Friday, October 27, 2023

FOR US TO UNDERSTAND AND ACT

 FOR US TO UNDERSTAND AND ACT

நாம் தெரிந்து கொள்ள/ செயல்பட  வேண்டியன

அன்பர்களே

சுமார் 5ம் வகுப்பிலிருந்து , சிறுவர் சிறுமியர் நட்பு வட்டங்களை தயவு செய்து கண்காணியுங்கள் ;ஏனெனில் கல்வி மட்டும் அல்ல தனி மனித செயல்கள், பேச்சு , குறிப்பிட்ட செயல்பாடுகள் இவை அனைத்தும் பண்படுவதோ, புண்படுவதோ நட்பு வட்டங்களில் தான். மேலும், இந்தக்காலத்தில் செல்போன் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. இந்த வயதில் நல்லது/அல்லது என்று உணரக்கூடிய நாமே செல்போன் இயங்காவிடில் மனநோயாளிபோல் தடுமாறுகிறோம். எனவே செல்போன் நம் மீது செலுத்தும் ஆதிக்கம் குறித்து அறியாதோர் அல்ல நாம். .எனவே அது ஒரு அபாயகரமான ஆயுதம் என்றுணர்தல் அவசியம். அதிலும் ஆண்ட்ராய்டு வகை கருவிகள் ஒரு சினிமா தியேட்டர் போல எதைவேண்டுமானாலும் திரையிட்டு புத்தியை பேதலிக்க செய்யும். நான் சொன்ன அந்த 5ம் வகுப்பு தான் இன்றைய தலைமுறைக்கு cut off ஸ்டேஜ் என்னும் நிலை

சொல்லித்தெரிவதில்லை ---- என்ற பழமொழியின் விளக்கமாக பார்த்து தெரிந்துகொள் என்று சிறார் மனதில் விஷவிருட்சத்தை வேரூன்றிவிடுகிறது. என்ன 5 ம் வகுப்பிலா ? என் பையன் /பேரன்/ பேத்தி சொக்கத்தங்கம் என்று கண்ணை மூடிக்கொண்டு பூனையாய்  வாழாதீர்கள். என் குழந்தையை அவதூறு பேசாதே என்று கொந்தளிக்கும் பெற்றோர் தான் இன்றைய 30 வயது தம்பதிகள் என நான் நன்கறிவேன். என் மீது கோபம் கொண்டு சாபமிடாதீர்கள். குழந்தைகள் மீது பாசம் வைப்பதைப்போலவே கவனமும் வையுங்கள், ஏனெனில் வெளி உலகம் மிகவும் ஆபத்தானது.   இன்னொன்று நல்லவை கற்பது கடினம், தீயவை எளிதில் பற்றிக்கொள்ளும். அதிலும் பாக்கெட் மணி என்பது என்னவென்றே தெரியாத அன்றைய அமைப்பு எவ்வளவு பாதுகாப்பானது என்பது இப்போது மரியாதைக்குரிய அன்றைய சமுதாய நடைமுறை என்று நான் உணருகிறேன். குழந்தைகளின் நட்பு வட்டத்தில் எப்போதும் ஒரு தலைவன் இருப்பான் -செல்வந்தரின் செல்வன் , செல்வத்தில் திளைப்பவன் கையில் ஐஸ்வரியலக்ஷ்மி கடாக்ஷித்தபடியே இருப்பாள். இன்னொன்றையும் நன்றாக கவனியுங்கள் ஒரு கூட்டத்தில் ஒரு தலைவன் தான் இருப்பான் ஆனால் ஒரு வகுப்பில் 2, 3 தலைவர்கள் அவர்களுக்கு கோஷ்டிகள் என்பதெல்லாம் மிக சாதாரண நிகழ்வுகள் /அமைப்புகள்  எனவே நட்பு வட்டம் நன்றாக அமைய இறையருள் தேவை. .

இது போன்ற குழுத்தலைவர்களின் செல்வமிக்க பின் புலம்   ஊரறிந்தது ; எனவே அவர்கள் [ பையன்கள்] பொதுவெளியில் அடக்க ஒடுக்கமாக காட்டிக்கொள்வர் .பிற நடுத்தர வகுப்பு [செல்வ ரீதியாக] நண்பனை கடைக்கு அனுப்பி  சில போதை தரும் பொடி / மாத்திரை போன்ற  பொருள் வாங்கி வரச்செய்து அதில் திளைத்து , பிறரையும் அதில் மூழ்கடித்து விடுவது சுமார் 15 ஆண்டுகளாக பள்ளி வளாகங்களில் /அருகாமையில் நிகழ்வதை அறிவோம்.  ஆசிரியர்கள் கண்டித்தால் நிச்சயம் தண்டனை உண்டு ஆசிரியருக்கு.

என்னை தகாத சொல் பேசினார், ஜாதி ரீதியாக அவமதித்தார் என்று குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆசிரியருக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து பகுதிகளும் வெகுவாக பாதிக்கப்படுவது அவ்வப்போது நிகழ்வதை கேள்விப்படுகிறோம். Spare the rod and spoil  the child எனும் முது மொழி எவ்வளவு வலிமை மிக்கது என்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.ஆசிரியருக்கு எந்த உரிமையும்  பாதுகாப்பும் இல்லை அவரது கடமை பள்ளிக்கு உயர் % ரிசல்ட் காட்டுவது. அழகாகக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மார்க்கை துரத்தும் கூட்டம் மார்கத்தை தொலைத்தது தான் ஈடேறிய மெகா அவலம். பள்ளி வளாகங்களில் மாணவர்கள் மது வருந்துவதாக அவ்வப்போது வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வருகின்றன. சமூக சேவைக்கு செல்லும் தாய்க்கு இது தெரியாது தொற்றிக்கொண்டு விடாது துரத்தும் வலிமையுள்ளது மது.எவ்வளவு கொடூரங்களுக்கு மத்தியில் சிறுவர்களால்எப்படி தப்பித்து விட முடியும்? வீட்டில்அரவணைப்பு இல்லை.அன்பு செலுத்த ஆளும், நேரமும் இல்லை. நட்பு வட்டமே கதி.    இது ஒரு புறம் இருக்க குழந்தைகளை குறை சொல்லாதீர்கள் மென்மையாக அணுகுங்கள், குருவியைப்போல் சீராட்டி வளருங்கள் என்று மனோதத்துவ ஆலோசனை  இலவசமாகஅவ்வப்போது  டிவியில்.

ஆம், அச்ச உணர்வு இல்லாத ஒரு சமுதாயம் இன்றைய பள்ளிக்குழந்தைகள். ஆனால் "அஞ்சுவது அஞ்சாமை பேதைமை" என்ற முது அறிவுரையை காற்றில் பறக்கவிட்டு , ஒரு 6 வருடங்களுக்குப்பின்னர் உண்மை அறிந்து புலம்புவது  யாருக்கு உதவும்? ஆசிரியன் கண்டிக்க கூடாது, பெற்றோர் கண்டுக்க [கண்டுகொள்ள] மாட்டார்கள், அவனுக்கு மதியம் பசிக்கும், மாலையில் தின்பண்டம் வேண்டும் என்று "பணம்" சிறுவர்கள் கையில். ஏனெனில் இரவு வரை 'நமக்கு' சமூக பணிகள் காத்திருக்கிறதே அதுவன்றோ தலையாயது?   இப்படி இயங்குபவர்கள் பிறர் போல் மார்க் மார்க் என்று க்வாக் க்வாக் என்று கத்திக்கொண்டு அலையும் வாத்துக்கூட்டங்கள். [வாத்து என்பது பல பொருள் உணர்த்தும்]  இவற்றில்  எந்த தவறும் நடக்காமல், இறைவன் கருணையால்  தப்பினாலும்,  உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடின்றி packed தின்பண்டங்கள், pizza , burger என்று கடித்துகுதறி , lipid metabolism என்னும் கொழுப்பு மேலாண்மைத்திறன் பாதிக்கப்பட்டு உடல் வளர்ச்சியில் சீரழிவு, மற்றும் உணர்வுகளைதூண்டக்கூடிய hormone களின் ஆதிக்கம் அதிகமாகி  +2 வகுப்பில் மாமா /மாமி என உலவும் சிறுவர்கள்.

வேட்டி /புடவை அணிவித்தால் நிச்சயம் வரன் / பெண் கேட்டு வந்துவிடுவார்கள் -அவ்வளவு metabolic changes. தாய் ஓமப்பொடி, மகள், காராசேவு போல உடல் பருமன்.        இது பின்னாளில் உடல் ஆரோக்கியத்தை சீர் குலைக்கும்.. ஹார்மோன் விளையாடும் உடலில் ஆர்வமும் இச்சையும் கிளர்த்தெழும். கையில் இருக்கும் செல்போன் வேறு வலைவிரித்து, குழந்தைகள்வினையாற்றி, குழந்தை பெறும் சம்பவங்களளை  செய்திகளில் காண்கிறோம்

உரிய வளர் பருவத்தில் செலுத்தாத நாட்டம், பின்னர் வரும் தாக்கம்/ ஆரோக்கிய குறைபாடுகளை எந்த சமூக அக்கறைக்குழுவாலும் மீட்டுத்தர முடியாது . 

இது அனைத்திலும் மனம் என்ற விளக்கவொண்ணா செயலகம் மற்றும் அதன் இயக்கங்கள் நுட்பமானவை. எனவே, யார் எப்போது என்ன செய்வார் என்று உறுதியாக முடிவு சொல்ல முடியாது. எனவே வருமுன் காத்தல்/ அல்லது தடுத்தல் என்பதே நம்பகமான அணுகுமுறை. 5ம் வகுப்பு முதல் சிறுவர் சிறுமியரை பதட்டமின்றி கண்காணித்து , தேவையான கட்டுப்பாடுகளையும், ஆதரவான சூழ்நிலையையும் வீட்டில் உருவாக்குதலே நல்ல பயன் தர வல்லது. அதற்கு வீட்டில் அதிக நேரம் தங்கி, குழந்தைகளுடன் நெருங்கிப்பழகுதல், வெளிவட்டார தொடர்புகளை குறைத்துக்கொள்ள உதவும் . எனவே பெற்றோரின் முழு கவனமும் குழந்தைகள் மீது செலுத்தப்படும் பொழுது அவர்கள் விலகிச்செல்ல வாய்ப்பு குறைவு. இது போன்ற தீவிர முயற்சிகளை முன்னெடுத்தால் பிற்கால கேடுகளை பெருமளவிற்கு தவிர்த்திட இயலும்..

எனது சிற்றறிவுக்கு எட்டிய விவரங்களை, தெரிவித்துள்ளேன். தவறெனில்  திருத்திக்கொள்கிறேன். ஆகவே, எனது சீற்றம், முற்றிலும் அறச்சீற்றமே அன்றி காழ்ப்புணர்ச்சி சார்ந்தது அல்ல.

நன்றி

அன்பன் ராமன்  

4 comments:

  1. Have we come across with a journal without a sexy picture of an actress?
    In cell phones teen Agers see only obscene pages
    Those days maturity of a boy/girl comes at the age after15. Now st the age of 10 or even before they involve in sexual matters.
    Coeducation is also one of the reasons. I have completed my degree course in men’s school and colleges. Only in post graduation I am exposed to coeducation.
    Spare the rod and spoil the child is another reason. In my school days on the teacher’s table there will be a stick. If anybody commits mistake teacher will ask the students to show their palm and give a mild kick.Modern dresses of male and female is another reason.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. YOUR TOUCHING UPON THE' 'INDULGENCE BY CHILDREN' NEEDS ATTENTION BY ALL PARENTS.

    ReplyDelete

SALEM SUNDARI- 29

  SALEM SUNDARI- 29 சேலம் சுந்தரி -29 உங்கள தெரியாம திருச்சியில் யார் இருப்பாங்க அல்லது உங்களுக்கு தெரியாதவங்க திருச்சியில் இ...