Tuesday, October 10, 2023

OPPORTUNITIES

 OPPORTUNITIES

வாய்ப்புகள்           

HISTORY

சரித்திரம்

ஆங்கிலம் பயின்றோரைப்போலவே , சரித்திரம் பயின்றோருக்கும் சில வாய்ப்புகள் பிரத்தியேகமாக உள்ளன. அவற்றில் பிறர் நுழைய முடியாது. ஆனால் எந்த பாடத்திட்டத்தையும் ஆழ்ந்து பயில, வாய்ப்புகள் எளிதில் அமையும். ஏனோ தானோ அணுகுமுறைகள் பலன் தராது

 

சரித்திரம் சார்ந்த பல நிறுவனங்கள் பன்னாட்டு அரசுகளின் வாயிலாக நிர்வகிக்கப்படுகின்றன. உதாரணமாக ஐக்கியநாடுகள் சபை, அவற்றின் கல்வி திட்டங்கள் , ஆராய்ச்சி மையங்கள், கலாச்சார அறிவியல் தொடர்புகள் குறித்த ஆய்வுகள் என எல்லா கண்டங்களிலும் [கான்டினென்டஸ்] இயங்கிவருகின்றன. இவற்றில் பல அகழ்வாராய்ச்சிகள் , ஆவணத்தொகுப்புகள் என மிகத்துல்லியமாக தகவல் சேகரிக்கும் பணிகளுக்கு, நன்கு சரித்திரம் பயின்றோர் தேவைப்படுகின்றனர்.

சொல்லப்போனால் அறிவியல் கல்விக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப்போலவே சரித்திரம் பயின்றோருக்கும் கிடைக்கும். ஒரே ஒரு வித்தியாசம் யாதெனில் சரித்திர தேடல்கள் முற்றிலும் பன்னாட்டு அரசுகளின் கூட்டு முயற்சியே என்பதால் , பணியாள் தேர்வுக்கு முன் ஆங்காங்கே தேர்வுகள் மூலம் உரிய நபர்களை அடையாளம் கண்டு , பின்னர் தேசிய/மாநில தலைநகரங்களில் நேர்காணல் நடக்கும் . இவற்றை பலரும் அறியும் வண்ணம் ஆங்கில நாளேடுகளில், தூதரகங்கள் , அவற்றின் நூலகங்கள், பல்கலைக்கழக வளாகங்களில் பெரும் அறிவிப்புகள் வெளியிடப்படும் . அவற்றை அன்றாடம் பார்த்தால் வாய்ப்பு அறிவிப்பு வந்தவுடனே ஆயத்தங்களை துவங்கலாம்.

 

இவ்வகை அறிவிப்புகள் உள்ளூர் செய்தித்தாள்களில் வராது. பன்னாட்டு தகவல்கள் இப்போதெல்லாம் உரிய இணைய தொடர்புகள் web sites மூலம் வெளியாகின்றன. அவற்றிலே விண்ணப்ப படிவங்களும் வருகின்றன. , அவற்றை பயன் படுத்த தெரிந்துகொண்டால் உலகளாவிய வாய்ப்புகள் பரவிக்கிடப்பதை அறியலாம் . பலர் BROWSING CENTRE களில் சினிமா பார்க்கவும் CHATTING  செய்யவும் நேரம் செலவிடுகின்றனர்.

 

மாறாக, அம்மையங்களில் வேலை வாய்ப்பு குறித்த பன்னாட்டு நிறுவனங்களின் அறிவிப்புகளை கவனித்து on-line வழியே விண்ணப்பித்தால், ஒரு சில நாட்களில் நமக்கு உதவக்கூடிய விவரங்கள் கிடைக்கும். அதற்கு முன் ஒரு மின்னஞ்சல் முகவரியை நிறுவி வைத்துக்கொண்டால், எந்த ஊரில் இருந்தாலும் மின்னஞ்சல்  தொடர்பை உபயோகித்து விரைவாக தகவல் பரிமாறிக்கொள்ளலாம். தொடர்ந்து இது போன்ற களங்களில் என்ன மாதிரியான வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன என்று அறிந்து, தேவைப்பட்டால் அந்த வகை தகுதிகளை அடைந்து நல்ல வாய்ப்புகளை கைப்பற்றலாம் .

 

 கட்டுரை, ஆய்வுத்தொகுப்பு எழுதும் எழுத்தாளர்[WRITER], பிற மொழி அறிந்தோர்க்கு வாய்ப்புகள் அதிகம். பன்னாட்டு சரித்திர தகவல் தொகுக்கவும், மொழிமாற்றம் செய்யவும் திறமை அடிப்படையில் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

 

இதன் அடுத்தநிலையாக, EDITOR என்னும் தகவல் வடிவமைப்பு அதிகாரி பதவிகளிலும் சரித்திரக்கல்வி மிகுந்த உதவிகரமானது.

சரித்திர அறிவியலில் உயர் கல்வி தகுதி படைத்தோர் ஆய்வு உதவியாளர் [ரிசர்ச் அசிஸ்டன்ட் ] நிலைகளில் பனி வாய்ப்பு பெருகி றார்கள். 

அனுபவமும் அதிக கல்வி தகுதியும் கொண்டோர் "Historian" எனும் அதிகாரப்பூர்வ சரித்திர பதிவாளர் பதவிகளில் அமரலாம்

இவை தவிர சரித்திர ஆவண சிறப்பு தொகுப்பாளர்[Documentation specialist ]  பொறுப்புகளிலும்  சரித்திரக்கல்வி முக்கியத்துவம்  / வாய்ப்பு பெறுகிறது.

பல பன்னாட்டு நிறுவனங்களிலும், தூதரகங்களிலும் , நூலக அமைப்பு மற்றும் பாதுகாக்கும்[ curator ]மற்றும் நெறியாளர் [guide ] பொறுப்புகளிலும் வாய்ப்புகள் அவ்வப்போது தோன்றுகின்றன.    

இவை நீங்கலாக, புராதான ஆவணங்களின் காப்பாளர் [Archivist] நிலைகளிலும் பணி வாய்ப்புகள் உள்ளன.

வளரும்

அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...