Friday, November 3, 2023

CLIMATE DISTURBANCE – GREEN HOUSE EFFECT

 CLIMATE DISTURBANCE – GREEN HOUSE EFFECT 

வானிலை குழப்பங்கள் - பசுமை இல்ல விளைவு

அதாவது புவி வெப்பமடைதலின் ஒரு அங்கமாக பேசப்படுவது தான் பசுமை இல்ல விளைவு [GREEN HOUSE EFFECT ]. இந்தப்பெயர் இங்கு பயன்படுத்தப்படுவது ஏன்? புவி வெப்பத்தின் தாக்கத்தை விளக்குவதற்கே கிரீன் ஹௌஸ்  எபெக்ட் என்ற சொல்லாடல். வெப்பம் எந்த மாதிரி பல்கிப்பெருகுகிறது என்பதை GREEN HOUSE MODEL அடிப்படையில் விளக்கலாம்.

பெரும் தோட்டக்கலை நிறுவனங்கள் / தாவரவியல் பூங்காக்கள் போன்ற அமைப்புகளில் , அவ்வப்போது அவற்றின் உருவையே மாற்றிவிடும் அளவுக்கு புதிது புதிதாக கொடிகள், வண்ண மலர்கள், பசும் புல் , குட்டை வகை மலர்ச்செடிகள் , வினோத வகை தாவரங்கள் இவற்றைப்பயிரிட வேண்டுமெனில்,  முதலில் அவற்றில் ஏராளமாக வேர்கள் தோற்றுவிக்கப்படவேண்டும். விதைகள் அல்லாத குச்சிகள், கிளைகள், படர்ந்து வளரும் இனங்கள் இவற்றை வளர்த்து வேர் பிடிக்க வைக்க உதவும் அமைப்பே GREEN HOUSE .

தரைப்பகுதி நீங்கலாக ஏனைய சுவர்கள், கூரை ஆகிய பகுதிகள் கண்ணாடியால் ஆனவை. எனவே GREEN HOUSE இன் உட்பகுதியில் சூரிய ஒளி மிகுந்து இருக்கும். அங்கு வளர்க்கப்படும் இளம் தாவரங்களுக்கு நீர் தாராளமாக வழங்குவர். தாவரங்கள் நீரை உறிஞ்சாவிடில், சூரிய ஒளியில் நீர் ஆவியாகி ,கண்ணாடியைக்கடக்க முடியாமல் மிதக்க, அந்த அறை புழுக்கமாக இருக்கும். .விரைந்து நீரை உறிஞ்ச , ஒளியும், புழுக்கமும் [HUMIDITY ]  தூண்டுகோல்களாக வேலை செய்ய , எந்த செடியும் விரைந்து வேர்களை உருவாக்கி , வெளியிடத்தில் பயிரிட உகந்ததாக விரைவில் தயாராகி விடும். பூமிப்பந்தை சுற்றி உரை போல் அமைந்துள்ள வாயுக்கள் வெப்பத்தை வெளியேறவிடாமல் தடுத்து புழுக்கம் உண்டாக்குவதால் அது GREEN HOUSE EFFECT என்று அழைக்கப்படுகிறது.

சரி சில வகை வாயுக்கள் green house gases என்று அழைக்கும் அளவுக்கு அளவில் உயர்ந்துள்ளன.  அவை :     கார்பன் டை ஆக்ஸைட் [CO2] மீதேன் [CH 4], க்ளோரோ பிளூரோ கார்பன்கள் [CFCs], நைட்ரஸ் ஆக்சைடுகள் [NITROUS OXIDES].              இவை பூமியில் இயங்கும் வாகனங்கள், தொழிற்ச்சாலைகள், குளிரூட்டும் AC , பிரிட்ஜ் போன்ற இதர சாதனங்கள் XEROX கருவிகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவு வாயுக்கள். அவை வாயு நிலையில் தவழ்வதால் மேல் நோக்கி உயர்ந்து வெளி மண்டலத்தில் வாயுப்புகை வடிவில் வேட்டை நாய்கள் போல் உலவி வருகின்றன. இவை எந்த விகிதத்தில் உள்ளன ?

CO2= 56%, CH4 = 18%, CFC = 13%, OZONE =7%, NITROUS OXIDES =6% கடந்த 40 ஆண்டுகளில் வான்வெளி கார்பன் சுமை [CARBON LOAD] இரு மடங்காக உயர்ந்திருப்பதை 2017-18 ம் ஆண்டுகளில் அறியப்பட்டது.

அதனால் என்ன? என்று "துக்ளக்" துர்வாசர் போல் கேட்கவேண்டாம்.            அதனால் ஏற்படும் இன்னலை ப்பார்ப்போம்.

கார்பன் டை ஆக்ஸைடின் ஒளிஏற்பு திறனும், , பூமியில் இருந்து வெளியேறும் REFLECTED LIGHT எனும் ஒளிப்பிரதிபலிப்பின் எனர்ஜி யும் ஒரே அளவில் இருப்பதால் REFLECTED LIGHT கார்பன் படலத்தில் சிறைப்பட்டு மெல்ல மெல்ல வெப்பமாக பூமி நோக்கி திருப்பிவிடப்படுகிறது. இது மீண்டும்மீண்டும் அரங்கேறி பூமியை சுற்றி வெப்பம், அதன் வெளியே புகை கவசம் என்று அமைக்கப்படுகிறது.                 

இந்த அவலம் ஏற்படுத்தும் விளைவு தான், GLOBAL WARMING என்ற புவி வெப்பமடைதல். இதை ஏற்றுக்கொண்டு கடந்து போதல் எளிதன்று

பிற வாயுக்களின் செயல் பாடுகள் கொடூரமானவை. அவற்றையும் புரிந்து கொள்வோம். 

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. கார்பன்டை ஆக்சைடு அதிகரிக்க அதிகரிக்க ஒளி பிரதிபலிப்பு எனர்ஜியும் மீண்டும் மீண்டும் அதிக அடர்த்தி யோடு பூமியைத் தாக்க இயற்கை சமநிலை இழந்து பூமியானது இயற்கை சீற்றங்களால் கொடூரமாக அழிக்கப்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது. மேலும் மற்ற வாயுக்கள் "எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல" செயல்படும் என்று உங்கள் பதிவிலிருந்து ஊகிக்க முடிகிறது. மிகவும் பயனுள்ள கட்டுரைத் தொடர்.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...