Tuesday, November 7, 2023

OPPORTUNITIES – ANIMATION, 3 D , AESTHETICS, SKILL BASED OPTIONS

OPPORTUNITIES – ANIMATION, 3 D , AESTHETICS, SKILL BASED OPTIONS

வாய்ப்புகள்

அனிமேஷன் /முப்பரிமாண வடிவமைப்பு மற்றும் கற்பனை மேம்பாடு. /தொழில் சார் வாய்ப்புகள்

கல்வி என்பது பட்டம் பெற்று வேலை தேடித்திரிவது அல்ல. மாறாக இன்றைய சூழலில் வேலைக்கேற்ற வாய்ப்பைத்தரவல்ல கல்வி என்பதாக , பொறியியல், மருத்துவம், விவசாய விஞ்ஞானம் , கணினி த்துறை, பல் மருத்துவம் [DENTISTRY] என்பதாக ஒரு அளவு கோல் வைத்துக்கொண்டு , மார்க் மார்க் என்று புலம்பித்திரிவதால் பலன் ஒன்றுமில்லை. பயிலும் போதே பயிற்சியும்பெற்று முழுத்தகுதியுடன் உருவாக்கவல்ல கல்வி முறைகளில் சில -- அனிமேஷன், அட்வெர்டைசிங் என்னும் விளம்பரத்துறை, கன்டென்ட் ரைட்டிங், கன்டென்ட் எடிட்டிங், நர்சிங் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்னும் நிகழ்ச்சி அமைப்புத்துறை என்று பல வித வழிகள் ஏற்பட்டுள்ளன.   இவை ஒவ்வொன்றும், ஒரு குறிப்பிட்ட தேர்ந்த வேலைக்கான பயிற்சிகளை முறையாகத்தந்து தனி மனித முன்னேற்றத்திற்கு உதவுகின்றன. இவை பற்றி எவரும் கருத்தோ கவலையோ கொண்டதாக தெரியவில்லை.

பல குறிப்பிட்ட தொழில் நிறுவனங்கள், தங்களின் பிரத்தியேக தேவைகளுக்கென பணிகளுக்கான பணியாளர்களை பயிற்சி கொடுத்து  தங்கள் நிறுவனங்களில் பணியாற்ற வாய்ப்பும் ஊதியமும் கொடுக்கின்றன. இவற்றில் மருத்துவ மனைகள் மிகவும் முக்கிய இடம் வகிக்கின்றன. ஏனெனில் இவற்றில் பணிபுரியும் செவிலியர் [NURSES ] பல்வேறு சிறப்புப்பயிற்சி பெற்று, லிட்டத்தட்ட டாக்டர்களுக்கு அடுத்த நிலையில் இருந்து செயல் புரிபவர்கள். இவர்கள் அனைவருமே நர்ஸ் என்றே அறியப்பட்டாலும், அவர்களும் பல பிரிவுகளாகவே இயங்கும் சிறப்பு பிரிவினர். அவர்கள் குறிப்பிட்ட நோயாளிகளை எவ்வாறு கையாள வேண்டும்/ கவனித்துக்கொள்ள வேண்டும் என்று துல்லியமான செயலியல் நுட்பம் அறிந்தவர்கள்.

உதாரணம், கார்டியாலஜி [இதயம்], ஆன்காலஜி [கான்சர்], NEPHROLOGY [சிறுநீரக துறை ], ஆப்தல்மாலாஜி [கண் துறை ] .ஜீரியாட்ரி [முதியோர் பிரிவு] ஒவ்வொன்றிலும் நோயாளி பற்றிய அடிப்படை தகவல் குறிப்பு எடுத்தல், அடிப்படை சோதனைகள் அவற்றின் தகவல் தொகுப்புகள் இவற்றை தயாரித்து உற்ற குறிப்புடன் மருத்துவர் முன் நோயாளியை அழைத்து செல்பவர் நர்ஸ் தான். டாக்டர் எழுதும் குறிப்பு களையும் குறியீடுகளையும் சரியாக    புரிந்து கொண்டு ஊசிமருந்து செலுத்துவதும், மருந்து மாத்திரை பயன்பாடு குறித்து விளக்குவதும், தேவையான ட்ரெஸ்ஸிங் [கட்டுப்போடுவது] இவற்றை செய்வோர் நர்ஸ்களே .

உள் நோயாளிகளுக்கு பணிவிடை செய்யும் வார்டு நர்ஸ்கள் வேறு. அவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நோய்/நோயாளியின் நிலை குறித்து கட்டிலில் இருக்கும் குறிப்பேட்டில் பதிவிடுவர்.ட்யூட்டி டாக்டர் எழுதும் ஆலோசனைகளை உடனுக்குடன் நிறைவேற்றி மீண்டும் நேரப்படி தங்கள் குறிப்புகளை பதிவிடுவார். சிலருக்கு நடை பயிற்சி, உடல் பயிற்சி தேவைப்பட்டால் அதையும் உரிய நர்ஸ்களைக்கொண்டு செய்வதும் நர்ஸ்கள்தான். சரியான பயிற்சி இல்லாமல் கதீட்டர் அமைத்தல், வி ட்ரிப்ஸ் , அன்டிபையாட்டிக்  புளோ ரேட்  அமைத்தல் தவறு. எனவே நர்சிங் என்பது ஒரு பரிபூரண அர்ப்பணிப்பு எனில் மிகை அன்று. உலகெங்கணும் நர்சிங் பணியில் இந்திய பெண்கள் வழங்கிவரும் பங்களிப்பு மகத்தானது.

இவை தவிர தியேட்டர் என்றும், சர்ஜரி என்றும் ஏசெப்டிக் ZONE எனும் அறுவை சிகிச்சை கூடங்களில் பணிபுரியும் நர்ஸ்கள் மாபெரும் ஆளுமைகள் எனில் மிகை அன்று. டாக்டர் என்ன அறுவை செய்யப்போகிறார் , தேவையான உபகரணங்கள், மருந்துகள் தையலிடும் பொருட்கள், GAUZE , பஞ்சு, களிம்பு என ஒன்று விடாமல் தயார் நிலையில் வைத்திருப்பதும் எண்ணற்ற STERILE GLOVE தயார் நிலையில் வைத்திருப்பதும் , இயந்திர கதியில் நடக்க வேண்டும் , சுணக்கம் குழப்பம் எதுவும் கூடாது.எனவே அபார எதிர்பார்ப்பும் அதீத சுறுசுறுப்பும் சர்ஜரி வார்டு நர்ஸ் களின் அடிப்படை தேவைகள்/ தகுதிகள். இவர்கள் சர்ஜரி [ தியேட்டரில் பணியாற்றி] அடுத்தடுத்து வர இருக்கும் தேவைகளுக்கேற்ப கருவிகளை சுத்தம் செய்து ஸ்டெரிலைஸ் செய்வித்து வழங்கிக்கொண்டே இருப்பர். வாய்ப்பேச்சு இல்லாமல் கண் அசைவில்/ சைகை குறியீடுகள் படி செயலாற்றுவதில் வல்லவர்கள். 8 மணி நேரம் 10 மணி நேரம் நிகழும் அறுவை சிகிச்சைகளின் போது நின்று கொண்டே பணி புரிதலும் அடுத்தடுத்தடுத்து கருவிகள், மருந்துகள் என எத்துணை ஏற்பாடுகள் தேவைப்படும் அனைத்தையும் அழகாகச்செய்வார்கள். இதேபோல் பிரத்தியேக பணிகளுக்கென ஆண் நர்சகளும் செயல் படுவர்.    

எனவே மருத்துவ மனைகள் நர்சிங் கல்வி அளித்து, உதவித்தொகை , ஹாஸ்டல் , உணவு ஏற்பாடுகளுடன் பயிற்சியும் தருகிறார்கள் மருத்துவ நிறுவனங்களில் இவை பற்றிய அறிவிப்புகளை காணலாம். வசதி குறைந்த பெண்களும் ஆண்களும் 10வகுப்பு/ +2 க்குப்பின் இவ்வகை பயிற்சி முடித்து அதே மருத்துவ மனைகளில் பணியில் இருப்பதை பார்க்கலாம். குறித்த ஒப்பந்த காலத்திற்கு பின் வேறு வேலை தரும் அமைப்புகளில் சேரும் நர்ஸ்களைப்பார்க்கலாம். சென்னையில் பெரும் மருத்துவ நிறுவனங்களில் நாகர்கோயில் பகுதி பெண்/ஆண் நர்ஸ்கள் பணி  புரிகின்றனர்.  தற்காலத்தில், நர்சிங் பணி மரியாதைக்குரிய ஒன்றாகி உள்ளது. எனவே, எதையோ நினைத்து வேலை கிடைக்கவில்லை என்று அங்கலாய்க்காதீர்கள். பல்வேறுகோணங்களில் பார்வையைத்திருப்புங்கள், உலகம் உங்களுக்காகக்காத்திருக்கிறது.

அன்பன் ராமன்   

2 comments:

  1. வீட்டின் கதவை மூடி ஜன்னல் வழியாக பார்பதற்கும், கதவைத் திறந்து வெளியே வந்து பார்பதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதைப் போல் அமைந்த நல்ல ஒரு பதிவு. 👌👌👌

    ReplyDelete
  2. In Meenakshi mission hospital I have seen number of doctors and nurses are staying in hostel . They are provided with breakfast, lunch and dinner. Only during working hours they come to the hospital
    The cost of the meals is only Rs80
    Both veg and non veg food is available.
    Besides fruit juices, coffee and tea are also available for all.
    Every day the patients are asked about their grievances and rectified.
    Operation theatre and the required materials are kept ready after sterilisation .
    They also run a college for nursing and clinical technology.
    Successful candidates are absorbed by this hospital.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...