Friday, October 13, 2023

FOR US TO UNDERSTAND -

 FOR US TO UNDERSTAND -

நாம் தெரிந்து கொள்ள வேண்டியன

குழந்தைகளின் வளர் சூழல்  

ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரின் நேரடி பராமரிப்பில் தான் வளருகிறது. எனினும் பல்வேறு நடைமுறை செயல் பாடுகளில் ஒரு 'பிடிவாத 'குணம் குழந்தைகளிடம் மெல்ல வேரூன்றுவதைப்பார்க்கலாம். குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் வீட்டில் உள்ள பிறரிடம் இருந்தே பார்த்து கற்றுக்கொள்கின்றன . எனவே முதன் முதலில் குழந்தையின் செயல் பாடுகள் நம்மையும் அறியாமல் வீட்டில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

எனவே 2 வயது கடந்து விட்ட குழந்தையை தூக்கி எடுத்து கொஞ்சுவதோ , சீராட்டி வளர்ப்பதோ தவிர்க்கப்பட வேண்டும் . இந்த நிலையில் தான் அது வேண்டும் இது வேண்டும் என்று கோரிக்கைகளை அடுக்கிக்கொண்டே முயற்சி செய்யும் . பாசம் என்ற உணர்வினால் -குழந்தை தானே என்ற அன்பு மேலீட்டால், கோரிக்கைகளை நிறைவேற்றி விடுகிறோம்.  இப்போது, குழந்தை உங்களை தீவிரமாக கண்காணிக்கிறது. கோரிக்கை நிறைவேற  தாயா? தந்தையா?அத்தையா? , சித்தியா, பாட்டியா, தாத்தாவா என்று மிக நுணுக்கமாகபுரிந்து கொண்டு வேலையைக்காட்டும். யார் மிகுந்த பரிவுடன் செவி சாய்ப்பார்களோ அவர்கள் இருக்கும் நேரம் பார்த்து தனது வேண்டுகோளை வெளிப்படுத்தும். இதுதான் பிடிவாதத்தை மேற்கொள்ளும் முயற்சிக்கு துவக்கம்.

சிறிய குடும்பங்களில் தாய் அல்லது தந்தையை கவர்ந்து வைத்துக்கொண்டு, யார் உதவமாட்டார்களோ அவரிடம் வேண்டுமென்றே கோரிக்கை வைத்து, கிடைக்கவில்லை என்று "" என்று அழுது மற்றவரிடம் முறையிடும் . 90% வெற்றி பெரும் . ஒருவர் மறுப்பு தெரிவிக்கும் போது , மற்றவர் புகுந்து குழந்தைக்கு பரிந்து பேசுவது , குழந்தையின் பிடிவாத குணத்திற்கு   உரமிட்டது போல் வேலை செய்யும். இதைப்புரிந்து கொள்ளாமல் அன்பு பாராட்டுவதில் தொடங்கி, வெகு விரைவில் பிடிவாதப்போக்கு, பொருள்களை தூக்கி எறிதல், கிணற்றில் வீசுதல் , மாடியில் இருந்து கீழே எரிந்து  பெரியவர்களை ஓடவைத்தல் என்று பல உத்திகளை கையாளும். இந்த மன நிலை தோன்ற, பெற்றோரே முக்கிய காரணம். இருவரும் ஒரே நிலைப்பாடு கொண்டால், குழந்தை வீண் பிடிவாதம் கொள்ளாது. பெற்றோர் இடையே தோன்றும், கருத்து வேறுபாடுகளை மேலும் தூண்டி தனது தேவையை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கும். ஒருவர் குழந்தையை கண்டிக்கும் போது மற்றவர் குறுக்கிடாமல் விலகி இருந்தால், கால/ கள    யதார்த்தங்களை குழந்தை புரிந்து கொள்ளும் .

ஆங்கிலத்தில் "WEAK MOMENT"   என்று கருத்து சொல்லப்படும். அதைப்பிடித்துக்கொள்வதில் குழந்தைகள் அதீத சாமர்த்திய சாலிகள் .எனவே அன்பு பாராட்டும் நிலையும், கண்டிப்பும் சம நிலையில் கையாளப்பட்டால், குழந்தைகள் பிடிவாத நடைமுறைகளை மேற்கொள்வது வெகுவாகக்குறையும்.

குழதைகள் கேட்பதை தரவே கூடாதா? அப்படி இல்லை. எதையும் உடனே நிறைவேற்றாதீர்கள் . மாலையில் செய்கிறேன் என்று சொல்லி அதை மாலை நேரம்  செய்து கொடுங்கள். இதன் மூலம் எதுவும் நினைத்தவுடன் நடக்காது, காத்திருத்தல் அவசியம் என குழந்தை உணரும் . மேலும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் ஏதாவது ஒரு சிறிய வேலையை செய்தால் தருவதாக சொல்லி, பொறுப்புகளை உணர்த்துங்கள். அதாவது புதைத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வை, ஷூ வை உரிய இடத்தில் வை, அல்லது வீட்டுப்பாடங்களை எழுதிக்காண்பி  போன்ற நிபந்தனைகளை நிறைவேற்றினால், கேட்ட பொருளை பரிசாக அளியுங்கள்.அப்போது குழந்தை குதூகலிக்கும் [நீங்களும் தான் ].

இதனால் விளைவு என்ன எனில், ஒவ்வொரு கோரிக்கைக்கும், கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அமைதியாக உணர்த்துகிறோம். 2, கேட்டதும் கிடைக்காது, பொறுமையும் கடமையும் நிறைவேறினால் தான் எதையும் கோரிப்பெற முடியும் என்ற புரிதல்விதைக்கப்படும். கேட்டது கேட்டதும் கிடைத்தால் குழந்தைகள் பிடிவாத குணத்தை வளர்த்துக்கொள்வதுடன், கடமை என்னும் பொறுப்பு தங்களுக்கும் உண்டு என்று உணர்வதே இல்லை. மாறாக ஒன்று கிடைக்கவில்லை எனிலோ, யாரோ கண்டிப்பு காட்டினாலோ தாங்கள் வாழத்தகுதி அற்றவர்கள் என்பது போல உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.

பரிட்சையில் தோல்விக்கு தற்கொலை தான் வழி என்றால் , பல பெற்றோர்கள், எப்போதோ விண்ணுலகம் கொண்டிருப்பர். கண்டிப்பு காட்டி வளர்ந்த அந்நாளைய சிறார் வாழ்வில் எந்த தோல்வியிலும் துவண்டந்ததில்லை. வாழ்க்கை வாழ்வதற்கே மட்டும் அல்ல போராடி வாழ்வதற்கே என்று வெகு அழகாக புரிந்து கொண்டு கௌரவமாக வாழ்வதை சொல்லி, தண்டனைகள் தேவை மற்றும் நியாயத்தை உணர்த்தினால் மனம் உறுதி பெரும்,  போராடும் திராணி வலுப்படும். தோல்வி தோல்வியுறும்.

இதனை நன்கு உணர்ந்து, குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள்.

நன்றி

அன்பன்  ராமன்   

2 comments:

  1. மிகவும் அருமையான பதிவு. இந்த பதிவை வீட்டில் உள்ள அனைவரும் முதலில் படித்து, புரிந்து கொண்டு அதைப் பற்றி சிந்தித்து முழு புரிதலுடன் நடைமுறை படுத்தும் பொழுது ஒவ்வொரு குழந்தையும் நல்ல ஒரு வித்தாக, முழு பலனைக் கொடுக்க கூடியவைகளாக வளரும்.

    ReplyDelete

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...