Wednesday, November 8, 2023

CINE MUSIC-14 STRATEGIES -11 [TABLA BONANZA]

 CINE MUSIC-14 STRATEGIES -11 [TABLA BONANZA]

தமிழ் திரையில் தபலா [ தாள நர்த்தனம் ]

தமிழகத்து தாளக்கருவி- மிருதங்கம் ;ஆனால் திரையில் வரும் இசை அமைப்பில் தாளக்கருவியாக கோலோச்சி வருவதென்னவோ   தபலா தான். இந்தக்கருவி பல வித பிர்க்காக்களுக்கும், நளின அதிர்வுகளுக்கும் உதவுவதுடன், பிற தாளக்கருவிகளுடன் வெகு நேர்த்தியாக பயணிக்க வல்லது.எனவே இசை அமைப்பாளர்கள் வயலினுக்கு அடுத்தபடி முக்கியத்துவம் தருவது தபாலாவுக்கு என்பதை பாமரரும் அறிவர். மேலும் தபலா ஒரு பாடலில் எந்தக்கட்டத்திலும் நுழைந்து இயல்பாக பரிமளிக்க வல்லது. ஆனால் ஒன்று அந்தக்கருவியை நேர்த்தியாக உலவ விட பெரும் கை நேர்த்தியும் , கற்பனையும் அமைந்தால் அந்தக்கலைஞர் பெரிதும் போற்றப்பட்டு எப்போதும் இடையறாது . இயங்கும் வாய்ப்பைப்பெற்று முன்னணி மற்றும் தேடப்படும் அந்தஸ்து பெற்று நன்கு அறியப்பட்டவர் ஆகிறார். அப்படி உன்னதம் அடைந்தோர் திரு "ஹனுமந்தப்பா", திரு பிரசாத்   மற்றும் திரு சிவமணி ஆகியோர்,திரு ஹனுமந்தப்பா விஸ்வநாதன் இசைக்குழுவில்     மையப்புள்ளி ; திரு பிரசாத் பின்னாளில் எம் எஸ்வி குழுவில்[திரு. அனுமந்தப்பாவின் மறைவுக்குப்பின்]  இடம் பெற்றார் பின்னவர் சிவமணி பின்னாளில் அனைவரின் பாராட்டை பெற்ற  ட்ரம் கலைஞர்.  பல பாடல்களில் தபலாவின் நடை விளைவித்த தாக்கம் அலாதியானது

1 யார் யார் யார் அவள் யாரோ [பாச மலர்- 1961] கண்ணதாசன் , விஸ்வநாதன் ராமமூர்த்தி , பி பி ஸ்ரீனிவாஸ் , பி சுசீலா 

கவியையோ சொல்லவா, கவிதையைச்சொல்லவா , இசையைச்சொல்லவா , குரலைச்சொல்லவா, கருவிகளைச்சொல்லவா ? எதைச் சொல்ல? ஓன்று  நன்றாக புரிகிறது , மிகக்குறைந்த கருவிகள் , விறுவிறுப்பான ராக நடை , துரத்திக்கொண்டு ஓடிவரும் தாள க்கருவி [தபலா]  இவ்வளவு தான். ஆனால் பாடல் இப்போதும் மனத்திலும் செவியிலும் ரீங்கரிக்கிறதே - இது என்ன, எனில் சரியான நடைத்தேர்வு என்பதே விடை. சரி பாடல் வயலின்கள்/போங்கோ அதிர்வில் கிளம்ப அ ஹ் ஹ ஹா ஹ ஹா என்று பயணிக்க, தொடர்ந்த போங்கோ பின் வாங்கிக்கொள்ள சட்டென்று பாய்ந்து யார் யார் யார் அவள் யாரோ என்னுமிடத்தில் விவிறுவிறுப்பு நடையில் தபலா தொடர பாடல் இப்போது வேறு மட்டத்தில் பயணிக்க ........... ஏதுவானால் என்ன பாடலை உயரப்பறக்கவைத்ததென்னவோ சாவித்ரியின் மின்னலென மாறும் முகபாவங்களே என்று உணருகிறேன். அவரின் அற்புதமான இயல்பான உடல் மொழி , கண் , முகம் உதடு என நடிப்பிலக்கணம் தொகுத்த நடிகை -எப்படி நடித்திருக்கிறார் பாடல் காட்சியில். கண்ணதாசனின் ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருள் சொல்ல, இசை அதற்கேற்ப பயணப்பட, ஒரு உணர்வும் தப்பாமல் சாவித்ரி நடித்திருப்பதை ப்பாருங்கள் . தெலுங்குப்பெண்மணியா இவர்? நம்பவே முடியாது. முகபாவம் பாடலின் உணர்வைப்ப்பூரணமாக வெளிப்படுத்த, பிசகாமல் விரைந்து ஒலித்த தபலா, பல்லவியில் போங்கோவிற்கு இடம் தந்து ஒதுங்க என்ன கம்பீரமான இசை அமைப்பு..

மஞ்சள் குங்குமம் மலர் கொண்டாள் மனதையும் சேர்த்து ஏன் கொண்டாள் என்ற சரண வரி சாவித்திரிக்கென்றே பிறவி எடுத்தது போல் இருக்க, அந்த இடத்தில் சாவித்ரி  காட்டும் முகபாவம் எவ்வளவு ஆழமானது? இவ்வகை நடிப்பும், பாடலும்தொலைந்தது -காலக்கொடுமை வேறென்ன? பாடலுக்கு இணைப்புஇதோ. https://www.google.com/search?q=yaar+yaar+yaar+aval+yaro+video+song+download&newwindow=1&sca_esv=571840155&sxsrf=AM9 yaar yar yaar aval yaro

2 மனம் கனிவான அந்த [இது சத்யம் -1963] கண்ணதாசன் - டி எம் எஸ், பி எஸ்

மற்றுமோர் அற்புதமான கவிதை சொல் நயம் எதுகை,  மோனைகளின் சாம்ராஜ்யம் இந்தப்பாடல்.. மெல்லிசை மன்னர் ஒரு அற்புத ரசிகர் என்பதை பறைசாற்றும் பாடல் நடை ஏனெனில் ஆஅ என்று தேர்வு செய்த ஆலாபனையில் அவ்வப்போது பயணித்து , சரணத்தை எட்டிப்பிடிக்கும் உத்திமற்றும் ஊம் ஊஹூஹூம் என்று பதிலிருப்பதாக புரியவைத்தல்  என எண்ணற்ற உத்திகள்நிறைந்த பாடல்.

அதிலும் இந்தப்பாடல் தபலா வாசிப்பில் ஒரு டிக்ஷ்னரி என்றே சொல்லலாம்   குறிப்பாக வாழைத்தோட்டம் போல என்று துவங்கும் சரணத்தில் பயணிக்கும் தபலாவின் நளினம் எளிதில் பெறவொண்ணாத ஒரு அன்பளிப்பு எனில் மிகை அன்று. அவள் இவள் தானா என்ற அடுத்த கட்டத்தில் தபலா முற்றிலும் உறங்கி மீண்டும் உயிர்த்தெழுவது ஒரு மேம்பட்ட கற்பனை . இவை அனைத்தையும் விட நடிகர் அசோகனே பாடுகிறாரோ என்பது போல நேரடியாக பாடல் துவங்க அசோகனா /டி எம் எஸ்ஸா என்ற மயக்கம் தோன்ற வைக்கும் நேரடித்துவக்கம் கருவிகளை துணைகொள்ளாமல் என்று பல நுணுக்கங்கள் நிறைந்த பாடல்., இடை இசை எதிலும் தபலா இல்லை . குரல்களுக்கு வலுசேர்ப்பது வெகு நேர்த்தியான தபலா வாசிப்பில் என கட்டமைக்கப்பட்ட பாடல். பாடலுக்கு இணைப்பு இதோ    

https://www.youtube.com/watch?v=OuLzcBk2evI&list=RDGMEMCMFH2exzjBeE_zAHHJOdxg&index=12 MANAM KANIVAANA

3 மஞ்சள் முகம் நிறம் மாறி [கர்ணன் -1964] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி .பி சுசீலா குழுவினர்

இது ஒரு அரண்மனை வளைகாப்புப்பாடல் . எனவே அரங்கம், ஆடை அணிகலன்கள் தோழியர் கூட்டம் தடாகம், கட்டில் மாடம் என அனைத்திலும் செல்வச்செழிப்பின் வெளிப்பாடு -இவ்வனைத்தையும் தூக்கிச்சாப்பிடும் பாடலும் இசையும் -1964 -படத்தில் மொத்தம் 10 பாடல்கள் ஆயினும் இசை அமைப்பில் பல்வேறு வடிவங்கள் தாங்கி வந்த ஒரு இசைக்காவியம் அதில் இந்தப்பாடல் தோழிகளின் ஆர்ப்பரிப்பில்  ஹா ஹா ஹாஹா ஹாஹ்ஹ என்ற ஒலிகளுக்கு இசைவான கை தட்டலுடன் விரைந்த துவக்கம் வேகமான தபாலாவும் கை தட்டலும் அனுசரணையாக இயங்க கவிஞரின் ஆட்டம் துவங்குகிறது கூடவே குழல் + வயலின்களின் இசையில் மஞ்சள் முகம் நிறம் மாறி என்று துவங்கி சீராக விரைந்து பயணிக்க, திடீரென்று மென் நடையில் ஆலாபனைக்குப்பின் பாடல் வேகம் குறைய தபாலாவும் அதற்கேற்ப மெல்ல பயணிக்க கேட்கவே ஒரு அமைதி தரும் பாடல் சிணுங்கி நடிக்கும் தேவிகா , ஆதரவாக சாவித்ரியின் நடிப்பில் பாடல் கேட்க ஒரு நல்ல அனுபவம் . பாடலுக்கு இணைப்பு இதோ https://www.youtube.com/watch?v=k0SITf4l--M manjal mugam clap + percussion

4மனைவி அமைவதெல்லாம் [மன்மத லீலை -1976] கண்ணதாசன் -எம் எஸ் விஸ்வநாதன். கே ஜெ யேசுதாஸ்

ஒரு வில்லங்கமான பாடல் . வேறென்ன பெண் பித்தனாக கமலஹாசன். பெண்களை எப்படியாவது வளைக்க திட்டமிடும் பாத்திரம்.;அதற்கென வடிவமைக்கப்பட்ட பாடல் . பல்லவி நிதானமாக துவங்க டிராம் போங்கோ கருவிகள் இணையில் பயணிக்க, வேகம் எடுத்துப்பாயும் சரணம் 'இரவில் நிலவென்று உண்டு" பீறிட்டு நர்த்தனமிடும் தபலா , தொடர்ந்து உயிர்ப்பிடும் இயங்கி \ பல்லவியில் மறையும் தபலா. ஒவ்வொரு முறை சரணம் துவங்கும் போதும் வேறொரு புதிய நடையில் பயணிக்கும் தபலா. [பொருத்தம் உடலிலும் வேண்டும் , புரிந்தவன் துணையாக வேண்டும்] என்று பெண்ணுக்குப்பரிந்து பாடும் வரிகளில் தபலா காட்டும் வடிவம் வேறானது. அதே போல அடுத்த சரணத்தில் கவிஞன் கண்டாலே கவிதை , காண்பவன் கண்டாலே காதல்[ மறைமுகமாக உன் கணவன் கையாலாகாதவன் குடித்து விட்டு சாய்ந்துவிட்டான்] என்று உணர்த்தும்      வரியில் தபலா எடுக்கும் வேகம் கமலின் பாத்திரம் துடிப்பதை உணர்த்துவதாக உணருகிறேன். பாடல் ஏதோ தரக்குறைவானதெனக்கொள்ளாமல் , நேர்த்தியாக யதார்த்தத்தை தெரிவிக்கிறது. அந்த யதார்த்தத்தில் தபலா பன் முகம் காட்டி ஆதிக்கம் செலுத்துவதை கவனியுங்கள். பாடலின் இணைப்பு இதோ

https://www.google.com/search?q=manaivi+amaivadhellaam+video+song+download&newwindow=1&sca_esv=575557852&sxsrf=AM9HkKluuk_-2A1364U741RX9FUs64Oc7w manaivi amaidhellaam

please use the first option

Regards   K.Raman

4 comments:

  1. தபேலா வர்ணனையை விட சாவித்ரி, தேவிகா முகபாவங்கள் வர்ணனை மிகப்பிமாதம்

    ReplyDelete
  2. எம் எஸ் வி குழுவின் ஹநுமந்தப்பா, பிரசாத் இவர்களின் தபலா நடைக்கு உங்கள் எழுத்து நடை எவ்விதத்திலும் சளைத்ததல்ல என நிரூபிக்கிறீர்கள், பிரொபஸர், again and again !!! பணி தொடரட்டும்.

    ReplyDelete
  3. எந்தவொரு கலைப் படைப்பும் அதற்கு பொருத்தமான ரசிகர்கள் அமைவதில்லை மூலம் முழுமை அடைகிறது. அத்தகைய ரசிகர்களில் நமது பிரொபஸரும் ஒருவர். அவரது ரசிப்புத்தன்மையும், இசைக்கருவிகளின் இசைவெளிப்பாட்டை ஆழ்ந்து அனுபவிப்பதும், அந்த இரசிக்கும்படியான இசையைத் தரவல்ல கலைஞர்களின் திறமைகளை திறமைகளை பெரிதும் சிலாகிப்பதும், ரசிக மணி டி. கே. எஸ் மறுபிறவி எடுத்து வந்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

    ReplyDelete
  4. ரசிகர்கள் அமைவதில்லை மூலம்

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...