Friday, October 20, 2023

FOR US TO UNDERSTAND AND APPLY

 FOR US TO UNDERSTAND AND APPLY 

நாம் தெரிந்துகொண்டு கடைப்பிடிக்க வேண்டியன

பொதுவாக குழந்தைக்கு கல்வி கட்டணம், சீருடை, போக்குவரத்து ஏற்பாடு செய்துவிட்டு நுணுக்கமான சில விவரங்களை கவனிக்க தவறுகிறோம். குறிப்பாக ட்யூஷன் ஏற்பாடு செய்ய 3, 4 ம் வகுப்பில் இருந்தே முனைகிறோம். அதற்கான நமது மனநிலை, பெரும்பாலும் பெற்றோரின் சொந்த சவுகரியங்களைக்கருதியே அன்றி கல்வியில் கொண்ட நாட்டம் என்பது சிற்றிதளவே. தகப்பனார் அலுவலக நேரம் போக, வெளிவட்டாரத்தொடர்புகளுக்கு நேரம் செலவிடுவார். தாய்மார்கள் அதிலும் குறிப்பாக அலுவகங்களில் பதவியில் இருப்போர், லேடீஸ் க்ளப் என்ற அமைப்பில் சேர்ந்து கொண்டு, சமுதாயப்பணி செய்வதில் ஆர்வம் கொள்வர்.

சரி சமுதாயப்பணி என்பது நெடுந்தொடர்போல நீள்கிறதே ! அதன் நீளத்தை கணக்கில் கொண்டால், நமது சமுதாயம் பெருமளவுக்கு முன்னேறி இருக்குமே.! அப்படி முன்னேற்றம் கண்டுவிட்டதா என்ன? எனக்கு தெரியவில்லை. ஒருவேளை எனது புரிதல் தான் சரியில்லையா -எனக்கு தீர்மானிக்க இயலவில்லை. இதில் நான் முன் வைக்கும் சில பார்வைகள்: லேடீஸ் க்ளப் பெரும்பாலும் அலுவலகம் சார்ந்த அமைப்போ எனில் 90% இல்லை. அவை நகரத்தின் ஏதோ ஒரு பகுதியில் இயங்குவது.

அதில் உறுப்பினர் ஆனால் பெரிய இடத்து மனுஷிகள் ஹலோ என்று கண்டுகொள்வார்கள் .அது போதுமே எல்லையில்லா புளகாங்கிதம் கொள்ள, வாயெல்லாம் பல்லாக மறுநாள் மாலை உள்ளூர் செய்திப்பதிப்பில் போட்டோ வுடன் செய்தி-- நகரின் தென் பகுதியில் அதிகரிக்கும் குரங்குத்தொல்லையை கட்டுப்படுத்த தீர்மானம் நிறைவேற்றிய அன்னை தெரேசா பெண்கள் சங்கத்தினர் என்று செய்தி வரும். அது போதாதா அமெரிக்காவில் வசிக்கும் நாத்தனாருக்கு "பாரடி என் பெருமையை" என்று வாட்ஸஅப் வழியே கொக்கரிக்க. இது போன்ற வெளிவட்டார செல்வாக்கு தேடும் நாம், குழந்தையை / கல்வியை, ஒழுக்கத்தை, நற்பண்புகளை கருதுவதே இல்லை. . பள்ளிக்கென குழந்தை செலவிடும் நேரம் 8 மணி நேரம், 3.15 -5.30 வெராந்தாவில் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு பெற்றோர் [தாயோ, தந்தையோ] 5.40 க்கு வரவேண்டும். வருகிறார்களா ?

அதுதான் பக்கத்து வீட்டு கிழவியிடம் "மாலை தக்காளி ஜூஸ்/ஆரஞ்சு ஜூஸ்"   கொடுக்கச்சொல்லி. ஏற்பாடு செய்தாகி விட்டதே! பாவம் கிழவி, பொறுப்பாக செய்வாள்.. ஜூஸ் குடித்தபின் புத்துணர்ச்சி பெற்று மாடிப்படியில் இங்கும் அங்கும் ஓடி எங்காவது இடித்துக்கொண்டு கீழே வெராந்தாவில் அமர்ந்து கொண்டு 'நம்மவர்' வருகிறர்களா என்று ஏங்கித்தவிக்க, பாசம் எப்படி வரும்?.

நீங்கள் குழந்தையுடன் செலவிடும் நேரம், சுமார் 2-3 மணி நேரம் நாள் ஒன்றுக்கு. அந்த குழந்தைக்கு உங்களை விட, வெளிவட்டாரதொடர்புகள் அதிகம். எனவே, உங்கள் நடை முறைகள் பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பே இல்லை.

இது வாழ்வின் முக்கியமான கட்டம் . குழந்தைகள் நமது இயல்பான தொடர்பிலிருந்து விலகத்துவங்குவர். ஏனெனில் நாம் அவர்களை ஞாயிற்றுக்கிழமை விருந்தினர் போல சந்திக்கிறோம். அதனால் இயல்பாக அமையவேண்டிய பந்தம் மெல்ல சிதைகிறது. சிலர் வீட்டில் குழந்தைகள் வேலைக்காரர்கள் கண்காணிப்பில் வளருகிறார்கள்;

அதனால் வேலையாள் மீது இருக்கும் அன்பு  நம்மிடம்  தோன்றாது. பி ன்னாளில் இது ஒரு மனோவியாதியாக விஸ்வரூபம் எடுத்து, யார் கட்டுப்பாட்டுக்கும் ஒத்துவராத நிலை தோன்றும் அபாயம் உண்டு.அன்பு என்னும் விலங்கு, கண்ணில் தெரியாத பெரும் தளை. அதை தகர்ப்பது எளிதன்று மாறாக ஒருவரை எல்லை மீறாமல் இயங்க, மந்திரக்கோல் போல வழி நடத்தும்.

ஆகவே, எந்த குழந்தையையும், அன்பு கொண்டு நடத்தினால் நமது ஆளுமைக்கு கட்டுப்பட்டு இயங்கும் பண்பு வேரூன்றும். அன்பு கொண்டு நடத்துதல் உணவளிப்பது மட்டுமே அன்று. அது அதிக நேரம் செலவிட்டு, குழந்தையின் ஐயப்பாடுகளைப்போக்கி ஆசான் நிலையில் இயங்கினால் மட்டுமே குழந்தைகள் நம்மை பெரும் ஆதாரமாகக்கருதும்.

 அதற்கான புரிதல் ஏற்படுவது, நீண்ட நேர அன்றாடத்தொடர்பு கொண்டே அமையும். அதை செய்தால், ட்யூஷன் அமைத்து நேரடிகண்காணிப்பிப்பின்றி குழந்தையை பிறர் பொறுப்பில் விட வேண்டிய சூழல் தவிர்க்கப்பட பெரும் வாய்ப்பாக அமையும். மேலும் உங்களுக்கும் குழந்தையின் கற்கும் திறன்,அதில் உள்ள பற்றாக்குறைகள் தெளிவாகும். இதனால், குழந்தையை நல்ல செயல் முறைகளில் ஈடுபடுத்த முடியும். சிந்தியுங்கள்

 நன்றி

அன்பன் ராமன்  

1 comment:

  1. அருமையான பதிவு. நமது தொடர்பு , நமது குழந்தைகளோடு மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் குழந்தைகள் ஒருவித குழப்பத்தில் ஆழ்த்தப்படுகின்றன. நல்ல குழந்தை ஒரு நல்ல சமுதாயம் உருவாகுவதற்கான நல்ல வித்து. அதை நல்ல விதத்தில் விதைப்பது ஒவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை ஆகும். இத்தகைய பயனுள்ள பதிவுகளை தருகின்ற பேரா. ராமன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete

Of KINGS AND CABBAGES

  Of KINGS AND CABBAGES கோஸ் / முட்டை கோஸ் In response to the previous blog post of mine on “Curry leaf” my revered friend Dr. KANNA...