Sunday, October 22, 2023

CLIMATE DISTURBANCE

CLIMATE DISTURBANCE

வானிலை திக்குமுக்காடல் [climate disturbance ]

பரவலாக, வானிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை உணருகிறோம். மழைப்பொழிவு குறைவது/தள்ளிப்போவது அல்லது வெள்ளப்பெருக்கெடுத்து நகரங்கள் சீர்குலைவது போன்ற அனைத்துமே ஏதோ ஒரு விபரீத மாற்றம் காரணமாக நிகழ்வது. சென்ற பதிவில் பசிபிக் பெருங்கடலில் தோன்றும்               எல் நினோ வறட்சியையும், லா  நினா தாங்கொணா மழை அல்லது வாட்டி எடுக்கும் பனிப்பொழிவினை பூமியின் பல பகுதிகளில் தோற்றுவிப்பன என்று விளக்கி இருப்பதை நினைவு கூறுங்கள் . இவை உணர்த்தும் அடிப்படை உண்மை யாதெனில, வெப்பபரிமாற்றம் சீர்குலைந்த நிலை என்பதே ஆகும் இது போன்ற இயற்கை சீற்றங்கள் , பூமி தன்னை மீண்டும் சீரமைத்துக்கொள்கிறது என்பதன் அறிகுறி என்போரும் உள்ளனர். நமது சுயநல வக்கிரங்களால்,பூமி புறப்பரப்பிலும் , உட்பகுதிகளிலும் கூட வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, சுரங்கங்கள், எண்ணை கிணறுகள், நிலக்கரி  வெட்டி எடுத்தல், போன்ற பகுதிகளில் பூமியின் உள்ளே இருக்கும் மண் /நீர் வெகுவாக அகற்றப்பட்டு , ஆங்காங்கே பெரும் இடை வெளிகள் / வெற்றிடம் போன்ற பலவீனங்கள் தோற்றுவிக்கப்பட்டு திடீரெனபூமியின் உட்பகுதி யில் அசைவுகள் நிகழ்ந்தால் மொத்தமாக பூமிப்பகுதி உள்வாங்கி உட்கார்ந்து கொள்ள பூகம்பம் என்ற அதிர்வு ஏற்பட்டு பெரும் சேதாரம்  ஏற்படுகிறது. அதாவது கட்டுக்கடங்காத விசை [force] வெளிப்படும் போது நில நடுக்க பேரழிவு ஏற்படுகிறது. இதே போன்ற அதிர்வு, கடலின் உட்பகுதியில் இருந்து வெளிநோக்கி ப்பீறிட்டு கிளம்பும் போது சுனாமி எனும் ஆழிப்பேரலை கடற் பகுதிகளை புரட்டிப்போடுகிறது.,

இவை தவிர பூமியின் பல பகுதிகளில் ஓயாது கனன்றுகொண்டே இருக்கும் எரிமலைகள் உள்ளன , அவை வெப்பம் புகை போன்ற வெளிப்பாடுகளுடன் எந்த வினாடியும் வெடித்துச்சிதற ஆயத்தமாக உள்ளன, அவை வெடித்தால் பூமியின் உள்ளிருக்கும் கனிம வளம்  "லாவா " [LAVA ] என்ற அடர்ந்த குழம்பெனப்பொங்கி வழிய  சாம்பல், துகள்கள் மற்றும் கதிர்வீச்சு வெளிப்பட்டு உயிர்ச்சேதம் விளை விக்கும் . அருகாமையில் உயிரனங்கள் அழிந்து படும் .இது ஒரு நீண்ட நெடிய போர் என மானுடம் உணராமல் இருப்பது துயர் நிறைந்தது ,

பூமி ஏதோ பிடித்துவைக்கப்பட்ட உருண்டை அல்ல, அதன் உள்ளும் புறமும் ஏராளாமான இயக்கங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அவற்றில் சில தம்மை வெளிப்படுத்துகின்றன, பல,அமைதியாக நடந்தேறுகின்றன. இதனைப்புரிந்துகொள்ள டெக்ட்டானிக்ஸ் [TECTONICS] என்பதுஎன்ன என அறிய வேண்டும்.. பூமியின் நீண்ட நெடிய வரலாற்றில் கண்ட விலகல் [CONTINENTAL DRIFT] நிகழ்ந்துள்ளதற்கான பல சான்றுகள் [DOCUMENTED] ஆவணப்படுத்தப்பட்டுள்ளன . முன்னொரு காலத்தில் இருந்த கண்டங்கள் விலகி இடம்பெயர்ந்து மோதி, சில விலகிச்செல்ல, சில ஒன்றோடுஒன்று ஒட்டிக்கொண்டு ஒரே நில-நீர்ப்பரப்பாக வடிவெடுத்ததாக கூறுகிறது geological theory எனும் புவி அறிவியல் கூற்று..

அதாவது பூமிப்பரப்பில் காணப்படும் நிலம், கடல் மலைகள் என பலவும் பெரும் தகடுகள் போன்றன; எனவே அவற்றுக்கு  plates என்று பெயர் . plate களின் இயக்கம் tectonics [plate tectonics ] எனப்படுகிறது  அதாவது பூமிப்பரப்பில் நிகழும் மாறுதல் டெக்டானிக் இயக்கம் என்று புரிந்து கொள்ளலாம் . இது அவ்வப்போது வெளிப்படுத்திக்கொள்வதும் பல்லாயிரம் ஆண்டுகளாக அமைதியாகவும் அரங்கேறிக்கொண்டே இருப்பதே என அறிவியலார் கருதுகின்றனர்.. இவற்றில் சில பூமியின் ஆழத்தில் இருந்து வெளிப்பட நிலப்பரப்பில் quake என்ற பூகம்பம் ஆகவும் , கடலின் பரப்பில் TSUNAMI என்ற [சுனாமி ] ஆழிப்பேரலையாகவும் கோர தாண்டவம் ஆடும் பேராற்றல் கொண்டது. ஜப்பானியர்கள் இதை துனாமி என்றழைக்கிறார்கள் .அவர்கள் இட்ட பெயர் "TSUNAMI " என்பது.பூமியில் நாம் நிகழ்த்தும்  சுரண்டல்கள் இவற்றிற்கு ஒரு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. கனிம வள கொள்ளையர்களுக்கு இது புரியாது, செத்தாலும் சொத்தே குறி என்றிருப்பவர்களுக்கு எப்படிப்புரியும்? மனித குலம் எக்கேடு அடைந்தால் என்ன என்ற பேராசைஒரு முக்கிய காரணம்  இயற்கையின் எதிர்த்தாக்குதல் என்ற COUNTER ACTION என்ற எதிர் வினை ஆற்றி, பூமி தன்னை மீண்டும் நிலைப்படுத்திக்கொள்கிறது.. அதனால் தான் Think Globally அண்ட் Act Locally என்னும் தாரக மந்திரம் வலுவாக முன்னிறுத்தப்படுகிறது.

PLATE TECTONICS தரும் அழுத்தம் காரணமாக இரு நிலப்பகுதிகள் முட்டி மோதி தோற்றுவிக்கப்படும் நில வீக்கம் "மலை" எனப்படுகிறது . இமய மலை தோற்றுவாய் கூட டெக்டானிக் SHIFT அளித்த கொடை என்று நம்பப்படுகிறது. அப்படி என்றால் அந்த மோதல் எவ்வளவு வலுவும் தீவிரமும் கொண்ட பேரிடியாக இருந்திருக்கும்? இந்த வலுவான மோதல் கூட எரிமலையை வெடித்துச்சிதறச்செய்யும் . அதே போல நிலப்பரப்பின்  நிலம் வாரிவழித்து மலையென குவித்துவைக்கப்பட்டால் , முன்னம் நிலத்தின் தரைப்பகுதியில்  பெரும் வியாபகம் கொண்ட பள்ளம் ஏற்பட்டு கடல்கள் தோன்றி இருக்கக்கூடும் என்றும் அறிவியலார் விளக்குகின்றனர். ஆகவே மலை , மடு [பள்ளம் =கடல் ] எரிமலைச்சீற்றம் /பூகம்பம் அனைத்துமே பூமியின் இயக்கத்தில் ஆர்ப்பரித்து கிளம்பும் சீற்றங்கள். நமது சுயநலம் இவற்றை சீண்டிப்பார்ப்ப து, நம்மை ஈவு இரக்கம் இல்லாமல் குழிதோண்டிப்புதைத்துவிடும். ஆடிய ஆட்டம் என்ன என்று பாடிக்கொண்டே செத்து மடிய வேண்டியதுதான்.

வளரும்

அன்பன்  ராமன்   

2 comments:

  1. ஆடிக்காற்றில அம்மியும் நகரும்
    ஐப்பசியில் அடை மழை
    தை பிறந்தால் வழி பிறக்கும்

    இக்கூற்றுகள்இன்று நடைமுறையில்
    உள்ளதா?
    வெங்கட்ராமன்

    ReplyDelete
  2. All proverbs relating to climate have been rendered irrelevant by unabated abuse of land, water resources and pollution of atmosphere by varied emissions. All the proverbs quoted still work but erratically out of turn or schedule,

    ReplyDelete

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...