Friday, October 6, 2023

FOR US TO UNDERSTAND-2

 FOR US TO UNDERSTAND-2 

தெரிந்து கொள்ள வேண்டியன

எத்தனையோ முன்னேறும் வாய்ப்புகளும், வழிமுறைகளும் இருக்கின்றன. அவற்றைத்தேடிப்பார்த்து புரிந்துகொள்ளாமல் அரசியல் வாதிகளைப்போல் ஒரே எண்ணப்போக்கை வளர்த்துக்கொண்டு ஏதேதோ இடங்களில் பணத்தை வாரி இறைத்து எதற்கென்று தெரியாமலே உழலுகிறோம் . உதாரணத்திற்கு LKG வகுப்பில் குழந்தைக்கு இடம் பிடிக்க சுமார் 1 வருடத்திற்கு முன்பிருந்தே அவரைப்பார், இவரைப்பார் என்று அதிகார எல்லையில் இருக்கும் ஆட்களை பார்த்து பரிந்துரைக்கடிதங்களை வாங்கி , லட்சத்தில் டொனேஷன் என்னும் தானம் கொடுத்து [தனம் இழந்து] மனசாட்சியே இல்லாத கல்வி நிறுவனமாகப்பார்த்து இடம் பிடித்து தொட்டதற்கெல்லாம் சில ஆயிரங்களை கூசாமல் வசூலித்து, ஒரு எழுத்து கூட எழுதாமல் கடக்கும் LKG நிலைக்கு 15 நோட் , 9 புத்தகம், டை , ஷூ , 3 செட் சீருடை என்று 25-40,000 வசூலித்து , ஸ்கூல் வாகனத்திற்கு சில ஆயிரங்கள் மாதா மாதம் என்று கொட்டிக்கொடுத்து விழி பிதுங்கி நிற்போம். அதே நாம் தான் பெரிய மகன் II இயர் கல்லூரி கல்வியில் தேர்வுக்கட்டணம் ஒரு பேப்பருக்கு 15/-ரூபாய் அதிகம் வசூலிக்கப்போகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் பொங்கி எழுந்து ஆசிரியருக்கு கடிதம் [செய்தித்தாள்களில்] , ஆளுநருக்கு மகஜர் , கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் என்று அலைகிறோம். இது என்ன முரண் ? 15,000/- சீருடைக்கு சகல வாய்களையும் மூடிக்கொண்டு முன்னதாகவே செலுத்துவோம் ஆனால் உயர் கல்வியை துச்சமாய் மதிப்போம். 12 ம் வகுப்பு வரை ட்யூஷன் வைத்து 5 இடங்களுக்கு அனுப்புகிறீர்கள் ; அந்தப்பாடங்கள் ட்யூஷன் இல்லாமல் படிக்க முடியாதவன் பி.டெக் படிக்க எந்த தைரியத்தில் வாளா இருக்கிறீர்கள்? +2 தேர்வில் மார்க் வேண்டும் , பி டெக்கில்   fail ஆனாலும் கவலை இல்லை. ஆகா நமது இலக்கு பி.டெக் வகுப்பில் சேர்வது/சேர்ப்பது மட்டுமே , கரை சேர்வதோ /சேர்ப்பதோ அல்ல .என்ன ஒரு தீர்க்கமான பார்வை. 4 ஆண்டுகளாக பால் வியாபாரிபோல் காலை மாலை ட்யூஷன் வாத்தியார் வீட்டில் போய் நின்று கொள்ள அவர் ஓட்ட கறந்து விட்டார் பணத்தை. ஏமாந்தாலும் இறுமாப்பு [ego] மேலிட வாழும் கலை எப்படி வசப்படுகிறது? சிந்திக்க வேண்டிய ஒரு கட்டம்.

அதாவது தகுதியை [திறமையை] அளவிட மார்க் ஒன்றே குறியீடு என்று ஏமாறும்  மாந்தர்,  மார்க் வாங்க உழைக்க வேண்டும் என்றஅடிப்படையைஒதுக்கிவிட்டு , ட்யூஷன், மனப்பாடம் போன்ற செயல்களில் நேரத்தை செலவிட்டு மாபெரும் கையறுநிலை என்ற இயலாமைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.  மனதளவில் சோர்வுற்ற இளம் வயதில் இயற்கை திறமைகளாகிய படித்துப்புரிந்து கொள்ள, நினைவாற்றல் பெருகும் என்ற உண்மையையே அறியாமல் முற்றிலும் தன்னம்பிக்கை தகர்ந்த மாணவர்கள் தமிழகத்தின் இன்றைய நிலைக்கு சான்றாக வலம் வருகின்றனர் எதையும் தான் புரிந்து கொண்ட வகையில் எழுதியோ பேசியோ கருத்துப்பரிமாற்றங்களில் ஈடுபடாமல் உயர்கல்விக்குள் புக நினைப்பதே தவறு. குறைந்த பட்சம் உயர் கல்வியில் சேர்ந்த பிறகாவது இதுபோன்ற செயல் திறன்களை முறையாக பயன் படுத்த அடிப்படை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். . அவ்வகையில் தான் assignment மற்றும் seminar என்ற தனி நபர் மேம்பாட்டுக்கான நடைமுறைகள் இருக்கின்றன .அசைன்மென்ட் [ஒரு குறிப்பிட்ட தலைப்பில் உள்ள சமகாலத்திய தகவல்களை தொகுத்து எழுத வேண்டிய பயிற்சி . அதற்கு புத்தகங்கள் , bulletin என்னும் தகவல் திரட்டு, ஆய்வுக்கட்டுரைகள் போன்ற தகவல்களை தொகுத்து, வகைப்படுத்தி எழுதும் ஒரு பயிற்சி. இந்த முறையில் பயிற்சி மேற்கொண்டால் தகவல் தொகுத்து எழுதும் நுணுக்கங்கள் கற்றுக்கொள்ள முடியும். மாறாக அநேகர் ஒரே பதிப்பில் இருந்து அப்பட்டமாக பார்த்து எழுதி மதிப்பீட்டிற்கு சமர்ப்பிக்கிறார்கள். ஆசிரியரும் இதன் முறையான செய்முறை என்ன என்று விளக்குவதில்லை. செமினார் என்பது தத்தம் வகுப்பில் உள்ள சகா மாணவர் /ஆசிரியர்[கள்] முன்னிலையில் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கருத்துகளை விவாதிப்பது. தேர்ந்து கொடுக்கப்பட்ட தலைப்பிற்குரிய தகவல் களைத்   திரட்டி   சரிபார்த்து குறித்த நாளில் விளக்கி விவாதிக்க வேண்டும் . இதன்மூலம் ஒரு நுண் கருத்தை அலசி ஆய்ந்து ஒரு தகவலை கையாளவேண்டும் . அமர்ந்திருப்போர் ஒரே வகையினர் எனவே டெக்னிகல் ஆடியன்ஸ். அவர்களில் எவர் வேண்டுமானாலும்  கேள்வி எழுப்பி விடை கோரலாம் . இதனால் பயிலும் பருவத்திலேயே படைப்பகுதிகளை பலர் பேசி, விளக்கி, விளக்கம் தர ஒரு பயிற்சிக்களம் செமினார். இதிலும் எனோ தானோ முறையே மலிந்து விட்டது. எதையோ ஒன்றை மட்டும் பார்த்து எழுதி வந்து அதன் பொருள் உணராமல் செய்தித்தாள் படிப்பது போல் வைத்த கண் வாங்காமல் ,கூட்டத்தினரை பார்த்து பேசாமல் மென்று விழுங்கி முடித்துவிட்டேன் என்று ஓடுவது இன்றைய தமிழகத்தில் நிகழ் கோலம். பேப்பர் இல்லை எனில் FUSE பிடுங்கிய நிலை , மயான அமைதி. கேட்டால் M,Sc படிக்கிறேன் என்ற பெருமிதம் வேறு. நின்று நிமிர்ந்து பேச தெரியாத ஊமைகள் வெட்கமின்றி ஆசிரியப்பணிக்கு ஆர்வம் கொள்வது கொடுமை. இதை நிவர்த்திக்க வேண்டிய ஆசிரியர் கடிகாரத்தை பார்த்து நேரம் வந்ததும் ஓடி விடுகிறார். பேப்பரை பார்த்து படிக்கக்கூடாது என்று நிர்வகிக்க அவருக்கு முதுகெலும்பு இல்லை. அவரே தினமும் பார்த்துப்பார்த்து படித்து "READER " என்று புகழ் பெறுகிறார். எஞ்சிய நேரத்தில் DICTATOR . டிக்டேஷன் மூலம் நோட்ஸ் எழுதவைப்பார். இவரிடம்  பயின்றவர்   அவர் இதை விட குறுக்கு வழி தேடித்திரிவார்.

சில ஆசிரியர்கள் இந்த குறைகளை நிவர்த்திசெய்ய எந்த அறிவுரையும் வழங்காமல் 5/5 அல்லது 4.5/5 என்று அகமதிப்பீடு செய்கின்றனர். இதனால்மாணவர்க்கு  விளையும் ஊரு வாழ்நாளெங் கும் துரத்த , மீள்வதறியாது திகைக்கின்றனர் . இவர்களில் சிலர் கல்லூரி ஆசிரியப்பணிக்கு வேறு வந்து பேசக்கூட வழிமுறைகள் தெரியாமல் அசடு வழிவது இப்போது தமிழகத்தில் அன்றாடம் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது . இவ்வகை ஆசிரியர்கள் மாணவர்களை தன்பால் ஈர்த்துக்கொள்ள கைக்கொள்ளும் ஊழல் தான் பாரிவள்ளலென மதிப்பெண்களை வாரி வழங்கி இவர்கள்தங்களது  செயலில் உள்ள குறைபாடுகளை மூடி மறைக்கின்றபித்தலாட்டம் . ஆனாலும் மாணவர்கள் இவர்கள் பற்றிய கள  யதார்த்தங்களை கூசாமல் பரப்பி வருகின்றனர் .

ரிய வழி முறைகள் தெரியாதவர்கள் ஊழல் செய்வதைத்தவிர வேறு திறன் அற்றவர்கள். அவர்களின்  பெயர்களுக்குப்பின்னால் உள்ள பட்டங்கள் பேசாது , அவரவர் தான் பேச வேண்டும் இந்த உண்மை கசக்கும்.   திறமையின் நேர்கொண்ட பார்வைக்கு முன் ஊழல் தலைகுனிந்து தான் ஆக வேண்டும். நல் முறைகளை     பயின்று கம்பீர வாழ்வுக்கு வகை செய்தல் நலம்

 நன்றி ராமன்

2 comments:

  1. நம்ம கல்லூரியில நாம இருக்கும்போது நடந்தது. 70-80 ல் கெமிஸ்ட்ரி படிக்க ஒரு கூட்டம்..
    80-90 ல் காமர்ஸ் படிக்க ஒரு
    கூட்டம். 2000த்துக்குப்பின் கம்ப்யூட்டர் படிக்க ஒரு கூட்டம்.
    ஓரு கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு MSc Computer Science course நடத்தும் கல்லூரிகள் எத்தனையோ.
    காமர்ஸ் படித்தால் வங்கிகளில் வேலை கிடைக்கும் என்று ஏமாந்தவர்கள் பலர். MSc chemistry படித்துவிட்டு வங்கிகளில் வேலை செய்பவர்கள் ஏராளம் ..
    10thstd படித்துவிட்டு ITI ல் Carpentry படித்துவிட்டு Dubai சென்று பணம் சம்பாதிக்கிறவர்கள் பலர் .
    எதைப்படித்தாலும் கசடறக்கற்றால் அதற்கு மதிப்புதான்.
    வெங கட்ராமன்

    ReplyDelete
  2. பேராசிரியர் வெங்கட் அவர்களே
    இன்றைய தங்களின் பங்களிப்பு மிக அற்புதமான பதிவு . என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்கள் . போடா வாத்தி உனக்கென்னடா தெரியும் என்று கொக்கரிப்பார்கள் . மார்க் மார்க் என்று அலைந்து BENCH MARK என்றால் என்ன எனும்கோமாளிகள் கூட்டம். சொல்ல வேண்டியது கடமை சொல்லிவிட்டோம் . நன்றி

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...