Thursday, November 9, 2023

DIRECTOR – SRIDHAR

 DIRECTOR – SRIDHAR

இயக்குனர் ஸ்ரீதர்

அன்றைய தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் "புதுமை இயக்குனர் " என்ற பெயருக்கு முதல் உரிமையாளர் எனில் அது திரு.  ஸ்ரீதர் அவர்களே..அதற்கான பல காரணங்களையும் நியாயங்களையும் பட்டியலிட முடியும். பட்டியல் போடுவதை விட  ஸ்ரீதரின் சிலமாறுபட்ட  அணுகுமுறைகளை தெளிவுபடுத்தினால் கூற்றின்  உண்மை விளங்கும் . வசனங்களில் எளிமையையும் காட்சியில் கூர்மையையும் களப்படுத்திய அவரின் நேர்த்தி அசாதாரணமானது. இதோ சிலவற்றைக்காண்போம்

மாதர் குல மாணிக்கம்;

நடிகர் தங்கவேலு படத்தில் தனது மாமனார் குறித்து -- "அவர் கிட்டேருந்து தப்பிக்கலாம்னு ரயில் போனா அந்தாளு இன்ஜின்லயே    போய் நமக்கு முன்னால இறங்கறாரு"

நெஞ்சில் ஓர் ஆலயம்

மனோரமாவை ஒருதலையாக காதலித்து, காதலில் தோல்விகண்ட நாகேஷ் மனோரமா [நவநீதம்] வின் முறைப்பையன் மாணிக்கம் [ராமராவ் ]என்பவனிடம் , "மாணிக்கம் நீ ரொம்ப நல்லவன் உனக்கு மனசுலியும் மண்டைலயும் ஒன்னும் இல்ல , நீ நவநீதத்தை கட்டிக்கிட்டு நல்லா  இரு, கல்யாணத்துக்கு பத்திரிகை  அனுப்பு" என்று சோகம் ததும்ப விடை கொடுத்தனுப்புவார்:

இதே போல் மற்றுமோர் காட்சி

காதலிக்க நேரமில்லை: 

சச்சுவை வைத்து சினிமா எடுத்து விட அலைந்து தோல்வி அடைந்ததும் சச்சு நாகேஷை வளைத்து கல்யாணத்துக்கு ஒப்புக்கொள்ள வைக்க இருவரும் நாடகமாடி சச்சுவின் தகப்பன் [பிரபாகர் -அவருக்கு அப்போது 32வயது]   தன் மகளிடம் "   என்னம்மா சரிதானே என்று வினவ, சச்சு "நான் என்ன சொல்லப்போறேன் என்று சொல்ல, நாகேஷ் பதறியடித்துக்கொண்டு "எதையாவது சொல்லிடப்போற " என்று சச்சுவை வாயடைப்பார். [பொருள் பொதிந்த வசனம் ].

மற்றுமோர் காட்சியில்விஸ்வநாதன், வாங்க எல்லாரும் ஜாலியா பிக்னிக் போயிட்டு வரலாம் என்றுமுத்துராமன்   பாலையாவை க்கூப்பிட, அவர்   .”அவங்க சின்னவங்க போயிட்டு வரட்டும்,   நம்ப கெளவனுக நமக்கு எதுக்கு பிக்கும் நிக்கும் என்று முத்துராமனையும் கிழவன் லிஸ்டில் சேர்க்க முத்துராமன் பேசமுடியாமல் தவிப்பார்.

சுமை தாங்கி

ஒரு புதிய அணுகுமுறையில் கதை நகர்த்தப்பட்டிருந்தது. அதில் வரும் காதல் பாடல் துவங்குமுன் இருவரும் [ஜெமினி/ தேவிகா ஜாடை மொழியில் பேசிக்கொள்வது எவ்வளவு ஆழமான காட்சி அமைப்பு , காமெராவின் தெளிவைப்பாருங்கள் [1963] ; மேலும் சாத்தனூர் அணைக்கட்டில் கமெராவில் விளையாட்டு காட்டியிருக்கும் வின்சென்ட் சுந்தரம். க்ரேன் இல்லாமலே க்ரேன்காட்சியை  போல தோன்றவைத்த கம்பீரம் கருவிகள் குறைவாகவும் அறிவு மேலோங்கியும் செயல் பட்ட    அந்தக்காலம் திறமைகளின் களஞ்சியம். பிபி ஸ்ரீனிவாஸ் ஜானகியின் குரல்கள் எதிரொலித்து வெளிப்படுவது போல பாடல் பதிவிடப்பட்டுள்ளது பாடலின் வரிகள் விரசமில்லாத விளக்கவுரை போல் சீராக நகரும் நேர்த்தி. பாடலின் இணைப்பில்   [ youtube AP international]     என்ற பதிவை தேர்ந்தெடுத்து ரசியுங்கள். இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=paruvaththin+kelvikku+badhil+videp+song+download&newwindow=1&sca_esv=577395672&sxsrf=AM9HkKn178zRZgs1m65jegGppI paruvaththin kelvikku

மயக்கமா கலக்கமா [சுமைதாங்கி -1963] கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி -பிபி ஸ்ரீனிவாஸ்

ஸ்ரீதரின் இயக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள தத்துவப்படல் காட்சி. இது முற்றிலும் ஒளிப்பதிவாளரின் திறமையில் விளைந்த நல்  முத்து எனில் மிகை அன்று. நான் அவ்வப்போது வின்சென்ட்-சுந்தரம் திறமைகளை வெளிப்படுத்தியு போதெல்லாம் நான் ஏதோ மயக்கத்தில் உளருகிறேன் என்று சிலர் நினைத்தனர் என்பதை நான் அறிவேன். எனது நிலைப்பாடு யாதெனில் ஒளிப்பதிவின் பல பரிமாணங்களை வியத்தகு வித்தகத்துடன் கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப்படங்களில் வின்சென்ட்-சுந்தரம் போல் சிறைப்படுத்தியவர்கள் வெகு சிலரே. அவ்வகையில் இந்தப்பாடலை ப்பார்க்கும் அன்பர்கள் வெகு ஆழ்ந்த கவனத்துடன் இக்காட்சியில் படப்பிடிப்பு நேர்த்தியை ஊன்றி கவனியுங்கள்,. நிழல் உருவங்கள் அவ்வப்போது உயிர் பெற்று இயங்க ஒரு பிரேமில் எத்தனை உருவங்கள், ஒவ்வொன்றும் மாறுபட்ட அமைப்பில். பிரமிக்க வைக்கும் ஒளி ஏற்பாடு [லைட்டிங்] என்று பேச பேச வியப்பும் மலைப்பும் நம்மை கட்டிப்போட்டுவிடும் ஆளுமை. இவற்றை களப்படுத்திய இயக்குனர் எத்தகைய ஆளுமையை பதிவிட்டுள்ளார். ரசித்து மகிழ்வீர்,  தொடர்புக்கு இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0 sumai thaangi mayakkamaa kalakkamaa

வேறு தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...