Sunday, October 15, 2023

CLIMATE -5

 CLIMATE -5

வானிலை -5

சென்ற பதிவில் காற்றின் திசை விலகல் பற்றி சொல்லி இருந்தேன்.அவ்விலகல்கள் பூமியின் வடகோளப்பகுதியில் [  LEFT TO RIGHT ]   ஆகவும், தென்கோள பகுதியில் [RIGHT TO LEFT ] ஆகவும் நிகழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

அதே சமயத்தில் , பூமியின் புறப்பரப்புக்கு வெளியே ஆங்காங்கே காற்று கோளங்கள் உருவாகின்றன இவை கிட்டத்தட்ட நீள்  வட்ட [ எலிப்டிக்] வடிவில் பூமிக்கு வெளியே காற்றுசுழற்சியாக அமைகின்றன . இவை ஒவ்வொன்றும் செல் [CELL] எனப்படுகிறது. பூமியின் ஒவ்வொரு பகுதியிலும் இவ்வாறு தோன்றும் செல்கள் தனித்தனி பெயர்களால் அழைக்கப்படுகின்றன. வட மற்றும் தென் துருவப்பகுதிகளையொட்டி சுழலும் காற்று செல்கள் POLAR CELLS எனப்படுகின்றன.

பூமத்திய ரேகையின் இரு மருங்கிலும் வட /தென் பகுதிகளுக்கு வெளியே தோன்றும் செல்கள் ஹாட்லி செல்கள் [HADLEY CELLS ] எனப்படுகின்றன .இதுபோல பூமத்திய பகுதிக்கும் ஹாட்லி செல்களுக்கும் இடையில் வட மற்றும் தென் பகுதிகளில் புறப்பரப்பிற்கு வெளியே தோன்றுபவை FERREL CELLS என்றழைக்கப்படுகின்றன. FERREL என்று அவற்றை விளக்கிய William Ferrel [1856] என்பவரின் பெயரால் அழைக்கிறார்கள் . இவற்றின் காற்றின் சுழற்சியின் திசை ஹாட்லி செல்லின் காற்று சுழற்சிக்கு எதிரிடையானது . [அப்போது தான் பூமியில் வெப்ப பரிமாற்றம் எளிதில் நிகழும்].

இவ்வாறு பூமியின் அனைத்துப்பகுதிகளிலும் காற்று மேலிருந்து கீழ், மற்றும் கீழிருந்து மேல் என சுழன்று வெப்பம் கடத்தப்படுகிறது. இப்படி அலைமோதித்திரியும் காற்றுக்கூட்டம் பூமியின் மையப்பகுதியில் எதிரெ திர்  திசையிலிருந்து ஒன்றையொன்று சந்திக்கும் பகுதி  ITCZ  [INTER TROPICAL CONVERGENCE ZONE ]என்று பெயர் பெறுகிறது .

ஒரு கணம் நினைத்துப்பாருங்கள் ஒன்றுக்கொன்று விலகி இருக்கும், சூரியன், பூமி, காற்று கடல் என அனைத்தையும் பிணைப்பது சூரிய ஒளி தோற்றுவிக்கும் வெப்பமும் அதன் ஆற்றலுமாகிய SOLAR ENERGY தான். அதனால் தான், ஒளியின்றி இயக்கம் இல்லை என்று ஒற்றை வரியில் சொல்லப்படுகிறது. 

சரி , பூமிப்பரப்பில் காற்று எந்த திசையில் தள்ளப்பட வேண்டும் என்ற இயற்கையின் போக்கை தீர்மானிப்பது எது?  காற்றின் அழுத்த ஏற்றத்தாழ்வு மற்றும் கோரியாலிஸ் விசை இரண்டும் ஒன்றைஒன்று மோதி , இரண்டில் எது ஓங்கியதோ அதன் படியும், பூமிசுழலும் கோணத்தை அனுசரித்தும் காற்று இடம் பெயர்ந்து, வெப்பம் இடம் பெயர ஏதுவாகிறது

சுழலும் கிரகம் ஆகிய பூமியின் வானிலை மற்றும் அதன் மாற்றம் , சூரியன் காற்று, நீர் மற்றும் பூமிசுழற்சி என்ற வெவ்வேறு காரணிகளின் கூட்டியக்கத்தின் விளைவாக அமைகின்றது

சரி , இவ்வாறு இயக்கங்கள் பூமிப்பரப்பிலும் , அதை  ஒட்டிய பகுதிகளிலும் நிறைவேறிக்கொண்டிருக்க, , கடல் நீரில் தோன்றும் நிகழ்வுகள் வித்தியாசமானவை இந்த வகை கடல் நீர் சார்ந்த மாற்றங்களை நிகழ்த்த காரணியாக அமைவது SST GRADIENT [SEA SURFACE TEMPERATURE GRADIENT] எனும் கடல் நீர் பரப்பு வெப்ப ஏற்றத்தாழ்வுகள். இந்த ஏற்றத்தாழ்வு மிக அதிகமான வேறுபாடு அடையும் போது ஏற்படும் சீற்றம் /விபரீதம் EL NINO  [எல் நினோ] என்ற பெயரில் விளக்கப்படுகிறது. பொதுவாக  EL NINO  [எல் நினோ], பசிபிக் கடலில் பூமத்திய பகுதிகளில் துவங்குகிறது.இது EL NINO SOUTHERN OSCILLATION என சுருக்கமாக என்சோ [ENSO ] என்று குறிப்பிடப்படுகிறது இந்த நிகழ்வு பசிபிக் கடலின் பரப்பில் ஏற்படும் காற்று மற்றும் அதன் உந்து விசையால் கடல் நீரில் ஏற்படும் OVERTURNING CELL எனும் புரட்டி அடிக்கும் காற்றின் கோர தாண்டவம் என வருணிக்கப்படுகிறது. இதை WALKER CIRCULATION [வாக்கர் சுழற்சி ] என்று விவரிப்பார்.  வெப்ப பகிர்மான ஏற்ற தாழ்வு மிக அதிகமானால் தோன்றுவது EL NINO [எல் நி னோ ].

EL NINO என்றால் BABY BOY என்றும் இதன் எதிர்மறையான LA NINA [லா நி னா ] என்பது BABY GIRL என்றும் செல்லமாக அழைக்கப்படுகின்றன.

இவை இரண்டுமே ஏற்படுத்தும் விளைவுகள் கொடூரமானவை, ஒன்று வறட்சியையும் [EL NINO], இன்னொன்று [LA NINA] மழை மற்றும் பனிப்பொழிவையும் விபரீதமான அளவுக்கு தோற்றுவித்து வானிலை அநேக கண்டங்களில் [CONTINENTS ] சீர்குலைக்கப்படுகிறது. இவை பசிபிக் கடற் பகுதிகளில் மட்டும் அல்லாது , பிற நிலப்பரப்புகளையம் தாக்கும்.

எல் நினோ நீரையும் காற்றையும் வெப்பமாக்கி வெப்பக்காற்று நீர் பதத்தை உறிஞ்சி  எடுத்து மழை பொழிவை சீர்குலைத்து வானிலையை தலை கீழாக மாற்றும். இதற்கு முற்றிலும் மாற்றாக லா நினா தாங்கொணா மழையையும் வெள்ளப்பெருக்கையும் உலகின் பல பகுதிகளிலும் அரங்கேற்றும் .

இவற்றை யாரால் தடுக்க இயலும் ? அதனால் தான் சுற்றச்சூழலை பாதிப்புக்கு உள்ளாதீர்கள் என்று மன்றாடிக்கேட்க வேண்டியிருக்கிறது . ஆனாலும் சுயநலம் மேலோங்கி இயற்கை வளங்களை சுரண்டி, செல்வந்தர் ஆவதில் ஆர்வம் கொண்ட சுயநலமிகள் மானுட குலத்திற்கே வேட்டு வைப்பவர்கள்.  வேறென்ன சொல்ல?

வேறொரு தகவலுடன்,  பின்னர் சந்திப்போம் 

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...