம் , இசைக்கருவிகளை தேர்ந்தேடுத்து ஒலிப்புரட்சியில் இறங்கிய இசை அமைப்பு. அதிலும் கிட்டார் ஒவ்வொரு முறை மீட்டப்படும் விதமும் விரைவும் கூடவே ட்ரம்மில் விழும் அடியின் வேகம்/ நளினம் பாடலின் தனிச்சிறப்பு. ஜெயலலிதாவின் துள்ளல் நடனம் வீட்டு முகப்பில் நிகழ்வது திட்டமிட்ட ஒரு இலக்கு கொண்டிருப்பது தெளிவாகிறது.. போகப்போக நடனத்தில் பிறர் பங்கேற்பதும் கதையில் முக்கிய பகுதி என்று உணர்த்துகிறது. எதுவாயினும் விஸ்வநாதன் ராமமூர்த்தி விலகியபின்,      விசு மீண்டும் ஒருமுறை இசை-அமைப்பில் வித்தகர் என்பதை செம்மையாகப்பறைசாற்றிய படம் குமரிப்பெண் .பாடலின் போக்கை கூர்ந்து கவனியுங்கள் , பாடலின் இணைப்பு இதோ :  https://www.google.com/search?q=yaro+aadatherindhavar+yaro+video+song+&newwindow=1&sca_esv=575974643&sxsrf=AM9HkKn_UpMqPquhaVnEc0v63TVQCErVkQ  யாரோ ஆடத்தெரிந்தவர்

2 ஆடலுடன் பாடலைக்கேட்டு [குடியிருந்த கோயில்]- 1968 ஆலங்குடி சோமு - விஸ்வநாதன் - டி எம் எஸ் , பி.சுசீலா

குடியிருந்த கோயில் படத்தின் ஆகச்சிறந்த பாடல் இது என்று துணிந்து கூறலாம்,ஏனெனில் பாடலின் வேகம் விறுவிறுப்பு தாளக்கட்டுகள் என்று எப்படி பார்த்தாலும் வியப்பைத்தரவல்ல ஆளுமை மிக்க பாடல். இந்தப்பாடலின் நடன வகை பாங்க்ரா [bhangra] எனப்படும் பஞ்சாபி  ரகம் . பஞ்சாபியாவது பட்டாபியாவது என்று பின்னி எடுத்த இசை நுணுக்கங்ககும் திருப்பங்களும் குறைவில்லாமல் துரத்திக்கொண்டிருக்க, சரண வரிகள் முடியும் போது ஹோய் ஹோய் என்ற எம் எஸ் வி முத்திரை பாடலுக்கு வெறியூட்ட , எல் விஜயலக்ஷ்மியும் எம் ஜி ஆரும் [51] துள்ளித்துள்ளி ஆடுவதும், காலுக்கு கால் தொட்டு ஒற்றை காலில் சுழன்றி ஆடுவதும் இன்றுகூட செய்திட இயலுமா என்ற பிரமிப்பை விதைப்பது. அந்த நிலையில் நடனம் போய்க்கொண்டிருக்க, ஜிம் ஜிம் சக் சக் ஜிம் ஜிசசக்கு சக் என்று தபலா நர்த்தனம் புரிய அதற்கே ஜதி சொல்வது போல் , ஆண்  பெண் இருவரும் ஒரேகாலப்பிரமாணத்தில்  கைகளால் தாளமிடுவது எம் எஸ் வி யின் அக்மார்க் இசை முத்திரை. இது பாடலுக்கு ஒரு ரொமான்டிக் touch ஏற்படுத்தும் உத்தி என்றே சொல்ல தோன்றுகிறது.. பாடல் முழுவதிலும் தாளம் வெகுவாக இடம் பெறுவது மிகவும் ரசனையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.பாடலுக்கு இணைப்பு இதோ:

ஆடலுடன் பாடலைக்கேட்டு

https://www.google.com/search?q=kudiyirundha+koil+video+songs+download&newwindow=1&sca_esv=576010190&sxsrf=AM9HkKkpN-KL91NVBDEVVnerlISUQBAgiw%

 

3 அவளுக்கென்ன அழகிய முகம் [சர்வர் சுந்தரம் - 1965] வாலி - விஸ்வநாதன் -ராமமூர்த்தி ,டி எம் எஸ். எல் ஆர் ஈஸ்வரி

இந்தப்பாடல் வெளிவந்த கால கட்டம் தமிழகத்தின் சமூக குடும்ப சூழலில் சினிமா ஒரு 'கேடு" என்பது போல் ஒரு பார்வையும் மதிப்பீடும் இருந்தது. எனவே வீடு கல்விநிலையங்கள் என எங்கும் சினிமா குறித்து பேசுவது பெரும் குற்றம்/அவலம் என்று பார்க்கப்பட்டது. ஆனால் சிறுவர் [12+] சிறுமியர் [12+] எப்படியோ சினிமாக்குறித்து தகவல் சேகரித்தல், ஒளிந்து மறைந்து பேசுவது, பாடல் கேட்பது, பள்ளிக்கூடம் போகும் வழியில் எங்காவது பாடல் கேட்டால் ரயில்வே கேட் மாடுபோல் நின்றுவிடுவது போன்ற நடைமுறைகளால் பாடல்களில் நல்லவை எதையும் விட்டதே இல்லை. இவை அனைத்தும் வெளிவட்டார "ஊழல்கள்". வீட்டினுள் சினிமா பற்றி மூச்சு கூட விடமாட்டார்கள் ஏனெனில் அடி வாங்கி   முகமும் முதுகும் வீங்கி அல்லலுறுவது எளிதா என்ன? திருட்டு மாங்காய் சுவைக்கும் என்பதன் ஒருவகை தான் திருட்டுத்தனமாக பாட்டு கேட்கும் அன்றைய இளையோரின் செயல் திட்டம். இப்படி கேட்டு கேட்டு, பெயர்கள், விஸ்வநாதன், ராமமூர்த்தி, மஹாதேவன், ராமநாதன் ,சௌந்தர்ராஜன், சுசீலா , ஜானகி ஈஸ்வரி , ஜமுனாராணி ஏ எம் ராஜா பி பி சீனிவாஸ் என்று பல பெயரகள் அனைவரும் ஏதோ ஒரு முகஜாடையில் மனதில் குடியிருந்த காலம். ஒவ்வொருவரின் போட்டோ வாக  பத்திரிகைகளில்  வர வர எங்கள் மன பிம்பங்கள்  பலவற்றை . மாற்றிஅமைத்துக்கொண்டோம். ஆனால் இசை அமைப்பாளர்கள் போட்டோக்கள் வந்தது மிகமிக அரிது. அவர்கள் முகம் தெரியாமலேயே அவர்களது ரசிகர்களாய் வாழ்ந்திருந்தோம். அந்த சூழலில் சர்வர் சுந்தரம் படத்தில் எங்கள் கற்பனை நாயர்களை திரையில் பார்த்து பேருவகை பெற்றதை இப்போது நினைத்தாலும் குதூகலம் பீறிடுகிறது..

நாடு நாயகனாக தேனிபோல் இயங்கும் எம் எஸ் வி, மைக் அருகில் டி எம் எஸ், , முன் வரிசையில் வாலி , ட்ரம் கலைஞர் நோயல் க்ராண்ட் , சற்று தள்ளி போங்கோவில் கணேஷ் [ஷங்கர் கணேஷ்] , மாண்டலின் ராஜு , அருகில் Phillip [MAN WITH GOLDEN GUITAR ] அக்கார்டியனில் மங்களமூர்த்தி, BRASS கருவியிர் பின் வரிசையில் என பெரும் இசைக்குழு வினரைப்பார்த்து -ஒருவழியாக திரையிலாவது பார்த்தோமே என்று   மெல்லிய திருப்  தியுடன்   உவகை அடைந்ததை மறக்கவோ மறைக்கவோ இயலாது. பாடல் எவ்வளவு தீவிரமாக துவங்குகிறது மற்றும் இசையமைப்பாளர் எப்படி செயல் படுகிறார் என்பனவற்றையும், பாடலின் வெகு இயல்பாக பயணிப்பதையும் கலைஞர்கள் ஒருங்கிணைந்து செயல் படுவதையும், இசை அம்மைப்பாளர்கள் அசைவினை அனைத்து கலைஞர்களும் பின் பற்றி செல்வது போன்ற செயல்களை காட்சிப்படுத்திய பாடல் களம் . அனைத்தையும் ரசிக்க

Avalukku ena Alagiya Mugam - YouTube

இவை போன்ற கட்டமைப்பில் எம் எஸ் வி வழங்கிய இசை மாலைகள் ஏராளம் .

மேலும் தகவ ல்களுடன் பின்னர் சந்திப்போம் 

அன்பன் ராமன் 

3 comments:

  1. குடியிருந்த கோவில் படத்தில் எம் ஜியார் ராஜஶ்ரீ நடனமும் பாட்டும் இன்றைக்கும் ரசிக்கதக்கது
    பஞ்சாபியா பட்டாபியா என்றீரே
    எம்ஜீயார் நடனம் பஞ்சாபி உடையுடனும் ராஜஶ்ரீ நடனமும் அருமை

    ReplyDelete
  2. அருமையான விவரிப்பு, விசுவின் இசை பற்றி. நன்றி

    ReplyDelete
  3. Sir , you seem to referto "en vizhiyum un vaalum" song. That song cannot fit into the format "songs opening on percussion,' Hope I am clear

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...