CLIMATE -4
வானிலை -4
உலகளாவிய காற்றுச்சுழற்சி
பூமி வெப்பம் அடைந்தால் காற்று
இடம் பெயர்ந்து துருவங்களை சென்றடைகிறது . அங்கிருந்து குளிர்வடைந்து அடர்ந்தகாற்று
துருவங்களில் இருந்து பூமிப்பரப்புக்கு இணையாக ஊர்ந்து பரவி துருவங்களிலிருந்து
பூமியின் மையப்பகுதியை நோக்கி கிழக்கில் இருந்து
மேற்காக பாயகிறது. இவற்றை போலார் ஈஸ்டர்லைஸ்
[polar easterlies] என்று அழைக்கிறோம் .இவை இரண்டு வகையின அவை southeast மற்றும் north east trade winds [தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு வர்த்தக
காற்று ] எனப்படுகின்றன
. NE TRADE WINDS பூமியின் வடகோளத்திலும்[NORTHERN HEMISPHERE ] , SE TRADE WINDS பூமியின் தென் கோளத்திலும்
[SOUTHERN HEMISPHERE பகுதிகளில்] உலவுகின்றன
பூமியின் தென் பகுதியில் கிழக்கு
மேற்காக நகரும் காற்று மண்டலம் பூமத்திய
பகுதிக்கு செல்லும் இது easterlies எனப்படுகிறது . அதே போல் வடபகுதியில் கிழக்கு மேற்காக நகரும்
காற்று மண்டலம் பூமத்திய பகுதிக்கு விரைகிறது
; இது westerlies எனப்படுகிறது.
இவ்வாறு பூமிசுழற்சி, சூரியவெப்பம் காற்றின் நகர்வுகள்
என எப்போதும் வெப்ப கதிர்கள் புலம்
பெயர்ந்து அன்றாட இரவு-பகல்-வெப்பம் அனைத்தும் மாறிக்கொண்டே இருப்பதால்
energy transfer அரங்கேறுகிறது. வெப்பம் மற்றும் காற்றின்
இயக்கம் சூரிய ஒளியின் ஆற்றலால் நடை
பெறுகின்றன இவ்வியக்கங்கள் தோற்றுவிக்கும் நீராவி, காற்று, மேகம் என்ற தாற்காலிக நிலைகள் பூமியில்
தொடர்ந்து நிகழ்கிறது. இதுகாறும் நாம் அறிந்துகொண்ட காற்று இயக்கம் , பூமியின்
இரு அரைக்கோளங்களிலும்
சம விசையுடன் பயணிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வட /தென்கோளப்பகுதிகளில்
காற்றின் வேகம் அதாவது N 30O /S 30O பகுதிகளில்
வினாடிக்கு ..100 .மீட்டர் அளவிலும், N 30O S 30O பகுதிகளில் வினாடிக்கு 300 மீட்டர்
அளவிலும் கடற்பகுதியிலிருந்து நிலம் நோக்கி விரைவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வேக மாறுபாடு மையப்பகுதி [EQUATOR] யில் குறைவாகவும், துருவங்களை நோக்கி செல்ல செல்ல விரைவாகவும் அமைய பூமிப்பரப்பின்
அந்தப்பகுதிகளில் அமைந்த குளிர் நிலை கொண்டு அமைகிறது. கடலிலிருந்து வெப்பக்காற்று
குளிரநோக்கி விரைய, வெப்பக் காற்று வெப்ப பகுதிக்கு மெதுவாக நகர்கிறது. இதுதான் வெப்பப்பரிமாற்றத்தின்
அடிப்படை.. காற்றின் பயணம் வெப்ப/ குளிர் நிலைகளை பரிமாற்றம்
செய்ய--- கொதிக்கும் பகுதிகள் சற்று வெப்பம் இழந்து குளிரவும், குளிர் பகுதிகள் சற்று
சூடு பெற்று இயற்கையில் ENERGY TRANSFER நிறைவேறுகிறது..
இந்த கூட்டியக்கங்களால் பருவநிலை
[climate] மற்றும் அன்றாட மாற்றங்கள் [weather] அமைதியாக இயங்கிக்கொண்டிருப்பதை புரிந்து கொண்டால் இந்த
அண்ட வெளி வெற்றிடமல்ல , ஒரு மாபெரும் செயல் பட்டறை என்ற புரிதல் வலுப்பெறும்;
இவற்றில் நீர் சுழல் [water cycle], காற்று மற்றும் வெப்ப பரிமாற்றம் என்ற எந்த நிகழ்வில் மாற்றமோ, வீரியமோ நிகழும்போது மிக வலிமையான வானிலை மாற்றங்களை பூமியின் குறிப்பிட்ட அல்லது பெரும்பாலான பகுதிகள் சந்திக்கின்றன.
இந்த விளையாட்டிற்கு எவரின் அனுமதியும் இன்றி இயற்கை சீற்றத்தை வெளிப்படுத்தி தனது பரிமாணத்தையும் ஆற்றலையும் அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்கிறது. முறையான அறிவுள்ள மனிதன் மெல்ல மெல்ல இயற்கையின் மாட்சிமையை உணர்ந்து இயற்கையை சீண்டுவதை குறைத்துக்கொண்டிருக்கிறான் ; ஆனாலும் சிந்திக்கும் திறன் அற்றோர் மணல் திருட்டை நிறுத்தவே இல்லை .அடி விழும்போது , மணல் மட்டுமல்ல திருடனும் முற்றாக அழிக்கப்படுவான். இயற்கை அந்த விளையாட்டை துவங்குமுன் விழித்துக்கொள்ளாவிடில் விளைவுகள் கொடூரமானதாக இருக்கும்.
சரி , அது ஒரு புறம் இருக்கட்டும் . விலகும் காற்று, சுழலும் பூமி இவற்றின் இயக்கம் ஒரு ஆதிக்க விசை யின் கட்டுப்பாட்டில் இருப்பதாக புவியியல் கோட்பாடுகள் நிறுவுகின்றன, அந்த விசை கோரியாலிஸ் விசை [CORIOLIS FORCE ] எனப்படுகிறது. . சுழலும் கோளத்தின் மீது படர்ந்து பரவி துருவங்களை நோக்கி விரையும் காற்று வெப்பத்தாக்கத்தினால் குளிர்பகுதிகளுக்கு விலகுகிறது. விலகும் காற்று சுழலும் பூமியின் விசையில் சிக்கி திசை மாறுகிறது . வட கோளத்தில் கிழக்கு நோக்கியும், தென் கோளத்தில் மேற்கு நோக்கியும் காற்று திசை மாறுகிறது.
இந்த காற்றின் திசை மாற்றம்,[ காற்றின் அழுத்தஏற்றத்தாழ்வுக்கும் [PRESSURE
GRADIENT ] கொரியாலிஸ் விசையின்[CORIOLIS FORCE ] ஆதிக்கத்திற்கும் இடையில் ஏற்படும் சமரசத்தின் [COMPROMISE ] அடிப்படையில் , விரைவாக, நிதானமாகவோ அரங்கேறும்
இந்த காற்றின் திசை மாற்றம் [DEFLECTION],துருவங்களில் மிக அதிகமாகவும் , பூமத்திய [EQUATOR] பகுதிகளில் மிக குறைவாகவும் நிகழ்வதாக புவியியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. இது போன்ற மாறுபாடுகள் இருப்பதுதான் இயக்கங்கள் நிகழ உதவுகின்றன என்பதற்கு மேலுமோர் சான்று.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment