CINE DIRECTION, DIRECTOR- 11
திரை இயக்கம்
/ இயக்குனர்
- 11
நாம் முன்னரே
குறிப்பிட்டதைப்போலவே இயக்குனர்கள் முகவரியும்,
முக்கியத்துவமும்
பெறத்துவங்கியதென்னவோ
சமூக
கதைக்களங்கள்
திரையில்
வலம்
வரத்துவங்கிய
பின்னரே;
ஏனெனில்
கதையின்
போக்கில்
திருப்பங்களை
ஏற்படுத்தி
ஒருவித
எதிர்பார்ப்பும்,
சற்று
குழப்பமும்
எழும்
படி
இயக்கினால்
படம்
வெற்றிபெறும்
என்ற
உண்மை
வலுப்பெற்றது.
இதனால்
தான்
எதிர்பாராதது,
யார்பையன்,
மிஸ்ஸியம்மா பெரும் வரவேற்பு
பெற்றன
;ஆனால்
அவற்றில்
இயக்குனர்களை
விட
கதாசிரியர்கள்
பெரிதும்
உணரப்பட்டனர். அந்தநாள், சந்திரலேகா
போன்ற
படங்கள்
இயக்குனர்களைநோக்கி
மக்களை
திரும்பிப்பார்க்க
வைத்தன
என்பதுடன்
ஒளிப்பதிவாளர்களையும்
மேம்படுத்தின.
அப்போதிலிருந்து
தான்
இயக்குனர்-ஒளிப்பதிவாளர்
கூட்டணி
ஒரு
செயல்
திட்டமாக
வடிவெடுத்தது
இதோடு
இரட்டை
வேட
நடிகை
நடிகையர்
கதைகளில்
ஒளிப்பதிவாளர்
ஒரு
ப்ரம்மனாக
பார்க்கப்பட்டார்.
இந்தப்ரம்மன்கள்
மஹாவிஷ்ணு
[இயக்குனர்]
வுடன்
சேர்ந்து
பயணி
க்க
ஆஸ்தானங்கள்
உருவாயின அது என்ன
ஆஸ்தானம்?
திரைப்பட தயாரிப்பு
நிறுவனங்கள்,
பெயர்
மற்றும்
logo [அடையாள
முத்திரை]
கொண்டு
இயங்கின.
அவை
அனேகமாக
சொந்த
ஸ்டுடியோ,
படப்பிடிப்புக்கருவிகள்
உபகரணங்கள்
எல்லாம்
தன்னிறைவுடன்
இயங்கியவை.
அவற்றின்
தயாரிப்பாளர்
எப்படி
நிலையான
அதிகாரம்
படைத்தவரோ,
அதே
போல
ஒரு
நிலைத்த
இடம்
கொண்டிருந்தனர்
- இயக்குனர்
, ஒளிப்பதிவாளர்
, உதிரிக்கலைஞர்கள்
--ஏன்
இசையமைப்பாளர்கள்
கூட
ஒரு
கம்பெனியின்
ஆஸ்தானங்களே.
அவர்கள்,
பெரும்பாலும்
வேறு
நிறுவனங்களில்
பணிபுரிய
சிறப்பு
அனுமதி
பெற
வேண்டும்.
ஏனெனில்
கிட்டத்தட்ட
அவர்கள்
தாய்
கம்பெனியின்
ஊழியர்கள்
-மாத
ஊதியதாரர்கள்.
சில
உதாரணங்கள்
ஜெமினி
எஸ் எஸ்
வாசன்
, கொத்தமங்கலம்
சுப்பு
, வேப்பத்தூர்
கிட்டு
, கதை
=கதை
இலாகா
பலர்
உறுப்பினர்கள்.
ஒளிப்பதிவு = கமல்கோஷ்,
எல்லப்பா
இசை எஸ்
வி
வெங்கட்ராமன்
[OR] ராமச்சந்திரா
ஏ வி எம்
மெய்யப்பன் , கிருஷ்ணன்
பஞ்சு
, ஏ
சி
திரிலோகச்சந்தர்,
எஸ்
பி
முத்துராமன்
இசை ஆர்
சுதர்சனம்
ஒளிப்பதிவு =மாருதி
ராவ்
, பாபு
விஜடா வாஹினி
நாகி ரெட்டி,
ஒளிப்பதிவு =மார்கஸ்
பார்ட்லே
இசை ராஜேஸ்வர
ராவ்
, சலபதி
ராவ்
, ஆதி
நாராயண
ராவ்
இவை சென்னையின்
படப்பிடிப்பு
மையங்கள்.
அனைவரும்,
ஆஸ்தான
க்கலைஞர்கள்.
இவை
நீங்கலாக,
பல
சிறு
குறு
நிறுவனங்கள்,
நிரந்தர
கட்டமைப்பு/
ஊழியர் இல்லாதவை. திடீரென்று
தோன்றி
மறையும்
நிறுவனங்கள் சினிமா துறையினரால்
செல்லமாக "உப்புமா கம்பெனிகள்" எனப்படுகின்றன. சினிமாவில் சேர்ந்து விட துடிக்கும்
இளம் வயதினரிடம், பணம் கறந்து பிழைக்கும் கம்பெனிகளில் ஏமாந்து வாழ்விழந்தோர் ஏராளம்.
பிற்காலத்தில் சில நல்ல கம்பெனிகள் தோன்றி தரமான படங்களைத்தந்த
நிகழ்வுகளும் உண்டு. அவை தான் தமிழ்ப்படங்கள் புதிய பாதையில் பயணிக்க குறைந்த பட்ஜெட்
படங்களை வெளியிட்டு பெயர் பெற்றன .வீனஸ், புத்தா பிக்ச்சர்ஸ், சரவணா பிலிம்ஸ, தேவர்
பிலிம்ஸ், தண்டாயுதபாணி பிலிம்ஸ் இவை 1960களில் நல்ல படங்களை வெளியிட்டு மெல்ல மெல்ல
ஆஸ்தான ஆதிக்கம் மறைந்து புதிய திறமை அங்கீகாரம் பெற்று எந்த இயக்குனரும் எந்த நிறுவனத்திலும்
இடம் பெற வழி ஏற்பட்டது.
இவற்றை ஒட்டிய
நிகழ்வுகளாக
திடீரென்று
வசனகர்த்தாக்கள்,
இயக்குனராக
முன்னேற்றம்
கண்ட
நிகழ்வும்
அரங்கேறியது.
அவர்களில்
குறிப்பிடத்தக்கவர்கள்
ஸ்ரீதர்
[CVS ] மற்றும்
கே
எஸ்
கோபாலகிருஷ்ணன்
[KSG]. இருவரும்
ஒன்றாக
பணியாற்றிய
காலங்கள்,
களங்கள்
இரண்டும்
நாம்
அறிந்ததே.
இதில்
ஒரு
வியத்தகு
நிலை
யாதெனில்
இருவரும்
ஒருவர்
மீது
ஒருவர்
அன்பும்
மரியாதையும்
கொண்டிருந்தனர்.
KSG அவர்களுக்கு
கவிதை
எழுதும்
திறமை
உண்டு
அவருக்கு
"குட்டை
க்கவி'
என்ற
பெயரும்
உண்டு.
CVS , KSG இருவரும்
ஆளுமை
மிக்கவர்கள்
; கதை
அமைப்பதில்
திறமைசாலிகள்
;எனினும்
மாறுபட்ட அணுகுமுறை உடையவர்கள்.
ஸ்ரீதர்,
எளிய
வசனங்களிலும்
, சிறப்பான
ஒளிப்பதிவு
கோணங்கள்
வண்ணப்பட
காட்சி
ஊடகம்
என்பதை
மிகுந்த
நுணுக்கமாகையாள்பவர்.
KSG , நீண்ட
நெடிய
வசனம் , உணர்ச்சி பொங்க காட்சி அமைப்பார்.
ஆனால்
அவர்
படங்களில்
கலை
நுணுக்கம்
பெரிதாக
வெளிப்பட்டதில்லை.
இருவருமே
குடும்பக்கதைகளை
வெற்றிகரமாக
இயக்கி
புகழ்
எய்தினர்
.
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment