Friday, November 10, 2023

WHY 'HOME'?

 WHY 'HOME'?

ஏன்இல்லம்?

இல்லத்தின் மாண்புதனை உணராதோர் நன்மை தீமைகளை பகுத்தாயும் ஆர்வம் அற்றோர் என்றே கொள்ளலாம் . ஏனெனில, ஒவ்வொருவரின் அடிப்படை பண்புகளை உருவாக்கும் MOULDING எனும் வடிவமைப்பு அவரர் இல்லங்களிலேயே மெல்ல செயல்படுகிறது. இதனை எளிய சொற்களில் சொல்வதெனில் "பல பழக்க வழக்கங்களில் இருந்துதான் "பெர்சனாலிட்டி [PERSONALITY] என்ற தனிமனித அடையாளம் வடிவம் பெறுகிறது .பெர்சனாலிட்டி என்பது உடல் /உருவம் பற்றியது என்று சிலர் தவறாக புரிந்துகொண்டு நல்ல உடல் வடிவம் கொண்டவர்களை "நல்ல PERSONALITY " என்று சிலாகிக்கிறார்கள். மன்னிக்கவும் பெர்சனாலிட்டி என்பது உடல் சார்ந்தது அல்ல; மாறாக அறிவு, புரிந்துகொள்ளும் திறன், TROUBLE SHOOTING என்னும் தீர்வுகாணும் அணுகுமுறைகள்,  இன்சொல் பேசி விளங்கவைத்தல், பிறர்க்கு உதவுதல் போன்ற பண்புகள் மற்றும் சொல்லாட்சி என்ற பேச்சுத்திறன் இவற்றின் கூட்டுக்கலவையான மனித மனம் படைத்திருப்பதே. அது தான் "பெர்சனாலிட்டி/PERSONALITY" என்ற சொல்லின் உண்மையான பொருள் / மெய்ப்பொருள் எனலாம். இப்போதெல்லாம் "PERSONALITY DEVELOPMENT" என்று வகுப்புகள் நடத்தி சில உயர் பண்புகளை பெறுவதும் நிர்வகிப்பதும் எப்படி என்று கற்றுத்தருகின்றனர். அப்படியெல்லாம் வகுப்பு களில் சேர்ந்து .நமது பெர்சனாலிட்டியை    மாற்றி விட முடியுமா?  மிகப்பெரிய கேள்வி இது. ஒவ்வொருவரின் PERSONALITY என்ற தனிமனித அமைப்பு அவரவர் வளரும் வயதிலும் சூழ் நிலைகளாலும் ப்ரத்தியேகமாக வடிவமைந்துள்ளது.. இந்த கோட்பாட்டினை நன்றாக உள்வாங்கிக்கொண்டு PERSONALITY யை குறித்து பேச முற்படுவது பலன் தரும்

பெர்சனாலிட்டி என்பது பல காரணிகளால் வடிவம் பெறுவது                                                               அவை: 1] தனி நபர் ஜீன் அமைப்பு, 2] குடும்பச்சூழல், 3] இளம் வயதில் அமையும்/ அமைத்துக்கொள்ளும் நட்பு வட்டம்,   4] பள்ளியில் அமையும் சூழல் [இருபாலர் அல்லது ஒரு பாலர் பயிலும் சூழல்], 5] 1 முதல் 10 வகுப்பு வரை கிடைக்கப்பெறும் பயிற்சி முறைகள் இவை ஒவ்வொன்றும் கேரக்டர் என்ற பண்பின் தன்மைகளை நிர்ணயிக்கும். இவற்றின் தாக்கத்தால் ஒருவர் பொது இடங்களில் பிறருடன் பழகும் செயல் முறைகளை ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்தித்தரவல்லது. இவற்றில் காரணி 1] இறைவன் படைப்பில் தோன்றும் இயல்பான தன்மை [ஒரே வீட்டில் இரு சகோதரர்/ சகோதரிகள் மாறுபட்ட இயல்பினர் என்று பலரை பார்க்கிறோம். [அவர்களிடையே சில பண்புகள் மாத்திரம் ஒரே தன்மையில் அமைவதையும் பார்க்கிறோம்.] இது ஜீன் காம்பினேஷனின் வித்தை /விந்தை.. காரணி 2] முக்கியமானது மற்றும் முறைப்படுத்திக்கொள்ள க்கூடியது -குறிப்பாக பொய் பேசுதல், மாற்றிப்பேசுதல் இவற்றை பெற்றோர்களின் நடை முறையில் இருந்தே அநேக குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். அதே போல், வீட்டில் மது அருந்தும் புகை பிடிக்கும் தந்தையை மிக எளிதாக குழந்தைகள் பின் பற்றுகின்றனர்.   இது passive learning என்ற பார்த்து அறியும் வகையைச்சார்ந்தது. அதனால் தான் குழந்தைகள் முன் பெற்றோர் சச்சரவு, சண்டை, தடித்த வார்த்தை பேசுதல் போன்ற வற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்று உளவியல் அறிஞர்கள் ஆலோசனை கூறுகின்றனர்.  3] நட்பு வட்டம் தான் மொழி ஆசிரியன், இன்சொல், வன்சொல், தரக்குறைவான சொல்லாடல் இவை நட்பு வட்டத்திலிருந்து எளிதாக தொற்றிக்கொள்வன. 

எனவே தான் நட்பு வட்டத்தினை கண்காணிப்பது அவசியமாகிறது.மேலும் மொழி குறித்த கவனம் இல்லாது வளரும் சிறார் பின்னாளில் உயர் கல்வி, வேலை தேடும் படலம் இவற்றில் இயல்பாக /தெளிவாக தன்னம்பிக்கையுடன் செயல் பட இயலாதவர்களாக கூனிக்குறுகி இரண்டாந்தர மக்களாக ஒடுங்கி வாழ்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் மொழிப்பயிற்சி தந்து, தமிழ் ஆங்கிலம் பிரெஞ்சு, ஹிந்தி கற்றுத்தருகின்றனர். இயன்ற அளவு பல மொழிகளைக்கற்றால், பயம் விலகும், தோழமை அதிகரிக்கும், எல்லைகள் விரிவடையும். அரசியல் வாதிகளை நம்பி மொழிகளைக்கற்காமல் கிணற்றுத்தவளை யென வாழாதீர். காலப்போக்கில் கிணறுகளும் வறண்டு, ஒதுங்க ஈரமும் நிழலும் இன்றி மடியும் சூழல் உருவாகும்

சிறு வயது முதல் வேற்று பாலினத்தவர் இல்லாத கல்வி நிலைய மாணவ மாணவியர் , உயர்கல்வியில் அவர்களை சந்திக்கும் போது கூச்சம் தயக்கம் இவை மேலிட ஒரு வித 'பின்வாங்கல்' குணம் கொள்வர். ஒரு வகையில் நல்லது தான் எனினும் சாதாரண தகவல் பெறுவதற்கு கூட அச்சம் மேலிட ஒருவித செயற்கைத்தனம் பின்னிக்கொள்வதை   காணலாம். இவர்களே ஆசிரியர் நிலை அடையும் போதும் இது தொடர்ந்து வருவதால் பல வித இன்னல்களை எதிர்கொள்ள நேரிடும். காலப்போக்கில் தயக்கம் தவிர்த்து எல்லை மாறாமல் இயங்கும் முறைகளை அறிந்து கொண்டால் "personality" போற்றுதலுக்குரிய நிலையை அடையும் பள்ளிகளில் பேச்சு பயிற்சி கிடைக்காவிடில் சொந்த முயற்சியிலேனும் ஆங்கிலம் பேச சிறப்பு கவனம் செலுத்துங்கள் அது அதிகம் தேவைப்படும். பின்னால் பார்ததுக்கொள்ளலாம் என்றிருப்பவர்கள் ஒருநாள்  பின்னால் பார்க்கும் போது , ஐயோ நமக்குப்பின்னால் யாரும் இல்லை நாம் தான் கடைசி என்று உணர்ந்து மூச்சுத்திணறும் நிலை உருவாகும். எனவே personality என்பது, உடை/உருவம் சார்ந்தது அல்ல அது பல சீரிய பண்புகளின் தொகுப்பு. அவற்றை சிறு வயது முதலே வடிவமைத்தல் பின்னாளில் உயர் நிலை எய்த உதவும்                            நன்றி         அன்பன் ராமன்  

3 comments:

  1. Environment also moulds the personality of a humanbeing..A person living in Srirengam or Kumbakonam or a place where brahmin population is more, develops brahmin qualities. Same is the case with other cast. To give example
    Palayamkottai- Christians
    Kumbakonam - Brahmins
    Tuticotin—Nadars
    Usilampatti - Thevars
    Thirupuvanam- Scheduled cast
    Ayyampettai—Muslims
    I lived in a place where mixed religious people lived. Hence I could not develop brahminical qualities.
    Of course gene plays a role. In a transferable job ,person can not choose a place to live.Apartment living also makes oneself to live in a mixed group.

    ReplyDelete
  2. Yes people live in mixed groups in apartment but they never mix culturally ;8/10 inmates do not interact with neighbours. Each seems to assume 'self supremacy' - a non-existent trait. So, moulding is possible only if persons interact .

    ReplyDelete

PATTU IYENGAR –THE LYRICIST-3

  PATTU IYENGAR –THE LYRICIST-3 பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார் -3 கீழே இறங்கி வந்த திருப்பதி , ஐயங்காரை பக்கத்து அறை   டேபி...