Thursday, December 7, 2023

BAND WAGON ATTITUDE

 BAND WAGON ATTITUDE

கும்பலில் கோவிந்தா

இது தான் இப்போது பொதுவான மனநிலை.ஒன்றைப்பார்த்து ஒன்று என்பது போல அனைத்து தேவைகளுக்கும் நாமாக முடிவெடுப்பதை விடுத்து, அவர் என்ன சொல்கிறார் .இவர் என்ன சொல்;கிறார் என்று அண்டை அயலார்  திருவள்ளுவர் /அவ்வையார் என்று எண்ணி அவர் வாயைப்பார்த்துக்கொண்டு எல்லோரும் அப்படித்தான் சொல்றாங்க என்று பேசிக்கொண்டு தடுப்பூசி வேண்டாம் , பின்னால பாத்துக்கலாம் என்று உற்றாரை இழந்து அவர்கள் சவங்களுக்கு இறுதி மரியாதை கூட செய்ய முடியாத பலரை 3 ஆண்டுகள் முன்னர் பார்த்திருக்கிறோம்.

அந்த அண்டை அயலார் யார்?  கார்ப்பரேஷன் அலுவலக எழுத்தர், போலீஸ் ஆபீஸ் இல் தலைமை குமாஸ்தா    - இருவரும் SARS மற்றும் MERS EPIDEMEOLOGY துறையில் சேர்வதேச ஆளுமைகள் போல் அவர்களை நம்பி, இந்த ஊசி அவசரமா தயாரிச்சிருக்காங்க  அதைப்போய் போட்டுக்கொண்டு என்றும் , அரசியல் வாதிகளின் உளறல்களை ஏற்றுக்கொண்டு பலரையும் இன்னலுக்கு ஆட்படுத்தி நானே ராஜா என்று திரியும் இந்த மனோ நிலையே "கும்பலிலே கோவிந்தா" எனப்படுகிறது. அதாவது இறைவன் மீது நம்பிக்கைகொண்ட ஒருவர் கோவிந்தா, என்று அழைக்க ஏன் என்று புரியாமலே பலரும் அதே போல குரல் எழுப்ப -உருவாகும் நிலை தான் அது.

யோசிக்காமல், பிரைப்பார்த்து செய்யும் செயல்கள் யாவையும் இதே ரகம் தான்.

இது பல தருணங்களிலும் மிகச்சிறப்பாக அரங்கேறுவதைக்காணலாம்.

இந்த புதிய பென்சன் திட்டத்தை எடுத்துட்டு பழைய திட்டத்தை கொண்டடந்துருவேன்னு  அவர் -XXX சொல்றாரு அதுனாலே இந்தவாட்டி அவருக்கு ஓட் போட்டுற வேண்டியது தான். இன்னொருத்தர் மாசம் 7000/- தர்றேங்குறாரே என்ற மனைவியை இடை மறித்து இத்தனை நாளா ஆச்சியில இருந்தாரே ஏன் தரலியாம்  என்று எதிர் கேள்வி போடுவார் . அது ஒன்றும் அவர் கருத்தல்ல -அவர் சொன்னார் , இவர் சொன்னார் கேஸ் தான் இதுவும் .

அதே போல இன்னோர் உளறல் .

MBA அது இதுனு படிக்க வேண்டாம் நம்ப பக்கத்து தெருவுல இருக்கிற எலிசபெத் கேட்டரிங் ஸ்கூல் படிச்சா 5 ஸ்டார் ஓட்டல்ல வேலை கிடைச்சுருமாம் -கணவர். ‘எப்பிடிங்க?’ -மனைவி. அது இங்கிலாந்து ராணி எலிசபெத் நடத்துறதாம், மேலும் நம்ப நடிகர் பூபேஷ் வேற வந்து திறந்து வெச்சார் , நான் நல்லா  விசாரிச்சுட்டேன் -நம்ப சரவணனை பேசாம அங்கே சேத்துர வேண்டியது தான் அவன் பாரின் போயிருவான் -இங்கிலாந்து மெசபடோமியா , கோண்டுவானா னு உலகம் போற சான்ஸ் இருக்குதாமே என்று பேருவகை வேறு. அது அரசின் அங்கீகாரம் பெறாத இடம் .

23% வட்டி தருகிறோம் என்ற துண்டுசீட்டு அறிவிப்பை நம்பி பணத்தை முடக்கி பின்னர் மயக்கம் போட்டவர் பலரும் இப்படி அவர் சொன்னார் இவர் சொன்னார் வகையினரே. எவ்வளவு சொன்னாலும் நல்வாக்கை நம்பாமல் , பொய் எங்கே என்று தேடிப்பிடித்து ஏமாறும் புத்திசாலிகள்.. இவர்கள் ஏமாறுவதற்கு எல்லையே  கிடையாது.

10, 000/- ரூபாய் கட்டுங்கள் ஆண்டு முழுவதும் வரம் 3 1/2 கிலோ காய்கறி சப்ளை வீடு தேடி வரும் என்று ஆசை காட்டி ஏமாற்றுவோரிடம், ஏமாறுதல், [3 வெங்காயம் 15 சின்ன வெங்காயம், சிறிய முட்டை கோஸ் . பீட்ரூட் , கீரை, அகத்திக்கீரை இவற்றை அடிக்கடி வாசலில் வைத்துவிடுவர் -காய்கறி சப்ளை]   5 ஏக்கர் தென்னை மரம், உங்களுக்கே சொந்தம் மொத்தம் 1 லட்ச ரூபாய் முதலீட்டில் என்று சொல்லி ஒரே தென்னந்தோப்பை 70, 80 பேருக்கு காட்டி பணம் வசூலித்துக்கொண்டு நடையை கட்டுவோரிடமும் ஏமாறும் புத்திசாலிகள் அவர் சொன்னார் இவர் சொன்னார் வகையினரே. 

கல்வி குறித்த பார்வை, ட்யூஷன் எதிலும் எப்போதும் தனித்து சிந்திக்காமல் பிறர் வாயைப்பார்த்து முடிவெடுத்தால் இப்படித்தான் இருக்கும்.

சிந்திப்பீர்

நன்றி அன்பன் ராமன்

1 comment:

  1. Nicely broughtout the pitfalls, ill-informed people fall pray...

    ReplyDelete

TEACHER BEYOND YOUR IMAGE-16

  TEACHER BEYOND YOUR IMAGE-16 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-16 நீ ங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும்    கவனம் பெறும் . அதனால் , ...