Monday, November 6, 2023

SEENU IYENGAAR IN CINEMA SHOOTING -2

 SEENU IYENGAAR IN CINEMA SHOOTING -2

சினிமா ஷூட்டிங்கில் சீனு ஐயங்கார் -2

இன்னும் 2 நாளில் மெட்டாஷ்  போணும் என்று அவ்வப்போது என்று பயங்கர உள் உவகையுடன் சீனு ஊஞ்சலில் ஆகா ய்ய பந்தலிலே என்று பாடிக்குதூகலிக்க , வேலைக்காரி பொன்னம்மா வேல வெலவெலத்தாள் ;சாமி கொத்து ரொம்பபளசு, பிச்சுக்கிட்டு கீள விளுந்துரும், தரையில மோதிக்கிட்டு பல்லெல்லாம் உதிந்துரப்போகுது சாமி என்று எச்சரித்தாள் ; சீனு வின் ஊஞ்சல் ஆட்டம்  வேகமெடுத்து சீனு முழங்கினார் "பல்லெல்லாம் ஷீனுவின் பல்ழாகுமா , ஷொல்லெல்லாம் பொன்னம்மாவின் ஷொல் ஆகுமா , என்று .பொன்னம்மாவுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.- போங்க சாமி என்று துணி துவைக்கப்போய் விட்டாள். இப்போது ஷீனுவிற்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. ஐய்யய்யோ, ஏதாவது ஏடாகூடமா ஆகிவிட்டால் மெட்டாஷ்   பிளான் வீணாப்போய்தும் என்று ஊஞ்சலை நிறுத்ததிக்கீழே இறங்கவும் ரகு தெருவில் போவதுதெரிந்தது. ழகு ழகு இங்கப்பாழ் [இங்கே பார்] பாக் பண்ணி வெச்ஷுட்டேன் என்று மூலையில் காட்டினார். பே என்று பிளந்த வாயுடன் கட்டைப்பை, உள்ளே 3 வேட்டி, 3 அங்கவஸ்திரம் , வடிவேலு வகை கோடுபோட்ட அண்டர்வேர். முகம் தொடர்பான 2 வழ வழப்பெட்டிகள் -- ஒன்று வெற்றிலை செல்லம், அடுத்தது நெற்றிக்கு திருமண்  ஸ்ரீசூர்ணம், குச்சி , கம்பி உபகரணங்களுடன்.  .2 சட்டை 2 பேண்ட் , ஒரு பில்ட் அப்படித்தான் கிழங்கள் "பெல்ட்" [belt ] என்பதை உச்சரிக்கும். மாமா இதெல்லாம் பிளைட் ஏத்தமாட்டான்என்றான் ரகு.

ஏத்தாத்தா போறான் நான் மதியிலே வெச்ஷுக்கதேன் என்றார் ஸீனு. விடமாட்டான் என்றான் ராகு.. போப்பா எல்லாத்துக்கும் ஏதாவது அஸ்து பாடிண்டு. இப்ப என்னபண்ணச்சொல்ற என்று கொந்தளித்தார் ஸீனு. கோபம் கொண்ட ரகு  முறைத்தான். ஸீனுவுக்கு சுயநினைவு வந்து ஐயோ, சி பயணம் ரகு தயவில்லாமல் கிடைக்குமா என்று தன்னிலை உணர்ந்து அமைதியானார். நான் ஒரு bag தரேன் என்று வீட்டிலிருந்து ஒரு சிறிய சூட்கேஸ் கொண்டு வந்தான் ரகு.

அனைத்தையும் ரகுவே அந்தப்பெட்டிக்குள் வைத்து பூட்டி சாவியை ஷீனுவிடம் தந்தான். மறக்காமல் எப்போதும் பூட்டியே வையுங்கள் என்று சொல்லிவிட்டு தனதுஇ வேலையைப்பார்க்க கிளம்பினான். சரியான ஆள் தான் இவன் என்று ஸீனுவுக்கு ஒரே குஷி.. ஏதாவது பெட்டியோடு பாடும் சினிமாப்பாடல் இருக்கிறதா என்று யோசித்தார்;ஒன்றும் நினைவுக்கு வரவில்லை. குறித்தநாளில் டாக்ஸி ஏறி ஏர்போர்ட் வந்து, செக் இன் முடிந்து ஏறி ஆயிற்று.ஒரு 5 நிமிட தாமதம் பிள்னர் கிளம்பி ரன்வே யில் ஊர்ந்தது. இப்பிடியே லாரி யாட்டம் ரோடிலியே நடந்து மெட் டாஷ் போய்டுவனா என்று கொந்தளித்தார் ஷீனு . சைங் என்று எகிறியதும் என்று கீழே பார்த்தர் ஸீனு .எல்லாம் தீப்பெட்டி தீப்பெட்டியாக வீடுகள், எறும்புகளாக வாகனங்கள் கீழே ஊர்ந்துகொண்டிருக்க பிளைட் நன்னாத்தான்  ஷ்க்கு என்றார் ஒரே மகிழ்ச்சிபொங்க. திடீரென்று ப்ளட்ச் என்று 2 காதும் அடைபட்டு,  டே காது பேடுத்து என்று ரகுவை துளைத்து எடுத்தார். ராகு வாயின் மீது ஆள் காட்டி விரல் வைத்து 'உஷ்' பேசாதீர் என்றான். ஹோஸ்டஸ் எமெர்ஜென்சி டோர் இருக்கும் இடத்தை அபிநயித்தாள் [ஊமை போலருக்கு என்று ஷீனு பேச மீண்டும் உஷ் காட்டினான் ரகு]. லைப் பெல்ட் டில் காற்று துவதை அவள் விளக்க,. சீ எச்சப்பண்ணிண்டு என்று குமுறி னார். ரகு தூங்கிவிட்டான்.    இதோ மெட்டாஷ் வந்து  விட்டது. எல்லாரும் நின்றுகொண்டிருந்தனர். ஏர் லைன்  பஸ்ஸில்   எக்ஸிட் வரை கொண்டு போவார்கள் என்று ரகு சொல்ல ராஜஉபச்சாரமான்ன இருக்கு , இப்பிடி பண்ணிபண்ணி ஒரே ஷோம்பேறி யாய்ட்டா ஜனங்கள் என்று விமர்சனம். பஸ்ஸில் கேட் அருகே விட்டனர். சிரித்துக்கொண்டே வழி அனுப்பினர் இரு ஹோஸ்டஸ்கள்.

குட்டிகள் லாம் ஷோக்காருக்குனு ஜொள்ளு விட்டார் ஷீனு 

ரகு influence இல் ஏர்போர்ட் வேன் இவர்களை மாம்பலத்தில் விட்டது. டே மைலாப்பூர் போய் ராயர்    மெஸ் போளி யும் பஜ்ஜியும் , ஒரு வெத்து [வெட்டு ] வெத்தணு ம்டா  என்றார். சாயங்காலம் போலாம் என்றான் ரகு .   நீ பொஹு சமத்துடா என்று பாராட்டினார்.. 11.00 மணிக்கு பெரியம்மா சாப்பாடு வழங்கினார். ருசித்து ரசித்து சாப்பிட்டார். உங்களுக்கு ரொம்ப தொந்தரவு என்னால என்று மன்னிப்புகோரினார். அதெல்லாம் ஒண்ணுமே இல்ல , ஊர்லேருந்து வந்தபேருக்கு பண்ணி போட்டா பகவானுக்கு ரொம்ப ப்ரீதினு பெரிவா சொல்லுவா என்று பெரியம்மா மிகுந்த பரிவுடன் சொல்லி விட்டு தாம்பூலம்? என்றார்,   நானே வெச்ச்சுண்டிருக்கேன் என்று              பொக்கை வாயால் நன்றி தெரிவித்தார்.சிறிது ஓய்வுக்குப்பின் 3.30 மணிக்கு காபி கம கம வென்று.. இது என்ன காபி? விவேகானந்தா என்றார் பெரியம்மா, பேருக்கேத்தாப்ல கம்பீரமா இருக்கு என்று கை கூப்பினார். . இருவரும் வெளியே கிளம்புமுன் பெரியம்மா ராத்திரி சாப்பிட வந்துடுங்கோ என்று அழைப்பு விடுத்தார். ரொம்பெல்லாம் பண்ண வேண்டாம் ஒரு உருண்டை மோர் சாதம் போறும் என்று அன்பாக சொல்லி விட்டு மைலாப்பூர் நோக்கி ஆட்டோ வில் பயணம்.

மைலாப்பூரில் எங்கபாத்தாலும் ஒரேடியா கண்ணைக்கூட சிமிட்ட விட்டாம  ஒரே அப்சரஸா இருக்குதா[டா] என்று மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியும் காட்டினார் ஸீனு . ராயர் மெஸ் வேண்டாமா?  என்றான் ரகு.  ஏண்டா பதக்கத [பறக்கற]?  

ஒரே நவராத்திரியா ஜே ஜே னு இருக்கு பாத்துண்டே போனா ஆச்சு என்று பல வண்ண மாமி உருவங்களை ரசித்தபடி ஷீனு சொல்ல, ஹியூமன் சர்வே செய்து கொண்டே போய் ராயர் மெஸ்ஸில்  ஒரு வெட்டு வெட்டினர். 8 மணிக்கு மீண்டும் மாம்பலம், நிறைய புஷ்பம் பழங்கள் பெரியம்மாவிடம் கொடுத்துவிட்டு 8.45மணிக்கு இரண்டு கவளம் தயிர் சாதம் சாப்பிட்டனர்.

தொடரும்

அன்பன் ராமன்

4 comments:

  1. ஷீனுவின் மெட்டாஸ் பயணம். தொடரட்டும். ஷீனு வுடைய திருமண பெட்டியில இருக்கிறது வெள்ளிக்குச்சியா இல்லை வெறும் ஈறுக்குச்சியா?

    ReplyDelete
  2. ஷீனுவுக்கே இல்லாத கவலை உமக்கு ஏன் ஸ்வாமி ? அது வெள்ளிக்குச்சியே தான் ;சந்தேகமென்ன , நாளை பாரும் ஸீனுவின் அதிரடி வேலைகளை.

    ReplyDelete
  3. அருமையா போறது. நாளை அதிரடி என்ன என்று பாக்கணும். 😆

    ReplyDelete

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...