GREEN HOUSE GASES
பசுமை இல்ல வாயுக்கள்
ஒரு சில வாயுக்கள் பசுமை இல்ல வாயுக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில் அவை வெப்பத்தை ஈர்த்து பின்னர் பூமி நோக்கி மீண்டும் வெப்பத்தை திருப்பி அனுப்பி புவி வெப்பமடையச்செய்வன. அதாவது பூமியில் இருந்து வெளியேறும் ஒளி வெப்ப அலைகளாக பயணிக்கின்றன . அவை இந்த புகைப்போர்வையை கடந்து செல்ல வேண்டிய எனர்ஜி இல்லாமல், புகைப்போர்வையினுள் ஐக்கியமாகி பின்னர் வெப்பக்கதிர்களாக திரும்பத்திரும்ப பயணித்து புவியை வெப்பமடையச் செய்கின்றன எனவே அவற்றை க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் என்கிறோம். அவற்றை [பட்டியலை] பார்ப்போம் . அவை கார்பன் டை ஆக்சைட் [CO2], மீத்தேன் [CH4], க்ளோரோ பிளூரோ கார்பன்கள் [CFC].ஓசோன்[O3], நைட்டிரஸ் ஆக்ஸைடுகள் [NO] மற்றும் நீராவி [WATER VAPOUR]. இவை பூமியில் இருந்து வெவ்வேறு தொழில்களால் உருவாகி வான் நோக்கி உயர்ந்து வெளி மண்டலத்தில் புகைப்போர்வை/ வாயு உரை [SMOKE SHIELD / VAPOUR SHIELD ] போல பூமியை சூழ்ந்து கொண்டு அங்கிருந்த படியே வெப்பத்தை பூமி நோக்கி திருப்பி விட்டுக்கொண்டே இருக்கின்றன,
விகிதாச்சார அடிப்படையில் க்ரீன் ஹவுஸ் வாயுக்கள் கார்பன்டை ஆக்ஸைட் 56%, மீத்தேன் 18%, க்ளோரோபிளூரோ கார்பன்கள் 13%, ஓசோன் 7%, நைட்ரஜன் ஆக்சைடுகள் 6%.. க்ளோரோபிளோரோகார்பன்கள் இரண்டு வகை ஆனவை . 1 CFCs க்ளோரோபிளோரோகார்பன்கள் 2 CFMs - க்ளோரோபிளூரோ மீதேன்கள் - இவை பிரிட்ஜ் , ஏ சி போன்ற குளிரூட்டு சாதனங்களிலிருந்து வெளியேறுபவை . ஓசோன் வான் வெளியில் CFC /UV கதிர்கள் கூட்டியக்கத்திலும், சில உபகரணங்களில் இருந்தும் வெளிப்படும் வாயு [புற ஊதாக்கதிர்கள்] இயக்கம் காரணமாக தோன்றுவது.. இவற்றின் இயக்கம் எளிதில் அடங்குவதில்லை மாறாக ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இயங்கி சுற்றுச்சூழலை சீர் குலைக்க வல்லவை கடந்த 40 ஆண்டுகளில் வான் வெளிக்கார்பன் இரட்டிப்படைந்துள்ளது என்ற தகவல் குந்த கவலை அளிக்க வல்ல நிகழ்வு. கடந்த 40 ஆண்டுகளில் வான் வெளிக்கார்பன் இரட்டிப்படைந்துள்ளது என்ற தகவல் மிகுந்த கவலை அளிக்க வல்ல நிகழ்வு.
இவற்றுள்நீராவியும் கணிசமான அளவு வெப்பத்தை வெளியிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மீத்தேன் வாயு கார்பன் டை ஆக்ஸைடை விட 20 மடங்கு அதிக வெப்பத்தை வெளிவிடுவது என அறியப்பட்டுள்ளது. அதே போல நைட்ரஜன் வாயுக்கள் கார்பன் டை ஆக்ஸைடை காட்டிலும் 270 மடங்கு அதிக வெப்பத்தை வெளியிடுகிறது என்றும் அறியப்பட்டுள்ளது.பிளூரோகார்பன் வாயுக்கள் விரைவாக வெப்பத்தை வெளியிடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வாயுவும் ஒளியை வாங்கி வெப்பத்தை பூமியை நோக்கி திருப்பிவிட்டு புவி வெப்பமடைதல் நடைபெற்றுக்கொண்டு உள்ளது
இவற்றுள்நீராவியும் கணிசமான அளவு வெப்பத்தை வெளியிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மீத்தேன் வாயு கார்பன் டை ஆக்ஸைடை விட 20 மடங்கு அதிக வெப்பத்தை வெளிவிடுவது என அறியப்பட்டுள்ளது. அதே போல நைட்ரஜன் வாயுக்கள் கார்பன் டை ஆக்ஸைடை காட்டிலும் 270 மடங்கு அதிக வெப்பத்தை வெளியிடுகிறது என்றும் அறியப்பட்டுள்ளது.பிளூரோகார்பன் வாயுக்கள் விரைவாக வெப்பத்தை வெளியிடுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு வாயுவும் ஒளியை வாங்கி வெப்பத்தை பூமியை நோக்கி திருப்பிவிட்டு புவி வெப்பமடைதல் நடைபெற்றுக்கொண்டு உள்ளது
இவை நீங்கலாக, இந்த வாயுக்களில் சில -குறிப்பாக CFC வகையின 110 ஆண்டுகளுக்கு வான் வெளியில் மிதந்து , தொடர்ந்து ஓசோன் அமைப்பை சீர் குலைத்து வருகின்றன.. இவ்வாறு ஓசோன் படலத்தின் அடர்த்திஆங்காங்கே தகர்க்கப்பட்டு அப்பகுதிகளில் ஓசோன் படலம் வலுவிழந்து நைந்த துணிகள் போல் இருப்பதால் அவற்றை ஓசோன் ஓட்டைகள் என்கின்றனர். ஆனால் அவை ஓட்டைகள் அல்ல , அடர்த்தி குறைந்தபகுதிகள். சூரிய ஒளியில் வரும் புற ஊதாக்கதிர்கள் [ultraviolet rays ] இந்த நலிவடைந்த [ஓட்டைகள்] பகுதிகளை ஊடுருவி நேரடியாக பூமிக்கு வருவதால் தோல் கான்சர் ஏற்படுத்தக்கூடியது.இது ஓசோன் படலம் செம்மைப்படுத்தப்படாமல் , கட்டுப்படுத்த இயலாது. இவ்வாறு நமது சுற்றுச்சூழல் பல இன்னல்களால் வெகுவாக மாற்றம் அடைந்து எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது.
தொடரும் அன்பன் ராமன்
Plants need CO2. and animals need
ReplyDeleteO2. The balance is to be maintained by us only.